Monday, August 24, 2009

மாலைதீவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது.

மாலைதீவு விடுதியொன்றை சோதனையிட்ட பொலிஸார் அறையொன்றில் காணப்பட்ட இலங்கைப் பெண் ஒருவரையும் மாலைதீவுப் பிரஜை ஒருவரையும் கைது செய்துள்ளனர். சாகர மல்காந்தி என இனம்காணப்பட்டுள்ள 27 வயது இலங்கைப் பெண் குறிப்பிட்ட விடுதியில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து மேலும் இரு இலங்கை யுவதிகளுடன் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் சோதனை செய்தபோது அவ் அறையில் இருந்து கைது செய்யப்பட்ட 25 வயதுடைய இப்றாகிம் அலி எனப்படும் மாலைதீவுப் பிரஜை வழங்கிய தகவல்களின் அடிப்படையில் குறிப்பிட்ட பெண்கள் அவ்வறையில் விபச்சாரத்தில் ஈடுபட்டுவந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Read more...

புலிகளின் சர்தேச வலையமைப்பை இலக்கு வைத்து இலங்கை எரித்திரியாவில் தூதரகம்.

புலிகளின் சர்வதேச வலையமைப்பின் பிரதானியான கே.பி எனப்படும் குமரன் பத்தமநாதன் வழங்கியுள்ள தகவல்களின் அடிப்படையில் அவ்வமைப்பின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்குவதாக நம்பப்படுகின்றது. கே.பியின் தகவல்களின் அடிப்படையில் எரித்திரியா நாட்டில் புலிகளின் செயற்பாடுகள் மிக அதிகமாக காணப்படுவதாகவும் புலிகளின் ஆயுதக்கப்பல் போக்குவரத்து மையமாக எரித்திரியா விளங்குவதாகவும் தெரியவந்துள்ளது.

கே.பி யின் மேற்படி தகவல்களின் அடிப்படையில் எரித்திரியாவில் உள்ள பல ஆயுத அமைப்புக்களுடன் புலிகள் தொடர்புகளைக் கொண்டுள்ளதாகவும் குறிப்பாக அல்கைதா அமைப்பின் அங்கீகாரம் பெற்ற ஆயுதக்குழு ஒன்றுடனும் அவர்கள் உறவை பேணிவருவது தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளது.

அத்துடன் புலிகளின் தலவர் வே. பிரபாகரன், எரித்திரிய நாட்டு ஜனாதிபதி இற்கு கடந்த 24 மே 2006 தனது கையொப்பமிட்ட தொலைநகல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளமையும் வெளிவந்துள்ளது.

இத்தகவல்களின் அடிப்படையில் எரித்திரியாவில் இருந்து செயற்படக்கூடிய புலிகளின் சர்வதேச வலையமைப்பை கட்டுப்படுத்துவன் பொருட்டு அங்கு இலங்கை தூதரகம் ஒன்றை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

எரித்திரியா அரசு புலிகளுடன் உறவைப் பேணுவதுடன் அவர்களுக்கான நேரடி உதவிகளைப் புரிந்து வருவதாக கடந்த 15 டிசம்பர் 2006 இல் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

வன்னி வைத்தியர்கள் பிணையில் விடுதலை.

வன்னியில் யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது அங்கிருந்து சர்வதேச ஊடகங்களுக்கு தவறான தகவல்களை வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த வைத்தியர்கள் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் பிரதி ஞாயிறுதோறும் வவுனியா குற்றப்புலனாய்வு அலுவலகத்தில் பிரசன்னமாகி அங்கு கையொப்பம் இடவேண்டும் எனவும் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

தாம் வன்னியில் இருந்து சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கிய தகவல்கள் பொய்யானவை எனவும் புலிகளின் வற்புறுத்தலினாலேலே தாம் அவ்வாறான செய்திகளை வழங்கியதாகவும் மேற்படி வைத்தியர்கள் கொழும்பில் நாடாத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாடொன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

Sunday, August 23, 2009

திருமலை அரச காணிகளை விற்கும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள்.

கிழக்கு மாகாண சபையைச்சேர்ந்த சில அரசியல்வாதிகள் திருமலை உப்புவெளி கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் உள்ள காணிகளுக்கு பொய் உறுதிகளை வழங்கி அக்காணிகளை விற்றுப் பணம் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. இது வரை ஒவ்வொன்றும் 15 பேர்ச்சஸ் பரப்பளவுடை 25 காணித்துண்டுகள் அவ்வாறு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இவற்றைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அப்பகுதியில் விசேட கண்காணிப்பை மேற்கொள்ளவென கடற்படையினர் காவலில் அமர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Read more...

வான்புலிகளின் முதற்பறப்பை பார்வையிடும் பிரபாகரனும் தளபதிகளும். (புகைப்படங்கள்)

புலிகள் வான்படையை நிர்மானித்து அதன் முதற்பறப்பை புலிகளின் தலைவர் பிரபாகரன், கஸ்ரோ, பொட்டு, ஜெயம், தீபன், விதுர்ஷா, துர்க்கா, தமிழ்ச்செல்வன் போன்ற தளபதிகள் பார்வையிடுவதை படத்தில் காணமுடிகின்றது.

இங்கு காணப்படும் படத்தில் உள்ள சிலின் ரக ஹெலிக்கொப்டர்கள் அதன் உண்மையான நிறத்தில் காணப்படுவதையும் அவ்விமானம் கட்டுநாயக்கவில் வீழ்ந்து கிடந்தபோது இராணுவ சீருடையை ஒத்த நிறம் தீட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

அதே நேரம் இவ்வாறான ஹெலிக்கொப்படர்கள் 10 எரித்திரியா நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கே.பி தெரிவித்தாக வார இறுதி பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

உலகில் உள்ள பயங்கரவாத இயக்கங்களுள் தமக்கென வான்படையை கொண்டிருந்த பயங்கரவாக அமைப்பாக புலிகள் இயக்கம் தன்னை இனம் காட்டிக்கொண்டிருந்ததுடன், புலிகளின் வழர்ச்சி உலகிற்கு அச்சுறுத்தலாக அமையப்போகின்றது என சர்வதேசம் கருதியமைக்கும் இவ்வான்படை நிர்மானமே காரணம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.











Read more...

பா.ஜனதா தலைவர் சுட்டுக் கொலை: போலீஸ் நிலையத்தில் பயங்கர கலவரம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் போலீஸ் நிலையத்துக்குள் பா.ஜனதா தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பல்வந்த்சிங் உயிரைக் காப்பாற்ற தவறிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவரது உறவினர்களும், ஆதரவாளர்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. கலவரக்காரர்கள் போலீஸ் நிலையத்துக்கு தீ வைத்து, எரியும் தீக்குள் ஒரு போலீஸ்காரரை தூக்கிப் போட்டு உயிரோடு எரித்துக் கொன்றனர்.

கலவரக்காரர்கள் தாக்கியதில் 3 போலீஸ்காரர்கள் படுகாயம் அடைந்தனர். போலீசார் நடத்திய தடியடி மற்றும் வானத்தை நோக்கி சுட்டதில், ஒரு பெண் உள்பட பலர் காயம் அடைந்தனர். இதற்கிடையே, இந்த சம்பவம் பற்றி அறிந்த முதல்-மந்திரி ரமேஷ் பொக்ரியால், பா.ஜனதா தலைவர் போலீஸ் நிலையத்துக்குள் சுட்டுக் கொல்லப்பட்ட போது பணியில் இருந்த அனைத்து போலீசாரையும் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்

Read more...

கறுப்புப் பணம் கணக்கு தேடி வராதீர்கள்!: சுவிஸ் வங்கிகள்

சுவிட்சர்லாந்து வங்கிகளில் ரகசியமாக பணம் போட்டு வைத்திருக்கும் இந்தியர்களின் கணக்குகளைப் பார்க்க வேண்டும் என்று கூறி யாரும் எங்களை அணுகாதீர்கள் என்று அந்நாட்டு வங்கிகளின் சங்கம் தெளிவுபடக் கூறிவிட்டது.

இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சுவிஸ் வங்கிகளில் ரகசியக் கணக்கு இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகும். இப்படி வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்திருக்கும் கறுப்புப் பணம் மட்டுமே பல லட்சம் கோடி இருக்கும் என்று சமீபத்தில் நடந்த மக்களவை பொதுத் தேர்தலுக்கு முன்னதாகக் கூறப்பட்டது.

சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதாக ஆதாரபூர்வமாக நிரூபித்தால் தங்கள் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் பற்றிய விவரங்களைத் தரத்தயார் என்று சுவிஸ் நாட்டு வங்கிகள் தெரிவித்தன. அத்துடன் பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல், இதர சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள் கணக்காக இருந்தால் உடனே தரத்தயார் என்றும் கூறின.

ஆனால் தில்லிக்கு வந்துள்ள ஸ்விஸ் வங்கிகள் சங்கத்தைச் சேர்ந்தவரான ஜேம்ஸ் நேசனோ, யார் வேண்டுமானாலும் யாரைப்பற்றி வேண்டுமானாலும் தெரிந்துகொண்டுவிடலாம் என்ற உரிமையை அரசு அளித்துவிடவில்லை என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

இரட்டை வரிவிதிப்பைத் தடுக்கும் ஒப்பந்தத்தில் இந்தியாவும் சுவிட்சர்லாந்தும் கையெழுத்திட்டுள்ளன. எனவே சுவிட்சர்லாந்து நாட்டில், சட்டவிரோதமாகப் பணத்தை யாராவது வங்கியில் டெபாசிட் செய்கிறார்கள் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால் வங்கி நிர்வாகிகளே அவர்களுடைய கணக்கைத் திறந்து காட்டுவார்கள் அப்படி எதுவும் இல்லாமல் வெறும் தகவல் அறியும் உரிமைக்காக யாராவது வங்கியை அணுகினால் ஒரு தகவலையும் பெற்றுவிட முடியாது என்று ஜேம்ஸ் நேசன் கூறியிருக்கிறார்.

நன்றி தினமணி

Read more...

புலிகளுடன் போரிட இலங்கை ராணுவத்துக்கு இந்தியா ஆயுதம் கொடுத்தது; புதிய புத்தகத்தில் பரபரப்பு தகவல்

விடுதலைப்புலிகளுடன் போரிட இலங்கை ராணுவத்துக்கு இந்தியா ஆயுதம் கொடுத்தது என்று புத்தகம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது. ஆங்கில செய்தி சானல் ராணுவ நிருபரும், பிரபல கட்டுரையாளருமான நிதின் கோகலே இலங்கையில் இறுதி கட்ட போர் தொடர்பாக ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார்.

“பிரம் வார் டூ பீஸ்” என்ற புத்தகத்தில் அவர் எழுதி இருப்பதாவது:-

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போருக்காக இலங்கைக்கு ஆயுத உதவி எதுவும் செய்யவில்லை என்று இந்தியா கூறி வந்தது. ஆனால் அது சரியான தகவல் அல்ல. இந்தியா ஏராளமான உதவிகளை இலங்கைக்கு செய்தது.

இந்திய கடற்படை ஏராளமான தகவல்களை இலங்கை ராணுவத்துக்கு கொடுத்து வந்தது. இதனால் விடுதலைப்புலிகளின் 12-க்கும் மேற்பட்ட ஆயுதகப்பல்களை இலங்கை கடற்படை தகர்த்தது. இதனால் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் வருவது தடைபட்டது.

2006-ம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியா 5மி-17 ஹெலி காப்டர்களை இலங்கைக்கு கொடுத்தது. அவை இலங்கை விமானப்படை ஹெலிகாப்டர் போல வர்ணம் தீட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டன.

இந்திய கடலோர காவல் படை ரோந்து கப்பல் ஒன்றை இலங்கைக்கு வழங்கியது. விடுதலைப்புலிகள் கடலிலேயே மிதக்கும் ஆயுத குடோன்களை அமைத்து இருந்தனர். அதை இந்தியா அடையாளம் கண்டு இலங்கையிடம் கூறியது. இதன் மூலம் 10-க்கும் மேற்பட்ட குடோன்களை இலங்கை ராணுவம் தகர்த்தது. விடுதலைப்புலிகள் கப்பல்கள், படகுகளை தகர்க்க இந்திய கடற்படை முழு உதவி செய்தது.

ராமநாதபுரத்தில் இந்திய கடற்படை சக்தி வாய்ந்த ரேடாரை பொருத்தி இருந்தது. இதன் மூலம் விடுதலைப்புலிகளின் படகு, கப்பல் நடமாட்டத்தை கண்டு பிடித்து இலங்கையிடம் கூறியது.

இலங்கைக்கு ஆயுத உதவிகள் கிடையாது என இந்தியா திரும்பத் திரும்பக் கூறினாலும், விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை வெற்றிபெற இந்தியா மிகப்பெரிய அளவில் மறைமுகமாக உதவியது. முக்கியமாக இந்திய கடற்படையின் மிகப்பெரிய உதவியால்தான் விடுதலைப்புலிகளை வெற்றிகொள்ள முடிந்ததாக அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் கட்சிகளின் நெருக்குதல் காரணமாக மன்மோகன் சிங் அரசு வெளிப்படையாக உதவிகள் செய்யாவிட்டாலும் மறைமுகமாக அனைத்து உதவிகளையும் செய்ததாக கோகலே கூறியுள்ளார்.

இந்தியா மறைமுகமாக உதவிகளைப் பெருமளவில் செய்ததும், சீனா, பாகிஸ்தான் நாடுகள் வெளிப்படையாக ஆயுதங்களை அளி்த்ததும்தான் புலிகளின் வீழ்ச்சிக்குக் காரணம் என கோகலே தனது புத்தகத்தில் கூறியுள்ளார். மேலும் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசுக்கு இந்தியா என்னென்ன உதவிகளைச் செய்தது என்ற விவரங்களை கோகலே தனது புத்தகத்தில் விரிவாகப் பட்டியலிட்டுள்ளார்.


Read more...

நான்கு தற்கொலை அங்கிகள் மீட்பு.

வவுனியா நெலுக்குளம் மயாணவாசலில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு தற்கொலை அங்கிகள் மீட்கப்பட்டுள்ளது. ஓவ்வொன்றும் 11 கிலோ எடைகொண்ட மேற்படி அங்கிகளை வைத்திருந்த புலிகள் இவற்றை எறிந்து விட்டு இயல்பு வாழ்கைக்கு திரும்பும் பொருட்டு இவ்வாறு செய்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

Read more...

Saturday, August 22, 2009

மீண்டும் குட்டைகுழப்பும் தமிழகத் தலைவர்கள்

புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் முன்னெடுத்த இராணுவ நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தில் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் மேற்கொண்ட புலி ஆதரவு ஆர்ப்பாட்டங்களும் பிரசாரங்களும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு எந்த விதத்திலும் நன்மை பயப்பனவாக இருக்க வில்லை. தமிழ் மக்களின் அவலம் தொடர்வதற்கே அவை வழிவகுத்தன.

அந்த நேரத்தில் புலிகள் தமிழ் மக்களைப் பணயக் கைதிகளாகத் தடுத்து வைத்திருந்தனர். நெடுமாறன், வைகோ, ராமதாஸ் போன்ற தலைவர்கள் இம் மக்களுக்காகப் பேசுவது போன்ற தோரணையில் புலிகளுக்காகவே பேசினார்கள். மக்களின் நலனில் இவர்களுக்கு உண்மையான அக்கறை இருந்திருக்குமேயானால், மக்களை ஆயுதங்களுக்கு மத்தியில் பணயக் கைதிகளாகத் தடுத்து வைத்திருக்க வேண்டாம் என்ற கோரிக்கையைப் புலிகளிடம் முன்வைத்திருப்பார்கள். யுத்தநிறுத்தம் வேண்டும் என்ற இவர்களின் கோரிக்கை புலிகளைக் காப்பாற்றுவதற்கானதேயொழிய மக்களைக் காப்பாற்றுவதற்கானதல்ல.

இத்தலைவர்கள் மீண்டும் இலங்கையின் இனப்பிரச்சினை பற்றிப் பேசத் தொடங்கியிருக்கின்றார்கள். பாராளுமன்றத் தேர்தலில் மக்களால் முழுமையாக ஒதுக்கப்பட்ட நிலையிலிருந்து மீண்டும் தலைதூக்குவதற்காக இலங்கைப் பிரச்சினையைத் தூக்கிப் பிடிக்கின்றார்களா அல்லது யாரையாவது திருப்திப்படுத்துவதற்காகப் பேசுகின்றார்களா என்பது விளங்கவில்லை.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் அண்மையில் இவர்கள் மகாநாடொன்றை நடத்தி ‘ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் பிரகடனம்’ என்ற பெயரில் பிரகடனமொன்றையும் நிறை வேற்றியிருக்கின்றார்கள். இலங்கைத் தமிழ் மக்களைப் பேரழிவுக்குள் தள்ளியதும் நடைமுறைச் சாத்தியமற்றது என ஏறக்குறைய எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான தனிநாட்டுக் கோரிக்கைக்குப் புத்துயிரளிக்க மேற்கொள்ளப்படும் முயற்சியே இந்தப் பிரகடனம்.

புலிகளின் தனிநாட்டு நிகழ்ச்சி நிரலைத் தூக்கிப் பிடிக்கும் தமிழகத் தலைவர்களுக்கு இலங்கையின் இனப்பிரச்சினை பற்றியோ புலிகள் பற்றியோ தெளிவான புரிகை இல்லை. சமகால யதார்த்தம் பற்றிய விளக்கமும் இல்லை.

இலங்கைத் தமிழர்கள் இடம்பெயர நேர்ந்ததும் உயிரிழப்புகள் ஏற்பட்டதும் உடைமைகள் சேதமுற்றதும் தனிநாட்டுக் கோரிக்கையின் விளைவான நிகழ்வுகள் என்பதும், தமிழ் மக்களின் அரசியல் தீர்வுப் போராட்டம் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வுவரை வந்திருந்த நிலையில் புலி கள் ஆயுதப் போராட்டத்தின் மூலம் அதைச் சீர்குலைத்ததால் இனப்பிரச்சினையின் தீர்வுக்கான முயற்சி மூன்று தசாப்தங்களுக்கு முந்திய காலம் வரை பின்தள்ளப்பட்டுள்ளதென்பதும் தமிழகத்தின் இத் தலைவர்களுக்குத் தெரியாமலிருப்பது வேடிக்கையானது.

இவர்கள் இலங்கையின் இனப் பிரச்சினையில் குட்டை குழப்பித் தமிழ் மக்களின் அவலத்துக்கு வழிவகுக் காமல் பிரச்சினையைச் சரியாக புரிந்து கொள்வதற்கு முயற்சிப்பதே நல்லது.

அண்மைக் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தமிழகத்தின் இத் தலைவர்களுடன் அணிசேர்ந்திருந்தார்கள் என்பது இரகசியமல்ல. இந்தப் பாதை அழிவுகரமானது என்பதைக் கூட்டமைப்புத் தலைவர்கள் இப்போதாவது புரிந்துகொண்டு, கற்பனைத் தீர்வுடன் காலங்கழிக்காமல் நடைமுறைச் சாத்திய மான வழியில் சிந்திப்பார்களென நம்பு கின்றோம்.

நன்றி தினகரன்

Read more...

சிறைச்சாலை ஆடம்பர சொகுசு அறையில் வாஸின் மனைவி.

தகவல் தொழில் நுட்பக்கல்லூரி மாணவன் நிபுண ராமநாயக்க தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்த்தனவின் மனைவி சியாமலி பிரியதர்சினி பெரேரா வெலிக்கட சிறைச்சாலை அறையொன்றில் ஆடம்பர வாழ்வு வாழ்வதாக இணையத்தளச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

நீண்டகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தில் காணப்படும் குறிப்பிட்ட ஆடம்பர அறையில் வாஸின் மனைவி தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவ் அறையில் சொகுசு கட்டில்கள், தொலைக்காட்சி, வானொலிப்பெட்டி, குளிர்சாதனப்பெட்டி, காற்றாடி என்பன காணப்படுவதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இவ்அறை சிறைச்சாலையில் உள்ள பெண்கைதிகள் நோய்களுக்கு உள்ளாகும் போது அவர்களை பராமரிப்பதற்காக அமைப்பட்டுள்ளதாகவும், சாதாரண கைதிகள் இவ் அறையை கண்ணால் கூட காணமுடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் விளக்க மறியலுக்குச் செல்லும் அரசியல் செல்வாக்கு உடையோர் மற்றும் செல்வந்தர்கள் குறிப்பிட்ட அறையில் தங்க வைக்கப்படுவதாகவும், இவ் அறை சிறைச்சாலை பெண் அதிகாரி ஒருவரின் பாராமரிப்பில் உள்ளதாகவும், குறிப்பிட்ட பெண் அதிகாரி பல தரப்பினருடனும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டவர் எனவும், அவருக்கு சிறைச்சாலை வட்டாரங்களில் விசேட சலுகைள் உள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளது.

மேலும் வாஸின் மனைவியையும் குறிப்பிட்ட அறையில் தங்கவைத்துள்ளது அதே பெண் அதிகாரி எனவும், அவ் அதிகாரியே வாஸின் மனைவியை நீதிமன்றில் இருந்து சிறைச்சாலைக்கு கூட்டிச் சென்றதாகவும் கூறப்பட்டள்ளது.


Read more...

பாக்கிஸ்தான் இராணுவத்தினருக்கு இலங்கையில் பயிற்சி.

உள்நாட்டு யுத்தத்தில் கிளர்ச்சியாளர்களை கையாள்வது தொடர்பாக இராணுவப் பயிற்சிகளை இலங்கை இராணுவத்தினரிடம் பெற்றுக்கொள்ள பாக்கிஸ்தான் ஆர்வம்கொண்டுள்ளது. இது தொடர்பாக லண்டன் பிபிசி க்கு கருத்து தெரிவித்த இராணுவத்தளபதி ஜகத் ஜெயசூரியா, இஸ்லாமாபாத்தில் இருந்து தமக்கு கிடைத்துள்ள விண்ணப்பம் தொடர்பாக தாம் சாதகமானதோர் பதிலை கொடுக்க காத்திருப்பதாகவும், ஆனால் பயிற்சிகள் நிச்சயமாக புதிதாக விடுவிக்கப்பட்ட வன்னிப்பிரதேசத்தில் இடம்பெற மாட்டாது எனவும் தெரிவித்ததுள்ளார்.

சிறு சிறு குழுக்களாக 6 வாரங்களுக்கு இடம்பெறக்கூடிய இப்பயிற்சி நெறிகள் தென்கிழக்கு பிரதேசத்தில் இடம்பெறும் எனவும், பாக்கிஸ்தான் தவிர்ந்த அமெரிக்கா உட்பட்ட வேறு பல நாடுகளுக்கும் பயங்கரவாதத்தினை கையாளும் விடயம் தொடர்பான பயற்சிகளை தாம் வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

எஸ்எஸ்பி குணசேகர அரசியலினுள் நுழைகின்றார்.

முன்னாள் பொலிஸ் பேச்சாளர் எஸ்எஸ்பி ரஞ்சித் குணசேகர அரசியலினுள் நுழைவது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் திணைக்களத்தில் இருந்து நேற்று முன்தினம் ஓய்வு பெற்ற அவரிடம், எதிர்காலத் திட்டம் தொடர்பாக ஊடகம் ஒன்று கேட்டபோது, தான் அரசியலினுள் நுழைவதாகவும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் தான் தேர்லில் பங்குகொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Read more...

Friday, August 21, 2009

அக்கரைப்பற்றில் கட்டிடம் ஒன்று தீக்கிரை. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கைவரிசையாம்.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள கட்டிடடத்தின் தொகுதி தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அக்கரைப்பற்று பிரதேசத்தில் தமது காரியாலயம் ஒன்றை திறப்பதற்கு குறிப்பிட்ட கட்டிடத்தை தெரிவுசெய்திருந்தாகவும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அக்கரைப்பற்று பிரதேசத்திற்கு வருவதை எதிர்க்கும் பொதுமக்கள் அக்கட்டிடத்தை தீயிட்டு கொழுத்தியதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம், தமது வரவிற்கு பிரதேச மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்புவதை உணர்ந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தாம் திறக்கவுள்ள காரியாலயத்திற்கு பொலிஸ்பாதுகாப்பு கேட்டிருந்தாகவும், மக்களின் எதிர்ப்புக்கு பொலிஸ்பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு பரிசீலனை செய்து வந்தபோது தமக்கு சாதகமான பதில் கிடைக்காது என அச்சம் கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைமை, தமக்குள்ள அச்சுறுத்தலை ஊர்ஜிதப்படுத்தி பொலிஸ் பாதுகாப்பை பெற்றுக்கொள்வதற்காக குறிப்பிட்ட கட்டிடத்தொகுதிக்கு நெருப்பு வைத்துள்ளதாக பிறிதொரு தரப்பினர் கூறுகின்றனர்.

Read more...

சிறைக்கூண்டினுள் சக பொலிஸாரை மிரட்டும் பொலிஸ் பொறுப்பதிகாரி.

அங்குலானைப் பிரதேசத்தில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் பொறுப்பதிகாரி தும்பேஹெதர வின்னி நீயுட்டன் மற்றும் நான்கு பொலிஸ் காண்ஸ்டபிள்கள் மகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மூவர் அவசரகாலச் சட்டத்தின் கீழ் குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று 20 ம் திகதி அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள 2 பொலிஸாரையும் 1 ஊர்காவல் படையினரையும் நீதிமன்றில் ஆஜர் செய்த குற்றத்தடுப்பு பிரிவினர், சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்ட இடம் மற்றும் சுட்டுக்கொல்லப்பட்ட இடங்களை சந்தேக நபர்கள் அடையாளம் காட்டவிரும்புவதாகவும் அவ்விடங்களுக்கு அவர்களை கூட்டிச் சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள அனுமதி தருமாறும் நீதிமன்றை கோரினர்.

குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் வேண்டுதலுக்கு அனுமதியளித்த நீதிவான் கொலைக்கு பயன்பட்ட துப்பாக்கி, வெற்றுத்தோட்டாக்களையும் ஏனைய பாகங்களையும் கண்டெடுக்குமாறு உத்தரவிட்டதுடன், தடுப்புக்காவல் காலம் முடிவடையும்போது சந்தேக நபர்களை மன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.

அதன்போது மன்றில் பிரசன்னமாகியிருந்த குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஷாணி அபயசேகர, மகசின் சிறைச்சாலையில் ஒரே சிறைக்கூண்டில் பொலிஸ் பொறுப்பதிகாரி தும்பேஹெதர வின்னி நீயுட்டன் மற்றும் நான்கு பொலிஸ் காண்ஸ்டபிள்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் காண்ஸ்டபிள்கள் சம்பவம் தொடர்பாக குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க விரும்புவதாகவும், அவர்களை பொலிஸ் பொறுப்பதிகாரி அச்சுறுத்துவதாகவும் தெரிவித்து பொலிஸ் பொறுப்பதிகாரியை பிறிதொரு கூண்டில் அடைக்க மன்று உத்தரவிடவேண்டும் என வேண்டினார்.

உதவிப் பொலிஸ் அத்தியட்சரின் வேண்டுதலை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காண்ஸ்டபிள்களை பொலிஸ் பொறுப்பதிகாரியில் இருந்து வேறுபடுத்தி வைக்குமாறு மகசின் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதே நேரம் கொலைசெய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோரை ஜனாதிபதி இன்று சந்தித்ததுடன், அவர்கள் ஒவ்வொருவருக்கும் நஸ்ட ஈடாக 5 லட்சம் ரூபா காசோலைகளை வழங்கியிதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com