Tuesday, August 18, 2009

கிழக்கு ஆளுநரை நீக்ககோரி முதலமைச்சர் ஜனாதிபதிக்கு கடிதம்.

கிழக்குமாகாண ஆளுநர் மொகான் விஜெயவிக்ரம அவர்களை அப்பதவியில் இருந்து நீக்கி சபையுடன் ஒத்துழைக்கக்கூடிய ஒருவரை நியமிக்குமாறு கிழக்குமாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் மற்றும் சபையின் நான்கு அமைச்சர்கள் கையொப்பம் இட்டு ஜனாதிபதிக்கு கடித்தம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

அக்கடிதத்தில் ஆளுநர் தனது கடமை எல்லைகளுக்கு அப்பால்சென்று மாகாண சபை நிர்வாகத்தில் தலையிடுவதாகவும், அதிகாரப்பரவலாக்கதிற்கு ஒத்துழைப்பதில்லை எனவும், மக்களால் மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் நிர்வாகம் தொடர்பாக முடிவுகளை எடுக்கின்ற போது அவற்றை தட்டிக்கழிப்பதாகவும் சுட்டிக்காட்டி ஆளுநரை நீக்கி மக்களால் தெரிவுசெய்யப்பட்டுள்ள பிரதிநிதிகளுடன் ஒத்துழைக்கக்கூடிய ஒருவரை நியமிக்குமாறு வேண்டுப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 15 ம் திகதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு இதுவரை எதுவித பதிலும் கிடைக்கப்பெறவில்லை என தெரியவருகின்றது.

Read more...

வடக்கில் உள்ள பாதுகாப்பு நிலைகள் நீக்கப்படமாட்டாது.

வடக்கில் சமாதானமான ஓர் சூழ்நிலை காணப்படுகின்றபோதும் அங்கு மறைந்துள்ள புலிகளை முற்றாக கண்டுபிடித்து அகற்றும்வரை அங்குள்ள பாதுகாப்பு நிலைகள் எந்தத் காரணம் கொண்டும் அகற்றப்பட மாட்டாது என சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கண்டியில் அஸ்கிரியபீடத்து மகாநாயக்க தேரர்களுடனான சந்திப்பில் இதை தெரிவித்த அவர், யாழில் மறைந்துள்ள புலிகளில் மிகவும் கடும்போக்கான பயங்கரவாதிகளும் காணப்படுவதாகவும் அவர்களை பிடிப்பதற்காக படையினர் வலைவிரித்துள்ளதாகவும் தெரிவித்ததுடன் வடக்கில் காணப்படும் தற்காலிக முகாம்களுக்கு பதிலாக நிரந்த படைமுகாம்களை கட்டியெழுப்புவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Read more...

மக்கள் தமது காணிகளுக்கு உரிமை கோரமுடியும்.

கடந்த 30 வருட யுத்தத்தில் தமது காணிகளை இழந்த மக்கள் தமது காணிகளுக்கு ஆவணங்களுடன் உரிமைகோர முடியும் என மீழ் குடியேற்ற மற்றும் அனர்த்த நிவராண அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை அமைச்சு விடுத்துள்ளதுடன் அவ் அறிக்கையில் மக்கள் தமது உடமைகளை உரிமைகோருவதற்கு எவ்வித தயக்கமும் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என அறிவித்துள்ளது.

நாட்டின் சூழ்நிலைமை காரணமாக வடகிழக்கை விட்டு வெளியேறிய மக்கள் பலரின் காணிகளை புலிகள் சுவிகரித்து தமது உறுப்பினர்கள் மற்றும் அவ்வியக்கத்தில் இருந்து உயிரிழந்தோரது குடும்பங்களுக்கு வழங்கியிருந்தனர். அவ்வாறு புலிகளிடம் தமது காணிகளை பறிகொடுத்த மக்கள் எவ்வித தயக்கமும் இன்றி தமது காணிகளுக்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து அக்காணிகளை மீளப்பெற்றுக்கொள்ள முடியும் என நம்பப்படுகின்றது.

இது தொடர்பாக அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள சுற்று நிருபம் அல்லது அறிக்கையின் தமிழாக்கம் இன்னும் ஓரிரு நாட்களில் எமது இணையத்தில் பிரசுரிக்கப்படும்.

Read more...

Monday, August 17, 2009

அப்பாடா ! 9 மாதங்களுக்கு பிறகுஅமெரிக்க தொழில்துறை உற்பத்தியில் முன்னேற்றம் !

கடந்த ஒன்பது மாதங்களுக்கு பிறகு, முதல் முறையாக, சென்ற ஜுலை மாதத்தில் அமெரிக்காவின் தொழில் துறை உற்பத்தி 0.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது, பின்னடைவிலிருந்து அமெரிக்காவின் தொழில் துறை சற்று மீளத் தொடங்கி உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

அமெரிக்காவில் கார்கள் உள்ளிட்ட மோட்டார் வாகனங்களின் விற்பனையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்தான் தொழில் துறை உற்பத்தி உயர்ந்ததற்கான காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், நுகர்வோர் மத்தியில், பொருளாதார வளர்ச்சி குறித்து இன்னும் நம்பிக்கை ஏற்படவில்லை என்று மிச்சிகன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க பொருளாதாரத்தில், நுகர்வோர்கள் செலவினத்தின் பங்களிப்பு 67 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.




Read more...

மாணவன் தாக்கப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபர்கள் 11 பேரையும் விளக்க மறியிலில் வைக்க உத்தரவு.

தகவல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் நிப்புண ராமநாயக்க தாக்கப்பட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் உட்பட 11 பேரை கடுவல நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 31ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரம் 12ம் சந்தேக நபராக நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட எஸ்எஸ்பி வாஸ் குணவர்த்தனவின் மகன் ரவிந்து குணவர்த்தன களுபோவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் அவர் தொடர்பான வைத்திய அறிக்கையை மன்றிற்கு சமர்ப்பிக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

Read more...

தடுத்து வைக்கப்பட்டுள்ள குழந்தைப் புலிகளை பெற்றோர் கண்ணீர் பெருக சந்தித்தனர்.

புலிகளினால் பலவந்தமாக யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்ட குழந்தைப் புலிகள் பலர் வன்னியுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்தும், இறுதி யுத்தத்தில் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டும் உள்ளனர். இவர்கள் யாவரும் கொழும்பில் இருந்து 60 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள அம்பேபுஸ்ஸ என்ற இடத்திலும் வேறு சில இடங்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இக்குழந்தைப் புலிகளில் 110 பேரது பெற்றோர் அவர்களை முதற்தடவையாக சந்தித்து பேசினர். பெற்றோர் தமது குழந்தைகளைக் கண்டபோது மிகவும் உணர்சிவசப்பட்டு கண்ணிர் பெருக அவர்களை கட்டியணைத்து முத்தமிட்டு ஓலமிட்டதை காணமுடிந்துள்ளது. இன்றும் எத்தனையோ பெற்றோர் தமது குழந்தைகளுக்கு என்ன நடந்தது என தெரியாது இருக்கின்ற நிலையில் மேற்படி சந்திப்பு குறிப்பிட்ட பெற்றோருக்கும் அக்குழந்தைப் போராளிகளுக்கும் பாரிய சந்தோசத்தை கொடுத்துள்ளதுடன் அவர்கள் தமது வாழ்வின் ஓர் திருப்பு முனையை கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இச்சந்திப்பிற்கு சென்ற பெற்றோர் தமது குழந்தைகளுக்கு சமைத்த மற்றும் உலர் உணவுப் பொருட்களையும் கொண்டு சென்று அவர்களுடன் சேர்ந்து பல மாதங்கள், வருடங்களுக்கு பின்னர் உண்டு மகிழ்ந்தாக கூறப்படுகின்றது.

Read more...

வாஸ் குணவர்த்தனவின் மகன் கைது. மாணவனை தாக்கிய சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்

கொழும்பு தகவல் தொழில்நுட்ப கல்லூரி ஒன்றின் மாணவனான நிபுண ராமநாயக்க தாக்கப்பட்டமை தொடர்பாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் இயக்குனர் எஸ்எஸ்பி வாஸ் குணவர்த்தனவின் மகன் மற்றும் பொலி பொலிஸ் அதிகாரிகள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் கொழும்பு நீதிமன்றொன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

Read more...

ரஷியாவில் பயிற்சியின் போது போர் விமானங்கள் மோதல்

ரஷியாவில், 18-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) சர்வதேச விமான சாகச நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இதற்காக ரஷிய விமானப்படையின் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டன. ஜுவோஸ்கி நகர் அருகே நடந்த இந்த பயிற்சியில், எஸ்.யு-27 ரக விமானமும், மிக்-29 ரக விமானமும் மோதிக்கொண்டன.

இதைத்தொடர்ந்து அந்த விமானங்களில் இருந்த 3 விமானிகள் தானாக இயங்கும் இயந்திரத்தின் உதவியால் பாராசூட்டின் மூலம் வெளியே குதித்தனர். இதில் ஒரு விமானியின் பாராசூட் சரியாக செயல்படாததால், அவர் வானில் இருந்து கீழே விழுந்து உயிர் இழந்தார். இந்த விபத்தில் மேலும் ஒரு விமானி பலத்த காயம் அடைந்தார். அவருடைய நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இந்த விபத்துக்கு காரணம் என்ன? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Read more...

1000 ரூபாவிற்கு குழந்தையை விற்ற தாயும் நான்கு வைத்தியசாலை ஊழியர்களும் கைது.

தனது குழந்தையை பிறந்து சில மணி நேரங்களில் 1000 ரூபாவிற்கு விற்ற தாயையும் அக்குழந்தையை விற்பதற்கு உதவிய நான்கு வைத்தியசாலை ஊழியர்களையும் காலிப்பொலிஸார் கைது செய்துள்ளனர். குழந்தையின் தாயின் தாயார்(பாட்டி) பத்தேகம பொலிஸில் மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்தே இக்கைது இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலை ஊழியர் ஒருவரின் கணவரே குழந்தையை எடுத்துச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குழந்தையை எடுத்துச் சென்ற நபர் அக்குழந்தையை அதிக பணத்திற்கு விற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Read more...

அமெரிக்க விமான நிலையத்தில் விசாரணை: மன்னிப்பு கேட்குமாறு வற்புறுத்த மாட்டேன்- நடிகர் ஷாருக்கான்

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் நடைபெறும் கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்தி நடிகர் ஷாருக்கான் அங்கு சென்றார். நியுயார்க் விமான நிலையத்தில் இறங்கியதும் அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் அவரை பிடித்துச் சென்று இரண்டு மணி நேரம் தனியறையில் விசாரணை நடத்தினார்கள். நியுயார்க் விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து இந்திய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-அது ஒரு பின்பற்றக் கூடிய வழக்கமான நடைமுறை என்று நான் கருதுகிறேன். எனினும், மிகவும் துரதிர்ஷ்டவசமான பரிசோதனை நடைமுறை ஆகும். அந்த சம்பவத்தை முற்றிலுமாக மறந்து விடலாம் என்று கேட்டுக் கொள்கிறேன். விமான நிலையத்தில் அவமரியாதை செய்ததற்காக மன்னிப்பு கேட்குமாறு நான் வலியுறுத்த மாட்டேன். என்னுடைய பெயரில் `கான்` என்று இருந்ததால் உண்மையிலேயே அவமரியாதைக்கு உள்ளானேன். அது ஒரு முஸ்லிம் பெயர். அவர்கள் வைத்திருந்த பரிசோதனை பட்டியலில் சாதாரணமாகவே அந்த பெயர் அதிகமான அளவில் இடம் பெற்றிருக்கும் என்றே நான் கருதுகிறேன். இவ்வாறு ஷாருக்கான் தெரிவித்தார்.

Read more...

ஆப்கானிஸ்த்தானில் 200 இங்கிலாந்து வீரர்கள் உயிர் துறந்துள்ளனர்.

அமெரிக்கப்படைகளுடன் சேர்ந்து ஆப்கானிஸ்தானில் செயற்பட்டுவரும் பிறநாட்டுப் படைகளுள் இங்கிலாந்து முக்கிய இடத்தை வகிக்கின்றது. அங்கு இடம்பெற்று வரும் மோதல்களில் இதுவரை 199 இங்கிலாந்து வீரர்கள் உயிர் இழந்திருந்தனர். அவ் எண்ணிக்கை நேற்று முன்தினம் இடம்பெற்ற குண்டுவெடிப்பொன்றில் இறந்த இங்கிலாந்து விரருடன் 200 ஐ எட்டியுள்ளது.

Read more...

Sunday, August 16, 2009

25 கோடி பெறுமதியான பாடப்புத்தகங்கள் அழித்கொழிக்கப்படவுள்ளது.

இலங்கை கல்வித் திணைக்களத்தின் வெளியீட்டு பிரிவினரால் அளவிற்கு அதிகமாக அச்சடிக்கப்பட்ட 8ம் வகுப்பிற்குரிய 25 கோடி ரூபா பெறுமதியான பாடப்புத்தகங்கள் வாழைச்சேனை காகித ஆலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

எதிர்வரும் 2010ம் ஆண்டுடன் பாடவிதானங்கள் மாறுகின்றபோதும் அவற்றை கணக்கில் எடுக்காது அச்சடிப்பு நிறுவனங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களின் தரகு கூலிகளை பெற்றுக்கொள்ளும் பொருட்டு கல்வித் திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட இச் செயலினால் மேற்படி 25 கோடி ரூபா பெறுமதியான புத்தகங்களை அழித்தொழிக்க நேரிட்டுள்ளது.

இப்புத்தகங்கள் வாழைக்சேனை காகித ஆலையில் றீசைக்கிள் பண்ணப்பட்டு மீண்டும் காகித உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் எனவும் அதே நேரம் இப் புத்தகங்களை கொழும்பு ஒறுகொடவத்தை பிரதேசத்தில் உள்ள கல்வித் திணைக்கள களஞ்சியத்தில் இருந்து வாழைச்சேனைக்கு நகர்த்துவதற்கு லொறி ஒன்றிற்கு 69000 ரூபா வீதம் செலவிடப்பட்டுள்தாகவும். இதற்கான ஒப்பந்தம் சிசிர போக்குவரத்து சேவையுடன் செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும். இத்தனை புத்தகங்கைளையும் நகர்த்துவதற்கு 50 லொறிகள் தேவைப்படும் என குறிப்பிட்ட போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளதுடன் இவற்றில் அரைவாசி புத்தகங்கள் தற்போது வாழைச்சேனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Read more...

எஸ்பி ஜமால்தீன் கொலையாளிகள் கைது. ஓப்பந்தக்கொலை:

மட்டக்களப்பு பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் இயக்குனர் ஜமால்தீன் அவர்களின் கொலை தொடர்பாக தேடப்பட்டுவந்த சந்தேச நபர்களில் மூவர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரச புலனாய்வுத் துறையின் தகவல்களின் அடிப்படையில் காரைதீவு விசேட அதிரடிப் படையினர் இவர்களைக் கைது செய்து கல்முனைப் பொலிஸாரிடம் பாரமளித்துள்ளனர். மருதமுனையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான சுலைமாலெப்பை நஜீமுர் ரஹ்மான, வீரன் எனப்படும் புலிகளியக்க உறுப்பினரான மத்திய முகாம் பிரதேசத்தை சேர்ந்த செல்லத்தம்பி தேவேந்திரன், நற்பட்டிமுனையைச் சேர்ந்த மொஹமட் காசிம் ஹம்சா ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது இது ஒர் ஒப்பந்தக் கொலை என்பது வெளியாகியுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான சுலைமாலெப்பை நஜீமுர் ரஹ்மான இக்கொலைக்காக வீரா எனப்படும் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினருக்கு பத்து லட்சம் ரூபா தருவதாக இணங்கியிருந்ததாக வீரா பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாகவே றஹ்மான இக்கொலையைத் திட்டமிட்டுள்ளார். குடும்ப தகராறு மற்றும் லஞ்சம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட சச்சரவு கொலை ஒப்பந்தத்திற்கு தூபமிட்டதாக மருதமுனைவாசி ஒருவர் தெரிவித்தார்.

Read more...

உக்கிய நிலையில் இரு உடல்கள் சப்புஸ்கந்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

20 , 35 வயது மதிக்கத்தக்க இரு ஆண்களது உடல்கள் சப்புக்கஸ்கந்த ஒதுக்குப்புறப் காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிகவும் பழுதடைந்து காணப்படும் இவ் உடலங்களில் ஒரு பகுதி மிருகங்களாலும் பூச்சி புளுக்களாலும் உண்ணப்பட்டுள்ளதாகவும் சுமார் நான்கு நாட்களுக்கு முன்னர் கொலைசெய்யப்பட்டு அவ்விடத்திற்கு இவ்வுடல்கள் கொண்டுவந்து போடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பில் பாதாளக்குழக்களை இல்லாதொழிக்கும் நடவடிக்கையில் விசேட அதிரடிப்படையின் அணியொன்று செயற்பட்டு வருகின்ற நிலையில் இவ்வாறான உடலங்கள் கண்டு பிடிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

சட்டவிரோமாக 20000 பேர் இடைத்தங்கல் முகாம்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

வடபகுதியில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருப்பவர்களில் 20,000 பேர் சட்டவிரோதமான முறையில் வெளியேறியிருப்பதாக அங்கு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புக்களின் மூலம் தெரியவந்துள்ளது.

நலன்புரி நிலையங்களிலுள்ள பலர் அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரசியல் நீரோட்டத்தில் இணைந்துகொண்ட தமிழ் குழுக்களுக்குப் பணம் செலுத்தி சட்டவிரோதமான முறையில் வெளியேறிவருவதாக அண்மையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இக்குற்றச்சாட்டுக் குறித்து விசாரிக்கும் நோக்கில் நலன்புரி நிலையங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பு முடியும் தறுவாயிலுள்ள நிலையில் முகாம்களிலிருந்து 20,000 பேர் சட்டவிரோதமாக வெளியேறியிருப்பது தெரியவந்திருப்பதாக வவுனியா கச்சேரியைச் சேர்ந்த அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

எனினும், இவர்கள் எவ்வாறு வெளியேறினார்கள் என்பது தொடர்பாக இதுவரை எந்தத் தகவல்களும் தெரியவில்லையென அவர் தெரிவித்தார்.

அதேநேரம், வன்னியிலிருந்து மக்களுடன் மக்களாக வெளியேறிய விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் சிலரும் இவ்வாறு பணம்கொடுத்து வெளியேறியிருப்பதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வைத்தியசாலைக்குச் சிகிச்சைபெறுவதாகக் கூறிச் சென்ற பலர் முகாம்களைவிட்டுத் தப்பியோடியிருப்பதாகவும் அந்த ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com