Sunday, August 16, 2009

SSDO-Canada நிறுவனத்தின் உதவியுடன் வன்னி மக்களுக்கான உதவிப்பொருட்கள் அனுப்பிவைப்பு!

வன்னியில் இடம்பெற்ற மோதல்களால் அங்கிருந்து இடம்பெயர்ந்து வவுனியா, செட்டிகுளம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி முகாம்களில் வாழ்ந்துவரும் மக்களுக்காக சமூக சுயதொழில் அபிவிருத்தி நிறுவனம்(SSDO)கனடா என்ற எமது அமைப்பு உடுப்புகள், சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்கள், சக்கரநாற்காலிகள், ஊன்றுகோல்கள், வயோதிபர்களுக்கான வண்டில்கள் என பல்வேறு பொருட்களை அனுப்பி வைத்துள்ளதுடன், மேலும் பல பணிகளை முன்னெடுத்து வருகின்றது. எமது உறவுகளுக்காக சேகரிக்கப்பட்ட உடுப்புகள், சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்கள் என்பன அடங்கிய கொள்கலன் ஒன்றை கடந்த புதன்கிழமை 12.08.2009 அன்று வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ் மக்கள் நலன்சார்ந்த பணிக்கு கனடாவில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், வைத்தியர்கள், வீடு விற்பனை முகவர்கள், பொதுமக்கள், கத்தோலிக்க திருச்சபைகள், சாய்பாபா மன்றத்தினர், ஊர் மக்கள் ஒன்றியங்கள், என பலதரப்பினரும் உதவி புரிந்துள்ளனர். இவர்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ள இவ் மக்கள் பணி உரியமுறையில் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் ஒழுங்குமுறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாம் மேற்படி பணியை எமது தொண்டர்கள் மத்தியில் ஆரம்பத்தில் முன்னெடுத்திருந்தபோதும், இறுதியில் வர்த்தக நிறுவனங்கள் உட்பட மேலே குறிப்பிட்ட அனைத்து தரப்பினரும் எம்முடன் பக்கதுணையாக இருந்து உதவிப்பொருட்கள் மக்களை சென்றடைவதற்கு உதவியுள்ளனர். அவர்களுக்கும் இவ் சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.

அடுத்த கட்டமாக மோதல்களின்போது அவையங்களை இழந்து அங்கவீனர்களாகியுள்ள மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்குடன் சக்கரநாற்காலிகள், ஊன்றுகோல்கள், வயோதிபர்களுக்கான தள்ளுவண்டிகள் என்பனவற்றை சீனாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தயாரித்து அவற்றை அங்கிருந்தே அனுப்புவதற்கான நடவடிக்கையிலும் SSDO-Canada என்ற எமது அமைப்பு ஈடுபட்டுள்ளது.

மேற்படி பொருட்கள் அடங்கிய கொள்கலன் அடுத்துவரும் வாரங்களில சீனாவில் இருந்து வவுனியாவுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எமது இந்த பணிக்கு பெருமளவு நிதியுதவி தேவையாக இருந்த நிலையில் அதற்கு கனடாவில் உள்ள தனியார் வானொலியான CTBC என்ற வானொலி பொதுமக்களிடம் நிதி சேகரித்து உதவியுள்ளது. றோயல் புரோக்கர்ஸ் என்ற காப்புறுதி நிலையத்தின் முகவர் சிவா கந்தைய்யா தனது நிகழ்ச்சியின் நேரத்தை எமது உறவகளின் உதவிக்காக ஒதுக்கிதந்து உதவியுள்ளார். அவருக்கும் வானொலி நிலையத்தினருக்கும் மற்றும் எம்மால் கோரப்பட்ட நிதியை குறுகிய நேரத்தில் தந்து உதவிய கனடாவாழ் தமிழ்மக்களுக்கும் எமது நண்றிகளை தெரிவித்து கொள்வதுடன், எமது மக்களுக்காக எமது அமைப்பிடம் வழங்கிய நிதிகள், வேலைத்திட்டங்கள் தொடர்பான விபரங்களை பத்திரிகைகள், வானொலிகள், இணையத்தளங்கள் ஊடகாவும் அறியத்தருவோம் என்பதையும் தெரிவித்து கொள்கின்றோம்.

ஸ்ரீசமூக சுயதொழில் அபிவிருத்தி நிறுவனம்-கனடா

Read more...

Saturday, August 15, 2009

புலிகளின் தலைவிதியே மாவோயிஸ்டுக்களுக்கும் என்கின்றார் நேபாளம் பிரதமர்.

கத்மண்டுவில் இடம்பெற்ற ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் இரண்டாவது தேசிய அமர்வில் பேசிய பிரதமர், மாவோயிஸ்டுக்களை வன்முறைகள் அற்ற அரசியல் நீரோட்டத்தில் இணையுமாறு தான் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அதற்காக அவர்களிடம் இருந்த எவ்வித சாதகமான பதில்களும் கிடைக்கப்பெறாதபோது அவர்களுக்கு இலங்கையில் புலிகளியக்கத்திற்கு நேர்ந்த கதியே நேரும் என தெரிவித்துள்ளார்.

Read more...

இலங்கை அரசுக்கு சீன வங்கி ரூ.1,750 கோடி திட்டங்களுக்கு உதவி !

இலங்கையின் தெற்கு கடற்கரையோரம் உள்ள மிகப்பெரிய துறைமுகமான ஹம்பாதோட்ட அருகில் மிகப்பெரிய எண்ணை சேமிப்பு கிடங்கை அமைப்பதற்காகவும்இ கொழும்பு நகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள கட்டுநாயக சர்வதேச விமான நிலையம் வரை நெடுஞ்சாலை கட்டுவதற்காகவும் சீனாவின் எக்சிம் வங்கியுடன் இலங்கை அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களுக்காகவும் ஆயிரத்து 750 கோடி ரூபாயை சீன வங்கி இலங்கை அரசுக்கு நிதியுதவியாக வழங்கும்.

Read more...

நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்கக்கோரி ஜனாதிபதிக்கு ஜேவிபி கடிதம்.

நாட்டில் உள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை அகற்றக்கோரி ஜே.வி.பி யினர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தின் சாராம்சம். ஆக்கட்சியின் பிரச்சாரச் செயலாளர் ரில்வின் சில்வா அவர்களால் கையொப்பம் இடப்பட்டுள்ள கடிதத்தின் சாராம்சம்.

ஒரு தேசியப் பத்திரிகையில் ஆகஸ்ட் 11, 2009 இல் தெரிவிக்கப்பட்ட செய்தி ஒன்றில் நீங்கள் சிறீலங்கா சுதந்திரக் கட்சி அணிவகுப்பாளர்களிடம் ஒரு ஜனாதிபதி தேர்தலுக்குத் தயாராகும்படி கூறியதாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமல்ல சீக்கிரமே ஜனாதிபதி தேர்தல் வரப்போகிறதென ஊடகங்களின் செய்திகளும் உள்ளன. இந்தச் செய்திகள் எல்லாம் வதந்திகள் வெளிப்படுவதாகவே பிரசுரிக்கப் பட்டுள்ளன.

இருந்தபோதும் நம்பிக்கைவாய்ந்த ஒரு பத்திரிகைச் செய்தியானது 'ஒரு ஜனாதிபதி தேர்தலுக்குத் தயாராகுமாறு' நீங்கள் கூறியதகவே தெரிவித்துள்ளது. ஆனால் நீங்கள் அப்படி ஒரு தேர்தலை நடாத்தும் தார்மீக உரிமையோ மற்றும் 2005 ஜனாதிபதி தேர்தலில் பெற்ற மக்கள் ஆணையின் பிரகாரமோ உரிமை உடையவரல்ல.

நீங்கள் அப்பொழுது, பொது ஜன மக்கள் முன்னணியின் அப்போதய பிரதம மந்திரியாகவும் ஜனாதிபதி வேட்பாளராகவும் இருந்து, 8 செப்டம்பர் 2005 இல் அலரிமாளிகையில் பொதுமக்களுக்கு முன்னால் கைச்சாத்திட்ட ஜே.வி.பி யினரோடான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர நாங்கள் விரும்புகின்றோம்.

அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 7 வது பந்தி பின்வருமாறு கூறுகிறது:-

"இலங்கையின் ஜனநாயக நிகழ்வுகளைப் பெரிதாகப் பாதிக்கும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை அகற்றுவதே முதன்மையானதும் முன்னணியானதும் கடமையென்று ஒத்துக்கொண்டதோடு அதை 6 வது ஜனாதிபதி ஆட்சிக்காலம் முடியுமுன் அகற்றுவதாகவும், கூறியே அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டீர்கள்."

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ள 13 அம்சக் கோரிக்கையின் பிரகாரமே ஜே.வி.பி யினராகிய நாங்கள் உங்களை ஜனாதிபதியாகக் கொண்டுவரும் பொறுப்பை எடுத்தோம். நீங்கள் 2005 ஜனாதிபதி தேர்தல் பிரகாரம் பெற்ற மக்கள் ஆணையின் படிக்கு இதை நிறைவேற்றக் கடமைப் பட்டவர்கள்.

நீங்கள் "மகிந்தா சிந்தனை" என்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் 84 பக்கத்தில் "அரசியல் அமைப்புச்சட்டத் திருத்தம்" என்ற அம்சத்தின் கீழ் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை அகற்றுவதாகவும் வெளியிட்டுள்ளீர்கள்.

இதன் பிரகாரம் இன்னுமொரு ஜனாதிபதி தேர்தலை நடாத்த உங்களுக்கு எந்தவித உரிமையும் இல்லையாகும். ஆகவே ஜே.வி.பி யோடு செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் படிக்கு இந்த ஜனாதிபதிக்காலம் முடிவதற்குள் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிமுறையை அகற்ற வேண்டும்.

இந்த ஜனாதிபதிமுறையை யூ.என்.பி அறிமுகப் படுத்திய அன்று தொடக்கம் நாம் அதை எதிர்த்ததோடு இன்றுவரை அதை அகற்றுவதையே கொள்கையாகக் கொண்டு பாடுபட்டு வருகின்றோம் என்பதை நாங்கள் உங்களுக்கு அடித்துச் சொல்ல வேண்டிய ஒரு தேவையுள்ளது.

நீங்களும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறை ஜனநாயக நிகழ்வுப்போக்குக்குத் தடையானது என்பதை ஒத்துக்கொண்டவராவீர்கள். நாம் ஜனாதிபதி முறையை இல்லாமற் பண்ணுவதைச் சுலோகமாக வைத்து 1982 இலும் 1994 லிலும் நடுநிலையான வேட்பாளர்களை நிறுத்தினோம்.

ஆனால் 1994 இல் திருமதி சந்திரிக்கா குமாரத்துங்கா, தான் ஜனாதிபதியாக வந்தால் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை அகற்றுவேன் என்று உறுதிமொழி தந்ததால் நாம் எமது வேட்பு மனுவை வாபஸ் வாங்கிக் கொண்டோம். அதன் பின்னால் அவரும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை அகற்ற விரும்பவில்லை.

நாம் உங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடும்பொழுது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை அகற்றுவதையே முக்கிய குறிக்கோளாகக் கொண்டு அந்த ஒப்பந்தத்தைச் செய்தோம்.

நீங்கள் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை அகற்றுவேன் என்று கூறிப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துவிட்டு அதை மகிந்தா சிந்தனை என்ற உங்களது தேர்தல் வேலைத்திட்டத்திலும் வெளிப்படுத்தி அதற்கான மக்கள் ஆணையைப ;பெற்றபின்பு ஜனாதிபதி ஆட்சிக்காலம் முடிவதற்கு இன்னும் இரண்டு வருடம் இருப்பதற்கு முன்னதாகவே நாட்டின் நலன்கருதி ஜே.வி.பியோடு செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அப்பால்போட்டுவிட்டு, மக்கள் ஆணையையும் உதாசீனம்செய்வதானது நன்னெறி பிறழ்ந்த செயலாகும்.

ஆகவே இன்னுமொரு ஜனாதிபதி தேர்தல் வைக்கும் எண்ணத்தைவிட்டுவிட்டு நீங்கள் பொது மக்களுக்கு முன்னால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உறுதியளித்தவாறு 2005 இல் அதற்கான மக்கள் ஆணையைப் பெற்றதன்படிக்கும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் உங்களைக் கேட்கின்றோம்.

Read more...

இரு யுவதிகளது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பௌத்தாலோக மாவத்தை அருகே உள்ள நீரோடை ஒன்றினுள் இருந்து இரு யுவதிகளது உடல்கள் கண்டபிடிக்கப்பட்டுள்ளது. 17, 29 வயதுடைய இவ் இரு யுவதிகளும் அப்பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தவர்கள் என நம்பப்படுகின்றது. அவர்கள் மஸ்கெலிய, லக்சாபண பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் வெளிவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாள் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

Read more...

Friday, August 14, 2009

2020-ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக மாற ஊழலற்ற ஆட்சி அமையவேண்டும். -அப்துல்கலாம்-

2020-ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக மாற ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறினார்.

கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் பாரதியார் பல்கலைக்கழக அளவில் தேர்தல் ரேங்க் பெற்ற மாணவ-மாணவிகள் பாராட்டு விழா மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயலாளர் சரஸ்வதி கண்ணையன் வரவேற்று பேசினார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்கு ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் தலைவர் டி.எஸ்.ஆர்.கண்ணையன் சால்வை அணிவித்து கவுரவித்தார். விவின் குழுமங்களின் முதன்மை நிர்வாகி சதீஷ்பிரபு நினைவுப்பரிசு வழங்கினார்.

பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அப்துல்கலாம் சான்றிதழ், கேடயம் வழங்கி பாராட்டினார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

நம் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் பெரிய லட்சியம் வேண்டும். `உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்று திருவள்ளுவர் கூறியதுபோல் பெரிய அளவில் லட்சியம் இருக்கவேண்டும். அந்த லட்சியம் வெற்றிபெற அயராது உழைக்கவும் வேண்டும். மாணவ-மாணவிகளாகிய நீங்கள், என்னுடைய வீட்டில் பூஜையறை அல்லது பிரார்த்தனை இடமருகில் 20 நல்ல புத்தகங்களை வைத்து நூலகத்தை ஆரம்பிப்பேன் என்று உறுதிகொள்ளவேண்டும்'.

அதேபோல் பெற்றோர்கள், `என்னுடைய மகன், மகள் வைக்கும் 20 புத்தகம் கொண்ட நூலகத்தை 200 புத்தகமாக மாற்ற உறுதுணையாக இருப்பேன்' என்றும் பெரியவர்கள், `என்னுடைய பேரன், பேத்திகளுடைய 200 புத்தகம் கொண்ட நூலகத்தை 2 ஆயிரம் புத்தகமாக மாற்ற எங்கள் குடும்பத்தினர் உறுதுணையாக இருப்போம்' என்று உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும்.

எங்கள் வீட்டின் நூலகம்தான் பரம்பரை சொத்து, அறிவுக்களஞ்சியம் என்று நினைத்து அந்த முயற்சியை அனைவரும் செய்யவேண்டும். அதுதான் நாட்டின் அறிவுப்புரட்சிக்கு அடிப்படையாக இருக்கும். ஒழுக்கம், புதுமையான அறிவு, தோற்றுவிக்கும் திறன் கொண்ட அறிவு, மதிப்பளிக்கும் தன்மை, ஒருமைப்பாடு உணர்வு கொண்ட அறிவுத்திறன்கள் மாணவ-மாணவிகளிடத்தில் இருக்கவேண்டும்.

இந்தியாவை 2020-ல் வல்லரசாக மாற்ற கிராமத்துக்கும், நகரத்துக்கும் உள்ள சமூக பொருளாதார இடைவெளியை குறைக்கவேண்டும். சுத்தமான குடிநீர், எரிசக்தி அனைவருக்கும் சமமாக கிடைக்கவேண்டும். விவசாயம், தொழில் சேவை துறைகளை ஒருங்கிணைக்கவேண்டும். கல்வி அனைவருக்கும் கிடைக்கவேண்டும்.
தரமான மருத்துவ வசதி கிடைக்கவேண்டும், ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும். வறுமை, கல்லாமை, பெண்கள் கொடுமை போன்றவை ஒழியவேண்டும். வளமான பாதுகாப்பு, சுகாதாரம் வாய்ந்த நாடாக இந்தியா மாறவேண்டும். வாழ்வதற்கு ஏற்ற இடமாக மாற திட்டங்களை கொண்ட நாடாக இந்தியா இருக்கவேண்டும். இவையனைத்தையும் நிச்சயமாக செய்தால் உணவு, சுகாதாரம் உள்பட அனைத்திலும் இந்தியா வல்லரசாக மாறும். கல்வி நிறுவனங்கள் சார்பில் கிராமப்புற மக்களை மேம்படுத்தும் வகையில் புறா திட்டத்தின் கீழ் கட்டமைப்பு வசதிகளை செய்ய வேண்டும்.

இவ்வாறு முன்னாள் துணை ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார். பின்னர் அவரிடம் மாணவ-மாணவிகள் கேள்விகள் கேட்டனர். அதற்கு அவர் உற்சாகத்துடன் பதில் அளித்தார்.

Read more...

மகன் பொலிஸ் வேடம் பூண்டதை மறைப்பதற்காக தற்கொலை வாகனப் பூச்சாண்டி காட்டினார் எஸ்எஸ்பி.

மாலம்பே தகவல் தொழில்நுட்ப கல்ல£ரி ஒன்றில் பயிலும் தனது மகன் பொலிஸ் அதிகாரத்தை கையில் எடுத்து சகமாணவன் ஒருவரை கட்த்திச் சென்று சித்திரவை செய்த விடயம் ஊடகங்கள் வாயிலாக வெளிவந்து, பிரச்சினை முடி மறைக்கப்பட முடியாத நிலைக்கு வந்த போது நவீன வியூகம் ஒன்றை வகுத்கு தற்கொலைக் குண்டு பூச்சாண்டி ஒன்றை காட்டி தனது மகனது தவறை மறைத்து விடலாம் என கொழும்பு குற்றத் தடுதப்பு பிரிவின் இயக்குனர் வாஸ் குணவர்த்தன அவர்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் அம்பலமாகியுள்ளது.

வட மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லெவ்கே மேற்படி தற்கொலை வாகன விடயம் முற்றிலும் தவறானது என தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு ஆணையிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த இரு தினங்களுக்கு முன்னர் காலை 10 மணியளவில் மன்னார் பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் இருவர் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்வதற்கு உதவி கோரியுள்ளதுடன் அந்த பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரி ஒருவரின் ஒத்துழைப்பின் பேரில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வாகனம் ஒன்று தொடர்பில் தகவல் தெரியவந்துள்ளது.

குறித்த வாகனம் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்ட விசாரணைகளின் போது குறித்த வாகனம் வாடகைக்காக சிலரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்று சந்தேக நபர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பொலிஸாhர் அந்த வாகனத்தைப் பார்க்க வேண்டும் என்று கூறியதும் தொலைபெசி மூலம் தொடர்பு கொண்ட சந்தேக நபர் வாகனத்தை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுவரச் செய்துள்ளார்.

அதன் பின்னர் குறித்த வாகனத்தைச் செலுத்தி வந்த சாரதியை வாகனத்திலிருந்து கீழே இறக்கியுள்ள பொலிஸார் அதனை சந்தேக நபருடன் கொழும்புக்கு எடுத்து வந்துள்ளனர். இது தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் லெவ்கேயிடம் ஊடகம் ஓன்று கேட்ட போது தெரியவந்ததுள்ளது.

அதிசக்தி வாய்ந்த 20 குண்டுகள் பொறுத்தப்பட்ட வான் ஒன்று மன்னார், உப்புக்குளம் பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டது என்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்ட வரும் பிரசாரத்தில் உள்ள உண்மைத் தன்மை குறித்து முழுமையானதொரு விசாரணையினை நடத்தி அது தொடர்பான அறிக்கையினை தமக்கு கையளிக்குமாறு வடக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லெவ்கேவினால் மன்னார் பிரதேசத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சிசில் பெரேரா மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த விக்கிரமசிங்க ஆகியோருக்கு உத்தரவு இட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த வாகனத்தில் குண்டுகள் எதுவும் பொருத்தப்பட்டிருந்தமை தொடர்பில் தனக்கு அறிவிக்கப்படவில்லை என்று பிரதி பொலிஸ் மா அதிபர் லெவ்கே தெரிவித்தார். அவ்வாறு குண்டுகள் பொறுத்தப்பட்டிருந்தால் முதலில் அந்தக் குண்டுகளை செயலிழக்கச் செய்திருக்க வேண்டும். அத்துடன் அந்த வாகனத்தில் குண்டுகள் காணப்பட்ட விடயம் தொடர்பில் பிரதேசத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் என்ற வகையின் எனக்கோ அல்லது பிரதி பொலிஸ் மா அதிபருக்கோ இல்லை சிரேஷ் பொலிஸ் அத்தியட்சருக்கோ தெரிவித்திருக்க வேண்டும்.

குண்டுகள் பொறுத்தப்பட்ட வாகனம் ஒன்று கைது செய்யப்பட்ட விடயம் தொடர்பில் தான் வானொலிச் செய்தியின் மூலமாகவே அறிந்து கொண்டதாக தெரிவித்த லெவ்கே இந்த சம்பவம் தொடர்பில் முழுமையானதொரு விசாரணையை நடத்தில் அது உண்மையா? போய்யா? ஏன்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மன்னார் பிரதேசத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சிசில் பெரேரா மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த விக்கிரமசிங்க ஆகியோருக்கு உத்தரவு இட்டுள்ளார்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் தான் பொலிஸ் மா அதிபருக்கும் தகவல் வழங்கியதாக லெவ்கே மேலும் கூறினார்.

Read more...

கொழும்பு குற்றபத்தடுப்பு பிரிவின் இயக்குனர் வாஸ் குணவர்த்தனவின் மகனை கைது செய்ய உத்தரவு.

மாலபே பிரதேசத்தில் அமைந்துள்ள தகவல் தொழிநுட்ப கல்லுரியின் மூன்றாம் ஆண்டு மாணவன் நிபுண ராமநாயக்காவை கடத்திச் சென்று தாக்குதலுக்கு உட்படுத்திய சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான அதே நிறுவகத்தில் கல்வி பயின்று வரும் மாணவனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வாஸ் குணவர்தனவின் புதல்வருமான ரவிந்து குணவர்தனவை உடனடியாக கைது செய்யுமாறு கடுவெல நீதிவான் மனிலால் பிரசன்ன டி சில்வா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அத்துடன் அவர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லாதிருக்கும் வகையில் ரவிந்துவின் கடவுச் சீட்டையும் கைப்பற்றி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும்; நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இலங்கை தகவல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் நிபுண ராமநாயக்கா மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக ரவிந்து குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். இந்நிலையிலேயே ரவிந்து நாட்டை விட்டு வெளியேறாத வகையில் தடை விதிக்குமாறு குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி தகவல் தொழிநுட்ப கல்லூரியைச் சேர்ந்த மாணவனான எச்.எம்.செனவிரத்னவினால் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டினை அடுத்தெ சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த மாணவனுடன் நிபுண ராமநாயக்கா குறுக்கு வீதியொன்றினூடாக பயணித்துக் கொண்டிருந்த போதே ஜீப் ஒன்றில் வந்த சிலர் துப்பாக்கியொன்றைக் கான்பித்து அச்சுறுத்தியே நிபுணவை கடத்திச் சென்றனர் என்று பொலிஸூக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறெனினும், ரவிந்துவை கைதுசெய்யுமாறு காவல்துறையினருக்கு விடுக்கப்பட்ட உத்தரவு இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை. அத்துடன் அத்துருகிரிய பொலிஸாரால் இந்த சம்பவம் தொடர்பில் தொடரந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Read more...

Thursday, August 13, 2009

புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த பொலிஸ் உயர் அதிகாரி கைது.

புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்த பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி கம்பஹா பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அத்தியட்சகர் லக்ஸ்மன் கூரே எனவும் இவர் கடந்த காலங்களில் யாழ் மாவட்டத்தில் கடமையாற்றியிருந்தாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.

Read more...

விமான நிலையத்தில் விசா வழங்கும் நடைமுறை நீக்க நடவடிக்கை

இலங்கைக்கு வருகைதரும் வெளிநாட்டவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 'விசா' வழங்கும் நடைமுறையை நீக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு முன்வைத்துள்ள யோசனையை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தெரியவருகிறது.

இவ்வாறு விமானநிலையத்தில் வைத்து விசாவை வழங்குவதற்குப் பதிலாக வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் தூதரகங்கள் ஊடாகவே விசாவை வழங்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு சிபாரிசு செய்துள்ளது.

உல்லாசப் பயணிகள் என்ற பெயரில் பயங்கரவாதிகள் நாட்டுக்குள் நுழைவதற்கு இவ்வாறு விசா வழங்கும் நடைமுறை வழிவகுப்பதாக அமைந்துவிடலாம் என்பதால் இம்முறையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பாதுகாப்பு அமைச்சு கோரியுள்ளது.

உல்லாசப் பயணிகளின் அதிக வரவுக்காக கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கும் போது இலங்கைக்குள் நுழைவதற்கான விசாவை வழங்கும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

அண்மைக்காலத்தில் உல்லாசப் பயணிகள் என்ற பெயரில் வந்த 309 வெளிநாட்டவர்கள் வேறு நோக்கங்களுக்காக வந்திருந்தமை

கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, இலங்கைக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டவர்களை புகைப்படும் எடுக்கும் திட்டமொன்றை அமுல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தனர்.

உல்லாசப் பயணிகள் என்ற போர்வையில் நாட்டிற்குள் உட்பிரவேசிக்கும் நபர்கள் நாசகார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், அவர்களை அடையாளம் காண்பதற்காக புகைப்படங்கள் எடுக்க திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.




Read more...

ஐ.நா விற்கான இலங்கைப் பிரதிநிதியாக பாலித கோஹன்ன.

ஐ.நா விற்கான இலங்கைப் வதிவிடப் பிரதிநிதியாக நியூ யோர்க்கில் தங்கியுள்ள எச்.எம்.எஸ் பலியகார வின் இடத்திற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டாக்டர் பாலித கோஹன்ன நியமனம் பெறுகின்றார். எதிர்வரும் மாதம் 10 ம் திகதி அவர் தனது கடமையை பாரம் எடுப்பார் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. டாக்டர் பாலித கோஹகன்ன இலங்கையில் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்படுவதற்கு பாரிய பங்களிப்பைச் செய்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

அங்குலான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது.

அங்குலான பொலிஸ் காவல் நிலையத்திற்கு அருகாமையில் இரு இளைஞர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து பிரதேச மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் சண்டை மூண்டிருந்தது. சண்டையின் போது பொலிஸ் காவல் நிலையம் பொதுமக்களால் தாக்கியழிக்ப்பட்டன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட 3 பொலிஸார் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று பிற்பகல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை புனைப் பெயர் கொண்டு அழைத்த இரு இளைஞர்கள் அங்குலான பொலிஸ் காவல் நிலைய அதிகாரிகளால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்டிருந்த அவ்விளைஞர்களின் உறவினர்கள் நேற்று இரவு பொலிஸ் நிலையம் சென்று இளைஞர்களுடன் உரையாடி விட்டு திரும்பியும் உள்ளனர். ஆனால் இன்று காலை உறவினர்கள் பொலிஸ் நிலையம் சென்று இளைஞர்களை பார்வையிட அனுமதி கோரியபோது அவ்வாறு எவரையும் நாம் கைது செய்யவில்லை என பொலிஸார் கைவிரித்துள்ளனர்.

சற்று நேரத்தில் அவ்விளைஞர்கள் இருவரதும் உடல்கள் தலையில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் அங்குலான ரயில் தண்டவாளம் அருகில் காணப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் பொலிஸ் காவல் நிலையத்தை தாக்கி சேதமாக்கியுள்ளனர்.

பொலிஸார் இக்கொலையை செய்துள்ளதற்கான தாராளமான சாட்சிகள் உள்ள நிலையில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் அங்கு கடமையில் இருந்த 6 பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்விடத்திற்கு புதிய பொறுப்பதிகாரியுடன் 12 பொலிஸார் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.


Read more...

Wednesday, August 12, 2009

இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதுவர் இலங்கை விவகாரம் தொடர்பாக பேச்சு.

இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதுவரும் இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவருமான (வதிவிடமற்ற) மார்க் சோபார் அவர்கள் இலங்கை விவகாரங்கள் குறித்து இலங்கை அகதிகளுக்கான புனர்வாழ்வு ஸ்தாபனத்தின் நிறுவனர் திரு. எஸ். சீ. சந்திரதாசன், ஜனதா பார்டி தலைவர் சுப்ரமணிய சுவாமி ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார்.

இச்சந்தி தொடர்பாக கருத்து தெரிவித்த சுப்ரமணிய சுவாமி அவர்கள், இலங்கை அரசு தமிழ் மக்களுகான அதிகாரப் பகிர்வு விடயத்தில் முனைப்பு காட்டவேண்டும் என கூறியுள்ளார்.

Read more...

கேபி யின் கைதில் சர்வதேச சட்டம் மீறப்படவில்லை.

கேபி யின் கைதில் சர்வதேச சட்டம் மீறப்பட்டுள்ளதாக வெளிவரும் அறிக்கைகளை இலங்கை அரசு நிராகரித்துள்ளது. நேற்று பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய ஊடக அமைச்சர், கேபி யின் கைதில் சர்வதேச சட்டம் மீறப்படவில்லை எனவும் மாறாக கேபி யை கைது செய்வதற்கு சர்வதேச சமூகம் பூரண ஒத்துழைப்பை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

Read more...

கூட்டமைப்பின் அராஜகம் ஒழிந்தபாடில்லை.

வவுனியா உள்ளுராட்சி சபைத் தலைவராக நாதன் தெரிவு செய்யப்படுகின்றார்.

வவுனியா உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 5 ஆசனங்களைப் பெற்று வெற்றியீட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அச்சபையின் தலைவராக 1099 விருப்பு வாக்குகளைப் பெற்ற எஸ்.என்.ஜி நாதன் என்பவரை தெரிவு செய்யவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

தேர்தலில் முதன்மை வேட்பாளராக நியமிக்கப்பட்டிருந்த நாதன் விருப்புவாக்குகளின் அடிப்படையில் மூன்றாம் இடத்தைபெற்றுள்ளபோதும் சபைத்தலைவராக நியமிக்கப்படவுள்ளதுடன் கட்சியினுள் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற என்.எஸ். முகுந்தரன் என்பவர் சபையின் பிரதித் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

ஜனநாயக முறையில் இடம்பெற்ற தேர்தல் ஒன்றில் மக்களின் விருப்பு வெறுப்புக்களை நிராகரித்து புலிகளின் சர்வாதிகாரப் போக்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்து கடைப்பிடித்து தமக்கு வேண்டியவர்களை நியமிப்பதானது, மக்களின் அபிலாசைகளுக்கு செவிசாய்க்க தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தயாராக இல்லை என்பதை தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது.

அதே நேரம் குறிப்பிட்ட தேர்தலில் 3 ஆசனங்களைப் பெற்ற புளொட் அமைப்பின் முதன்மை வேட்பாளர் ரி.லிங்கநாதன் 2958 விருப்பு வாக்குகளைப் பெற்றருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com