Wednesday, August 12, 2009

ஜே.வி.பி.அனுர மற்றும் முன்னாள் நீதியரசருக்கும் இடையில் இரகசிய சந்திப்பு

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் அனுர திசாநாயக்கா ஆகியோருக்கு இடையில் நேற்று முன்தினம் (10) இரவு கிருளபனை பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய வீடொன்றின் அறையொன்றுக்குள் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வரையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் நேற்று லக்பிம நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுமாறு ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணியின் கட்சி அமைப்பாளர்களுக்கு ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியுடன் தொடர்புடைய வகையிலேயே மேற்படி இருவருக்கும் இடையில் இரகசிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஷமிந்தி சபரமாது மற்றும் காஷ்யப்ப சபரமாது தம்பதியினரால் கிருளப்பனை பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய இல்லத்திலேயே அநுர திசாநாயக்காவுக்கும் சரத் என்.சில்வாவுக்கும் இடையில் இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது என்று லங்கா ஈ நியூசுக்கு தகவல் கிடைத்துள்ளது. குறித்த இல்லத்தின் திறப்பு விழாவினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விருந்துபசார நிகழ்வில் இவ்விருவரும் அதிதிகளாகக் கலந்துகொண்ட போதே இந்த இரகசிய கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பீ.எச்.டீ படிப்பை நிறைவு செய்துள்ள ஷமிந்தி சபரமாது தனது மேலதிக பட்டப்படிப்பிற்காக வெளிநாடு செல்லவுள்ளார். இதனை முன்னிட்டும் இந்த விருந்துபசாரம் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா குறித்த விருந்துபசார நிகழ்வுக்கு பிரதான அதிதியாக அழைப்பு விடுக்கப்பட்டார். இவ்வாறாக அழைப்பு விடுக்கப்பட்ட ஏனையவர்களில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம், தயாசிறி ஜயசேகர, அரசாங்க தரப்பு சார்பில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, தினேஸ் குணவர்தனா, சீ.பீ.ரத்நாயக்க, மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அநுர குமார திசாநாயக்க, ஜனாதிபதி ஆலோசகரான சுனிமல் பெர்ணான்டோ, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் நாயகமும் கம்பஹா மாவட்டத்துக்காள மேலதிக நீதிவானுமாகிய பியசேன ரணசிங்க, எங்கள் தேசிய முன்னணியின் செயலாளர் ருவன் பெர்டினென்டஸ், ஆகியோருடன் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவின் சகோதரியொருவரும் கலந்துகொண்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கள மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கல சமரவீர ஆகியோருக்கும் இந்த நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவ்விருவரும் அதில் கலந்துகொண்டிருக்கவில்லை. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் சீ.பீ.ரத்நாயக்கா வெகு நேரம் அங்கிருக்காது விரைவில் விடைபெற்றுச் சென்றுள்ளார்.

நன்றி லங்காஈநியூஸ்



Read more...

ஐ.ம.சு.முன்னணி எம்பியின் சகோதரன் படுகொலை.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னிணி அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிருபமா ராஜபக்சவின் சகோதரரான ஸாம் லால் ராஜபக்ச அவரது வீட்டில் வைத்து கொல்லப்பட்டுள்ளார். அவரது வீட்டிற்கு நுழைந்த கொள்ளைக்காரர்களுடன் உருவான மோதலிலேயே இவர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.

Read more...

முன்னாள் இராணுவத் தளபதி மரணமானார்.

முன்னாள் இராணுவத் தளபதியும் இணைந்த வடகிழக்கின் ஆளுனருமான நளின் செனவிரத்தின அவர்கள் இன்று காலை காலமானார். 1985ம் ஆண்டில் இருந்து 1988ம் ஆண்டுவரை இலங்கை இராணுவத்தின் 10வது இராணுவத் தளபதியாக கடமையாற்றிய அன்னாரது இறுதிக் கிரிகைகள் பூரண இராணுவ மரியாதையுடன் எதிர்வரும் 15ம் திகதி சனிக்கிழமை பொரளை, பொது மயானத்தில் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர், 1953 ம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் 2ம் லெப்டினட் ஆக இணைந்து கொண்டதுடன் 1988ம் ஆண்டு 35 வருடகால சேவையின் பின்னர் ஓய்வு பெற்றிருந்ததுடன் இணைந்த வடகிழக்கின் ஆளுனராகவும் கடமையாற்றி இருந்தார்.

அத்துடன் இவரது சகோதரர் அனா செனவிரத்தின என்பவர் இலங்கையின் முன்னால் பொலிஸ் மா அதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

விடுதலைப் புலிகளின் வங்கிக் கணக்குகளை முடக்க இலங்கை கோரிக்கை

விடுதலைப் புலிகளின் வங்கிக் கணக்குகளை முடக்கி அந்த பணத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசு சுமார் 10 நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐயன்னா குரூப் என்று புலிகளின் நிறுவனம் மற்றும் பத்மநாதன் பெயரில் பல நாடுகளில் உள்ள வங்கிக் கணக்குகளில் சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், கணிசமான பணம் சுவிட்சர்லாந்து மற்றும் மொரிசியஸில் உள்ள கணக்குகளில் உள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்த விபரங்களை சமீபத்தில் கைது செய்யப்பட்ட பத்மநாதன் தெரிவித்துள்ளதாக அந்த இணையதளங்கள் தெரிவித்துள்ளன.

Read more...

வெளிநாட்டு புலனாய்வு நிறுவனங்களே கே.பி க்கு பாதுகாப்பு வழங்கியுள்ளது.

புலிகளின் தலைவர் என தன்னை அறிமுகம் செய்து கொண்டிருந்த கேபி எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு மிகவும் பிரபல்யமான வெளிநாட்டு புலனாய்வு நிறுவனங்களே பாதுகாப்பு வழங்கியுள்ளமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. சிஐஏ எனப்படும் Central Intelligence Service of the USA, எஸ்ஐஎஸ் எனப்படும் The Secret Intelligence Service (often known as MI-6) of the UK, என்ஐஎஸ் எனப்படும் Norwegian Intelligence Service போன்ற புலனாய்வு நிறுவனங்கள் கேபி யின் இருப்பிடத்தை துல்லிமாக அறிந்து வைத்திருந்தமை புலனாகியுள்ளது.

சர்வதேச பொலிஸார், இலங்கை, இந்திய அரசுகளால் தேடப்பட்டு வந்த கேபியின் அசைவுகளை அறிந்து வைத்திருந்த மேற்படி ஸ்தாபனங்கள் அவரை கைது செய்வதற்கோ அன்றில் அவர் தொடர்பான தகவல்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கவோ தவறியுள்ளதுடன் கொழும்பில் உள்ள பிறநாட்டு தூதுவர் ஒருவர் கேபியை மலேசியாவில் வைத்து சந்தித்தமையும் வெளிவந்துள்ளது.

Read more...

அரசியல் ஞானமற்றோர் எமது கட்சியை அரசுடன் மோதவிட முயற்சி : பிள்ளையான்

"அரசியல் ஞானம் இல்லாத ஒரு சிலர் எமது கட்சியையும் எமது ஆட்சியையும் அரசாங்கத்துடன் மோத விட்டு வேடிக்கை பார்ப்பதற்கான பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றனர்" என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் வேலைத்திட்டங்களைக் கிராமிய மற்றும் பிரதேச மட்டங்களில் விஸ்தரிக்கும் வேலைகளை ஆரம்பிக்கும் வகையில் வாகரைப் பிரதேசத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கட்சியின் துணைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான நாகலிங்கம் திரவியம் (ஜெயம்) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வாகரைப் பிரதேசத்திலுள்ள கிராமங்களைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

"கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு என நிலையான அரசியல் கட்சியென்றால் அது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மட்டும் தான்.வாடகை வீட்டில் இருப்பது போல் இன்னொரு கட்சியில் இணைந்து செயல்படுவதன் மூலம் எமது மாகாணத்தின் தனித்துவத்தையோ, எமது மக்களின் தனித்துவத்தையோ ஒரு போதும் பாதுகாக்க முடியாது.அப்படிப் போராட்டம் நடத்தினால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விடுவார்கள்.

இப்படியான அரசியல் எமக்குச் சரிவராது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசாங்கத்துடன் நாம் கெளரவமான உறவினைப் பேணியே அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்து வருகின்றோம். இப்படி செயல்படும் போது எமது மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் ஞானம் இல்லாத சிலர் அரசாங்கத்தையும் எம்மையும் மோத விட முயற்சிக்கின்றார்கள்.

இதன் மூலம் அரசியல் லாபத்தை அடையலாம் என நினைக்கின்றார்கள். இதையெல்லாம் கண்டு நாம் அஞ்சப்போவதும் இல்லை அடி பணியப் போவதும் இல்லை.

அனைவருமே ஒருமித்து நின்று பேரம் பேசுகின்ற சக்தியாக மாறி அதனூடாக அபிவிருத்திகளை ஈட்ட வேண்டும். அதே போல் தமிழ் மக்கள் அனைவருமே நிதானமாகச் சிந்திக்கின்ற காலகட்டத்தில் நாம் அனைவரும் நிற்கின்றோம்.

எனவே எதிர்வரும் காலங்களில் எமக்கென்று பலம் சேர்ப்பதற்கும் அரசியலில் எமது மாகாணத்தின் இருப்பிடத்தை நிலைக்கச் செய்வதற்கும் நாம் அனைவரும் நிச்சயம் ஒற்றுமைப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வரராஜா வாகரைப் பிரதேச சபைத் தலைவர் எஸ்.கணேசன் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
நன்றி வீரகேசரி

Read more...

மும்பையில் கொல்லப்பட்ட 9 தீவிரவாதிகளின் உடல்களை ஏற்க பாகிஸ்தான் மறுப்பு

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி, பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் தொடர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 9 தீவிரவாதிகள், இந்திய பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 9 தீவிரவாதிகளின் உடல்களும், மும்பையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை பெற்றுக்கொள்ளும்படி, பாகிஸ்தான் அரசுக்கு, மத்திய அரசு பல கடிதங்கள் அனுப்பி உள்ளது. என்றாலும், பாகிஸ்தானிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. தீவிரவாதிகளின் உடல்களை பெற்றுக்கொண்டால், பாகிஸ்தான் தான் தீவிரவாதிகளின் புகலிடம் என்பது உறுதி ஆகி விடும் என்ற கருத்தில், உடல்களை பெற்றுக்கொள்ள பாகிஸ்தான் மறுத்து வருகிறது.

Read more...

பொலிஸாருக்கு எதிராக மக்கள் 1380 முறைப்பாடுகள்.


பொலிஸாருக்கு எதிரான 1380 முறைப்பாடுகள் பொது மக்களிடம் இருந்த கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய பொலிஸ் விசாரணை அணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலான முறைப்பாடுகள் பொலிஸார் முறைப்பாடுகளை உரியமுறையில் விசாரிக்க தவறியாக அமைந்துள்ளது.

கடந்த வருடம் (2008) இவ்வாறாக 448 முறைப்பாடுகள் பொதுமக்களிடம் இருந்து பொலிஸாருக்கு எதிராக கிடைக்கப்பெற்றிருந்தாகவும் அவற்றுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தேசிய பொலிஸ் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேற்படி முறைப்பாடுகளில் பெரும்பாலானவை கொழும்பு மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளது. 318 முறைப்பாடுகள் பொலிஸ் அதிகாரிகள் அதிகாரத்தை தவறான வழியில் பயன்படுத்தியதாகவும், 177 முறைப்பாடுகள் பொலிஸார் பக்கசார்பாக நடவடிக்கை எடுத்ததாகவும், 92 முறைப்பாடுகள் அடித்தல், 35 சித்திரவதை, 49 அப்பாவிகளை பொய்குற்றச்சாட்டில் விளக்க மறியலில் வைத்ததாகவும் பதிவாகியுள்ளன.

கடந்த வருடம் பதிவாகியுள்ள முறைப்பாடுகளில் 6 முறைப்பாடுகள் பொலிஸாரின் தடுப்புக்காவலில் மரணம் சம்பவித்த சம்பவங்கள் ஆகும்.

Read more...

Tuesday, August 11, 2009

அடையாளம் காணப்பட்ட கிராமங்களுள் ஐந்து கிராமங்களில் கண்ணிவெடிகள்

மீள்குடியேற்ற பணிகள் துரிதம் வவுனியா அரசாங்க அதிபர்

வன்னியில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்காக அடையாளம் காணப்பட்ட கிராமங்களுள் இன்னும் ஐந்து கிராமங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.இதனால் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளைத் துரிதப்படுத்தியிருப்பதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் தினகரனுக்குத் தெரிவித்தார்.

மீள்குடியேற்றத்திற்காக அடையாளம் காணப்பட்ட 35 கிராமங்களில் ஏழில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டமை தெரியவந்திருந்தது. இதில் இரண்டு கிராமங்களில் ஏற்கனவே அவை அகற்றப்பட்டு விட்டன. எஞ்சிய கிராமங்களில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளைத் துரிதப்படுத்தியிருப்பதாக அரச அதிபர் அறிவித்தார்.

அதே நேரம், மீள்குடியேறத் தெரிவானவர்களின் பெயர், விபரங்களைப் பொலிஸாருக்குப் பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் பாதுகாப்பு உத்தரவாதத்திற்கான அனுமதி கிடைக்கப் பெற்றதும், மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படுமென்றும் அரச அதிபர் கூறினார்.

மீள்குடியேற்றம் சம்பந்தமான மீளாய்வுக் கூட்டமொன்று வவுனியா அரச அதிபர் தலைமையில் நேற்று (11) வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள், மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்டு தற்போதைய முன்னேற்றம் குறித்து விளக்கமளித்தனர்.

பாதை அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுவதுடன் பாட சாலைகள், வைத்தியசாலைகள் போன்றவற்றை மீளமை க்கும் பணிகளும் செட்டிக்குளம் மற்றும் வவுனியா தெற்குப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.

இதேநேரம், வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் அடுத்த கட்டமாக 68 கிராமங்களில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

ஏறாவூரில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை

ஏறாவூர்ப் பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஏறாவூர் மக்காமடி வீதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான சாகுல் ஹமீது அப்துல் ஸமது என்பவரே இச் சம்பவத்தில் பலியானவரென ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் இரவு 7.30 மணியளவில் வீட்டில் தொழுகையை முடித்துவிட்டிருந்தவேளையில் அங்கு வந்த இரு வாலிபர்கள் இவரை அழைத்து துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவருக்கு நெஞ்சு, தலை, பிடறி ஆகிய இடங்களில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள் காணப்படுகின்றன. கைத்துப்பாக்கி இக்கொலைக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ஜனாஸா ஏறாவூர் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. மரணமடைந்த நபர் அவரிடமிருந்த ஒரு தொகுதி ஆயுதங்களை அண்மையில் ஏறாவூர்ப் பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக பொலிஸ் பொறுப்பதிகாரி சுனில் பிரியந்த தெரிவித்தார்.

Read more...

நான் உயிருடன் இருக்கிறேன்: தலீபான் தலைவர் ஹக்கிமுல்லா மசூத் அறிவிப்பு

பாகிஸ்தான் தலீபான் தலைவர் பைதுல்லா மசூத் ஏவுகணை தாக்குதலில் பலியானார். இதைத்தொடர்ந்து அந்த அமைப்பின் புதிய தலைவராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹக்கிமுல்லா மசூத் தலீபான் அமைப்புக்குள் ஏற்பட்ட பதவிச்சண்டை காரணமாக கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், ஹக்கிமுல்லா பாகிஸ்தான் செய்தி நிறுவனங்களை தொடர்பு கொண்டு, நான் உயிருடன் தான் இருக்கிறேன், எங்கள் அமைப்புக்குள் பதவி சண்டை ஏதும் நடக்கவில்லை. என்று கூறினார்.

Read more...

முன்னாள் குழந்தைப் புலிகள் கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை எழுதுகின்றனர்.

இன்று ஆரம்பமாகியிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு முன்னாள் குழந்தைப் புலிகள் 166 பேர் தோன்றியுள்ளனர். வவுனியா பரீட்சை நிலையம் ஒன்றில் இவர்கள் பரீட்சைக்கு தோன்றியுள்ளனர். இவர்களைத் தவிர இடைத்தங்கல் முகாம்களில் இருந்து 1187 மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு தோன்றியதாக கல்வித்திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Read more...

சக்திவாய்ந்த கிளேமோர்கள் மீட்பு.

ஓவ்வொன்றும் 5 கிலோகிராம் எடைகொண்ட 20 கிளேமோர் குண்டுகளை கடத்தி வந்த வான் ஒன்றை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். கல்கிசை மற்றும் மன்னார் பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்ட மூன்று புலி உறுப்பினர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்தே மேற்படி வான் மற்றும் கிளேமோர்க்குண்டுகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகின்றது.

Read more...

நண்பர்களை நயவஞ்சமாக கொண்றவன் இதற்குள் ஓருவன் அவன்யார்??என்று கூறுங்கள் நம்மக்களே.....

நலிவிழந்த மக்களுக்காக வீர
நடைபோட்டு விளக்குகளாய்
நல்வெளிச்சம் தந்தவர்களை
நரித்தந்திரவலை பின்னி கொன்றவனை
நல்மனிதர்களே கூறுங்கள் அவன் யாரென்று??

நச்சுப்பாம்பு ஓன்று தங்கள் பக்கம்
நகர்ந்து வருவது தெரியாமல்
நண்பனே பெரிதென்று மகிழ்தவரை
நசுக்கி மண்ணில் புதைத்தவனை
நல்மனிதர்களே கூறுங்கள் அவன் யாரென்று??

நாற்பக்கமும் பொதுநலமாய் செறிந்திருக்கும்
நல் மனிதர்களை இனங்கண்டு
நற்பயிர்கள் விளையும் மண்ணில்
நஞ்சுனை சோற்றில் பிசைந்து
நடுத்தொண்டைக்குள் அனுப்பியவனை
நல்மனிதர்களே கூறுங்கள் அவன் யாரென்று??

நல்விடியல் தேடிகொடுக்க களமிறங்கிய
நாணயம் கொண்ட நமது தோழர்களை
நாலு பேருக்கு தெரயாமல் அன்று
நகரம் முழுதும் துர்நாற்றம்வீச்செய்து
நச்சுப்புகையில் கலக்க வைத்தவனை
நல்மனிதர்களே கூறுங்கள் அவன் யாரென்று??

நடுங்கிய மக்களை கண்ணில் வாங்காமல்
நற்சோறு தந்தவரை நீவீட்டு வைக்கவில்லை
நடுவான் வரை தீப்பிழம்பு சுவாலைவிட்டு எரிய
நரம்பு புடைக்க உத்தரவு இட்டவனை
நல்மனிதர்களே கூறுங்கள் அவன் யாரென்று??

நன்றியுள்ள நாய்கூட(வீட்டுப்பிராணி) செய்யாதப்பா
நாழிகை ஒன்றுகூடி பல ஆண்டு ஆனாலும்
நல் மக்களுக்கு நீ அள்ளித் தந்த வேதனை
நன்நீர்சுரக்கும் வரை நாவில் உன் தீயநாமம்
நமக்குவேண்டாம் மணக்கவும் வேண்டாம்
நல்மனிதர்களே கூறுங்கள் அவன் யாரென்று??

நாம் கூறுவது தவறென்றோ இல்லை சரியென்றோ
நம்மக்களின் தீர்ப்புக்கு நாம் அடிபணிவோம் என்று
நடைபோட்ட மன்னர்களை நம் கண்முன்னே
நாசகர ஆயுதங்களை கையிலேந்தி அளித்த
நம்பிக்கைதுரோகி ஓருவனை இனம்கண்டு
நல்மனிதர்களே கூறுங்கள் அவன் யாரென்று??

கிளியின் ஓர் கிராமத்து நாயகன்
வவீதரன்



Read more...

கே.பி.யை சந்தித்து பேசி பல விபரங்களை அறிந்துகொண்டேன் - பாதுகாப்பு செயலாளர்

விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச மற்றும் உள்ளூர் அமைப்புகள் சில உதவியுள்ளமை தெரியவந்துள்ளதுடன், கே.பி.யையும் சந்தித்துப் பேசக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அவருடன் பேசியதில் பல விபரங்களை அறிந்துகொண்டேன் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

மஹரகமவில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தõர்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது:

விடுதலைப் புலிகள் 30 ஆயிரம் பேர் பயிற்சி பெற்றிருந்தனர். கடத்தல்கள், போதைப்பொருள் வியாபாரம் மற்றும் நிதி சேகரிப்பு உள்ளிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கை தொடர்பான தகவல்களை கே.பி.யிடம் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து திரட்டிக்கொள்ள முடிந்துள்ளது.

பயங்கரவாதத்துக்கு அப்பால் ஏனைய குழுக்களுடனும், சர்வதேச உள்ளூர் அமைப்புகளுடனும் புலிகள் கொண்டிருந்த தொடர்புகள் குறித்த தகவல்களும் அறியக்கிடைத்துள்ளன.

அத்துடன், தடுத்துவைக்கப்பட்டுள்ள கே.பி.யிடம் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி, அவர் மீதான சட்ட நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றது.
Thanks வீரகேசரி

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com