Tuesday, August 11, 2009

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் இயக்குனரான சிரேஸ்ட பொலிஸ் அத்தியஸ்டரிடம் விசாரணை.

விசேட பொலிஸ் அணி ஒன்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் இயக்குனரான சிரேஸ்ட பொலிஸ் அத்தியஸ்டகர் வாஸ் குணவர்த்தனவிடம் மாணவர் ஒருவர் கடத்தப்பட்டமை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டுள்ளனர்.

கொழும்பில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப கல்லூரி ஒன்றின் மாணவன் நிபுண ராமநாயக்க பொலிஸ் குழு ஒன்றினால் கடத்திச் செல்லப்பட்டு, குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரியின் வீட்டில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டார் என பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட கல்லூரியில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மகன் பயின்று வருவாதாகவும் அங்கு அதிகாரியின் மகனுக்கும் பாதிக்கப்பட்ட மாணவனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக பொலிஸ் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சுமத்தப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட மாணவன், தான் பொலிஸ் அதிகாரியின் வீட்டில் வைத்து தனது சக மாணவனான பொலிஸ் அதிகாரியின் மகனாலும் அவரது தாயாராலும் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ள அவர், தன்மீது குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரி பாதாள உலக குழுஒன்றைச் சேர்ந்தவர் என முத்திரை குத்த முற்பட்டதாகவும் அதற்கான ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை ஒத்த பத்திரிகை ஒன்றில் பலாத்காரமாக கையொப்பம் பெற முற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Read more...

Monday, August 10, 2009

கடற்படையில் இருந்து தப்பியோடியோர் நீக்கப்படுகின்றனர்.

இவ்வருடம் மே மாதம் 31 திகதி வரை சேவைக்கு சமூகம் கொடுக்காமல் இருந்த அனைத்து கடற்படை வீரர்களையும் சேவையில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக கடற்படை தலைமையகம் அறிவித்துள்ளது. இவ்வாறு இலங்கை இராணுவத்தினரும் சேவைக்கு சமூகம்கொடுக்காமல் இருந்த அனைவரையும் நிரந்தாமாக விலக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

முக்கிய பல தகவல்கள் கே.பியிடமிருந்து அம்பலம்!

புலிகளுக்கு உதவிய உள்நாட்டு வெளிநாட்டு அமைப்புகள், ஆயுதக் கொள்வனவு, நிதிமோசடி, போதைவஸ்து கடத்தல்

புலிகள் இயக்கத்தை தொடர்ந்து வலுப்படுத்தும் பொருட்டு பெரும் தொகையான உதவிக¨யும் ஆரவையும் வழங்கிய உள்நாட்டு, வெளிநாட்டு நபர்களைக் பற்றியும் அமைப்புக்கள் பற்றியும் இப்பொழுது கைதாகி உள்ள கே. பியிடமிருந்து பல தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருப்பதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு மேம்பாட்டு மற்றும் நலன்புரி அமைச்சரும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஊடகப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

கண்டி பொல்கொல்லை கூட்டுறவு பயிற்சிப் பாடசாலை மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார். பிரதேச செயலகப் பிரிவுடன் இணைக்கப்பட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுள்ள குடும்பங்களின் நலன்கள் மற்றும் புதிய வேலை வாய்ப்புகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தொடர்பாக தெளிவுறுத்தும் செயலமர்வில் கலந்துகொண்டு அமைச்சர் உரையாற்றினார். அதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேசும்பொழுதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

புலிகள் அமைப்பு கடந்த காலத்தில் மேற்கொண்ட ஆயுதக் கொள்வனவு, போதைப் பொருள் கடத்தல், நிதி மோசடி போன்றவை தொடர்பான பல தகவல்கள் இப்பொழுது வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவர் எனக் கருதப்படும் கே. பி. என்ற குமரன் பத்மநாதன் இப்பொழுது தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றார்.

இந்த அமைப்புக்கு உதவி ஒத்தாசை புரிந்த உள்ளூர், வெளியூர் பிரமுகர்கள், அமைப்புக்கள் என்பன பற்றி தகவல்கள் கிட்டியுள்ளன. பல அரச சார்பற்ற நிறுவனங்களும் இவற்றில் அடங்குகின்றன.

விசாரிக்கப்பட்டு வருகின்ற கே. பி இந்தியாவிடம் இப்பேதைக்கு ஒப்படைக்கப்படமாட்டார். பதிலாக அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து அரசிடம் விசாரணைகளை மேற்கொள்ளலாம். சர்வதேச புரிந்துணர்வு அடிப்படையின் கீழ் இது அமையும்.

பல தசாப்தங்களாக பதுங்கியிருந்த பிரபாகரனை மகாவீரன் என பூதாகரமாகக் காட்டி உலகை ஏமாற்றிய பலர் உள்ளனர். இதே நிலைக்கு கே. பி. யையும் கொண்டுவர பலர் முயற்சித்த விபரங்களையும் நாம் அறிவோம்.

பிரபாகரன் மரணித்த பின்னர் அதன் தலைமைப் பீடத்தை ஏற்றுக்கொள்ள இருப்பவரென கே. பி.யை உள்ளூரிலும் சர்வதேச மட்டத்திலும் பிரபல்யப்படுத்த மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்கள் யாவும் பொய்த்துவிட்டன என்பது இப்பொழுது தெளிவாகியுள்ளது.

இவ்வாறு புலிகள் அமைப்பையும் அதன் தலைவர் களையும் பூதாகரமாகக் காட்டியதை எமது புலனாய்வு த்துறையைச் சேர்ந்தவர்கள் நிர்மூலமாக்கிவிட்டனர்.

உலகுக்கு அதன் உண்மையை வெளிக்காட்டியதன் மூலம் சர்வதேச மட்டத்தில் இலங்கை முக்கிய இடத் தைப் பெறுகிறது.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

நன்றி தினகரன்

Read more...

புதிய நிகழ்ச்சி “கேட்டாலே பரவசம்”

TRT தமிழ்ஓலி வானொலியில் எதிர்வரும் (12.08.09) புதன்கிழமை மாலை 7. மணிக்கு புதிய நிகழ்ச்சி “கேட்டாலே பரவசம்” இது ஒரு இளையோருக்கான நிகழ்ச்சி. நண்பர்களே கேட்கத் தவறாதீர்கள்.

நன்றி!
நிகழ்ச்சி தயாரிப்பு குழு

Europe's First Tamil Radio. TRT Tamil Oli Brings all Tamilian across globe together.

France Asie Communauté d’Echange (FACE)
19, rue de l’Industrie,
93000 Bobigny,
France.
Tel : 0033 148950703
Fax : 0033 148450956
For Live Programs : 0033 148321540

visit us: http://www.trttamiloli.com or http://www.tamilolli.com

Read more...

கேபி மலேசியாவில் கைதுசெய்யப்பட்டார் என்பதை உறுதிசெய்ய மறுக்கும் மலேசிய பிரதமர்.

புலிகளின் புதிய தலைவர் என அறிவிக்கப்பட்டுள்ள கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் மலேசியாவில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தார் என செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், கேபி மலேசியாவில் வைத்து கைதானதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என மலேசிய பிரதமர் நஜீப் றசாக் தெரிவித்துள்ளார்.

பாங்கொக்கில் வைத்து கேபி கைதானதாக வெளியாகியிருந்த செய்தியை மறுத்தலித்த தாய்லாந்து பிரதமர், அவர் கோலாலம்பூரில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

கனேடிய வாழ் தமிழ் மக்கள், வர்த்தக நிலையங்களுக்கு ஒர் அன்பான வேண்டுகோள்!

வன்னி நிவாரண முகாம் மக்களுக்கு மிகவும் அவசியமாக தேவைப்படும் உடுபிடவைகள், சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள், சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்களை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையில் சமூக சுயதொழில் அபிவிருத்தி நிறுவனம்-கனடா ஈடுபட்டுள்ளது. நாளையதினம் திங்கள் கிழமை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் கொள்கலனில் மேலும் சில பொதிகள் ஏற்றக்கூடிய வசதிகள் உள்ளதால் நீங்களும் உங்கள் உதவிகளை எமது உறவுகளுக்கு வழங்கிட முடியும்.

முட்கம்பி வேலிகளுக்குள் வாடும் எமது மக்களுக்கு உதவிடும் மனிதாபிமான முயற்சியில் ஈடுபட்டுள்ள எமது முயற்சிக்கு வர்த்தக நிறுவனங்கள், ஊர் சங்கங்கள் அமைப்புகள், கத்தோலிக்க ஆலயங்கள் என்பனவும் உதவியுள்ளன. இன்னும் சிறிய அளவில் தேவைப்படும் மேற்படி பொருட்களை இன்று காலை முதல் நண்பகல் வரை பின்வரும் முகவரியில் நீங்களே நேரடியாக கொண்டுவந்து தந்து உதவிட முடியும்.

இடம்:

2250 MIDLAND AVENUE

Scarborough,

Ontario, Canada

தொலைபேசி இலக்கம்: 416-7324582

காலை: 8:00 மணி முதல் நண்பகல் 4:00 மணிவரை மேற்படி முகவரி அமைந்துள்ள பகுதியில் வாகனதரிப்பிடத்தில் சேகரிப்பில் ஈடுபடும் எமது தொண்டர்களிடம் நேரடியாக கையளிக்கலாம்.


Read more...

Saturday, August 8, 2009

யாழ் மாநகர சபையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தட்டிக்கொண்டுள்ளது.

யாழ் மாநகர சபைக்கான தேர்தலில் 10602 வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 13 ஆசனங்களையும் , 8008 வாக்குகளைப் பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு 8 ஆசனங்களையும், 1175 வாக்குகளைப் பெற்று சுயேட்சைக் குழு 1 ஆசனத்தையும், 1007 வாக்குகளைப் பெற்று தமிழர் விடுதலைக் கூட்டணி 1 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Read more...

வவுனியா உள்ளுராட்சி சபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது.

இடம்பெற்று முடிந்த வவுனியா உள்ளுராட்சி மன்றத்திற்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் 4279 வாக்குகளைப் பெற்று 11 ஆசனங்களில் 5 ஆசனங்களைப் பெற்றுள்ளனர். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரான புளொட் அமைப்பினர் 4136 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (ஈபிடிபி, ஈரோஸ், சிறிரெலோ, மேலும் சில கட்சிகள்) 3045 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும், முஸ்லிம் காங்கிரஸ் 587 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுள்ளதுடன் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி 228 வாக்குகளை மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளது என தேர்தல் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

Read more...

புதிய சிகல உறுமய தலைவர் வெள்ளைவேன் காரர்களால் மிரட்டப்பட்டாராம்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள புதிய சிகல உறுமய கட்சியின் தலைவர் சறத் மகேந்திரா வெள்ளைவேன் ஒன்றில் வந்த ஆயுததாரிகளால் மிரட்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். சறத் மகேந்திரா அவர்கள் வெள்ளிக்கிழமை (07 ஆகஸ்ட) தனது கட்சி ஒன்று கூடல் ஒன்றை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது மாளிகாவத்தை பிரதேசத்தில் வைத்து வழிமறித்த வெள்ளை வான் ஒன்றில் வந்த ஆயுததாரிகள் தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிகக் கட்சியினால் அமைக்கப்படவுள்ள கூட்டுமன்னணியில் இணையும் முன்னெடுப்புக்களை கைவிடவேண்டும் எனவும், ஊடகங்களுக்கு சர்ச்சைக்குரிய தகவல்களை வழங்கக் கூடாது எனவும் ஆயுததாரிகள் மிரட்டியதாக அவர் மேலும் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Read more...

நியாயமான தேர்தல் ஒன்றை நாடாத்துவதற்கு தேர்தல் ஆணையாளர் அதீத முயற்சி. சித்தார்த்தன்.

வவுனியா உள்ளுராட்சி மன்றத்திற்கான 11 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு 18 வாக்கெடுப்பு நிலையங்களில் இடம்பெற்று முடிந்துள்ள தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவித்த புளொட் அமைப்பின் தலைவர் திரு. சித்தார்த்தன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், தேர்தலை மிகவும் சிறந்த முறையிலும் ஊழல்கள் அற்றதாகவும் நடாத்தி முடிக்க தேர்தல் ஆணையாளர் அதீத முயற்சி எடுத்திருந்தாகவும், அரசுடன் இணைந்து செயற்படும் தமிழ் கட்சிகளான ஈபிடிபி, சிறிரெலோ, ஈரோஸ் ஆகிய கட்சிகள் தமக்கு வழங்கப்பட்டுள்ளது பாதுகாப்பு உத்தியோகித்தர்களை தவறான முறையில் பயன்படுத்தி தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராக ஏற்றுக்கொள்ள முடியாத பல செயல்களில் இறங்கியிருந்தாகவும் தெரிவித்தார்.

வவுனியா தேர்தல்கள் கடந்த காலங்களைப்போல் உயிர் இழப்புகள் எதுவும் இல்லாமல் நடந்தேறியுள்ளதுடன், வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பமாகி உள்ளதாக வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன.

Read more...

இந்தியா கோரினால் கே.பி கையளிக்கப்படுவார். ஹேகலிய ரம்புக்வல.

புலிகளின் தலைவர் என தற்போதைய தலைவர் என அறிவிக்கப்பட்டுள்ள கே.பி இலங்கையில் வைத்து விசாரணை செய்யப்படுவதாக அறிவித்துள்ள இலங்கை பாதுகாப்புத் தரப்பினர் சார்பாக பேசவல்ல அமைச்சர் ஹேகலிய ரம்புக்வல இந்தியா கேபி யை உத்தியோக பூர்வமாக கோரும் இடத்து இலங்கை அரசாங்கம் அவரை இந்தியாவிடம் பாரமளிக்கும் என தெரித்துள்ளார்.

Read more...

Friday, August 7, 2009

இலங்கை இராணவத்தின் உயர் மட்டத்தினர் இந்திய தேசிய இராணுவ பயிற்ச்சி கல்லூரிக்கு விஜயம்.

இராணுவப் பயிற்சிக் கல்லூரியின் பிரதம விரிவுரையாளர் பிரிகேடியர் விஜயதிலக தலைமையிலான இராணுவ உயர்மட்டக்குழு ஒன்று பூனே இல் உள்ள இந்திய தேசிய இராணுவப் பயிற்சிக்கல்லூரிக்கு, தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரதான விடயங்களுக்கான
பயிற்சி நெறிகளை அவதானிக்கும் பொருட்டு கடந்த செவ்வாய்க் கிழமை உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் தளபதி வைஸ் அட்மிரல் ஆர்.கே டோவான் இலங்கை அதிகாரிகளுக்கு தமது கல்லூரியில் உள்ள பலதரப்பட்ட விடயங்களையும் விளக்கியுள்ளார். இவ்விஜயம் இரு இருநாடுகளுக்கும் இடையிலான இராணுவ நிபுணத்துவ ஓத்துழைப்பில் மேலும் இணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனக் நம்பப்படுகின்றது.

Read more...

தமிழ்ர் விடுதலைக் கூட்டணி ஐக்கிய ராச்சியக் கிளை விடுக்கும் வேண்டுகோள்

உங்கள் வாக்கு உரிமையை யாருக்கு அளிக்கலாம்

வரலாற்று ரீதியாக எமது மக்கள் வாழும் பிரதேசத்தில் சுயநிர்ணய உரிமையின்
அடிப்படையில் அவர்களுக்கு சகல அதிகாரங்களுடனான முழுமையான சுயாட்சி வழங்கப்பட
வேண்டும். இதுவே எமது மக்களுக்கான தீர்வாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தமை யாவரும் அறிந்ததே..

இப்படி எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் நம் நாட்டிலே. இலங்கைத் தமிழர்க்கு எப்படிப்பட்ட உரிமை ஏற்கக்கூடியது என்று தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு.வீரசிங்கம் ஆனந்தசங்கரி அவர்கள் கூறிய போதெல்லாம், இந்தத் தேசியக் கூத்தமைப்பு ஏற்க மறுத்தார்கள். ..தலைவர் திரு.வீ. ஆனந்தசங்கரி அன்று தொட்டு இன்று வரை தமிழ் மக்களின் நன்மைக்காக, அயராது பாடுபடுகிறார் என்றால் மிகையாகுமா?

தமிழ் மக்களின் தேவையை இனம் கண்டு அவர் உலகளாவிய ரீதியில் தனது சொந்த
முயற்சியால் வெளிநாடுகள் சென்று வெளிநாட்டு அரசியல் தலைவர்களுடன் தமிழ் மக்களின்
எதிர் காலம் பற்றிக் கலந்து ஆராய்ந்து வந்த பின்பு இலங்கை அரசுடன், எதிர் கட்சித்
தலைமையுடன், ஜே.வீ.பீ. உடன், தலைமைப் பெளத்த பீடாதிபதிகளுடன், எப்படியான
சுயநிர்ணய உரிமையை கொடுக்கப் பட்டால், தமிழ் மக்கள் மன மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ள
முடியுமெனப் பலமுறை பேசி ஒரு இணக்கமும் கண்டு கொண்டுள்ள நேரங்களில் அது ஏற்க
முடியாததென்று அவரை அந்நேரம் புலிகளுக்காக நிந்தித்து விட்டுத் தற்போது தமிழருக்கு
அதையேதான் வேண்டுமென்று கூறுவது வேடிக்கையாகத் தோன்ற வில்லையா?

இதனை இப்போது சொல்லாமல் 2004ம் ஆண்டில் இருந்தே சொல்லியிருந்தால் அன்றிலிருந்து இன்றுவரை இழந்த பல்லாயிரக் கணக்கான இன்னுயிர்களும் காப்பாற்றப் பட்டு இருந்திருக்குமே இத்தனை ஆயிரம் உயிர்கள் அழிய உடந்தையாக இருந்தவர்கள் தற்போது சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசுவதும் அதைத் தாங்கள்தான் ஏதோ கண்டு பிடித்த மாதிரியும், தமிழ் மக்களை இன்னும்இவர்கள் ஏமாற்ற முயலுகிறார்கள்.

நடந்த போரினால் கொல்லப்பட்ட பொதுமக்களைக் காப்பாற்றக் கூடிய நல்ல சந்தர்பங்கள் இருந்தும் ஏன் திரு அமிர்தலிங்கம் 1987ல் இந்தியாவைக் கேட்டு அன்றைய போரில் பொதுமக்கள் இழப்புக்களைத் தடுக்கவில்லையா? அப்படிப்பட்ட ஞானம் இல்லையென்றால் தலைமைதான் எதற்கு. நம் நாட்டின் தலைவனான ஜனாதிபதியைச் சந்தித்து மந்திராலோசனை நடாத்தினார்களா? இல்லவே இல்லையே, ஏன் ஜனாதிபதி அழைத்தும் கூட அவர்களால் போக முடியவில்லை ஆனால், உலகை மட்டும் சுற்றி வந்தார்கள், சட்டம் தெரிந் தும் அதைப் பற்றி அக்கறை கொள்ளாத மக்களால் தெரிவு செய்யப்பட்ட கூட்டணியினர்.

ஜனதிபதியை சந்தித்து உரையாடியிருந்தால் மாற்றம் ஏதாவது ஏற்பட்டிருக்கலாம், ,அந்தமுயற்சியை எடுக்காதது ஏன்? எங்கே கேட்டால் என்ன நடக்கும் என்பதையறியாத கூத்தமைப்பை நமது மக்கள் தெரிவு செய்தது முறையோ அல்லது அவர்களை மக்களவைக்கு அனுப்பிவையுங்களென்று கட்டயப் படுத்திய புலிகள் செய்தது சரியோ?

அடி மேல் அடியடித்தால் அம்மியும் நகரும் என்ற பொன்மொழியை விழங்கிக்கொள்ளா வீணர்க்கு வாக்களிப்பது என்று எம் மக்கள் எண்ணார்கள். இன்னும் ஒரு சந்தர்ப்பம் தமிழ் மக்களே உங்கட்கு வாய்த்துள்ளது யாரும் உங்களை வற்புறுத்தாச் சந்தர்ப்பம் இதில் உங்களுக்காக மட்டும் வாக்களியுங்கள்.

கூத்தணியினர் உல்லாசமாய் உலகம் சுற்ற, நமது தலைவரோ அருகிலிருந்த ஜனாதிபதியுடன்
தன்னால் முடிந்தவரை தொடர்பு கொண்டது மட்டுமல்லாமல், இலங்கையிலிருந்து கொண்டே வெளிஉலகுடன் தொடர்பைப் பேணி தன்னால் முடிந்தவற்றையெல்லாம் செய்து அகிம்சைதான் தனிவழி, விட்டுக்கொடுப்பு இன்னும் பெருவழி, என்று கூறி அதனால் பயனும் கண்ட தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு. ஆனந்தசங்கரி, உயிர்பயமறியாத் தமிழ்ப் பற்றாளன், தனது கூட்டணியினரின் கொள்கைகளை தமிழ் மக்களனைவரும் அறியச் சொல்லியுள்ளார்.

இவர்கள்உண்மையைப் பேசும் போது சிலர் விளக்கமின்மையால் எதிர்கவும் செய்தனர், அதற்கும் அவகட்கு விளக்கம் கொடுத்தவர், அரை நூற்றாண்டுக்குமேல் அரசியல் அனுபவம் கண்டதமிழர், புத்தி ஜீவிகள் எல்லோருடனும் பேசியவர் பிழையை பிழை என்று வாதாடி அனைவரின் அன்பைப் பெற்ற உங்களின் உண்மை நண்பன், என்.எம்.பெரராவின் நம்பிக்கைச் சந்ததி, பொன்னம்பலவனின் மனநிறை சீடன், தந்தை செல்வாவின் வழியில் சென்றவர், அமிர்தம் அவரது நண்பன், கலைஞர் கருணாநிதியின் தோழன், இன்னும் கூற வேண்டுமானால் அனுபவ முதிர்சியின் உண்மைச் சிற்பி, பிரபு நெல்சன் கூறியது போல் பின்வாங்குதல் அறியாதவர் காரணம் தேவையற்ற விடயங்களில் மூக்கு நுளைக்காதவர், ஜனநாயகம் மட்டும் தான் அவர் கண் அதுதான் அவர் வழி, பண்பு, அவரும் தேர்தல் களத்தில். நல்லதைச் செய்யக் களம் இறங்கியுள்ளார் தமிழர்கோர் சந்தர்பம். பதவிகள் அவரைத் தேடி வந்த போதெல்லாம் பதவி ஆசை கொள்ளா மனிதரென்பதைச் சரித்திரரீதியாக இதுவரை நிரூபித்த தியாகி, அப்படிமட்டும் நினைத்திருந்தால் அவரும் கோடீஸ்வரனாக உலகை வலம் வந்திருப்பார், இதன் உண்மையை அறியாதோர், நம்பமுடியாதோர் இருக்கலாம் ஆனால் இங்கே கூறுவது முற்றிலும் உண்மை, அந்தத் தியாக குணத்திற்கு, நீங்கள் தலை வணங்குவீர்களென்பது எமது நம்பிக்கை. சூரியா கிரணத்தைப் பற்றிக் கேழ்விப் பட்டிருப்பீர்கக்ள், அதேபோல்தான் அவரின் அவரி அரசியல் வாழ்வைக் கிரகணம் போல் மறைத்து வைத்திருந்தார்கள், காரணம் அவர் கூறிய
பொன்மொழி’ ”தம்பி எனக்கு தமிழீழம் விருப்பமில்லையோ, விருப்பம்தான், ஆனால் அது கிடைக்கக் கூடிய வழிகளெல்லாம் முட்டாள்தனத்தால் அடைத்துவிட்டார்கள் ஆகவே அது கிடைக்காத பொருள், ஏன் வீணே தமிழ் மக்களின் வாழ்வைக் குழப்பவேண்டும்,அவர்களின் நிம்மதியை ஏன் சூறையாட வேண்டும், பெறக்கூடிய நல்ல சுயஉரிமையைப் எடுத்துக்கொண்டு, ஈழத்தைப்பற்றி விரிவாகச் சிந்திப்போம், உயிரின் விலை மதிப் பற்றது அதைத் தெரியாமல், உயிரை வீணடிக்கிறார்களே, கொஞ்சம் பொறும் எல்லாம் சரியாகிவிடும்,’’ என்று ஞான உரை தந்தார்..

இங்கே அரசசார்பிலும் போட்டியிடுகிறார்கள் மறைவாய் அதைக் காட்டி வன்முறையைக்
கையாளத் தெண்டிக்கலாம், அரசு நேர்மையானது அவர்கள் ஜனனாயகப் பாதையில்தான் செல்வார்கள். நீங்கள் உங்கள் வழியில் செல்லுங்கள் யாரும் உங்களை எதுவும் செய்யமாட்டார்கள்.

எனது அன்பின் தமிழ் மக்களே பலர் போட்டியிடுகிறார்கள், போட்டியிடுவது ஜனநாயகப்
பண்பு, வாக்களிப்பது மக்களின் உரிமை, அதேபோல் வள்ளுவனின் வறிய வரிகளுக் அமைய
எத்தன்மையாயினும் அப் பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு, உங்களுக்குச்
சந்தர்ப்பம் இம்மாதம் 8ம் திகதி பல ஆண்டுகளின் பின் முதல் முறையாக உங்கள் கையில்
உள்ளது உங்கள் ஜனநாயகத்தைப் பயமின்றிக் கட்டுங்கள். மக்கள் தீர்ப்பையே நாம்
மதிக்கிறோம், மிகுதி உன்களிடம் விட்டுள்ளேன்.

நன்றி,
வாழ்க ஜனநாயகம்
தமிழ்ர் விடுதலைக் கூட்டணி ஐக்கிய ராச்சியக் கிளை.

Read more...

கேபி மலேசியாவில் கைது : கொழும்பில் விசாணை செய்யப்படுகின்றார்.

புலிகளின் தற்போதைய தலைவராக அறிவிக்கப்பட்டிருந்த கேபி எனப்படும் குமரன் பத்தநாதன் கைது செய்யப்பட்டுள்ளமையை ஜனாதிபதியின் சகோதரன் பசில் ராஜபக்ச உறுதிசெய்துள்ளார். அத்துடன் கேபி் இலங்கை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலேசிய, கோலாலம்பூர் விடுதி ஒன்றில் வைத்து மிகவும் நுணுக்கமாக இக்கைது இடம்பெற்றுள்ளது. அவ்விடுதியில் தனது இரு விருந்தினர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது கையடக்க தொலைபேசிக்கு வந்த அழைப்பொன்றில் உரையாடியவாறு ஹோட்டலின் வெளிப்பகுதிக்குச் சென்ற கே.பி மீண்டும் தனது அறைக்கு திருப்பவில்லை என அவருடன் பேசிக்கொண்டிருந்த விருந்தினர்கள் மலேசியாவில் உள்ள கேபி யின் உதவியாளர்களுக்கும், மற்றும் நெருங்கியவர்களுக்கும் அறிவித்துள்ளனர்.

கேபியின் அறையில் பேசிக்கொண்டிருந்த உறவினர்கள் பா. நடேசனது மகன் மற்றும் சகோதரன் என செய்திகள் தெரிவிக்கின்றன.

மலேசியா சென்ற இலங்கை புலனாய்வுப் பிரிவின் விசேட அதிகாரிகளினாலேயே மேற்படி கைது இடம்பெற்றதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று பிற்பகல் விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த இலங்கை புலனாய்வு அதிகாரிகள் குழு கைவிலங்கிட்ட ஒருவரை முற்றாக முடிமறைத்துக் கொண்டு சென்றதாக கூறப்படுகின்றது.

Read more...

Thursday, August 6, 2009

சந்திரிகா பாராளுமன்றம் நுழைகின்றாராம்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றம் நுழையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நியமனம் மூலம் அவர் பாராளுமன்றம் செல்லவுள்ளதாக அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து முன்னணி ஒன்றை அமைத்து மஹிந்த அரசை கவிழ்ப்பதற்காக சந்திரிகா அதீத முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கட்சி வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. பல காரணிகளை காரணம் காட்டி ஐக்கிய தேசிய கட்சியின் சின்னமான யானைச் சின்னத்தை தவிர்த்து பொதுவான ஓர் சின்னம் ஒன்றை தெரிவு செய்து தேர்தல் ஒன்றை சந்திக்க தயாராகுமாறு எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்திரிகா அம்மையார் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.

அமைக்கப்படவுள்ள முன்னணியில் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து வெளியேறிய மங்கள சமரவீர அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அபே ஜாதிக பெருமுன, றவுப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்ரஸ், மனோ கணேசன் தலைமையிலான மேற்கு மக்கள் முன்னணி மற்றும் நவ சிகல உறுமய போன்ற கட்சிகள் இணையவுள்ளதாக தெரியவருகின்றது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com