Wednesday, August 5, 2009

அமைச்சர் டக்ளஸ் கவசவாகனங்களில் சென்று வாக்குகள் கேட்கின்றாராம். !!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரச படையினரின் பலத்த பாதுகாப்புகளுடன் கூடிய கவசவாகனங்களில் சென்று யாழ்ப்பாணத்தில் வாக்கு கேட்பதாக கருணாவின் ஆட்களால் நாடாத்தப்படும் இணையத்தளம் ஒன்று தெரிவிக்கின்றது.

அச்செய்தியின் முழுவடிவம்.

வடக்கே உள்ளுராட்சி தேர்தலுக்காக மக்களை சந்திக்கும் டக்ளஸ் தேவானந்தா தன்னை பாதுகாக்க கவசவாகனங்களில் இராணுவப்படையின் பலத்த காவலின் மத்தியில் வாக்குகள் பெற மக்கனை சந்தித்துவருகின்றார் என்று வடக்கு செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 30வருட அரசியல் வாழ்க்கையில் தமிழர்கள் மத்தியில் முதல்முறையாக இப்படியான ஒரு பந்த நிலையில் தேர்தல் கேட்கும் தமிழ் தலைவர் இவர்தான். ஆனால் இவர் தேர்தலில் வென்றால் மக்கள் இவரை சந்திப்பது ஒரு காணல் நீராகவே இருக்கும் அல்லது மக்களும் கவசவாகனத்தில் செல்ல வேண்டிய நிலைதான் ஏற்படும். என்றே அங்கு கருத்துக்கள் கிளம்பி வருகின்றது.

கவசவாகனத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திற்கு சென்றதும் மாணவர்கள் என்ன செய்வது என்ற நிலையில் கையைதட்டி வரவேற்றார் கள். யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் மாணவர்களுடான சந்திப் பொன்றி னையும் அவர் நடத்தியிருந்தார். அங்கு பல்கலைக்கழக மாணவர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் எதோரு வகையில் பதிலளித்த டக்ளஸ் தேவானந்தா கடந்தகாலத்தில் பல்கலைக்கழக சமூகத்தில் நடந்த பல குழறுபடிகளுக்கு எந்த ஒரு தீர்வும் முன்வைக்கவில்லை என்பது தான் பெரும் கவலை.

கடந்தகாலத்தில் இராணுவத்தினரால் அடித்து இழுத்தச்சென்று சிறையில் போடப்பட்ட பல மாணவர்களின் நிலைகள் பற்றிய எந்த ஒரு கவலையும் இல்லாத அமைச்சார் வருங்காலத்து மாணவர்களை எப்படிகாப்பாற்றுவார்? சமூகத்திற்கு எப்படி நல்லது செய்வார்?? என்ற ஆவேசங்கள் அதிகரித்து வருகின்றுறது. அந்த குளறுபடிகளுக்கு எதிர்த்து குரல்கொடுக்கும் சிலர் இன்னும் திசை திருப்பப்பட்டு விடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசியல் சுயலாபத்திற்காக பல்கலைக்கழக மாணவர்களின் நலன்களை கருதாது குழறுபடிகளை தூண்டி விட்டு குளிர்காயும் இத்தகைய அமைச்சார்கள் தான் என்ற கசப்பான உண்மைகளில் இருந்து அந்த மாணவர்கள் வெளியில் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்தகாலத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களின் தன்மையை மறைக்கத்தான் டக்ளஸ் தேவானந்தா இத்தகைய கவச வாகனங்களில் இராணுவ பரிகாரங்களோடு பல்கலைக்கழகம் சென்றார் என்ற குற்றுச்சாட்டுக்கள் கிளம்பி வருகின்றது.

என அச்செய்தியில் குறிப்பட்டிருந்தது.

தற்போது இலங்கையில் இடம்பெற்று வரும் அரசியல் காய் நகர்த்தல்களில் அரசுடன் இணைந்து கொண்டுள்ள தமிழ் அரசியல்வாதிகளின் கோழிச் சண்டையை விலக்கு பிடிக்க மஹிந்த அரசிற்கு விசேட அதிரடிப் படையணி ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் முன்னணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் மேற்கண்டவாறு கவச வாகனங்களில் சென்று வாக்கு கேட்டார் என தமது பங்குதாரர்களாலேயே குற்றஞ்சுமத்தப்படுகின்ற நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரிஆர்ரி வானொலியில் மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி அவர்கள் விசேட கொமாண்டோ படையணியின் உதவியுடன் கவசவாகனங்களில் சென்று தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன் அமைச்சர் டக்களஸ் பல்கலைக்கழகத்திற்கு கவசவானத்தில் செல்கின்றார் என குற்றஞ்சுமத்தும் கருணாவின் ஆட்கள் தமது தலைவர் மட்டக்களப்பில் உள்ள ஆரம்பக் கல்வி பாடசாலைகளில் உள்ள சிறார்களுக்கு பரிசளிக்க செல்லும் போது அதிபயங்கர ஆயுதம் தாங்கிய விசேட கொமாண்டோக்களுடன் சென்று அங்கு இறங்குவது மட்டுமல்லாமல் மாணவர்கள் மத்தியிலும் ஆயுதம்தாங்கிய கொமாண்டோக்களுடன் செல்லும்போது அம்மாணவர்களின் மனநிலை பாதிக்கும் என்பதை சுட்டிக்காட்ட மறுத்துள்ளனர்.

Read more...

தேர்தல் வன்முறையில் ஈடுபட்ட ஈரோஸ் குழுவினர் விசாரணையின் பின் விடுதலை.

வவுனியா தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மீது தாக்குதல் நடாத்திய ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்தோர் பொலிஸ் விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் குருமன்காடு பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து கைது செய்யப்பட்ட ஈரோஸ் உறுப்பினர்கள் விசாரணையின் பின்னர் எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Read more...

பாதாளக்குழுக்களைச் சேர்ந்த மேலும் இருவர் சுட்டுக்கொலை.

பாதாளக்குழுக்களைச் சேர்ந்த மேலும் இரு முக்கிய புள்ளிகள் இரு வேறு இடங்களில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பாப்பா என்று அழைக்கப்படும் மொஹமட் றிவான் எனும் நபர் நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இன்று காலை ரத்மலானை பிரதேசத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் விசாரணைகளின் போது ஆயுதங்கள் மறைத்து வைத்திருக்கும் இடம் ஒன்றை காண்பிப்பதாக ரத்மலானைப் பிரதேசத்திற்கு பொலிஸாரை அழைத்துச் சென்ற பாப்பா அங்கு மறைத்து வைத்திருந்த ஆயுதமொன்றை எடுத்து பொலிஸார் மீது தாக்குதல் நாடாத்த முற்பட்டபோது தாம் திருப்பித் தாக்கியதில் பாப்பா உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அடுத்த நபர் நேவி றொசான் எனவும் மாடிவில எனுமிடத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் அவர் உயிரிழந்தாக தெரியவருகின்றது.

Read more...

எனது வாழ்நாளில் கண்டிராத தேர்தல் பிரச்சாரத்தை வவுனியாவில் கண்டேன். சித்தார்த்தன்.

வவுனியா மற்றும் யாழ் ற்கான உள்ளுராட்சி சபை, நகரசபைத் தேர்தல்களுக்கான பிரச்சாரங்கள் இன்று நள்ளிரவுடன் முடிவுறும் நிலையில் தனது வாழ்நாளில் கண்டிராத தேர்தல் பிரச்சாரத்தை வவுனியா உள்ளுராட்சி சபைக்கான தேர்தலில் கண்டதாக கடந்த 3வாரங்களாக வவுனியாவில் தங்கியிருந்து தமது கட்சி உறுப்பினர்கள் சார்பாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் புளொட் அமைப்பின் தலைவர் திரு. சித்தார்த்தன் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பாக அவர் விபரிக்கையில், சகல கட்சிகளையும் சேர்ந்த வேட்பாளர்களும் தமக்கான விருப்பு வாக்குகளை திரட்டுவதில் தீவிரமாக ஈடுபடுவதுடன், பிரச்சாரவேலைகளில் சகல கட்சிகளும் மிகவும் தீவிரம் காட்டின. அத்துடன் அரசுடன் இணைந்துள்ள கட்சிகளில் பிரதான கட்சி தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்து கொண்ட மக்களுக்கு தலா 200 - 500 ரூபாக்கள் கொடுத்த சம்பவங்களும் உண்டு என்றார்.

மேலும் வவுனியா பிரதேசத்தில் உள்ள சகல மக்களையும் ஓர் குறுகிய காலப்பகுதியினுள் அவரவர் வீடுகளுக்குச் சென்று சந்தித்து அவர்களுடன் பேசியதன் மூலம் தான் மிகவும் மகிழ்சி அடைந்துள்ளாக தெரிவித்த அவர், மோசடிகள் இடம்பெறாவிடின் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்பது நிச்சயம் எனவும் தெரிவித்தார்.

Read more...

திரு . ஆனந்தசங்கரி ஜனாதிபதிக்கு மீண்டும் ஓர் மடல்

05.08.2009

மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்,
இலங்கை ஜனாதிபதி,

மான்புமிகு ஜனாதிபதி அவர்களே!

கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கிளிநொச்சி அரச அதிபர் நா.வேதநாயகன்


முல்லைத்தீவு அரசாங்க அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி அறிந்து அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தேன். நான் அவருடன் நெருங்கி பழகாது போனாலும் அவர் யாழ் மாவட்டத்தில் பல உதவி அரசாங்க பிரிவுகளில் செயலாளராக கடமையாற்றி மக்களால் நன்கு மதிக்கப்பட்டு விளங்கியவர். அவர் கடமை உணர்ச்சி கொண்ட கடும் உழைப்பாளி.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் கடமையாற்றிய அரச ஊழியர்களை அவமதித்து நடத்துவதை தங்களின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடமையாற்றிய ஒரு அரச ஊழியனும் தானாக விரும்பி அங்கே சேவை செய்யவில்லை. பல அரச ஊழியர்கள் மிகவும் செல்வாக்கு பெற்ற பிரமுகர்களை பிடித்து தமது இடமாற்றத்தை நிறுத்தியுள்ளனர். அம் முயற்சியில் தோல்வி கண்டவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இந்த இடங்களில் கடமையாற்றிய அரச ஊழியர்கள் தத்தம் தலைமை அலுவலகங்களுக்கும் வீடுகளுக்கும் இஷ்டம்போல் சென்று வந்தனர். இப்போது அவர்கள் குற்றவாளிகள் போல் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி தருகிறது. முள்ளிவாய்க்காலில் பல ஆயிரக்கணக்கானவர்களின் உயிர்களை காப்பாற்றிய அந்த மூன்று வைத்தியர்களை நடத்திய முறை சரியென என்னால் இப்போதும் ஒத்துக்கொள்ள முடியவில்லை. அன்று விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் கடமையாற்றியவர்கள் எந்த நிலையில் இருந்தார்களோ அதையொத்த நிலையிலேதான் இன்றும் அவர்கள் இருக்கின்றனர். விடுதலைப் புலிகளின் தாளத்துக்கு அன்று அவர்கள் ஆடினார்கள். அன்று விடுதலைப் புலிகளின் பிரதேசத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட ஓர் அரச ஊழியர் தனது இடமாற்றத்தை ஆட்சேபித்திருந்தால் அரசு என்ன செய்திருக்கும். அரசு அவர்களுக்கு உதவவில்லை.

ஜனாதிபதி அவர்களே! தயவு செய்து எனது ஆலோசனையை ஏற்று அவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என கூற வேண்டாம். ஏனெனில் அவர்கள் ஏதாவது தப்பு செய்திருந்தாலும் அது விடுதலைப் புலிகளின் கட்டளைக்கு அமையவே செய்திருப்பர் என்பது மட்டுமல்லாமல் பயத்தினாலும் செய்திருப்பர். விடுதலைப் புலிகளின் கட்டளைக்கமைய அவர்கள் எ;ன்ன குற்றம் செய்திருந்தாலும் அவர்கள் அதற்குப் பொறுப்பாகமாட்டார்கள். அவர்களை அரசு குற்றவாளிகளாக இல்லாமல் ஏதாவது விடயங்கள் பற்றி அறிய அல்ல சில விபரங்களை அறிய கூப்பிடுவது பற்றி எனக்கு ஆட்சேபனை இல்லை. இந்த மாதிரியான நிலைமை நீடித்தால் அரசு தனது மதிப்பை விரைவில் இழந்து விடும். ஆகவே அரச அதிபர் திரு வேதநாயகனை விடுதலை செய்துவிட்டு தேவைக்கேற்ப விசாரியுங்கள். வன்னியில் உள்ள அரச அதிகாரிகள் கடும் குற்றவாளிகள் அல்லது விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என எண்ணத்துக்கு இடம் கொடுக்க வேண்டாம். நல்ல பல வேலைகளை மக்களுக்கு பல காலம் சேவைசெய்ய உபயோகிக்கக்கூடிய ஓர் சிறந்த அரசு ஊழியரை நோகடிக்க வேண்டாம்.


நன்றி

வீ.ஆனந்தசங்கரி - தலைவர்- த.வி.கூ


Read more...

Tuesday, August 4, 2009

பெற்றோழுக்குள்ளால் லாம்பு கொண்டு போகும் முஸ்லீம்கள் ( யஹியா வாஸித் )

ஒரு ஊருல, ஒரு சிங்கமும், ஒரு நரியும், ஒரு கழுதையும் நண்பர்களாக இருந்தார்களாம். ஒரு நாள் சிங்கமகாராசாவுக்கு பசியெடுத்து, காட்டுக்குப்போய், ஒரு முயலையும், ஒரு மானையும் வேட்டையாடிக்கொண்டு வந்து, நண்பர்களை கூப்பிட்டு, தான் பிடித்த மிருகங்களை காட்டி எப்படி எனது வலிமை என பந்தா காட்டியுள்ளார். முயலையும், மானையும் கண்ட நரிப்பிள்ளையாருக்கு வாய்க் கொழுப்பேறி, மச்சான் சரியான வேட்டை மச்சான் எனக் கூறி, மானை நீ சாப்பிடு மச்சான், முயல நாங்க சாப்பிடுறோம் என, நரி சொல்லி வாய்மூடுவதற்கிடையில், என்னா, பங்கு கேட்கின்றாயா, நான் கஸ்டப்பட்டு வேட்டையாடிய உணவில் உனக்குப் பங்கா என உறுமி, நரியின் கழுத்துக்கிடையால் ஒரு பிடி பிடித்துள்ளார் சிங்கமகாராசா. நரி. சரி. அப்படியே கழுதைப்பக்கமாக ஒரு திரும்பு திரும்பி எப்படி சவுகரியம் எனக் கேட்டுள்ளார் சிங்கமகாராசா. நம்ம கழுதைப்பிள்ளையார் பின்தலையை கொஞ்சம் தடவி சிறிது யோசித்துவிட்டு, முயல பிறக்பாஸ்ட்டுக்கு வச்சிக்கிங்க, மானை லன்ச்சுக்கு சாப்பிடுங்க, இப்போ நரியும் செத்திடுச்சுல்ல, அந்த நரிய நைட் டின்னருக்கு வச்சுக்குங்க என சொல்லிவிட்டு நடையைக்கட்டியதாம்.

முஸ்லீம்களே நீங்கள் கழுதைகளல்ல. குதிரைகள். பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கும் குதிரைகளாக கண்கள் கட்டப்பட்டு எங்கேயோ, எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றீர்கள். பணம், பணம், பணம் என்ற கடிவாளத்தை கெட்டியாகப்பிடித்துக் கொண்டோடிக் கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் கண்களை மறைத்துக் கட்டப்பட்டுள்ள சேடத்தை களட்டிவிட்டு கொஞ்சம் வெளியுலகையும் பாருங்கள். இப்படியாகத்தான் எதையோ நோக்கி 30 வருடகாலமாக, தீக்கோழியாக ஓடிய ஒரு நரிக்கூட்டம், அனைத்தையும் தொலைத்துவிட்டு, மணலுக்குள் தலையைப் புதைத்துக்கொண்டு மீசையில மண்ணொட்டல்ல என ச்சீச்சீ இந்த மகின்தபழம் புளிக்கும் என புராணக்கதை சொல்லிக்கொண்டிருக்கின்றது. பாவம் தமிழ் பேசும் தமிழ் மக்கள்.

ஆனால் சிறிலங்கா முஸ்லீம்கள் யாழ் முருகன்கள் மாதிரி உலகம் சுற்றப்புறப்படாமல், அம்மையப்பன்தானே உலகம், சிறிலங்காதானே நமதுநாடு என்ற பிள்ளையார் தோரணையில் ஐந்து வருடத்துக்கொருதரம் வரம்கொடுக்கும் சிறிலங்காச் சாமிகளை சுற்றிவந்து காரியங்களை கச்சிதமாக நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றார்கள். இந்தக்காக்காமார் எங்கதான் படித்தான்களோ இந்த கசமாலங்களையெல்லாம். ஆடுற மாட்டை பாடிக்கறக்கணும் என்பதும் இதுதானோ. இங்கு ஒரு குட்டிச்செய்தியையும் சொல்ல வேண்டும். சிறிலங்காவின் மொத்த சனத்தொகையில், இரண்டாவது இடத்தில் இப்போது இருப்பது நம்ம ஜாதிதானாம் என ஒரு ரகசிய உண்மையான புள்ளிவிபரம் கூறுகின்றது. இன்னும் கொஞ்சம்காலம் இந்த முஸ்லீம்கள் இப்படியே சத்தமில்லாமல் பொதிசுமந்தால், பாரிஜாத குதிரைகளாக ஜாலங்கள் காட்டலாம். சாகசங்கள் செய்யலாம். ஜாம்ஜாமென்று அழகான சிறிலங்காவை ஆளும் கட்சிகளுடன் சேர்ந்து கட்டலாம்.

ஆங்கிலத்தை வணிகமொழியென்றும், கிரேக்கத்தை இசைமொழியென்றும், ஜேர்மனியை தத்துவ மொழியென்றும், இத்தாலியை காதல் மொழியென்றும், லத்தீனை சட்ட மொழியென்றும், பகுத்த புத்திஜீவிகள் தமிழை பக்திமொழியென்று ஏன்தான் பகுத்தார்களோ தெரியாது. இவன் இன்னும் கற்பனைக்கதைகளையே நம்பிக் கொண்டிருக்கின்றான். சோத்துக்கு உப்பு போதாது என பொஞ்சாதியையும், டீக்கு சீனி போதாது என ஹோட்டல் சிப்பந்தியையும் எரிந்து விழும் இந்த தமிழன் முப்பது வருடம் நம் உழைப்பையெல்லாம் தின்று, ஏலம் எடுத்த சூரியதேவனின் கூட்டத்தார் பற்றி மூச்சே விடாமலிருக்கின்றான். அவ்வளவு பக்தி.

இனி புண்ணியம் புலத்தில் செய்து எதுவும் நடக்கப்போவதில்லை. புலத்தில் உண்ணாவிரதம் இருந்த அண்ணாக்கள், சாகும்வரை செத்துடுவோம் என்ற குழந்தைகள், மகின்த கிழிக்கின்றான் என ஓட்டைபானையுடன் ஒப்பாரி வைத்த தாய்க்குலம், அங்க எங்கட தமிழன்கள சிங்களவனுகள் கொல்லுறாங்கோ, அதனாலதான் நாங்கல்லாம் வந்து ஆப்பாட்டம் செய்யிறம் என லண்டன் வெஸ்மினிஸ்டரில் தமிங்கிலம் பேசிய வெள்ளைமனம் கொண்ட கறுப்புக் குழந்தைகள், அய்யகோ புத்திஜீவிகளே உங்கள் கவனத்தை கொஞ்சம் வறுமை ஒழிப்பில் செலுத்தமாட்டீர்களா.

சிங்கள ஆட்சியாளர்களையும், அதற்கு சாமரம் வீசிக்கொண்டிருக்கும் தமிழ் முஸ்லீம் அரசியல்வாதிகளையும் இப்போது எந்தக்குறையும் சொல்ல முடியாது. அவர்கள் தங்களால் முடிந்ததை, முடியுமானவரை செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள். இல்லையே டக்ளஸ் தேர்தலுக்காகத்தான் பம்மாத்துக்காட்டுகின்றார், கருணா, பிள்ளையான் ஒன்றுமே செய்யவில்லையே என நீங்கள் காட்டுக்கத்தல் கத்த வேண்டிய அவசியம் இப்போதைக்கு கிடையாது. அவர்கள் உங்களைப்போல் படித்தவர்களுமல்ல, படம்போட்டு, கோடுகீறி நாட்டை பிளக்க நினைப்பவர்களுமல்ல. பிழைகள் நடக்கும், நடக்கட்டுமே, தவறுகள் அரங்கேறும், அரங்கேறட்டுமே. தேன் தொட்டவன் கைநக்குவான், நக்கவேண்டும். சூடு மிதிக்கும் மாடு வைக்கோல் தின்ன வேண்டும். தின்னும். தின்னவிட்டால் அது மாடேஅல்ல. ஆனால் உங்களைப் போல் மொத்த சூட்டுக்களரியையும் தின்றுவிட்டு பெப்பே காட்டவில்லை. கேபி அண்ணா, உருத்திரகுமாரண்ணா, நெடியவன் அண்ணா, ரெஜியண்ணா, மொத்த அண்ணாக்களே, பிளீஸ் இப்போது நமது தாய்மார்கள் எல்லோரும் எந்த செல்லடி பயமுமின்றி மூன்று நேரம் உண்ணுகின்றார்கள், பள்ளிக் கூடங்களில் படித்துச் சிறக்க வேண்டிய சிறார்கள் எல்லாம், முள்ளுக்கம்பி வேலிக்குள்ளால் எதையோ தேடுகின்றார்கள். தீட்டுங்கள். திட்டங்களை தீட்டுங்கள், கல்வி, விவசாயம், வீதிப்பராமரிப்பு, தொழில்கல்வி, கந்தக வாசனையற்ற வடக்கு என உருவாக திட்டங்களை தீட்டுங்கள். ஒரு ஐந்து வருடத்துக்கு எங்கள் தமிழ்தாய்களை மூச்சுவிடச் செய்யுங்கள். அப்புறம் வந்து மகின்த மகாராஜாவுக்கு தூதுவிடுங்கள். தமிழர் என்றொரு இனம் உண்டு. அதற்கும் சுவாசிக்க வழியுண்டா என கேழுங்கள். அது துள்ளுற மாடல்ல. ஆடுற மாடு. ஆடிக்கறப்போம். நாங்க நெறய கறக்குறோம். கறப்போம். ஹி லுக் லைக் அ சர்வாதிகாரி. பட் ஹி பிளான் ரு டூ சம்திங். எஸ் ஹி வில் டூ சம்திங் கிறேட் போர் மொத்த தமிழன். வெயிட் அன்ட் சீ.

நிறைய மோடயாக்களும், தொப்பி பிரட்டிகளும், மட்டக்களப்பானுகளும் கைகோர்த்துவிட்டார்கள். வடக்கில் பாரிய ஒரு புறஜக்ட்டுக்கான ( 850 மில்லியன் ருப்பீஸ் ) உரிமையை, ஒரு களுபோவில சிங்களவரும் ( முன்னாள் இராணுவ மேஜர் ), பொத்துவிலை சேர்ந்த ஒரு ஜேர்மன் வாழ்தமிழரும், கல்முனையைச் சேர்ந்த ஒரு லண்டன் வாழ் முஸ்லீமும் கூட்டாக எடுத்துள்ளனர். வேலை எதிர்வரும் 24ம் திகதி தொடங்குகின்றது. இப்படி ஆயிரம் வேலைத்திட்டங்களை மூவினத்தவரும் கூட்டுச் சேர்ந்து தொடங்கிவிட்டனர் புத்திஜீவிகளே. நீங்கள் எப்போது தொடங்கப் போகின்றீர்கள் சகோதரர்களே. நடந்தவைகளை ஒரு கெட்ட கனவாக மறந்து ஒருபுதுயுகம் படைப்போம் இரத்தத்தின் ரத்தங்களே.

மயிலுக்கு மேகத்தால் நடுக்கமில்லை என்று தெரிந்தும், போர்வையை கொடுத்தவன் நம்ம பரம்பரையைச் சேர்ந்தவன் அன்பர்களே, முல்லைக்கு ஒரு மூங்கில் போதும் என்ற போதும், தேரைக் கொடுத்தவனும் நம்மவன்தான் உறவுகளே. வண்டுக்கு செவியறிவு இல்லை என்று தெரிந்தும், மகுடி ஊதியவனும் நம்மவன்தான் அப்பர்களே. அப்படி இருந்தும் ஏன் இப்படி ஒரு ததிங்கிணத்தோம்.

சிறியாணி அக்கா 10 வருடத்துக்கு முன் அனுராதபுரத்தில், நம்மவர்களின் புண்ணியத்தில் அனைத்தையும் தொலைத்துவிட்டு, தம்புள்ள ரோட் நாவலையில் குடியேறுகின்றார். கணவரின் துணையுடன் வீதியோரத்தில் கொட்டில் அமைத்து, அன்று தயிர்சட்டி வியாபாரம் தொடங்கிய சிறியாணி அக்கா, இன்று ஒரு தொழிலதிபர். ஒரு நாளைக்கு 1200 தயிர்சட்டி விற்கின்றார். வீதியோரத்தில் பத்து தயிர் சட்டியுடன் தொடங்கிய சிறியாணியக்காவின் ஒரு நாள் வருமானம் 6000 ஆயிரம் ரூபா, மூத்தமகன் கொழும்பில் எலக்றிசிற்றி போர்ட்டில் வேலைசெய்கின்றார், இளையமகன் கொம்பியூட்டர் இன்ஜினியராக உருவாகிக்கொண்டிருக்கின்றார். சிறியாணியக்கா படித்தது மூணாங்கிளாஸ் மட்டுமே.

சிறிசேன (33) அம்பாரையில் 1997ல் சூரியதேவனின் கோரப்பார்வையில் வெந்து பிழைத்தவர். ரன்தெனிகலையில் 1998இல் விறகு வெட்டியாக தொழிலை தொடங்குகின்றார். அப்புறம், ரன்தெனிகலை அணைக்கட்டுக்கருகில் சிறிய விறகுக்கடை திறக்கின்றார். இப்போது சிறிசேன ரொம்ப பிஸி. ஒருநாளைக்கு 2000 விறகுக்கட்டு விற்கின்றார். அத்துடன் தேங்காய் வியாபாரம். விறகு கட்டு ஆறு ரூபா, தேங்காய் ஒன்று 14 ரூபா. சிறிலங்காவில் எங்கும் இந்த விலைக்கு விறகோ, தேங்காயோ வாங்க முடியாது. சிறிசேன எந்தப்பல்கலைக்கழகத்திலும் வியாபாரத்தத்துவம் படிக்கவில்லை.

சமந்த மல்லி ( 27), வவுனியா பஸ்நிலையத்தில் சுவீப்டிக்கட் விற்றவர். இது எங்கள் பூமி என்பவர்களால், 13 வருடத்துக்கு முன் வவுனியாவைவிட்டு கிளீன் வோஸ் செய்யப்பட்டவர். தப்பினேன் பிழைத்தேன் என நாரஹேன்பிட்டி வந்து கட்டுமாணப்பணி நிறுவனமொன்றில் கூலித்தொழிலாளியாக வேலை தொடங்குகின்றார். இப்போது சமந்த மல்லியின் இரண்டு டோசர்கள் ஹொரவப்பொத்தானையில் வேலைசெய்து கொண்டிருக்கின்றது. மாத வருமானம் பதினைந்து லட்சரூபா, அத்துடன் சமந்த மல்லியின் ஹொரவப்பொத்தானை நிலத்தில் விளையும் மிளகாய், கொழும்பு மெனிங்மார்கட்டில் முதல் இடத்தை பிடித்துக் கொண்டிருக்கின்றது. சமந்தமல்லி எந்த கியுசிக்களிடமும் றெயிங் எடுத்தவரல்ல. அவர் ஒரு கைநாட்டு.

வஹாப்நானா (56 ), 1991 முசலியில் முன்னாலும், பின்னாலும் துப்பாக்கிச் சனியன்களால் அடித்து விரட்டப்பட்டவர். இவரை விரட்டிய, அடித்த நபர் இன்னும் இங்கிலாந்தில், மோர்டன் பகுதியில் வொட்கா ஒரு கையிலும், கள்ளகிறடிட் மட்டை ஒரு கையிலுமாக உலாவருகின்றார். இப்போது வஹாப்நானா கொழும்பு மாழுகடையில் ஒரு பிரபல மீன் வியாபாரி. சிலாபத்திலிருந்து தினமும் ஐந்து லாறி பிறஸ்மீன் வஹாப்நானாவுக்கு வந்து கொட்டிக்கொண்டிருக்கின்றது. வஹாப்நானாவின் பிள்ளைகள், ஐரோப்பாவில் குட்டித் தொழிலதிபர்களாக இருக்கின்றனர். வஹாப்நானாவுக்கு முசலியில் பாடசாலைகள் இருந்தது, அங்குபோய் பாடம் படிக்கலாம் என்ற சங்கதி தெரியவே தெரியாது.

ஆனால் எல்லாம் எமக்குத்தெரியும், என்று சொல்லிக்கொண்டு, உலகத்தில் மனிதன் தோன்றியது குரங்கிலிருந்துதான் என்பது உண்மையானால், அதில் முதல் குரங்கு தமிழ் குரங்கு எனப்புறப்பட்டவர்கள் தொப்பியாவாரியிடம் ஏமாந்த குரங்காக தாங்களும் ஏமாந்து, மொத்த தமிழனையும் ஏமாற்றி, இப்போது கே.பி அண்ணா ஒரு முனையிலும், நெடியவன் அண்ணா மறு முனையிலும், நண்பர் ரெஜி ( ரி.அர்.ஓ) நடுவிலும் இருந்து கொண்டு கயிறு இழுப்பதாகவும் காற்றுவாக்கில் செய்திகள் கசிகின்றன. அண்ணாக்களே நீங்கள் என்ன மண்ணாங்கட்டியாவது செய்யுங்கள். எல்லாவற்றையும் புலம் பெயர்நாடுகளில் வைத்துக்கொள்ளுங்கள். இங்கு வடகிழக்கு மக்களுக்கு நிறைய சோதனைகளும், தேவைகளும் காத்திருக்கின்றது. அவர்கள் அதில் தேற ஓரிரு வருடங்கள் எடுக்கலாம். இடையில் நீங்கள் உங்கள் அதி மேதாவிலாசத்தை காட்டப்போய் இருக்கிற முகாமும் இல்லாமல் செய்துவிடாதீர்கள். இப்போதைக்கு நண்பர் ரெஜியை நான் திட்டவிரும்பல்ல. அவரது உப்பை பலகாலம் தின்றவன் என்பது மட்டுமல்ல. கொஞ்சம் மனிதாபிமானமும், விடயங்களை காதுகொடுத்துக் கேட்கும் பக்குவமும் அவரிடம் இருக்கின்றது.

வடக்கு இனி வாழுமா என கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் பார்ப்போமா, ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும் கட்டளையாகவே சிலதை சொல்லிவிடலாம். இப்போது சிறிலங்கா பழைய பத்தாம் பசலித்தனமான சிறிலங்கா கிடையாது. சகலவற்றிலும் அடிபட்டு, அடிபட்டு, கொல்லர் பட்டறை இரும்பாக இருக்கின்றது. யாரிடமும் யாரும் கதை சொல்ல முடியாது. பூநரி தாக்குதலில் முன்னணியில் நின்ற இராணுவ வீரனின் மகனும் ( சசிக 12 ) , மகளும் ( சிஹானி 13 ) நாவலப்பிட்டியில் ஒரு தமிழ்தாயிடம் தமிழ் இலக்கணம் படிக்கின்றார்கள். ஆனால் வவுனியா முகாமிலுள்ள சில தமிழ் குழந்தைகளுக்கு தமிழே எழுதத்தெரியவில்லை. ஆனால் நாம் தமிழை வளர்க்கப்புறப்பட்டவர்கள், அவர்கள் தமிழை அழிக்கப்புறப்பட்டவர்கள் என பழைய புராணம் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

இன்னும் ஓரிரு வருடங்களில் சிறிலங்காவில் இரண்டாவது பெரும்பான்மை கிட்டத்தட்ட முஸ்லீம்கள்தான் என்பதை அடித்துச் சொல்கின்றோம். சிறிலங்கா முழுதும் உள்ள பாடசாலைகளில் 90 வீதமானவற்றில் தமிழ் படிப்பிப்பவர்களும் முஸ்லீம்களே. வீரகேசரியும், தினக்குரலும் வாசிப்பவர்களில் 85 வீதமானவர்களும் முஸ்லீம்கள்தான். சிறிலங்காவில் உள்ள மொத்த நிலப்பரப்பில் 33 வீதத்தை ஓள்றெடி காக்காமார் விலையாக வாங்கிவிட்டதாக ஹெல உறுமயக்காறர் கிசுகிசுக்கின்றனர். மைகோட் வட் இஸ் கோயிங் ஒன். ஐ டோன்ற்ட் நோ. சம்திங் கோயிங் ஒன் அன்டர் த பெற்றோள். தென் வை சம் சிறிலங்கன் டமிள் பீப்பிள் டூயிங் ஹர்த்தால் அன்ட் ஆர்ப்பாட்டம் இன் யுரோப். தே ஆர் யுரோப்பியன்ஸ். தே என்ஜோய் நடைபயணம், கடையடைப்பு அன்ட் மணிகலக்சன். ஓ ஐசீ. ஹவ் திஸ் முஸ்லீம் பீப்பள் டெவலப் லைக் திஸ். அடி. மரணஅடி. எதிர்பார்க்காத நேரத்துல, எதிர்பார்க்காத எடத்தில, சொந்த உடன்பிறவா சகேதரர்களிடமிருந்து விழுந்த மரணஅடி. அவனுக்குள் நிறைய பிரளயத்தை எற்படுத்தியது. ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. ஓ மை கோட். கோட் இஸ் கிறேற்.

கிழக்கு மாகாணம் முதலமைச்சர் பிள்ளையானையும், அமைச்சர் கருணா அம்மானையும் கொஞ்சம் திட்டத்தான் வேண்டியுள்ளது. போதாது, போதாது. உங்கள் வேகம் போதவே போதாது. பொத்துவில் பாணமை முதல் கிரான், மன்னம்பிட்டிவரை

பிரதான வீதியால், உங்கள் பஜிரோக்களை 30 கிலோ மைல் வேகத்தில் செலுத்தி, வீதியின் இருமருங்கையும் ஒரு நோட்டமிடுங்கள். உடுக்கையிழந்தவன் கைபோல, போலியோ வந்த சிறுமிகள் மாதிரி அத்தனை தமிழ் கிராமங்களும், இன்னும், இன்றும் சோபையிழந்து காணப்படுகின்றன. கிரானில் உள்ள ஒரே ஒரு ஆச்சிரமத்தை தவிர அத்தனை தமிழ் கிராமங்களும் வேலிகூடயின்றி பரிதவிக்கின்றன. ஆனால் அத்தனை முஸ்லிம் கிராமங்களும், சூரன்போர் தீர்த்தக்களரி மாதிரி ஜொலிக்கின்றன. ஏன். பாரிய முதலீடுகளில்தான் கவனம் செலுத்துவீர்களா. பாமரமக்கள் என்ன வக்கற்றவர்களா. சகோதரர்களே ஏழையின் சிரிப்பில்தான் பரமாத்மாவைக்காணலாம். தட்டுங்கள். பிளீஸ் ஏழைகளின் கதவுகளைத்தட்டி அவர்களையும் கனாக்காணவிடுங்கள். நோ கற்பனை.

தொல்காப்பியம் தொன்மையின் அடையாளம், திருக்குறள் வாழ்வியல் அடையாளம், ராமாயணம் புலமையின் அடையாளம், பெரியார் இன உணர்வின்அடையாளம், காமராஜர் அரசியல்அடையாளம் என பெருமை பேசிய தமிழனை, சிறிலங்காத்தமிழன் அகதியின் அடையாளம் என மாற்றி விடாதீர்கள். அவன் ஒரு பீனிக்ஸின் அடையாளம் என உலகம் சொல்ல வேண்டும். அது ஆரோக்கியமாக சாம்பலுக்குள் இருந்து புறப்பட வேண்டும்.

( 05-08-2009 )

Read more...

மேல் மாகாண முதல் அமைச்சர் பண மோசடி. பட்டயக்கணக்கறிக்கை வெளிப்படுத்துகின்றது.

மேல் மாகாண முதல் அமைச்சர் பிரசன்ண றணதுங்க பண மோசடி செய்துள்ளமை பட்டயக்கணக்காளர்களின் அறிக்கை மூலம் வெளிவந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 2007ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதி மேற்கொள்ளப்பட்ட வருட முடிவு பட்டயக்கணக்காய்வு அறிக்கையில் இவ்விடயம் வெளிவந்துள்ளது.

அவ்வறிக்கையின் படி கையடக்க தொலைபேசி ஒன்றின் கட்டணமாக 51,245.00 பெறப்பட்டுள்ளதாகவும் அனால் அத்தொலைபேசி அதிகாரா பூர்வமற்ற தொலைபேசி எனவும் கண்டுபிடிக்கப்பட்டள்ளது.

அத்துடன் திரு. றணதுங்க அவர்கள் சுகாதார மற்றும் சுதேச மருந்து அமைச்சராக இருந்தபோது இங்கிலாந்தில் இடம்பெற்ற சர்வேதேச ஆயுர்வேத மருத்துவம் தொடர்பான கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டிருந்தார். அப்பயணத்தின் போது தனது உணவு மற்றும் தங்குமிடச் செலவினமாக 153,551.00 ருபாக்களை பெற்றுக்கொண்டிருந்தார். ஆனால் உணவு மற்றும் தங்குமிடம் இலவசம் என கருத்தரங்கு ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டிருந்தாகவும் பட்டயக்காணக்காளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

Read more...

ஈ-நியூஸ் ஆசிரியர்கள் வாரமொரு முறை பொலிஸூக்கு சமூகமளிக்க வேண்டும் என்பதான உத்தரவு நீக்கம்

இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் செயலாளர் போத்தல ஜயந்த கடத்தப்பட்டுள்ளார் எனும் சம்பத்தை பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல் வழங்கியதான குற்றச்சாட்டின் பேரில் லங்கா ஈ நியூஸ் நிறுவனத்தின் செய்தி ஆசிரியர் பெனட் ரூபசிங்க மற்றும் அதன் பிரதம ஆசிரியர் சந்தருவன் சேனாதீர ஆகிய இருவரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மிரிஹானை பொலிசுக்கு ஆஜராகுமாறு விடுக்கப்பட்டிருந்த உத்தரவை கங்கொடவில நீதிவான் வசந்த ஜினதாச நேற்று நீக்க உத்தரவிட்டார்.

மிரிஹானை பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு நேற்று (03) கங்கொடவில நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது மன்றில் ஆஜராகியிருந்த சரேஷ்ட சட்டத்தரணி ஜீ.டீ.குலதிலக்க, 21ஆம் இலக்க குற்றச்சட்ட விசாரணைப் பிரிவுக்கமைய, ஒரு குற்றச் செயல் தொடர்பில் தகவல் வழங்குவது மனித உரிமையாகும். அவ்வாறு தகவல் வழங்காதிருந்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதை எடுத்துக்காட்டினார்.

பொலிஸாரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள லங்கா ஈ நியூஸ் நிறுவனத்தின் செய்தி ஆசிரியர் பெனட் ரூபசிங்க மற்றும் அதன் பிரதம ஆசிரியர் சந்தருவன் சேனாதீர ஆகிய இருவரும் நிரபராதிகளாவர். அவ்விருவரும் 21ஆம் இலக்க குற்றச்சட்ட விசாரணைப் பிரிவின் பிரகாரம் குற்றச் செயலொன்று தொடர்பில் மட்டுமே தகவல் வழங்கியுள்ளனர் என்றும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

சட்டத்தரணியின் வாத விவாதங்களைக் கருத்திற்கொண்ட நீதிவான் இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கவும் உத்தரவிட்டார்.

லங்கா ஈ நியூஸ் நிறுவனத்தின் செய்தி ஆசிரியர் பெனட் ரூபசிங்க மற்றும் அதன் பிரதம ஆசிரியர் சந்தருவன் சேனாதீர ஆகிய இருவர் சார்பிலும் சட்டத்தரணிகளான விதுர மன்ஷநாயக்க, மன்ஜூல பத்திராஜ், ரொஹான் பீரிஸ் ஆகியோருடன் சிரெஷ்ட சட்டத்தரணி ஜீ.டீ.குலதிலக்கவும் மன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி லங்கா ஈ நியூஸ்

Read more...

வடக்கு தேர்தல் பிரதேசங்களுக்கு பத்திரிகையாளர்களை அனுமதிப்பது தொடர்பாக அரசிடம் இன்னும் முடிவில்லை.

வடக்கு தேர்தல் நிலவரங்கள் தொடர்பான செய்தி சேகரிக்கச் செல்ல விரும்பும் பத்திரிகையாளர்களை அனுமதிப்பது தொடர்பாக அரசு இன்னும் முடிவு எதனையும் கொண்டிருக்கவில்லை என தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் இயக்குனர் லக்ஸ்மன் குலுகல்ல தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மற்றும் வவுனியா தேர்தல் நிலவரங்கள் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கச் செல்வதற்கு உள்ளுர் செய்தியாளர்கள் எவரும் இதுவரை அனுமதி கோரி தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வில்லை. ஆனால் சில வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் அனுமதி கோரியுள்ளது. அவை தொடர்பான இறுதி முடிவு மிகவிரைவில் எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Read more...

அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரி கடத்தப்பட்டுள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் இணைப்பாளராக கடமையாற்றும் அதிகாரி ஒருவர் கடந்த இரவு அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாத நபர்களால் பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அதிகாரியொருவர், தடத்தப்பட்டுள்ள தமது அதிகாரியான ஜெயசிங்க என்பவரது கடத்தல் தொடர்பாக தாம் பொலிஸாரை தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Read more...

தென் மாகாண சபை கலைக்கப்பட்டுள்ளது.

தென் மாகாண சபை கடந்த நள்இரவுடன் கலைக்கப்பட்டுள்ளதாக அச்சபையின் ஆளுநர் திருமதி. குமாரி பாலசூரிய தெரிவித்துள்ளார். இதற்கான வர்த்தாமானி அறிவித்தல் இன்று வெளியாகும் என நம்பப்படுகின்றது.

Read more...

நாளை வவுனியாவிலுள்ள கிழக்கு மாகாண மக்களை சொந்த இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை

வவுனியா நிவாரண கிராமங்களில் தற்போது தங்கியுள்ள கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 1445 பேர் நாளை புதன்கிழமை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டம் - 329, அம்பாறை மாவட்டம் - 190, இவர்கள் தவிர்ந்த ஏனையோர் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களது பெயர் விபரங்களை தேச நிர்மாண அமைச்சு மாவட்ட அரசாங்க அதிபர்களுக்குக் கடந்த வெள்ளிக்கிழமை அனுப்பி வைத்தது. கிராம சேவையாளர்கள் வதிவிடத்தை உறுதிப்படுத்துமாறும் அமைச்சு அறிவித்துள்ளது.

நாளை புதன்கிழமை குறிப்பிட்ட கிராம சேவையாளர்கள் சகிதம் நிவாரணக் கிராமங்களுக்கு அரசாங்க அதிபர்களும் இவர்களை அழைத்துச் செல்வதற்காக அழைக்கப்பட்டுள்ளார்கள். அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 190 பேரையும் அழைத்து வருவதற்காக 45 கிராம சேவையாளர்கள் அடங்கிய குழுவொன்று இன்று வவுனியா சென்றுள்ளது.

நாளை அழைத்து வரப்படவிருக்கும் குறிப்பிட்ட 190 பேரில், அன்றைய தினம் தமது வீடுகளுக்குச் செல்ல முடியாதவர்களைக் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் அன்றிரவு தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகப் பிரதேச செயலாளர் எஸ்.இராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை அழைத்து வருவதற்காக அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், புனர்வாழ்வு உதவித்திட்ட பணிப்பாளர் ஏ.எல்.எம். ஷெரீப் மற்றும் 15 கிராம சேவை அலுவலகர்கள் ஆகியோர் இன்று வவுனியா சென்றுள்ளனர்.

வவுனியாவிலிருந்து அழைத்து வரப்படவிருக்கும் 329 பேரில் 180 பேர், வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் வைத்து வாகரை மற்றும் வாழைச்சேனை பிரதேச செயலாளர்களிடம் கையளிக்கப்படுவார்கள்.

ஏனையோர் நேரடியாக மட்டக்களப்பு சாகிரா வித்தியாலயத்திற்கு அழைத்து வரப்பட்டு மண்முனை வடக்கு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்படுவர். அன்றிரவு தமது வீடுகளுக்குத் திரும்ப முடியாதவர்களை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவர்களுக்கான உலர் உணவு நிவாரணப் பொதிகளுடன் அத்தியாவசிய பாவனைப் பொருட்களும் வீடு திரும்பும் போது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி வீரகேசரி

Read more...

Monday, August 3, 2009

இந்து ஆலயம் அருகில் மதுச்சாலை அமைக்கப்பட்டதை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம்.

மஸ்கெலிய பிரதேசத்தில் உள்ள இந்து ஆலயம் ஒன்றின் அருகில் மதுச்சாலை ஒன்று அமைக்கப்பட்டதை எதிர்த்து ஆயிரக்கணக்கான தோட்டத்தொழிலாளர்களும், பிரதேச மக்களும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். மஸ்கெலிய நகரில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள சிவசுப்ரமணிய ஆலயத்தின் அருகிலேயே மேற்படி மதுச்சாலை நிறுப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய மக்கள் மஸ்கெலிய பொலிஸ் நிலையத்தின் முன் ஒன்று திரண்டு தமது எதிர்ப்பை தெரிவித்ததுடன், குறிப்பிட்ட மதுச்சாலை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படாதவிடத்து தாம் தமது போராட்டத்தை பல வழிகளிலும் தொடரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Read more...

சிறுவன் வடிவில் தோன்றி மறைந்த முருகன்.

வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காமம் முருகப்பெருமான் ஆலய மகோற்சபம் 22ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தீர்த்தோற்சபம் ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி இடம்பெறும் இதற்காக முருகப்பெருமானின் பாதத்தை தரிசித்து அவரின் அருளை பெற்றுக்கொள்வதற்காக நாடுமுழுவதும் உள்ள பல லட்சகணக்கான அடியார்கள் வீதி வழியாகவும் காட்டுப்பாதை வழியாகவும் பாதயாத்திரை சென்று முருகப்பெருமானை தரிசித்து அவரின் அருளை பெறுவதற்தாக சென்றுகொணடிருக்கின்றார்கள்.

அவ்வாறே கிழக்குமாகாணத்தில் இருந்து கால்நடையாக செல்லும் அடியார்களும் உகந்தையிலிருந்து யால காட்டுப்பகுதி வழியாக கால்நடையாக செல்வார்கள். பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு கதிர்காம முருகபெருமான் காட்சிதந்து அருள்புரிவது ஒவ்வொரு ஆண்டும் இடம்பெறுகின்றது.

இவ்வருடமும் கிழக்குமாகாணத்தை சேர்ந்த பக்தை ஒருவருக்கு முருகப்பெருமானின் அற்புதம் நிகழ்ந்துள்ளது இது தொடர்பாக தெரியவருவதாவது.

கிழக்குமாகாண காரைதீவு எனும் இடத்தை சேர்ந்த பக்தை ஒருவர் தனது சிறுவயதில் இருந்தே கதிர்காம முருகப்பெருமான் ஆலயத்திற்கு கால்நடையாக சென்று மலையில் உள்ள முருகப்பெருமானுக்கு விளக்கேற்றுவது வழமை. இம்முறைபும் காட்டுவழியாக பாதயாத்திரை சென்ற பக்தைக்கு ஓரு சிறுவன்வடிவில் முருகபெருமான் காட்சிதந்தது மட்டுமல்லாமல் அவருக்கு ஒரு முடிச்சையும் கொடுத்து இம்முடிச்சை இங்கு அவிழ்த்து பார்க்காமல் ஆலயத்திற்குள் சென்று பார்க்குமாறு சொல்லிவிட்டு மறைந்துவிட்டாராம்.

பின்பு ஆலயத்திற்குள் சென்று பாhத்தபோது அம்முடிச்சிக்குள் பணம் இருந்ததாகவும் பின்பு அப்பணத்தை ஆலய தேவைகளுக்கு எடுத்ததாகவும் அப்பக்தை கூறுகின்றார்.

Read more...

உலகத் தமிழர் பத்திரிகை வீழ்ச்சி. கனடா மக்கள் மனங்களில் பெருமாற்றம்.

கனடாவில் இருந்து வெளிவரும் புலிகளின் பிரச்சார பத்திரிகையின் விற்பனையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வாரம் ஒருமுறை வெளிவரும் உலகத் தமிழர் பத்திரிகையை பெறும் வாசகர்கள் வருடம் ஒன்றிற்கு 45 கனடிய டொலர்கள் செலுத்தி இப்பத்திரிகையை படித்து வந்தனர். ஆனால் அண்மைக்காலமாக வாசர்களில் பலர் தமது சந்தாக்களை நிறுத்தியுள்ளதுடன் தமக்கு இப்பத்திரிகைச் செய்திகளில் நாட்டம் இல்லை என தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தனது சந்தாவை நிறுத்தி உலகத் தமிழர் பத்திரிகையை வாங்குவதை நிறுத்தி கொண்ட வாசகர் ஒருவர் தகவல் தருகையில், நான் கடந்த பல ஆண்டுகளாக இப்பத்திரிகையை வாசித்துவந்தேன். இலங்கை யுத்த நிலைமைகள் தொடர்பாகவும், தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பான செய்திகளையும் இதனூடாக அறிந்து வந்தேன். ஆனால் அங்கு யுத்தம் முற்றாக முடிவுற்றும் தமிழர் அரசியல் தொடர்பாக அறிவதற்கு எதுவும் இல்லை என உணர்ந்ததாலும் எனது வீட்டிற்கு பத்திரிகை போட வருபவரிடம் எனது முடிவை தெரிவித்தேன். அவர் அதை மிகவும் பண்பாக ஏற்றுக்கொண்டார் என்றார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com