Saturday, August 1, 2009

ஞாயிற்றுக்கிழமை யாழ் மாநகரசபை தேர்தல் மற்றும் அரசியல் நிலவரம் தொடர்பான கலந்துரையாடல்!

02-08-09 பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் தமிழர் விடுதலை கூட்டணி தலைவரும் யாழ் மாநகரசபைக்கான முதன்மை வேட்பாளருமான வீ. ஆனந்தசங்கரி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா அணியின் பொது செயலாரும், யாழ் மாநகரசபைக்கான ஈபிஆர்எல்எப்பின் தலைமை வேட்பாளருமான திருநாவுக்கரசு சிறிதரன், ரி.பி.சி.பணிப்பாளர் வீரய்யா இராமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம். 00 44 208 930 5313

Read more...

வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆளுநர்களின் ஆதிக்கம் அதிகமாக காணப்படுகின்றது என்கிறார் வாசுதேவ நாணயக்கார

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்கள் தமது அதிகார எல்லைகளுக்கு அப்பால் சென்று அதீத அதிகாரம் செலுத்துவது தொடர்பாக ஜனாதிபதியின் தலையீடு தேவையென ஜனாதிபதியின் ஆலோசகரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணசபை நிர்வாகங்களில் ஆளுநரின் தலையீடு மிகவும் அதிகமாக காணப்படுவதாகவும் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தும் போது ஆளுநர் தரப்பிலிருந்து வெளியிடப்படும் எதிர்ப்பு மற்றும் இணைக்கப்பாடின்மை காரணமாக மக்களுக்கு சேவையை வழங்க முடியாதுள்ளதாக முதலமைச்சர் சிவநேசன்துரை சந்திரசேகரன் மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் தம்மிடம் முறையிட்டுள்ளதாக வாசுதேவ நாணயக்கார மேலும் கூறியுள்ளார்.

இந்த நிலை, கிழக்கு மாகாண சபையை ஆளுநரின் பதவிக்குள் அடங்கிவிடும் எனவும், இதனால் மாகாண சபை மீது மக்களுக்கு நம்பிக்கையற்றுப் போகும் எனவும் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

பொட்டு, சூசை தப்பித்து விட்டதாக வெளியாகும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை.

புலிகளின் புலனாய்வுப் பொறுப்பாளரான பொட்டு, கடற்புலிகளின் பொறுப்பாளர் சூசை ஆகியோர் தப்பித்துவிட்டதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.

புலிகளின் முக்கியஸ்தர்களான மேற்படி இருவரும் ஒருவாறு தப்பித்துவிட்டதாக இராணுவப் புலனாய்வுத்துறை அரசிற்கு தெரியப்படுத்தியுள்ளதாக இணைத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட அவ் இணையம் தொடர்ச்சியாக இவ்வாறான வதந்திகளைப் பரப்பி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதே நேரம் புலிகள் சார்பாக உத்தியோக பூர்வ அறிக்கைகளை வெளியிட்டுவரும் கே.பி எனப்படும் செல்வராசா பத்தமநாதன், புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டு, கடற்புலிகளின் பொறுப்பாளர் சூசை உட்பட முக்கிய தளபதிகள் அனைவரும் கொல்லப்பட்டுள்ளதாக தனது அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

தேர்தல் பிரச்சாரத்திற்காக ஹெலிக்கொப்படர் கொள்முதல் செய்துள்ள பிரதானவேட்பாளர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தென்மாகாண அமைப்பாளரான சச்சின் வாஸ் குணவர்த்தன தேர்தல் பிரச்சாரங்களுக்காக 375000 அமெரிக்க டொலர்கள் (வரி விலக்கு) பெறுமதியான ஹெலிகொப்படர் ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாக ஆங்கில இணையத்தளச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

மிகின் எயார் நிறுவனத்தின் தலைவாரான வாஸ் குணவர்த்தன எதிர்வரும் தென்மாகான சபைத் தேர்தலில் பிரதான வேட்பாளராக நியமிக்கப்படவுள்ளதாக அச்செய்தி மேலும் தெரிவித்துள்ளது. அதே நேரம் அம்மாகாணத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த பல சிரேஸ்ட உறுப்பினர்கள் உள்ளதாகவும், அவர்கள் இவ்விடயம் தொடர்பாக அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Read more...

Friday, July 31, 2009

சம்பந்தனுக்கோர் அன்பு மடல். பாங்கொக்கில் இருந்து ஜெயக்குமார்

கனம் மதிப்புக்குரிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்
தலைவர் திரு. இரா.சம்பந்தன் அவர்களுக்கு,


தாங்கள் கிழக்குமாகாணத்தை பிரதிநிதபபடுத்துவர் என்பதாலும் நானும் கிழக்கு மாகாணத்தில் பிறந்த ஒரு பழைய போராளி என்பதாலும் இந்த சிறுமடலை எழுதிகின்றேன். சிந்திக்க வைப்பதற்காகத் தான் எழுதிகின்றேன். மன்னித்துவிடுங்கள் என்று நிச்சயமாகக் கேட்க மாட்டேன். ...

உங்களைபோல் எனக்கு இந்த அரசியல் சித்த விளையாட்டு எல்லாம் தெரியாது.
ஓ..ம் நமோ நாராயணாயா 'கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது'
அதனால்தான் இன்றும் அகதி வாழ்க்கை.

தாங்கள் பி.பி.சி தமிழோசைசையில் கொடுத்த செவ்வி கேட்டு எங்கள் செவிப்பாறைகள் எல்லாம் குளிர்ந்தது. காரணம் புலிகள் இன்று இல்லை புலிகள் அழிக்கப்பட்டு விட்டதாகக் கூறுகின்றீர்கள. ஆனாலும் தங்களை நம்ப முடியாது. தங்களின் அரசியல் நாடமாகக்கூட இருக்கலாம். இப்படித்தான் இத்தனை காலா காலங்களாக தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் நடத்துகின்றீர்கள் இதுவும் இந்த தேர்தலில் வெல்லுவதற்குத்தனா? என்ற ஒரு பயமும் உள்ளது.

புலிகளோ தாங்கள் ஓர் நாடுகடந்த உத்தேச தமிழ் அரசை அமைக்கப் போவதாகவும், புலிகள் பீனிக்ஸ் போல எழும் என்றும் கூறுகின்றார்கள். நீங்களோ புலிகள் இன்று இல்லை புலிகள் அழிந்துவிட்டார்கள் என்று கூறுகின்றீர்கள். சம்பந்தன் நீங்கள் கவுண்டமணி பாணியில் காமடி ஏதும் பண்ண வில்லையே? பாதிக்கப்பட்ட உள்ளம் பதை பதைகின்றது. காரணம் உள்ளது பிரபாகரன் நன்றாகவும், பாதுகாப்பாகவும் உள்ளார் என்ற உறுதியான செய்தி கிடைத்து இருக்கிறது'' என்று நேற்று பெங்களூர் கருத்தரங்கில் பங்குகொண்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவரும், உலகத் தமிழர் பேரவையின் தலைவருமான பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

தமிழ் மக்களை இன்னும் நிம்மதியாக வாழவிடமாட்டார்களா? பழ.நெடுமாறன் குண்டை போடுகின்றார் உங்கள் உறவுகள் தமிழகத்தின் வல்டி மைனர்கள்'. தங்களின் மதிப்புக்குரிய பாசிசப்புலிகளால் எனது சொந்த நாட்டில் வாழமுடியாமல் இன்னும் ஒரு நாட்டில் வாழ்கின்றேன். நாடு திரும்பலாம் என்ற ஒரு நப்பாசைதான். தங்களை நம்ப முடியாது என்பதற்கு பல காரணங்கள் உள்ளது.

கடந்த கால உங்கள் அரசியல் வாழ்க்கை. அவர் அவர் இருந்த இடத்தை வைத்துத்தான் மதிப்பு. தமிழ் தேசியத்தலைவர் அமிர்தலிங்கம் அய்யா பாசிசப்புலிகளால் கொலை செய்யப்பட்ட பொழுது தெரிந்தும் தெரியாமல் இருந்தது..

அப்போதய ஜனாதிபதி சந்திரிகா அம்மையாருடன் இணைந்து தமிழ் மக்களுக்குக்கு தீர்வு திட்டத்தை முன் வைப்பதகாகக்கூறி சந்திரிக்கா அம்மையாருடன் விசுவாசமாக இருப்பதாகக்காட்டி குண்டு துளைக்காத காரைப்பெற்ற பின் பல்டி அடித்தது.

பாசிசக்கொலைக்கு அரசியல் அங்கிகாரம் புலிகள் அழியும் வரையில் பெற்றுக்கொடுத்தது.

வீரகேசரி இணையம் 1.25.2009 11:38:59 ல் 'எமக்குப் பிரபாகரனோ, தமிழீழ விடுதலைப் புலிகளோ முக்கியமல்ல. எம்மைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பியவர்கள் தமிழ் மக்கள். நாம் அவர்களின் நலனுக்காவே குரல் கொடுக்கிறோம்' என்றும் பல்டி அடித்தது.

புலிகளே ஏக பிரதிநிதிகள் புலிகளுடன் பேசித்தான் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை தர முடியும் என்று புலிகள் அழிக்கப்படும் வரையில் பறக்காத நாடுகள் எல்லாம் பறந்து பறந்து பார்த்ததும.; புலிகள் முற்றாக இல்லை என்றதும் தங்களின் தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் பேசித்தான் ஒரு தீர்வு திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் என்று தாங்கள் இன்று கூறுவதும் முற்றிலும் வேடிக்கை.

ஏன் நீங்கள் புலிகள் இருந்த பொழுது பிரபாகரன் எங்களுக்கு முக்கியம் அல்ல என்று கூறவில்லை?
எனக்கு ஒரு நீண்ட நாள் சந்தேகம் தேசியக்கூட்டமைப்பு என்றால் என்ன?
இது ஜனநாயகத்தை அவமதிக்கும் கூட்டமைப்புத்தானே?

நான் உண்மையில் படித்தது குறைவு இடித்தது சிவன்கோவில். நீங்கள் சட்டம் படித்தவர் அரசியலில் உள்ள நெளிவு சுழிவுகள் எல்லாம் புரிந்தவர். நீங்கள் இதன் தலைவர் என்றபடியால். தமிழ் தேசியம் என்றால் எனது கணக்கு இதுதான்.
இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை அமைத்தவர்கள் புலிகள்.
அவர்கள் பாசிசத்தை மதிப்பவர்கள்.
ஜனநாயகம் அவர்களுக்கு சுத்த ஞான சுனியம்.

அப்படியானால் புலிகள் இல்லாதபோது இந்தத் தமிழ் தேசியகூட்டமைப்பு கலைக்கப்பட்டு நீங்கள் முதலில் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சியில் இணைவது சாலச்சிறந்தது என நான் நினைக்கின்றேன்.

புலிகள் இல்லாதபோது ஆண்டவன்தான் உங்களை காப்பாற்ற வேண்டும். புலிகள் இருந்தபொழுதும் புலிகள் இல்லாதபொழுதும் சரி தமிழ் மக்களுக்கு யாரும் ஏக பிரதிநிதிகள் அல்ல.

புலிகளால் பறிக்கப்பட்ட ஜனாயகம் தமிழ் மக்களுக்கு மீண்டும் கிடைக்கவேண்டும்.
அவர்கள் அவர்களின் வாழ்விடங்களில் வாழவேண்டும். அப்போதுதான் தமிழ் மக்கள் சுயமாக சிந்தித்து முடிவு எடுப்பார்கள். ஜனநாயகவழியில் தமிழ் மக்கள் யாரை தெரிவு செய்கின்றார்களோ அவர்கள்தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள்.

வயித்துப் பசிக்கு சோறு கேட்கும் மக்களுக்கு தீர்வு ஒன்றும் சோறு தராது. மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். அதுதான் மக்களின் இன்றைய தேவை.
கடந்தவார பி.பி.சி தமிழோசையில் ஒரு பெரிய அப்படமான பொய்யைக் கூறினீர்கள். மூன்று லட்சம் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு சென்று மக்களை பார்வையிட்டீர்களா? எனக் கேட்கப்பட்ட சர்ச்சைக்குரிய கேள்விக்கு தங்களின் பதில் நியாயம் அற்றது.

தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு முகாம்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறுகின்றீர்கள் அப்படியானால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான யாழ்ப்பான மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் பார்த்துவிட்டு அழுது கண்ணீர் வடித்தது எல்லாம் என்ன உங்கள் நாடகத்தில் ஒரங்கமா ?

எஸ்.விநோகாராதலிங்கம், சிவநாதன் கிஷோர் இவர்கள் யார்? இவர்களும் தேசிய கூட்டமைப்புதானே? முகாங்களுக்கு சென்று கண்ணீர் வடிப்பதால் என்ன பலன்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் செய்கின்ற உதவிகளைக்கூட உங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பால் செய்யமுடிவில்லை. சரி அவர் ஒரு அமைச்சர் செய்கின்றார் என நீங்கள் கூறலாம்.

அப்படியானால் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உறுப்பினர்கள் சாப்பாட்டு பார்சல் தயார் செய்து கொடுக்கின்றார்கள். உங்காளால் தவிக்கும் உள்ளங்களுக்கு தண்ணீர கூடக்கொடுக்கமுடியவில்லையா?

அதில் வேடிக்கை என்னவென்றால் தாங்கள் தமிழ் மக்களுக்காக நீண்டகாலமாகப் போராடியதாக் கூறுவது. புலிகளுடன் சேர்ந்து போராடியதின் பலன் மூன்று லட்சம் மக்களை முகாங்களுக்குள் வாட வழிவகுத்ததுதான் உண்மை.
அப்படியானால் புலிகள் அழிக்கப்பட்டால் புலிகளால் அமைக்கப்பட்டு, தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தைத் தவறான தடத்தில் வழிநடத்தியதில் பங்காளியான தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு இந்த தேர்தலில் என்னவேலை?

தமிழர்களுக்கு அழிவை ஏற்படுத்தியவர்கள் வெளிப்படையான குற்றவாளிகள் என்றால், அதைத் தடுக்க வழிகள் இருந்தும் அதைத் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களும் மறைமுகமான குற்றவாளிகளே!.

எனவே தமிழ்பேசும் மக்கள் இத்தேர்தலில் சரியான முடிவுகளை எடுப்பார்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இனியும் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது காரணம் தமிழர்கள் முப்பது வருடங்களாக பட்ட துன்பங்களில் இருந்து பாடம் கற்றுக் கொண்டுவிட்டார்கள். எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்கள் உங்களுக்கு நல்ல பாடம் கற்பிப்பார்கள் அரசியலை மக்கள் புரிந்து கொண்டுவிட்டார்கள்.

நன்றி
அன்புடன் அ.ஜெயக்குமார் (சோதி)

Read more...

புலிக்கேணல் கருணாவின் முடிவின் ஆரம்பம். பீமன்

சொற்கேளாப் பிள்ளையால் குலத்திற்கீனம்.
துர்ப்புற்ற மந்திரியால் அரசிற்கீனம்.


பாரபட்சத்திற்கு எதிரான தமிழ் மக்களின் உரிமைப்போர் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தபோது அப்போராட்டத்தினை பிரபாகரன்-கருணா கும்பல் தமிழ் மக்களை ஆழும் ஆயுதமாக பயன்படுத்த முற்பட்டதுடன், மனித குலத்திற்கு எதிரான செயற்பாடுகளில் இறங்கியமையின் வடுக்களை தமிழ் மக்கள் மட்டுமல்ல இலங்கையர் அனைவரும் சுமந்து கொண்டிருக்கின்றனர்.

தமிழரசுக் கட்சி முதல் புலிகள் வரையான சகல தமிழ் கட்சிகளாலும் தமிழ் மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள் என்பது வரலாறு. சூடுகண்ட பூனை அடுப்பங்கரை நாடாது என்பதுபோல், இனிவரும் காலங்களில் மேற்படி வழித்தோன்றல்களான அரசியல் கட்சிகளையும், பிரபாகரன் அழிக்கப்பட்டுள்ள நிலையில் பிரபாகரன் திருநாமம் காப்பதற்கு ஜனநாயகப் போர்வை போர்த்துள்ள பிரபாவின் வாரிசான கருணாவினையும் மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

தமிழ் மக்கள் துஸ்டனைக் கண்டால் தூரவிலகிப் பழகியவர்கள். எனவே கருணா எனும் துஸ்டன் நிற்கும் பக்கம் கூட மக்கள் தலைவைத்து படுக்க விரும்பமாட்டார்கள் என்பதையும், பாமரத் தமிழ் மக்கள் முதல் அரசியல் ஞானம் படைத்தோர் வரை கருணா இணைந்திருக்கும் கட்சியுடன் இணைந்து செயற்படவோ அக்கட்சிக்கு ஆதரவு வழங்கவோ முற்படமாட்டார்கள் என்பதும் அரசியல் என்னவென்று தெரியாத சிறுகுழந்தைக்கு கூட புரியும் நிலையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி கருணாவை கட்சியினுள் வைத்துக்கொள்ள முற்படுவதானது அக்கட்சியின் படுதோல்விக்கு வித்திடலாம் எனப் பலரும் கூறுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் இருந்து 7000 இற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் போரில் உயிர்நீத்துள்ளனர். ஏனவே அக்குடும்பங்களைச் சேர்ந்தோர் கருணாவை ஆதரிக்கக்கூடும் என ஜனாதிபதி மஹிந்தவும் அவர் அரசும் கருதாலாம். ஆனால் அது முற்றிலும் தவறான கருதுகோள். மேற்படி 7000ம் போராளிகளில் இரு தரப்பு. அதில் ஒருதரப்பு கருணாவின் வஞ்சகமான ஆசைவார்த்தைகளை நம்பி, தமிழீழம் எனும் மாயையில் மயங்கி (கிழக்கு மாகாணத்தில் அந்த மாயயை உருவாக்கிய முழுப்பொறுப்பும் கருணாவினுடையது) தமிழீழம் காணச் சென்றோர். மறுதரப்பு கருணாவினால் கட்டாயமாக பிடித்துச் செல்லப்பட்டோர். இதில் கட்டாயமாக பிடித்துச் சென்று உயிர் நீத்துள்ள இளைஞர் யுவதிகளின் பெற்றோர் எந்தக்காலக்கட்டத்திலும் கருணாவை மன்னிக்கப்போவதில்லை. மற்றய தரப்பும் கருணாவின் இன்றைய நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

இவற்றிற்கு அப்பால் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு சாதாரண வாழ்வு வருகின்றது என சந்தோசப்பட்டாலும் சிவபூசையினுள் கரடி ஒன்று புகுந்துள்ளதே என்ற ஏக்கத்துடனேயே பொதுமக்கள் வாழ்கின்றனர். யார் இந்த கரடி?

இலங்கை அரசின் அரசநிர்வாகத்தை குழப்பி அரச அதிகாரிகளை தனது வக்கிரத்தினுள் அடக்கி வைத்திருந்த கருணா என்கின்ற கரடி இன்று அரச யந்திரத்தினுள் புகுந்து நிற்கின்றது. புலிக்கேணல் கருணா இலங்கை அரச நிர்வாகத்திலிருந்த தனது கட்டனைகளுக்கு கட்டுப்பட மறுத்த அல்லது தயக்கம் காட்டிய எத்தனை தமிழ் அரச அதிகாரிகளைக் கொன்று குவித்திருக்கின்றார் என்று அரச தரப்பினர் கிழக்கல் உள்ள ஒவ்வொரு கிராம் கிராமமாகச் சென்று வினவினால் கருணாவிற்கு மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய செல்வாக்கை அறிந்து கொள்ளமுடியும்.

இவற்றை ஆழமாக சிந்தித்துப் பார்க்காத ஐனாதிபதி மஹிந்தா, ஏதோ புலிகளை தோற்கடிப்பதற்கு கிழக்கின் இளைஞர்கள் உதவினார்கள் எனக் கருதி அவ்விளைஞர்களின் ஒத்துழைப்புக்கு நன்றிக்கடனாக முரளிதரனுக்கு இத்தனை பதவிகளையும் வழங்கினார் என்பதை மறந்தவிட்ட கருணா, எந்த இளைஞர்களின் முதுகில் சவாரி செய்து வந்தாரோ அந்த இளைஞர்களை எட்டி உதைத்துள்ளார் என்பதை ஜனாதிபதி அறிந்திருக்க வாய்ப்பில்லை.

கிழக்கு மக்களின் அபிவிருத்திக்காகவும் நல்வாழ்விற்காகவும் அரசினால் வழங்கப்பட்ட வளங்கள் பதவிகள் யாவும், கருணாவின் சுய இன்பத்திற்காக பயன்படுத்தப்படுகின்றது. கிழக்கிலங்கையில் அபிவிருத்தி என ஆரம்பிக்கப்பட்ட சில முன்னெடுப்புக்கள் கருணாவின் பிரத்தியேகச் செயலாளரின் தங்கை கணவனுக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளாதாக கருணாவுடன் இருக்கின்ற இளைஞர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

புலிகளில் இருந்து வெளியேறி வந்த கிழக்கு இளைஞர்களில் 225 க்கும் அதிகமானோர் புலிகளுடனான யுத்தத்திலும் புலிகளால் நயவஞ்சகமாகவும் கொல்லப்பட்டுள்ளதுடன், அவர்களை வாழ்வாதாரமாக நம்பியிருந்த மக்கள் சுயதொழில் ஒன்றிற்கு எதாவது உதவி கிடைக்குமா என ஏங்கி நிற்கும் நிலையில் கிழக்கிற்கான பியர் முகவர், கிழக்கில் பிடிக்கின்ற மீன்களுக்கான மொத்த முகவர், சீனி மொத்த முகவர் ஆகிய மூன்றும் மேற்குறிப்பிட்டுள்ள நபருக்கே வழங்கப்பட்டுள்ளது.

இவ்விடயத்தில் கருணாவின் முக்கிய பொறுப்பாளர்களாக இருந்த இளைஞர்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், அவை தமது கைகளுக்கு வழங்கப்பட்டிருந்தால் தம்முடன் இருந்து மரணித்துப் போன தமது சகாக்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கி அவர்களின் நல்வாழ்விற்கு உதவியிருக்க முடியும் என மிகவும் ஆத்திரமடைந்த பலர் இது தொடர்பாக கருணாவிடம் நேரடியாகவே வாதிட்டும் உள்ளனர்.

ஆனால் கருணாவின் இச்செயற்பாடுகளுக்கு கருணாவின் பின்னால் நிற்கும் மிகவும் குறுகிய சிந்தனை கொண்ட ஒருசிலர் துணைபோவதாக கூறப்படுகின்றது. இவ்வாறு கருணாவின் செயல்களுக்கு துணைபோவோர் தமது சுயலாபங்களுக்காக கருணாவின் அழிவையோ அன்றில் எம் தேசத்து மக்களின் துயரத்தையோ கண்டு கொள்ளாது கருணாவை தவறான பாதையில் பயணிக்க விட்டு தாமும் லாபம் அடைந்து கொள்கின்றனர்.

கருணாவின் இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக மக்கள் மத்தியில் கருணா யார்? கருணாவிற்கு தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பங்கு என்ன? என்கின்ற கேள்விகள் எழுகின்றன. கருணா சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப்பட்டியல் எம்பி எனும் பட்டத்தை தனதாக்கி கொண்டதற்காக கருணா தமிழ் மக்களின் பிரதிநிதி ஆகிவிடமுடியாது.

காரணம் கருணா இதுவரை எந்த தேர்தலையும் சந்திக்கவில்லை. அவ்வாறு சந்தித்தாராக இருந்தால் மக்கள் அவரைத் தேர்ந்தெடுப்பார்களா என்பது ஐனநாயக, மனிதாபிமான, அரசியல் பின்னணி, கல்வியறிவு, சமூகவேவை, நிர்வாகத்திறன் என்கின்ற அளவுமானிகளால் அளந்து அறிந்து கொள்ள முடியாத விடயம். ஆக தேர்தல் காலங்களில் அரச இயந்திரம் எவ்வாறு இயங்குகின்றது. மக்கள் எவ்வாறு கருணாவின் ஆயுதத்திற்கு பயந்த நிலையில் காணப்படுகின்றார்கள், எத்தனைபேர் கருணாவிற்கு கள்ள வாக்கு திணிப்பதற்கு விசுவாசமாக இருக்கின்றார்கள் என்பதை வைத்தே அனுமானிக்க முடியும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் என்ன காரணத்திற்காக கருணாவிற்கு பதவிகளை வழங்கியுள்ளது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டிய தேவை கருணாவின் செயற்பாடுகளினூடாக எழுந்தள்ளது. காரணம் கருணா தனக்கு கிடைத்துள்ள பதவியானது தனது ஆயதப் போராட்டத் திறமைக்காக, அதாவது அரந்தலாவயில் பௌத்த பிக்குகளைக் கொன்றும், சரணடைந்த 600 மேற்பட்ட பொஸாரை நிராயுதபாணிகளாக்கி தர்மத்திற்கு அப்பால் கொலை செய்தும், முஸ்லிம் பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டோரைக் கொன்றும், ஜெயசிக்குறு படைநகர்வின் போது ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளை பலி கொடுத்து அதே எண்ணிக்கையான படைவீரர்களை கொன்றும் நிரந்தர அங்கவீனர்களாக்கியும் பிரபாகரனது கரத்தை பலப்படுத்தியதற்காக இப்பதவி வழங்கப்பட்டதா? அன்றில் தமிழ் மக்களுக்காக வழங்கப்பட்டதா? அவ்வாறு தமிழ் மக்களுக்காக வழங்கப்பட்டிருந்தால் அது எந்த தமிழ் மக்களின் விருப்புடன் வழங்கப்பட்டதென்பதையும் தெரியப்படுத்த வேண்டும்.

இக்கேள்வி இங்கு முன்வைக்கப்படுவதற்கான காரணம் யாதெனின், புலி மாஸ்ரர்களான ஜோர்ஜ், மனோ ஆகியோரை இலங்கை அரசு அரசியலினுள் உள்வாங்கப்போகின்றது எனவும், அவர்களுக்கு சிலவேளைகளில் வட மாகாண மக்களைப் பிரதிநிதிதுவப் படுத்துகின்ற ஏதாவது பதவிகள் வழங்கப்படலாம் எனவும் செய்திகள் வெளியாகியிருந்தபோது, அச்செய்தியை பகிரங்கமாக மறுதலித்த புலிக்கேணல் கருணா ஜோர்ஜ், தயா மாஸ்ரர்கள் எந்தக்காலகட்டத்திலும் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபடாதவர்கள் அவர்களுக்கு எந்தப்பதவியும் கொடுக்கப்படலாகாது என ஊடகங்களுடாக தெரிவித்திருந்தார்.

அவரது இச்கூற்றானது, தமிழ் மக்களுக்கு கூறும் செய்தியாதெனில், மக்கள் என்னை தேர்தலில் தேர்ந்தெடுத்தாலும் இல்லாவிட்டாலும் நான் இலங்கையில் நாடாத்திய பயங்கரவாத போருக்காக எனக்கு அமைச்சுப் பதவியும் பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் மஹிந்த அரசினால் வழங்கப்படும் அப்போது நான் உங்களை நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஆள்வேன் என்பதாகும்.

கருணாவிற்கும் கருணாவின் சகாக்களுக்கும் தமது பிளவினால்தான் புலிகளை தோற்கடிக்க முடிந்தது என்ற ஓர் இறுமாப்பு உண்டு, ஆனால் அன்று இவர்கள் முகம்கொடுத்த இராணுவ நடவடிக்கைள் மற்றும் இராணுவத் தலைமைகள், அதன் வழிகாட்டிகளுக்கும், இன்றைய இராணுவ ஒழுங்கமைப்பிற்கும் அதன் தலைமைக்கும் இடையில் பாரிய இடைவெளி உண்டென்பதையும் கருணா தரப்பினர் இன்றுள்ள இராணுவத் தலைமையை களத்தில் எதிர்கொண்டிருந்தால் பிரபாகரனுக்கு ஏற்பட்ட அதே கதி இவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் என்பதையும் அவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

அதே நேரம் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதற்கு கருணாவின் பிளவே காரணம் என்ற எண்ணம் பிற்போக்குத் தனமான தன்னம்பிக்கை இல்லாத சில பெரும்பாண்மையின அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் காணப்படுகின்றது. இங்கு கருணாவின் பிளவு எனும் விடயத்தை நன்கு அவதானிக்க வேண்டும். கருணா எந்ந ஓர் காலகட்டத்திலும் பிரபாகரனை விட்டு வெளியேறுவதற்கும் தென்னிலங்கையுடன் கைகோர்த்து நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் எண்ணம் கொண்டிருக்கவில்லை. கருணாவின் பதவி மோகமும் உள்மோசடி விவகாரங்களும் கருணாவின் உயிருக்கு ஆபத்தாக வந்தபோது இலங்கை அரசிடம் கருணா உயிர்பிச்சை பெற்றுக்கொண்டாரே தவிர இன்று சிலரால் கூறப்படுவது போல் அவராக விரும்பி வன்செயலை கைவிடவில்லை.

கருணா ஜெயசிக்குறு கட்டளைத் தளபதியாக இருந்தபோது, நீ இப்போரில் வெல்வாயானால் உனக்கு தமிழீழ இராணுவத் தளபதி பதவியைத் தருவேன் என பிரபாகரன் வாக்குறுதி அளித்திருந்தார். அப்பதவியை இலக்காக கொண்டு கிழக்கின் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுத்து ஜெயசிக்குறுவை வென்ற கருணா தமிழீழ இராணுவத் தளபதி பதவிக்காக பிரபாகரனிடம் சென்ற போது அவருக்காக வெற்றுப் பேப்பர் காத்திருந்தது.
அங்கே பல சர்ச்சைகள் கிளம்பியது. கருணா கிழக்கு திருப்பினார். (அவையாவற்றையும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் விபரமாக வெளியிடக்காத்திருக்கின்றேன்)

கிழக்கு திரும்பிய கருணாவிற்கு வன்னி வந்து செல்லுமாறு பிரபாகரனிடம் இருந்து பல கட்டளைகள் வருகின்றது. ஆனால் உயிருக்கு பயத்தில் வன்னி செல்ல மறுத்த கருணாவிற்கு புலிக்கேணல் பதிவியையும் பிரபாகரனையும் விட நாட்டமில்லாமல் காடுகளுள் ஒழிந்திருந்து கொண்டு தனது தலைவருக்கு கடிதம் ஒன்று எழுதுகின்றார்.

அக்கடிதத்திலே பிரபாகரனை தனது உயிரிலும் மேலாக நேசிக்கும் தலைவர் எனக்குறிப்பிட்டு, உங்களது சிறந்த வழிநடத்தலில் எமது ஏகப் பிரதிநிதித்துவக் கொள்கையின் கீழ் என்னை கிழக்கு மாகாணத்தில் பொட்டு மற்றும் சிலரது தலையீடு இல்லாமல் சுயமாக செயற்பட்டு எமது இலட்சிய தாகமான தமிழீழப் போரை முன்னெடுத்துச் சென்று புலிகளின் தாகம் தமிழீழ தாயமாகிய தமிழீழத்தை அடைய அனுமதியுங்கள் என அனுமதி கோரியிருந்தார். அதற்கு பிரபாகரனிடமிருந்து பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை.

கிழக்கு மாகாண தளபதிகளைக் கூட்டிய கருணா தனக்கு தமிழீழ இராணுவத் தளபதி பதவி வழங்கப்படாமை நியாயமற்றது என அழுது புலம்பியதுடன் அவர்களை வன்னிக்கு சென்று பிரபாகரனுடன் பேசி ஒருவாறு தனது எண்ணங்களை தெரியப்படுத்தி கிழக்கில் சுயமாக செயற்படுவதற்கு அனுமதியை பெற்று வாருங்கள் என அனுப்பினார். வன்னி சென்ற கிழக்கின் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் அங்கு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். கருணாவின் தமிழீழ இராணுவத் தளபதி மோகத்திற்கு ஆப்படிக்கப்பட்டது.

கருணாவினால் வலுக்கட்டாயமாக அவ்வியக்கத்தில் வைக்கப்பட்டிருந்த இளைஞர் யுவதிகள் மூவாயிரத்திற்கு மேற்பட்டோர் இந் நிலைமைகளை அவதானித்ததும் இயக்கத்தை விட்டு ஓடினர். ஏஞ்சியிருந்த சிலரை கருணா தானக முன்வந்து உங்கள் வீடுகளுக்குச் செல்லுமாறு கட்டளையிட்டார். ஆனால் கருணாவின் அழைப்பை அவ்வியக்கத்தில் இருந்த முக்கிய உறுப்பினர்கள் எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. குகனேசன், பிள்ளையான், பாரதி, வீரா, தவசீலன், மார்கன், மங்களன் என இடைநிலைப் பொறுப்பாளர்களாக இருந்த சிலர் ஏதோ ஓர் நிலைப்பாட்டில் கருணாவிற்கு உயிர்பிச்சை கொடுத்து கருணாவின் உயிரைக் காப்பாற்ற அயராது உழைத்தனர். ஆனால் இன்று அவர்களை எவ்வாறு முடித்துக்காட்டலாம் என்பதுதான் கருணாவின் முழுச் சிந்தனையாக இருப்பதை அங்கு நிகழ்ந்து வரும் நிகழ்வுகள் எடுத்துக்கூறுகின்றன:

ஏனவே கருணாவை மாபெரும் ஜனநாயக விரும்பியாக சித்தரிக்க முனையும் பெரும்பாண்மையினத்தவர்கள் சிலர் பிரபாகரன் கருணாவிற்கு கிழக்கில் தனியாக இயங்க அனுமதித்திருந்தால் கருணா எவ்வாறான ஜனநாயகவாதியாக இருந்திருப்பார் என்பதை சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

ஏன் இன்றும் கூட வன்னியில் பிரபாகரனுடன் இருந்து சகல ஊடகங்களையும் அடக்கி ஆண்ட வரலாற்றுப் பழக்கம் கருணாவை விட்டுப்போகவில்லை.:

ஊடகங்கள் எவ்வாறு அடக்கப்பட்டன? இலங்கை அரசின் பத்திரிகைகள் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனச் செய்திகள் மற்றும் கொலைக்காட்சி செய்திகளை அரசின் பரப்புரை என மக்களுக்கு கூறிய புலிகள் இது கருணா அம்மானின் கட்டளை எவரும் இலங்கை அரசினால் ஒலி, ஒளி பரப்படும் செய்திகளை செவிமடுக்வோ அன்றில் அரச அச்சகத்தால் வெளியிடப்படும் பத்திரிகைகளை வாசிக்கவோ கூடாது எனவும் ஆயிரத்து தொளாயிரத்து எண்பதுகளின் நடுப்பகுதியில் மக்களை துன்புறுத்தியிருந்தனர்

அன்று மக்களின் ஊடக சுதந்திரத்திற்கு சாவு மணியடிதிருந்த கருணாவின் ஆட்கள் செய்திநேரங்களில் துவிச்சக்கர வண்டிகளில் பதுங்கித் திரிந்து, கருணாவின் கட்டளையை மீறி இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் செய்திகளை கேட்டோரை தாக்கியது, அவர்களது வானொலிகளை அபகரித்துச் சென்றது, அவ்வானொலிகளை அவ்விடத்திலேயே உடைத்தது போன்ற சம்பவங்களை ஒரு முறை மீட்டிப்பார்க்கின்றேன்.

நியாயமான கருத்துக்கள் மக்களை சென்றடைய கூடாது என்ற வக்கிர புத்தியை புலிகளுக்கு புகட்டிய ஆசான் கருணா என்பது இலகுவில் மறந்து விடக்கூடிய விடயம் அல்ல. அத்துடன் தற்போது தனது காழ்புணர்ச்சிகளை தீர்க்க, தமது அரசியலுக்கு எதிராக நிற்க கூடியவர்களை பழி தீர்ப்பதற்கு மஞ்சள் பத்திரிகை போன்ற சில இணையங்களை தனது சகாக்களினூடாக இயக்கி வருகின்றார்.

அவ்வாறான அவ் இணையங்களின் கூலித்தொளிலாளர்களில் சுவிஸில் உள்ள ஒருவரை கருணா எனக்கு ஒருமுறை அறிமுகம் செய்து வைத்தார். கருணா அவ்வாறு அறிமுகம் செய்த சில நாட்களில் அவ் இணையங்களில் மட்டு மேயர் சிவகீதா தொடர்பாக மிகவும் அநாகரிகமான வார்த்தைகளில் எழுதப்பட்டிருந்த விடயங்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக அவ்விணையத்தை நடாத்துகின்ற கருணாவினால் எனக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். உங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ள செய்தி உண்மைதானா? என வினவினேன். ஆம் என்ற பதில் வந்தது. அவ்வாறு அது உண்மையாயினும் அங்கு பிரயோகிக்கப்பட்டிருக்கின்ற வார்த்தை பிரயோகங்கள் ஊடக தர்மத்திற்கு அப்பாற்பட்டது என்பதை உணர்வீர்களா? என வினவினேன். நான் அதை உணர்கின்றேன் ஆனால் என்னால் எதுவும் செய்யமுடியாது இது எங்கள் கருணா அம்மானின் உத்தரவு அவர் சொல்வதை நான் செய்யவேண்டும் எனக் கூறி தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

கருணாவின் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தினேன் மேயர் சிவகீதா தொடர்பாக எழுதப்பட்டுள்ள செய்தியில் உண்மைகள் உண்டா என கருணாவை கேட்டேன். ஆம் அது உண்மைதான் நான்தான் அவ்விடயத்தை வெளிக்கொண்டுவருமாறு உத்தரவு வழங்கினேன் என்றார். ஆனால் அதன் வார்த்தை பிரயோகங்கள் மனித நாகரிகத்திற்கு அப்பாற்பட்டவையாக காணப்படுகின்றதே என்றேன். மறு முனையில் தொலைபேசி துண்டிக்கப்பட்டது.

இவ்வாறே கருணா ஊடகங்களை அடக்கியும் தமது தேவைகளுக்காக பொய்பிரச்சாரங்களைச் செய்தும் வந்துள்ளார். அனால் மஹிந்த அரசுடனும் இணைந்து கொண்டு அதே நடவடிக்கையாக சுதந்திர ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதனை ஏற்றுக்கொள்ள முடியுமா என்பது கருணாவை ஜனநாயக வழிக்கு திரும்பியுள்ள மாமனிதர் எனக் குறிப்பிடுவோரிடம் கேட்கப்படவேண்டிய கேள்வியாகும்.

பிரபாகரனிடம் இருக்கும்போது தனக்கு வேண்டப்படாதவர்களுக்கு துரோகிப்பட்டம் கொடுத்த பழக்கதோசம் கருணாவை விட்டுச் சென்றதாக தெரியவில்லை. இலங்கை அரசுடன் இணைந்துள்ள கருணா தற்போது தனக்கு வேண்டாத தமிழர்களை புலிகள் எனவும், சிங்கள மற்றும் முஸ்லிம்களை இந்திய றோ, பிறநாட்டு உளவுத்துறை ஏஜென்டுக்கள் எனவும் காட்டிக்கொடுத்து அரசினை தவறான வழிக்கு இட்டுச் செல்ல முயல்கின்றார் என்பதுவும் சுட்டிக்காட்டப்படவேண்டிய விடயமாகும்.

கருணாவின் ஆட்களால் எனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட செய்தியறிந்த எனது நண்பர்கள் என்னை தொடர்பு கொண்டபோது, தவறு செய்கின்றவனை திருத்த முயற்சிக்கலாம் கருணா தவறு செய்யவில்லை இது அவரது பிறவிக்குணம் ஆகவே பிறவிக்குணத்தை உன்னால் மாற்றமுடியாது வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கவேண்டாம் என்று அறிவுறுத்தினார்கள்.

நான் இதை எழுதுவதன் நோக்கம் கருணாவின் செயற்பாடுகளை புதிதாக மக்களுக்கு சொல்வதற்காக அல்ல. அவர்களுக்கு தெரிந்து விடயம் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் மக்கள் இனியும் மூட்டைப் பூச்சிகளுக்கு பயந்து வீட்டைக் கொழுத்தாமல் விட்டுக்குள் நுழையும் அந்த பூச்சிகளை இல்லாது ஒழிக்க முற்பட வேண்டும் என்பதை சொல்வதற்காக. ஆத்துடன் எம்மிடையே உள்ள சமுதாய நலனில் ஆர்வம் உள்ள மனிதர்கள் எம்தேசத்தில் உள்ள அநியாயங்களை வெளிக்கொணர முன்வரவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவே இவ்விடயங்களில் விசேட கவனம் செலுத்துகின்றேன். VIII

Read more...

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ரணிலாக இருக்கக் கூடாது - புதிய ஜாதிக ஹெல உறுமய

மகிந்த ராஜபக்ஷவை வெற்றிகொள்ளக் கூடிய வலு ரணில் விக்ரமசிங்கவிடம் இல்லை என்பதால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக நிறுத்துவதை தனிப்பட்ட ரீதியில் விரும்பவில்லை என எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டுள்ள புதிய ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் சரத் மனமேந்திர தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டமைப்பில் இணைந்துகொண்டமை தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பின் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக்கூட 4 பேர் கொண்ட பட்டியல் இருப்பதாகவும் இவர்களின் பெயர் எஸ் என்ற ஆங்கில எழுத்தில் ஆரம்பிப்பதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த எஸ் எழுத்து பட்டியல் தொட்ர்பில் அச்சம் கொண்டுள்ளதாகவும் மனமேந்திர கூறினார். எனினும் எஸ் எழுத்து கொண்ட நபர்கள் யார் என்பதை அவர் வெளியிடவில்லை. ஜெனரல் சரத் பொன்சேக்கா, முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா, சரத் மனமேந்திர, சுமங்கள தேரர் ஆகியோரை புதிய ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.




Read more...

இராணுவத்தில் இருந்து ஓடிய அனைவரும் நீக்கப்படுகின்றனர்.

இராணுவத்தில் இருந்து தப்பியோடி கடந்த 31 மே மாதம் 2009 ம் திகதி வரை சேவைக்கு திரும்பியிராத அனைவரும் இராணுவச் சேவையில் இருந்து உத்தியோக பூர்வமாக நீக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் எதிர்வரும் 24ம் திகதி ஆகஸ்ட் மாதம் முதல் 14ம் திகதி செப்ரம்பர் மாதம் வரை நாடளாவிய ரீதியில் விசேட நிகழ்ச்சிநிரல் ஒன்று தயார்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.

Read more...

நல்லூர்த் திருவிழாவை முன்னிட்டு விமானக் கட்டணம் குறைப்பு

நல்லூர்த் திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணத்திற்கும், கொழும்பிற்கும் இடையிலான விமானப்படையினரின் விமானசேவைக் கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, விமானப் படையினரின் விமானத்தில் பயணிக்கும் பொதுமக்களிடமிருந்து, எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 22ஆம் திகதிவரையான காலப்பகுதியில் 17 ஆயிரம் ரூபா கட்டணம் அறிவிடப்படவிருப்பதாகவும் சுற்றுலா ஊக்குவிப்பு அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். அத்துடன், தினமும் 5 தடவைகள் விமானப்படையினரின் விமானசேவை நடத்தப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்திற்கும், கொழும்பிற்கும் இடையிலான விமானப் படையினரின் விமானசேவை கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விமானப்படையினரின் விமானசேவையானது வாரத்திற்கு 3 தினங்கள் நடைபெறுமெனத் அறிவிக்கப்பட்டிருந்ததுடன், யாழ்ப்பாணத்திற்கும், கொழும்பிற்கும் இடையிலான இருவழிப் பயணத்திற்கான கட்டணமாக 19ஆயிரத்து 100ரூபா அறவிடப்படுமெனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நல்லூர்த் திருவிழாவை முன்னிட்டு, இரண்டாயிரத்து 100 ரூபாவால் விமானப்படையினரின் விமானசேவைக் கட்டணம் குறைக்கப்பட்டிருக்கிறது.

Read more...

புலிகளின் புதுத் தலைவர் கே.பி.-யா - நெடியலனா?

பிரபாகரன் திருமணத்தின்போது மாப்பிள்ளைத் தோழனாக இருந்த கே.பி. இப்போது அவர் இடத்தைப் பிடித்திருப்பதாக வரும் தகவல்கள், உலகத் தமிழர்களிடையே விவாத அலைகளைக் கிளப்பியுள்ளன. இதே நேரம், 'எம்முடைய ஒரே தலைவர் பிரபாகரன்தான். வேறு யாருமல்ல...' என்ற எதிர்ப்புக் குரல்களும் எழ ஆரம்பித்திருப்பதால், உலகத் தமிழ் அரங்கு மீண்டும் சலசலப்பாகியுள்ளது.

நியூயார்க் வாழ் வழக்கறிஞர் விசுவநாதன் ருத்ரகுமாரன் உதவியுடன் புலிகளின் புதிய தலைவர் என அறிவிக்கப் பட்டிருக்கிறார் கே.பி. ஆனால்... நாடு கடந்த தமிழ் ஈழ அரசை அமைப்பதில் தீவிரம் காட்டி வந்த வீரகட்டி மணிவண்ணன் என்கிற கேஸ்ட்ரோ, நார்வேயில் இருக்கும் கே.பி. ரேகி முன்னாள் புலிகளின் பொருளாதார ஆலோசகரான ரூட் ரவி உட்பட பலர் கே.பி-யை தீவிரமாக எதிர்க்கிறார்கள்.

இது குறித்து பல்வேறுபட்ட உலகத் தமிழ் அமைப்புகளிடமும், தனிப்பட்ட தமிழ் உணர்வாளர்களிடமும் விலாவாரியாக விசாரித்தோம்.

''தலைமையிடம் காலியாகவே இருந்தால், அதை தட்டிப்பறிக்க பலர் முயலுவார்கள். எனவே, கே.பி-யை தலைவர் என்று அறிவித்துவிட்டால், கட்டுப்பாடு தானாகவே வரும் என்று கருதினார் ருத்ரகுமாரன். அதனால், அவரே உலகம் முழுவதும் உள்ள, ஈழ தமிழ்ச் சங்கம் மற்றும் பல அமைப்புகளின் தலைவர்களை பேசி சம்மதிக்க வைத்தார்.

ஆனால், கேஸ்ட்ரோ தரப்பு இதை ஏற்றுக் கொள்வதாக இல்லை. புலிகளின் தலைவர் பதவிக்கு அவர்களின் சாய்ஸ் பேரின்பநாயகம் சிலாபரன் என்கிற நெடியலன். 33 வயது நெடியலன் எஸ்.பி.தமிழ்ச்செல்வனின் பிரதான சீடர். 18 வயதில் புலிகளின் இயக்கத்தில் சேர்ந்து ரஷ்யாவுக்கு ராணுவப் பயிற்சி பெற அனுப்பி வைக்கப்பட்டவர். தாய்லாந்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் தமிழ்ச்செல்வனுக்கு வலதுகரமாகச் செயல்பட்டவர். நெடியலன் மட்டுமல்ல, அவருடைய குடும்பமே புலிக் குடும்பம்தான். அவருடைய மனைவி சிவகௌரியின் தாய் மாமன் ஞானேந்திர மோகன் எனும் ரன்ஜன் லாலாதான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல் ஆயுள் உறுப்பினர். இவர், யாழ்ப்பாணத்தில் இலங்கை ராணுவத்தினரால் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டவர். இவர் மீது பிரபாகரனுக்கு மிகுந்த மரியாதை உண்டு. அதைத் தங்களுக்கு சாதகமாக்கி, நெடியலனை தலைமை ஏற்க முயல்கிறது கேஸ்ட்ரோ தரப்பு. கே.பி-யை அயல்நாடுகள் வாழ் ஈழத் தமிழர்களின் பொறுப்பாளராக பிரபாகரன் நியமித்தபோதே, அதை எதிர்த்தவர்கள் இப்போது எப்படி ஆதரிப்பார்கள்?'' என்றவர்கள் தொடர்ந்தனர்.

''பாலியல் குற்றச்சாட்டு, பண மோசடி, ஊழல் வழக்குகளில் சிக்கிய கே.பி-யை 2002-ம் ஆண்டு பிரபாகரன் உத்தரவின் பேரில் தமிழ்ச்செல்வன் இயக்கத்தை விட்டு விலக்கிவைத்தார். இதையடுத்து, கே.பி., தாய்லாந்து சென்று அந்த ஊர் பெண்ணை மணந்து செட்டிலாகிவிட்டார். ஆனால், பிரபாகரனிடம் மட்டும் தொடர்பு வைத்திருந்தார். இது தமிழ்ச் செல்வனுக்கே தெரியாது.

கே.பி.முழுமையான புலியே அல்ல. அவர் இலங்கை அரசின் ஒற்றர். தமிழ்ச்செல்வனை பழிவாங்கப் போட்டுக் கொடுத்ததே கே.பி-தான். பிரபாகரன் மரணத்தைப் பற்றி அமைப்பு அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்காத நிலையில்...

முந்திக் கொண்டு மே 18-ம் தேதி அவர் வீரமரணம் அடையவில்லை என்று கே.பி. அறிவித்தார். அதே கே.பி-தான், தமிழக அரசியல்வாதிகள் போல பின், 'பிரபாகரன் வீரமரணம், ஒரு வாரம் துக்கம்' என்று அடுத்தடுத்து பல்டி அடித்தார். 'இதைக் கூற நீயென்ன எங்கள் தலைவனா?' என்று தமிழ் புனரமைப்புக் குழு என்ற அமைப்பு கடுமையாக எதிர்த்தது.

அப்பேர்ப்பட்ட கே.பி-யை ஒருபோதும் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் மட்டுமல்ல, நெடுமாறன், வைகோ போன்ற தமிழகத் தலைவர்கள் கே.பி-யை ஆதரிக்கவில்லை. பலமுறை அவர்களுடன் பேசி தங்கள் நியாயத்தை புரியவைக்க கே.பி. முயன்றும் இயலவில்லை!'' என்கிறார்கள்.

இந்த நிலையில் கே.பி. ஆதரவாளர்களோ...

''வீரகட்டி மணிவண்ணன் என்கிற கேஸ்ட்ரோ இப் போது உயிருடன் இல்லை. பிரபாகரனின் சாவுக்கு முன்பே முள்ளிவாய்க்கால் போரில் சயனைடு கடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் பெயரால் வரும் மின்னஞ்சல்கள் போலியானவை. 2006-ம் ஆண்டு புலிகள் இயக்கம் ராணுவ ரீதியாக பலமிழந்தபோது, பிரபாகரன் அழைத்த முதல் நபர் கே.பி-தான். ஏராளமான வெளிநாட்டு போர் தளவாடங்களை புலிகளுக்கு மீண்டும் வாங்கிக் கொடுத்து உதவினார் கே.பி. அவற்றை சாதுர்யமாக வன்னிப்பகுதிக்கு பத்திரமாக சேர்ப்பித்தும் உதவினார். இது நெடியலன், கேஸ்ட்ரோ போன்றவர்களுக்கு கலக்கத்தை உண்டாக்கியது. அவர் அனுப்பிய மூன்று ஆயுதக் கப்பல்களில் இரண்டு பத்திரமாக வன்னிக்கு சென்றது. ஒன்றை மட்டும் இலங்கைக் கப்பல் படை அழித்துவிட்டது. கண்கலங்கிய பிரபாகரன் கே.பி-யை மீண்டும் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்ற அழைத்தார்.

ஜனவரி 2009-ல் பிரபாகரன் கே.பி-யை சர்வதேசத் தலைவராக நியமித்தார்!'' என்கின்றனர்.

இதற்கிடையே, லண்டனில் உள்ள 'சின்ன ரன்ஜித்' என்பவரும் கே.பி-க்கு எதிராக தீவிரப் பிரசாரத்தில் இருக்கிறார். மறைந்த ஆண்டன் பாலசிங்கத்தின் செயலாளராக இருந்தவர்தான் இந்த சின்ன ரன்ஜித். இவர், பாலசிங்கத்தின் மனைவி அடேலின் பாசத்தையும் பெற்றவர். புலிகள் வானொலியின் பொறுப்பாளரும் கூட. தான் மட்டுமல்ல, அடேல் பாலசிங்கமும் கே.பி-யை எதிர்ப்பதாக இவர் பிரசாரம் செய்தும் வருகிறார்.

ஆக மொத்தத்தில், ''கே.பி. அடிக்கடி, 'பிரபாகரனே என்றும் தலைவர். நான், தலைமைச் செயலாளர்தான். தலைவர் இருந்த இடத்தில் யாரையும் நினைத்துப் பார்க்கவே மனம் கூசும்' என்றும் கூறிவந்தார். அப்படிப்பட்டவர் தன்னைத்தானே தலைவராகப் பிரகடனப்படுத்திக் கொண்டது தமிழ் ஈழ தேசியத் தலைவருக்கு செய்திருக்கும் பச்சை துரோகம்!'' என்கின்றனர் கே.பி-யின் எதிர்ப்பாளர்கள்.

இதுபற்றியெல்லாம் கே.பி-யிடமே நாம் பேசினோம்.

''பிரபாகரன் இறப்பதற்கு முன்பு என்னிடம், 'ராணுவ ரீதியாக இனி புலிகள் செயல்பட முடியாமல் போகலாம். தீவிரவாதி என்கிற இமேஜ் என்னுடன் போகட்டும். இனி உலக நாடுகளை அரவணைத்து தமிழ் ஈழம் காணுங்கள். இயக்கத்தை வழி நடத்தி பிணைக் கைதிகளாக இருக்கும் தமிழர்களை மீட்டு, சிறையில் வாடும் தம்பிகளை வெளியே கொண்டு வாருங்கள்!' என்று கூறினார். அதைத்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன்...'' என்று நம்மிடம் கூறினார் கே.பி.

ஆரம்பத்தில் கே.பி-யை எதிர்த்த புலிகளின் புலனாய்வுத் துறைத் தலைவரான அறிவழகன், இரண்டு தரப்பினரையும் அழைத்து லண்டனில் ஜூலை 20-ம் தேதி பேசினார். ஆனாலும்... கே.பி-தான் ஒருமனதான தலைவர் என்ற முடிவுக்கு வரமுடியவில்லை.

தலைமைப் பதவிக்கு போட்டி என்பது புலிகளின் வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வு! அறிவழகன் நடத்திய பேச்சுவார்த்தை முறிந்ததா? அதையடுத்து... கே.பி-யே தன்னிச்சையாகத் தலைவராகத் தம்மை அறிவித்துக் கொண்டாரா? இப்படி, பல கேள்விகள் குடைய.... என்ன நடக்கிறது என தெரியாமல் தவிக்கிறார்கள் உலகத் தமிழர்கள்!

நன்றி:ஜூனியர் விகடன்

Read more...

சட்டவிரோத ஆட்கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட்ட தங்கப்பதக்க வீரருக்கு இருவருட சிறைத் தண்டனை.

தேசிய மெய்வல்லுனர் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ள எச்.டி வருண ரங்க குமார விமலவன்ச எனப்படுபவருக்கு கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றம் சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக இருவருட சிறைத்தண்னையுடன் கூடிய 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் 2 லட்சம் ரூபா அபராதமும் விதித்துள்ளது.

Read more...

Thursday, July 30, 2009

தற்கொலையாளிகள் உட்பட சகல மட்ட புலிகளுக்கும் புனர்வாழ்வு நீதி அமைச்சின் கீழ் செயற்பாடு: ஆணையாளர் நாயகமும் நியமனம்

புலிகள் இயக்கத்திலிருந்த தற்கொலையாளிகள் உட்பட அனைத்துத் தராதரங்களையும் சேர்ந்த உறுப்பினர்களுக்கும் புனர்வாழ்வளிப்பதற்கு அரசாங்கம் விசேட செயல்திட்டமொன்றை அமுல்படுத்தியுள்ளது. புனர்வாழ்வுப் பணிகளை முன்னெடுப்பதற்காக மேஜர் ஜெனரல் தயா ரட்னாயக்க புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், இதுவரை காலம் ஜனாதிபதியின் பொறுப்பின் கீழிருந்த புனர்வாழ்வு திணைக்களம், அடுத்த வாரத்திலிருந்து நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக புதிய ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தயா ரட்னாயக்க (இராணுவ முன்னாள் ஊடகப் பேச்சாளர்) நேற்று தகவல், ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுடன் செய்தியாளர் மாநாட்டில் மேஜர் ஜெனரல் கலந்துகொண்டு மேலும் தகவல் தருகையில், “இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள், கைதுசெய்யப்பட்டவர்கள் எனப் பத்தாயிரம் புலி உறுப்பினர்கள் தற்போது 12 முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தொகை 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை அதிகரிக்கவும் வாய்ப்புண்டு. இவர்கள் அனைவரையும் புனர்வாழ்வளித்து முகாமுக்கு வெளியில் கொண்டுவருவதுடன், நாட்டின் உற்பத்தித் துறையில் ஈடுபடுத்தி, சமூகத்துக்குள் உள்வாங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கிழக்கு மாகாணத்தில் சுமார் ஆயிரம் புலி உறுப்பினர்களுக்கும், சிறுவர் போராளிகளுக்கும் புனர்வாழ்வு அளிக்கும் முகமாக அப்போது ஜனாதிபதியின் பொறுப்பின் கீழ் புனர்வாழ்வு திணைக்களம் செயற்படுத்தப்பட்டது. தற்போதும் 837 பேர் கிழக்கில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால், புலிகள் இயக்கம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியவர்களின் தொகை அதிகரித்துள்ளது.

அதனால், தனியான திணைக்களத்தை உருவாக்கி என்னை ஆணையாளர் நாயகமாக ஜனாதிபதி நியமித்துள்ளார்” என்று தெரிவித்த அவர், “புலிகள் இயக்கத்தினரின் செயற்பாட்டில் பங்குபற்றிய உறுப்பினர்களைத் தரம்பிரித்து, அதற்கேற்ற வகையில் புனர்வாழ்வு அளிக்கப்படும். இயக்கத்திற்காக சுவரொட்டி ஒட்டியவர்கள் முதல் தற்கொலையாளிகள் வரை இனங்கண்டு அனைவருக்கும் புனர்வாழ்வளிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்” என்று தெரிவித்த துடன், இது தொடர்பில் வர்த்த மானி அறிவித்தலில் விபரமாகக் குறிப்பிடப்படும் என்றும் கூறினார்.

“முதலில் புலிகள் இயக்கத்தின் தொடர்பு பற்றி ஆராய்ந்து வருகின்றோம். அவர்களின் கல்வி நிலை, வயது, தொழில் விருப்பு வெறுப்புகள் என்பவற்றை அறிந்து அதற்கேற்ப புனர்வாழ்வளிப்போம்” என்றும் குறிப்பிட்டார்.

Read more...

மதகுருவுக்கும் அவருடைய தந்தைக்கும் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் தொழில்வாய்ப்பு பெற்றுதருவதாக கூறி ஜந்து நபர்களிடம் ஆறு லட்சம் ரூபா பணத்தை பெற்று தலைமறைவாகியிருந்த மதகுரு ஒருவருக்கும் அவருடைய தந்தைக்கும் கல்கிஸ்ஸ பிரதம நீதவான் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளார். தெகிவளை மதவழிபாட்டுதலம் ஒன்றில் வைத்து பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட குறிப்பிட்ட மதகுருவான ஜிகும் மடுவகே விமலவுட்டி என்பவர் நிதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது தனது மகனான மதகுரு பெற்றுக்கொண்ட தொகையை திருப்பி கொடுப்பதாக அவருடைய தந்தையான ஜினடாச என்பவர் வாக்குறுதியளித்ததற்கு இணங்க நீதிமன்றம் அவரை சரீரப் பிணையில் விடுதலை செய்திருந்தது.

ஆனால் தற்போது குறிப்பிட்ட மதகுருவும் அவருடைய தந்தையும் அப்பணத்தை திருப்பி கொடுக்காமல் தலைமறைவாகியுள்ளதால் கல்கிஸ்ஸை பிரதம நீதவான் இருவருக்கும் பிறப்பித்துள்ளார்.

Read more...

கைகள் பின்னால் கட்டப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட இருவரது உடல்கள் மீட்பு.

நுகெகொட தெல்கந்த பிரதேசத்தில் கைகள் பின்னால் கட்டப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டிருந்த இருவரது உடலங்கள் இன்று காலை பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பாதாள உலக குழுக்குளைச் சேர்ந்தவர்களாக இருக்காலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

தொடர்ந்து தலையிட்டால், இந்தியா ஒருநாள் பாதிக்கப்படும்! இது நாம் விடுக்கும் நட்பு ரீதியான எச்சரிக்கை!! - சோமவங்ச அமரசிங்க

இலங்கை விடயத்தில் தொடர்ந்து தலையிடுமாயின், இந்தியா ஒருநாள் பாதிக்கப்படும் எனவும், இது அவர்களுக்கு தாம் விடும் நட்பு ரீதியான எச்சரிக்கையெனவும் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவங்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுடன் பகைமையை வளர்க்க தாம் விரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழொன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாளிதழுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'தற்போது 1,500 இந்தியர்கள் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக இங்கு வந்துள்ளார்கள். இந்தியர்கள் எதற்காக கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு வரவேண்டும். எமது நாட்டவர்களால் இதனைச் செய்ய முடியும். இவை உதவிகள் அல்ல. மரணக் கயிறுகள். இந்தியாவுடன் பகைமையை வளர்க்க நாம் விரும்பவில்லை. அதனால்தான் நாம் சொல்கின்றோம் - இந்தியா ஒருநாள் பாதிக்கப்படும். இலங்கையின் பிரச்சினை அவர்களைப் பாதிக்கும் என்பதால் இது அவர்களுக்கு நாம் விடுக்கும் நட்பு ரீதியான எச்சரிக்கையாகும்.'

'எண்ணெய்க் குதங்களைப் பயன்படுத்துவதற்கான உரிமையை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

திருகோணமலை துறைமுகத்தைச் சூழவுள்ள 679 சதுர கிலோ மீற்றர் பகுதி இந்தியாவிற்கான பிரத்தியேக பொருளாதார வலயமாக வழங்கப்பட்டது. இந்தப் பகுதிக்குள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களே செல்ல முடியாது தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலத்தை மீட்பதற்காக எமது இளைஞர்களே கொல்லப்பட்டனர். இந்த நிலத்தை தற்போது யார் ஆக்கிரமித்துள்ளார்கள்? இந்த நிலத்தை இந்தியா பயன்படுத்திக்கொள்வதற்காகவா எமது இளைஞர்கள் தமது உயிர்களைத் தியாகம் செய்து போராடினார்கள்? இந்தியா இன்று எம்மீது மேலாதிக்கம் செலுத்த முற்படுவதுடன், எமது வளங்களைப் பயன்படுத்தவும் முயற்சிக்கிறது. அரசியல் ரீதியாக எம்மீது ஆதிக்கம் செலுத்தவும் முற்படுகின்றது.' எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான உச்சக் கட்டப் போர் நடைபெற்ற காலப்பகுதியில் இந்தியப் புலனாய்வு நிறுவனமான 'றோ' அமைப்பின் முகவர்கள் ஐம்பது பேர் வன்னியில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்குத் தெரியாமலேயே அவர்கள் வன்னியில் இருந்துள்ளனர். எனினும், போர் முடிவுக்கு வரும் நிலையில், அந்த 'றோ' முகவர்களின் பெயர்பட்டியல் ஒன்றை இலங்கை அரசாங்கத்திடம் வழங்கிய இந்திய அதிகாரிகள், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரியுள்ளனர்' எனவும் அவர் கூறியுள்ளார்.

'இவர்கள் ஏன் வந்தார்கள்? இவை இரகசியமானவையல்ல. ராஜீவ் காந்தியின் படுகொலையைக்குப் பின்னரும் 'றோ' இலங்கையில் செயற்பட்டுவந்துள்ளது. அவர்கள் விடுதலைப் புலிகளுடனும் தொடர்ந்து தொடர்புகளை வைத்திருந்தனர். இதனால்தான் இந்தியா தனது கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என நாம் கோருகிறோம்' எனவும் சோமவங்ச அமரசிங்க கூறியுள்ளார்.

'விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவே பயிற்சியளித்தது. அந்தத் தவறை அவர்கள் உணர்ந்துகொண்ட பின்னரே தமது அணுகுமுறையை மாற்றிக்கொண்டனர். பிரிவினைவாத சக்திகளால் தற்போதும் அவர்கள், முட்டாள்களாக்கப்படுகின்றார்கள் என்பதுதான் ஆபத்தானது' எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 1980-களில் இலங்கையில், தமது நலன்களை இந்தியா பெற்றுக்கொண்டது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.






Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com