Thursday, July 30, 2009

முகாம்களிலிருக்கும் மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

முகாம்களில் தங்கியிருக்கும் 2 இலட்சத்து 80ஆயிரம் பொதுமக்களை இலங்கை அரசாங்கம் உடனடியாக மீள்குடியேற்றவேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

முகாம்களில் பொதுமக்கள் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் குற்றஞ்சாட்டினார். கடும் மோதல்கள் காரணமாக, 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சென்றிருந்த பொதுமக்களே முகாம்களில் தடுத்துவைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இது சர்வதேச சட்டங்களை மீறும் செயலெனக் கூறிய பிரட் அடம்ஸ், ஏனைய இலங்கையர்களைப் போன்று முகாம்களிலிருக்கும் மக்கள் வாழ உரிமையுடையவர்களெனவும் தெரிவித்தார்.

Read more...

Wednesday, July 29, 2009

புலிகள் வந்து கடையில் கணக்கு கேட்டால் பொலிஸாரிடம் பிடிச்சு கொடுப்பேன் . நோர்வே கிட்டு

நோர்வேயில் புலிகளால் தமிழ் மக்களிடம் சேகரிக்கபட்ட பணம் தனிநபர் ஒருவரின் பெயரில் முதலீடு செய்யபட்டு உள்ளமை புலிகளிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக அம்பலாமாகியுள்ளது. நோர்வேயில் புலிகளின் நெய்தல் கடை, கிட்டர் என்பவரால் நடாத்தபட்டு வருவதாகவும் சுமார் 5 மில்லியன் குறோனர்கள் இவ்வர்த்தக ஸ்தாபனத்திற்க்கு முதலீடு செய்யபட்டு பொறுப்பாக கிட்டு என்பவரிடம் ஒப்படைக்க பட்டதாகவும், ஆனால் பிரபாகரன் கொல்லபட்டு புலிகளின் அமைப்பு அழிக்கபட்ட நிலையில் தற்போது கடையை கிட்டர் தனது சொந்த பெயருக்கு மாற்றியுள்ளதோடு சொத்துக்கள் அனைத்தும் அவருடைய பெயருக்கு மாற்றபட்டுள்ளது.

5 மில்லியன் குறோன் தற்போது அவரடைய சொத்தாகி உள்ளது என தெரியவருகிறது.
நாட்டில் இருந்து போராளிகள் சிலர் கடைக்கு வேலைக்கு வந்த அகதிகளாக உள்ளனர். அவர்களுக்கு 20 வீத கள்ள சம்பளம் கொடுக்கபடுகிறது. நோர்வேயில் உள்ள புலிகள் கணக்கு கேட்டபோது புலிகள் வந்து கடையில் கணக்கு கேட்டால் பொலிசிடும் பிடிச்சு கொடுப்பேன் என்டு கூறிவருவதாக தெரிவிக்கபடுகிறது.

நன்றி ரிபிசி

Read more...

பழையனவை துக்கியெறிந்து புதுமைகளை வாரிஅணைத்து இனியாவது ஒரு விதிசெய்வோம்

இருளில் மூழ்கியிருந்த
நம் பூமிக்கு உன்னால்
இயன்ற ஓர் விளக்கேற்றி
இனியாவது ஒரு விதிசெய்வோம்...

தீமைகளை விதைத்தவர்களை
விலக்கிவிட்டு விலங்கிட்டு
திறமைகளினால் விளக்கேற்றி
இனியாவது ஒரு விதிசெய்வோம்...

சுமைகளை தாங்கி தாங்கி
சோர்ந்துபோன மக்களுக்கு
சுயநலவாதமில்லாமல் நாங்கள்
இனியாவது ஒரு விதிசெய்வோம்...

இன்பங்களை சுமந்த மக்கள்
துன்பங்களில் குளித்தது போதும்
தலைதுடைக்க துணிகொடுத்து
இனியாவது ஒரு விதிசெய்வோம்....

ஏழைமக்களை ஏமாற்றி பிழைத்து
தருமர்களாய் வேடம் போட்ட
பாவிகளை விட்டுத்தள்ளி
இனியாவது ஒரு விதிசெய்வோம்...

உண்மைகளை பொய்மைகளாக்க
உலகத்திற்கு எடுத்துக்கூறி
உருவங்களை மறைப்பதை விட்டு
இனியாவது ஒரு விதிசெய்வோம்...

வீண்சோகங்களை மண்ணில் புதைத்து
பயன்தரும் சிறப்புகளை சிந்தித்து
தரணியில் விவேகங்களை விதைத்து
இனியாவது ஒரு விதிசெய்வோம்...

பாதையின் தடைகளை வீரமுடன்
கால்களுக்கு இடையூறின்றி விலக்கிவிட்டு
விந்தைகளை குறைத்து நோக்காமல்
இனியாவது ஒரு விதிசெய்வோம்...

பழையனவை தூக்கியெறிந்து நாம்
புதுமைகளை வாரிஅணைத்து
புவியின் ஈர்ப்புசக்கி அறிந்து
இனியாவது ஒரு விதிசெய்வோம்....

சுமைகள சுமப்பவர்களுக்கு
சுடுசோறு கொடுக்கவிட்டாலும்
சுமைகளை தாங்க கரமாவது கொடுத்து
இனியாவது ஒரு விதிசெய்வோம்...

புத்திஐpவிகளின் புகழ் பாடி
புரியாத புதிர்களுக்கு விடை தேடி
புதிய பாதையில் நடை போட்டு
இனியாவது ஒரு விதிசெய்வோம்....

ஆயுதம் வேண்டாம் அழிவு எமக்கு
அகிம்சையே போதும் என்றும் நமக்கு
அள்ளியெடுத்து முத்தமிட்டு
இனியாவது ஒரு விதிசெய்வோம்...

கிளியின் கிராமத்து நாயகன்
வவிதரன்

Read more...

மூன்று பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரலாக பதவியுயர்வு

விடுதலை புலிகளை யுத்த ரீதியாக தோற்கடிப்பதற்கு முக்கிய பங்குவகித்த பிரிகேடியர் பிரசன்ன டி சில்வா, பிரிகேடியர் சவேன்ற சில்வா, பிரிகேடியர் கலகே ஆகியோர் மேஜர் ஜெனரலாக பதவியுயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். அத்துடன் 46 கேணல்கள் பிரிகேடியர் தரத்திற்கு உயர்த்துப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Read more...

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர் சுட்டுக்கொலை.

பாதாள உலகைச் சேந்தவர் எனக் நேற்று மாளிகாவத்தைப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டவர் இன்று பேலியகொடப் பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணைகள் மேற்கொண்டபோது அவர் பேலியகொட பிரதேசத்தில் ஆயுதங்களை ஒழித்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவ் ஆயுதங்களை மீட்பதற்காக பொலிஸார் அவரை அங்கு அழைத்துச் சென்றபோது அவர் அங்கு மறைத்து வைத்திருந்த கிரனேட் ஒன்றை பொலிஸார் மீது வீச முற்பட்ட போது அவரை சுட்டுக்கொன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read more...

மட்டு-திருமலை ரயில் சேவை ஆரம்பம்

மட்டக்களப்பிற்கும் திருகோணமலைக்கும் இடையிலான 'ரயில்பஸ்' போக்குவரத்து சேவையினை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கும் விழா இன்று மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் இடம்பெற்றது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த போக்குவரத்து அமைச்சர் போக்குவரத்து டலஸ் அலகபெரும மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு இச்சேவை பிற்பகல் 4.30 ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்ததுடன் இச்சேவையை விரைவில் மட்டக்களப்பிலிருந்து கல்ஓயாவிற்கும் கல்ஓயாவிலிருந்து திருகோணமலைக்கும் விஸ்தரிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Read more...

இலங்கைநெற் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளது.

எமது இணையம் புலிக்கேணல் கருணாவின் அரசியல் பலத்தினால் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளது. தவறுகள் இடம்பெறும்போது சுட்டிக்காட்ட வேண்டிய கடமையை செய்தமைக்காக எமது இணையம் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதை நேயர்களுக்கான உங்களுக்கு வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளோம். மிக விரைவில் இலங்கை வாசகர்களுக்கு மறுக்ப்பட்ட உரிமை மீள அளிக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம்.

Read more...

Tuesday, July 28, 2009

புலிகளின் புலனாய்வுப் பிரிவு முக்கியஸ்தர் கொழும்பில் கைது

தற்கொலை அங்கி, பெருந்தொகை ஆயுதங்கள், வெடிபொருட்கள் மீட்பு

புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவுடன் தொடர்பு வைத்திருந்த முக்கியஸ்தர் ஒருவரை கொழும்பு, கொம்பனித்தெரு பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர நேற்றுத் தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இந்த நபர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் கொழும்பு கொட்டாஞ்சேனை பிரதேசத்திலிருந்து 10 கிலோ எடையுள்ள தற்கொலை அங்கி உட்பட பெருந் தொகையான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளின் புலனாய்வுத்துறை முக்கியஸ்தரான பாக்கியராசா பிரதீபன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளாரென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தகவல் தருகை யில்:-

பயங்கரவாதத் தடுப்பு பிரிவு பொலிஸாருக்குக் கிடை த்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து கொம்பனித் தெரு பிரதேசத்தில் வைத்து பாக்கியராசா பிரதீபன் கைது செய்ய ப்பட்டுள்ளார்.

இவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கொட்டாஞ்சேனை பிரதேசத்திலுள்ள வீட்டில் மறைத்து வைத்திருந்த தற்கொலை அங்கியொன்றும் மற்றும் வெடி மருந்துகளையும் மீட்டெடுத்துள்ளனர்.

10 கிலோ எடையுள்ள தற்கொலை அங்கி அதிசக்தி வாய்ந்த குண்டுகள் 04, 3 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த காந்தவெடி-01, பெருந்தொகையான வெடிக்க வைக்கும் கருவிகள், கைக்குண்டுகள்-19. சைலன்சர் ரக பிஸ்டல், பல்வேறு வகையான துப்பாக்கி ரவைகள், பற் றரிகள்-5 மற்றும் உபகரணங்களையே அந்த வீட்டிலிருந்து பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து பல்வேறு தகவல் களை பெற்றுக் கொண்டுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவி னர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக் காட்டினார்.

Read more...

'வயது வந்தவர்களுக்கு மட்டும்' தடை வருகின்றது.

இலங்கையில் "வயது வந்தவர்களுக்கு மட்டும்" என திரையிடப்படும் படங்கள் யாவையும் தடைசெய்ய அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக கலாச்சார அலுவல்கள் அமைச்சர் மஹிந்த யாப்பா அபயவர்த்தன தெரிவித்துள்ளளார். அத்துடன் படங்களில் ஆபாசக்காட்சிகளை உள்ளடக்கிக்கொள்கின்ற விடயங்கள் கடுமையாக பார்க்கப்படும் என்பதுடன் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளதாகவும் கூறினார்.

அதேபோல் தொலைக்காட்சிகள், சஞ்சிகைகள் மற்றும் செய்தித்தாள்களில் விளம்பரங்களின் நிமித்தம் சமூகத்திற்கு ஒவ்வாத படங்களை பிரசுரிப்பதை தடுக்குமுகமாகவும் சட்டத்தில் திருந்தங்கள் கொண்டுவரப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

இலங்கையில் இந்தியா இரு வர்த்தக வலயங்களை நிறுவுகின்றது.

இந்தியா இலங்கையில் வர்த்த வலயங்கைளை அமைக்கும் பொருட்டு அதற்கான காணிகளை இனம் கண்டுவருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. திருமலை மற்றும் கிளிநொச்சிப் பிரதேசங்களில் இவ்வலயங்களை அமைப்பதற்கு இலங்கை அரசு இந்தியாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளதுடன் திருமலையில் காணி இனம் கண்டு கொள்ளப்பட்டுள்ளதாகவும், கிளிநொச்சியில் அந்நிலப்பகுதியை சேர்ந்தெடுக்கும் பணியில் இந்திய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளாகவும் கூறப்படுகின்றது.

இந்தியாவிற்கான இலங்கைப் பிரதி தூதர் திரு.ஹம்சா அவர்கள், இந்தியா இவ்வலயத்தினூடாக விவசாயம், மீன்பிடி, உல்லாசத் துறை என்பவற்றில் ஈடுபடும் என தெரியவித்துள்ளார். அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம், 4200 பொருட்கள் சுங்கவரி இல்லாமல் இருநாடுகளுக்கிடையில் ஏற்றுமதி இறக்குமதி செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் இருநாடுகளுக்குமிடையில் ஏற்பாடாகியுள்ள கப்பல் சேவை இருநாடுகளுக்கும் இடையில் பொருளாதார தளர்ச்சியை ஏற்படுத்தும்.

Read more...

அனுதராதபுரம் விமானப்படைத் தாக்குதலின் கட்டளைத் தளபதி நீதிமன்றில் ஆஜர்.

எல்லாளன் நடவடிக்கை எனப் பெயரிட்டு அனுராதபுரம் விமானப்படைத் தளம் மீது புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் கட்டளைத் தளபதி இன்று(28 காலை) அனுராதபுரம் மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மன்றிற்கு தெரிவிக்கையில், சந்கே நபர் மேற்படி தாக்குதலுக்கான கட்டளைத் தளபதியாக செயற்பட்டுள்ளதுடன், தாக்குல் இடம்பெறும் போது தளத்திற்கு வெளியே நின்று தாக்குதலை ஆரம்பம் முதல் முடிவு வரை வீடியோ செய்து கொண்டு வன்னி சென்று அவற்றை புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் முக்கிய தளபதிகளுக்கு காண்பித்துள்ளார்.

இவ்வழக்கின் பிரதான சந்தேக நபரான றுபனின் தகவலின் பிரகாரம், 24 புலிகள் அதிநவீன ஆயுதங்கள், 8000 தோட்டாக்கள் சகிதம் வில்பத்து காட்டை ஊடடுத்து வந்து விமானப்படைத்தளத்தை அடைந்துள்ளனர். எங்களில் 21 பேர் தாக்குதலில் மரணமாக மூவர் தப்பிச் சென்றோம் என சந்தேக நபர் தெரிவித்துள்ளார். .

தப்பிச் சென்றவர்களில் பிரதான சந்கே நபரும் அடக்குகின்றார். இத்தாக்குதல் பிரதான சந்தேக நபரினாலேயே திட்டமிடப்பட்டுள்ளது.

தாக்குதலை திட்டமிட்டு வெற்றிகரமாக நாடாத்தி முடித்தமைக்காக பிரதான சந்தேச நபருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் லெப்.கேணல் பதவி வழங்கி பரிசில் பொருட்களையும் வழங்கியுள்ளார் என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மன்றிற்கு தெரிவித்தனர்.

Read more...

பண்டாரிக்குளத்தில் கொள்ளையில் ஈடுபட்ட ஈபிடிபி யினர் கைது.

வவுனினியா, பண்டாரிடிக்குளப் பிரதேசத்தில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் பிரதேச மக்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். இற்றைக்கு மூன்று தினங்களுக்கு முன்னர் மோட்டார் பைசிக்கிளில் வந்தவர்களால் அப்பிரதேசத்தில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக பொலிஸில் பதிவாகியிருந்துள்ளது.

அதே நேரம் நேற்று பிற்பகல் மேற்படி மோட்டார் சைக்கிள் பிரதேசத்தினுள் சுற்றித்திருந்தபோது மக்கள் பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கியதுடன், மக்களும் ஒன்று சேர்ந்து உசார் அடைந்துள்ளனர். பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து மோட்டார் கைக்கிளில் வந்தவர்களை கைது செய்ய முற்பட்டபோது ஒருவர் தம்பியோட, ஒருவர் பிடிபட்டுள்ளார். அவரிடமிருந்து கிரேனேட் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டள்ளதுடன், ஓடியவரது கைத்துப்பாக்கி கீழே விழுந்து கிடந்து மக்கள் அதை பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் வேலு யோகன, நிலையாமோட்டை பூவரசங்குளம் எனும் விலாசத்தை நேர்ந்தவர். இக்கொள்ளைக்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் HERO HONDA Mp GQ 0984 எனும் இலக்கம் கொண்டதாகும்

கைது செய்யப்பட்டுள்ள மேற்படி நபர் ஈபிடிபி அமைப்பைச் சேர்ந்தவர் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

Read more...

Monday, July 27, 2009

நோர்வே புலிப் பொறுப்பாளர் முகிலன் தப்பியோட்டம்.

புலிகளின் நோர்வேப் பொறுப்பாளர் முகிலன் நோர்வேயில் இருந்து தப்பியோடியுள்ளதாக தெரியவருகின்றது. இவர் நோர்வே பொலிஸாரினால் தான் அவதானிக்கப்படுவதாக உணர்ந்தே அங்கிருந்து தலைமறைவாகி சுவிடன் நாட்டின் கோத்தபேர்க் பகுதியில் வசித்து வருவதாக கூறப்படுகின்றது. இவரது மனைவி பிள்ளைகள் வன்னியில் கடந்த மே மாதம் 18 ம் திகதி வெளியேறி இடைத்தங்கல் முகாம் ஒன்றில் தங்கியுள்ளனர்.

Read more...

என் கருத்து எனக்கு, உங்களது உங்களுக்கு. நீர்வேலி

நான் விரும்புவதை மற்றவர்களும் விரும்ப வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை. நான் நினைப்பதைப் போலவே மற்றவர்களும் நினைக்க வேண்டியதுமில்லை. என்னுடைய விருப்பு பலருக்கு வெறுப்பாகலாம். நான் வெறுப்பதை பலர் விரும்பலாம். இவை மனித இயற்கை. என் எண்ணங்களை இங்கே வைத்திருக்கிறேன். என்னைப் போன்றே எண்ணமுள்ளவர்களைக் காணும் போது மனது மகிழ்வதும் இயல்புதானே. நேரெதிரான எண்ணமுள்ளவர்களை சந்திக்கும்போது - தவறான கொள்கையில் (என் பார்வையில்) இவ்வளவு பிடிவாதமாக இருப்பதற்காக வருத்தப் படுவேன் - ஆனால் அவர்களை வெறுப்பதில்லை. இயன்றால் அவர்களுக்காக பிரார்த்திப்பேன். அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். என் கருத்து எனக்கு, உங்களது உங்களுக்கு. என் கருத்தை விடவும் சிறப்பான கருத்துகள் யாரிடமிருந்தாவது வந்தால், அதன் உண்மைகளை யோசிக்க நான் தயங்க மாட்டேன்.

நீ இல்லை என்றால் நான் இல்ல என்பது காதல்....
யார் இல்லை என்றாலும் நான் இருப்பேன் என்பது நட்பு...
இதை தான் நான் கற்று கொண்டேன்...
எனது பழய நட்பில்..........
***********


ஒரு உயிரை நீ நேசிப்பது நிஜமென்றால் அதை பறவை போல் பறக்கவிடு..
அது உன்னை நேசிப்பது நிஜமென்றால் மீண்டும் உன்னை தேடிவரும்..

Read more...

கருணாவின் சுவிஸ் சுற்றுலா ரத்து.

சிறிலங்கா அரசின் தற்போதைய அமைச்சரும் முன்னாள் புலிக்கேணலுமாகிய விநாயக்கமூர்த்தி முரலிதரன் தனது பரிவாரங்களுடன் சுவிஸ் சுற்றுலா மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தநிலையில் இப்பயணத்திற்கான சுவிற்சர்லாந்து வீசா மறுக்கப்பட்டுள்ளதாக கருணாவின் நெருங்கிய சகாக்களில் ஒருவர் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.

மேற்படி சுற்றுப்பயணத்திற்கான வீசா மறுக்கப்பட்டமை சுவிற்சர்லாந்து நாடு எவ்வாறு மனித உரிமைகளை, மக்களின் மனஉணர்வுகளை மதிக்கின்றது எனும் விடயத்தில் மேலும் நம்பகத்தன்மையை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் பேசிக்கொள்கின்றனர்.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் அகதி முகாம்களில் சொல்லொணாத் துயரங்களை சந்தித்து நிற்கும் நிலையில், கருணா குழுவின் பயணம் தொடர்பாக ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள் மிகவும் ஆத்திரமடைந்திருந்ததாக அங்கு வாழும் மக்களுடாக அறிய முடிந்துள்ளது.

கருணாவின் பயண இரத்து விடயம் அரசிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கருணா கட்சி உறுப்பினர்களின் சம்பளப்பணத்தை சுருட்டிக்கொண்டு சுவிற்சர்லாந்து சுற்றுலா செல்கின்றார் எனவும் இப்பயணத்திற்கான முழுச்செலவு கருணாவினுடையது எனவும் செய்திகள் வெளியாகியிருந்தபோது, அச்செய்தியை முறியடிப்பதற்காக கருணாவின் ஆட்களால் இயக்கப்படும் இணையங்களில் கருணாவின் சுற்றுப்பயணம் அரசின் முழு அனுசரணையுடன் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அரசின் அனுசரணையில் இடம்பெறும் இராஜதந்திரிகளுக்கான பயணமொன்றிற்கு எந்த நாடும் மறுப்பு தெரிவிப்பதில்லை என்பது யாவரும் அறிந்த விடயம். எது எவ்வாறாயின் அரசின் அனுசரணையில் கருணாவின் பயணம் ஏற்பாடாகியிருந்தால், அரசின் சிபார்சிற்கும் அப்பால் அக்குழுவிற்கான விசா மறுக்கப்பட்டிருக்கின்றதாயின் கருணா இவ் உலத்தினால் ஏவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளார் என்பதை ஊகித்துக்கொள்வதற்கு விசேட அளவு மானிகள் எதுவும் தேவையில்லை.

அத்துடன் கருணா பயணம் செல்லும் போது தனது குழுவுடன் மூவைரை அழைத்துச் சென்று அவர்களை லண்டன் அனுப்ப திட்டமிட்டிருந்தாகவும், அதற்காக அவர்கள் ஒவ்வொருவரிடமும் தலா 35 லட்சங்கள் பெறப்பட்டிருந்தாகவும் தெரியவருவதுடன் அவர்கள் தற்போது தமது கடவுச்சீட்டுக்களையும் தாம் வழங்கிய முற்பணத்தையும் கேட்டு அலைந்து திரிவதாகவும் கதைகள் உலாவுகின்றன.

மேற்படி சுற்றுப்பயணத்திற்கு அனுசரணை (ஸ்பொன்சர்) வழங்கிய கருணாவின் சுவிற்சர்லாந்து பிரதிநிதி அவர்களுக்கான விசா இன்னும் 15 நாட்களில் கிடைக்கப்பெறும் என தெரிவித்துவருவதாகவும் கூறப்படுகின்றது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com