Saturday, July 25, 2009

50 கோடி ரூபா பெறுமதியான மருந்து பொட்களை அழிக்க நேரிட்டுள்ளது.

இரத்தமலானையில் உள்ள அரச மருந்தக களஞ்சியத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள 14 கொள்கலன் தரக்குறைவானதும், காலாவதியாகும் நிலையில் உள்ளதுமான மருந்துப்பொருட்கள் அழித்தொழிக்கப்பட உள்ளதாக தெரியவருகின்றது.

50 லட்சம் பெறுமதியான இம்மருத்துப் பொருட்களை இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள மிதமிஞ்சிய தரகு வேலைகளால், தரக்குறைவான இம் மருந்துப்பொருட்களை வினியோகித்த நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத நிலை தோன்றியுள்ளதாக அகில இலங்கை சுகாதார சேவைகள் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் திரு. காமினி குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

ஓப்பந்தத்தின் அடிப்படையில் காலாவதியாகும் அல்லது பழுதடையும் மருந்துப்பொருட்களுக்கு நஸ்டஈடோ அன்றில் மீழ் நிரப்பலோ பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் சுகாதார அமைச்சு இழப்பீட்டை பாரமெடுத்துக்கொள்ள நேரிட்டுள்ளது. அதேநேரம் இந்நிலைமையால் அரச வைத்தியசாலையில் மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

12 ஆபாச இணையத்தளங்களை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு.

இலங்கையில் இருந்து செயற்படும் 12 ஆபாச இணையத்தளைங்களை இடைநிறுத்துமாறு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதவான் நிஸாந்த கப்பு ஆராச்சி இலங்கை தொலைதொடர்பு திணைக்களத்தின் இயக்குனர் நாயகத்திற்கு ஆணையிட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுப் பிரினர் இது தொடர்பாக நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன், இவ் இணையங்களில் இலங்கைப் பெண்கள் மற்றும் குழந்தைகளது அபாசப்படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் அவை சமூகசீரழிவுக்கு வழிவகுப்பதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன் இவ்வாறான இணையங்களை நிர்வகிப்பது இலங்கை குற்றவியல் கோவையின் இலக்கம் : 1983 இன் 22 பிரிவின் கீழ் கிறிமினல் குற்றமாகும் எனவும் தெரியப்படுத்தினர்.

இது தொடர்பாக இணையத்தள உரிமையாளர்கள் பதிலளிப்பதற்கு எதிர்வரும் மாதம் 7ம் திகதி வரை கால அவகாசம் வழங்குமாறு தெரிவித்த மஜிஸ்திரேட் அவ்வாறு அவர்கள் செய்யாக பட்சத்தில் நிரந்தரமாக நிறுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.

Read more...

பேருவல பிரதேசத்தில் முஸ்லிம் பள்ளிவாசலுக்கு தீமூட்டப்பட்டுள்ளது. இருவர் பலி.

பேருவல பிரதேச்தில் உள்ள இரு முஸ்லிம் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவத்தின் போது பள்ளிவாசல் ஒன்று தீமூட்டப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைக்கும் படையினர் தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.

மோதலுக்கான காரணம் சரியாக வெளிவரவில்லை. முழுமையான விபரங்கள் சற்று நேரத்தில் வெளியிடப்படும்

Read more...

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்பு. காமுகன் அடித்துக்கொலை.

மத்திய முகாம் பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது மாணவி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்து கொலை செய்த நபரை பிரதேச மக்கள் அடித்துக்கொலை செய்துள்ளனர். மாணவியை கொலைசெய்து அவரது உடல்மீது பாறாங்கல் ஒன்றை ஏற்றி வைத்துவிட்டு தலைமறைவாகியிருந்த மேற்படி நபர் அப்பிரதேச்தில் இருந்து தப்பிச் செல்வதற்காக முயற்சித்தபோது பிரசேத்தில் உள்ள தமிழ்-சிங்கள மக்களால் இனங்காணப்பட்டு அவ்விடத்திலேயே அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கொலை செய்யப்பட்டிருந்த மாணவி மோகன் மதுனிஸ்காவின் இறுதி நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான தமிழ்-சிங்கள மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Read more...

Friday, July 24, 2009

லசந்த கொலைச்சந்தேக நபருக்கான விளக்க மறியல் தொடர்கின்றது.

லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்து கொலைசெய்யப்பட்ட லசந்த விக்ரமதுங்கவின் கையடக்க தொலைபேசியை வைத்திருந்ததாக கைதுசெய்யப்பட்டுள்ள நபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்கிசை நீதிமன்றில் லசந்த கொலைவழக்கு விசாரணைக்கு வந்தபோது லசந்தவின் உரிமைகள் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள், பொலிஸார் வழக்கு விசாரணையில் ஆர்வம் காட்டவில்லை என தெரிவித்ததுடன், விசாரணையை பிறிதொரு பொலிஸ் பிரிவினரிடம் கையளிக்குமாறும் வேண்டியிருந்தனர்.

விடயங்களை நன்கு செவிமடுத்த நீதிபதி விசாரணைகளை துரிதப்படுத்தி மன்றிற்கு விடயங்களை தெரியப்படுத்தும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

Read more...

கருணாவின் ஆடக்களின் எல்லை கடந்த அத்துமீறல் : ஊடகவியலாளருக்கு மிரட்டல்.

அண்மையில் சேவாலங்கா எனும் அரசசார்பற்ற நிறுவனத்தினால் மக்களுக்காக வழங்கப்பட்ட இரு கூலர்வண்டிகள் தொடர்பான செய்தியொன்று இணையத்தளங்களில் வெளியானதை தொடர்ந்து அச்செய்தியை வெளியிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கருணா தரப்பினர் ஊடகவியலாளர் ஒருத்தருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர்.

ஊடக சுதந்திரத்தினை அனைத்து மக்களும் தங்கு தடையின்றி சுதந்திரமாக அனுபவிக்கக்கூடிய சுவிற்சர்லாந்து நாட்டில் வசிக்கும் குறிப்பிட்ட ஊடகவியலாளரை அமைச்சர் முரலிதரனின் ஊடகச்செயலாளர் எனப்படும் யூலியன் என்பவர் 0094777869767 எனும் தொலைபேசி இலக்கத்தில் இருந்து தொடர்பு கொண்டு விடுத்திருக்கும் அச்சுறுத்தலின் ஒரு தொகுதி பிரசுரமாகியுள்ளது.

கடந்த 30 வருடகாலம் இலங்கைத் தீவை பயங்கரவாதம் ஆட்கொண்டிருந்தபோது இருந்திராக ஊடக அச்சுறுத்தல் இன்று கருணாவின் ஆட்களால் அரங்கேற்றப்பட்டு வருவதுடன் அந்த ஜனநாயக விரோதச் செயலானது இன்று நாடுகடந்தும் அரங்கேற்றப்பட்டுவருகின்றது.

சமுதாயத்தில் தவறொன்று நடக்கின்றபோது சுட்டிக்காட்டத் தவறுகின்ற ஊடகவியலாளன், ஊடக தர்மத்திற்கு சாவு மணி அடித்தவனாக கருதப்படுவான். ஆனால் ஊடக சுதந்திரம் எனும்பெயரால் ஊடகவியலாளன் ஒருவன் தவறான செய்திகளை பரப்புவானாயின்,, குறிப்பிட்ட செய்தி தொடர்பான தமது தரப்பு நியாகங்களை கருத்துக்களால் எதிர்கொள்வதை விடுத்து ஊடகவியலாளர்களின் குரல்வளையை அடாவடித்தனங்களால் நசுக்க முயற்சிப்பது ஜனநாயக நாடொன்றின் நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும்.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தலானது முடிவுக்கு வரவேண்டும் என்பதற்காகவும் நாட்டில் தான்தோன்றித்தனமாக குட்டிப் பஞ்சாயம் நாடத்துவோரது அடாவடித்தனங்கள் அரசினதும் மற்றும் அனைவரினதும் காதுகளில் ஒலிக்கவேண்டும் என்பதற்காகவும் இவ்விடயம் அம்பலத்திற்கு வருகின்றது.

ஒலிப்பதிவில் உள்ள தகாத வார்த்தை பிரயோகங்களையும் பொருட்படுத்தாமல் இவற்றை பிரசுரித்ததற்கான காரணம் வன்செயல்கள் ஒழிக்கப்படவேண்டும் என்பதாகும்.

ஒலிப்பதிவைக் கேட்க

Read more...

ஐ.தே.க எம்பி ஒருவர் கட்சியில் இருந்து விலகுவதாக எச்சரிக்கை.

ஐக்கிய தேசியக் கட்சி எனைய கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து முன்னணி ஒன்றை அமைக்கும் போது கட்சியின் யானைச்சின்ன விடயத்தில் விட்டுக்கொடுப்புச் செய்தால் தான் அரசியலில் இருந்து இராஜினிமா செய்து கொள்ளப்போவதாக பதுளை மாவட்ட ஐ.தே.கட்சி பாரளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனவிரத்தன தெரிவித்துள்ளார்.

Read more...

Thursday, July 23, 2009

உடத்தலவின்ன கொலை வழக்கின் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்டிருந்தோர் விடுதலை.

உடத்தலவின்னவில் 10 முஸ்லிம்கள் சுட்டுக்கொல்லப்பட்ட கொலைவழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தோர் இன்று உச்ச நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் திகதி தேர்தல் முடிவன்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் குற்றவாளிகள் என கொழும்பு நீதிமன்றினால் தண்டனை வழங்கப்பட்டிருந்த இராணுவ வீரர்கள் ஐவரும் மேல் முறையீட்டு நீதிமன்றில் செய்த முறையீட்டை அடுத்து, பிரதம நீதிபதி தலைமையில் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு அவர்களை நிரபராதிகள் என விடுதலை செய்துள்ளது.

இவ்வழக்கின் குற்றவாளிகள் மீதான குற்றங்களை நிருபிப்பதற்கான சாட்சியங்கள் சந்தேசங்களுக்கு அப்பால் நிருபிக்கப்படவில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவர்கள் முன்னாள் பாதுகப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த அவர்களின் பாதுகாவலர்களாகும்.

Read more...

புலி மாஸ்டர்களான தயா, ஜோர்ச் தொடர்ந்தும் தடுத்துவைப்பு

முன்னால் விடுதலை புலிகள் இயக்க ஊடக ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர், மற்றும் அவ்வியக்கத்தின் மொழிபெயர்பாளர் ஜோர்ச் மாஸ்டர் அகியோர் மீதான விசானைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக குற்றப்புலானய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு தெரிவித்ததையடுத்து அவ்விருவரையும் தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Read more...

இரு மாணவிகள் தற்கொலை முயற்சி.

கொழும்பு பிரபல பாடசாலை ஒன்றில் 9ம் தரம் படிக்கும் இரு மாணவிகள் நேற்று தற்கொலை செய்து கொள்ள முயற்சித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, பாடசாலை மாணவிகள் நான்கு பேர் கையடக்க தொலைபேசிகளை வைத்திருந்தமை மாணவத் தலைவியால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் அறிந்த அதிபர் அவ் நால்வரையும் தமது காரியாலயத்திற்கு அழைத்தபோது சிறு இடைவெளி ஒன்றை எடுத்துக்கொண்டு மலசல கூடத்திற்கு சென்ற மாணவி 20 நிமிடங்களுக்கு மேலாக திரும்பாமையையிட்டு அப்பகுதிக்கு சென்ற பாடசாலைக் காவலாளி அம்மாணவி அங்கு தனது கழுத்தில் சுருக்கிட்டு தொங்கிகொண்டிருப்பதை கண்டுள்ளார்.

மேலுமொரு மாணவி அவ்வாறு சிற்றுண்டிச்சாலைக்குச் சென்று அங்கிருந்த போத்தல் ஒன்றை எடுத்து தனக்குதானே குத்தி காயப்படத்திக் கொண்டுள்ளார். அவ்விருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read more...

மதங்களுக்கு சேறு பூச முற்பட வேண்டாம். (புரட்சிதாசன் அஹமட்)

ஒரு மனிதனின் தனியாதிக்கம் அவன் அவன் மதங்களின் பின்னால் வழி நடப்பதாகும். இன்று உலகத்தில் மதத்தின் பால் சுதந்திரம் எல்லா சமூகத்திற்கும் உண்டு. இதில் யாரும் குறுக்கறுககவோ, தடைகள் ஏற்படுத்தவோ முடியாத விடயம். தனக்கு எது சாதகமாகத் தென்படுகிறதோ அதனைப் பினபற்றும் உரிமை எல்லோருக்கும் உண்டு. எனினும் இன்று பல கோணங்களில் இஸ்லாம் மதத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையிலும் கேடு விளைவிக்கும் வகையிலும், பிழையான வகையில் செய்திகள் பிரசுரிக்கும் வகையிலும், இழிவு படுத்தும் வகையிலும் பல இயக்கங்களும், பல சமூகத்தினர்களும் ஏன் தன்னிச்சையாகவும் செயற்படுகின்றனர்.

ஆனால் இஸ்லாமியர்கள் எந்த வகையிலும் எந்த சமூகத்தினருக்கும் ஊறு விளைவிக்க முனைவது இல்லை, மாறாக எல்லோருக்கும் உதவி புரியும் வகையிலேயே தனது காரியங்களை வழி நடாத்துகின்றனர் என்பது தெளிவான விடயமாகும்.

இன்று உலகில் முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதி என்றுதான் பொருள்படுகிறது. காரணம் அமெரிக்க ஏகாதிபத்தியம் வழங்கிய சிறப்பப் பெயராச்சே அதனால்தான் இது நீடிய ஆயுளைக் கொண்டுள்ளது. இன்று அமெரிக்கர்கள் தாடி வைக்க முடியாது தாடி வைத்தால் தீவிரவாதி, பயங்கரவாதி என்று பொருள். தாடியின் மகத்துவத்தைப் புரியாதவர்களுக்கு தாடியைப் பற்றி என்ன புரியப்போகிறது?

தாடியைப்பற்றி புனித இஸ்லாம் கூறுகிறது: என்னவென்றால் முகம் முழுவதும் நிறைந்து தாடி வைப்பது சுன்னத்தாகும். இந்த வகையில் தாடியை வைத்தால் முகம் பாதுகாப்படுகிறது. மடடுமன்றி ஜந்து நேரமும் இறைவனை வணங்க முற்படும் போது முகத்தினையும் கை கால்களையும் தண்ணீரால் சுத்தம் செய்ய சேண்டும். இவ்வாறு செய்யும் போது முகத்திலுள்ள தாடியில் தண்ணீர் தேங்கி நிற்கும், அது முகத்திற்கு குளிரூட்டிபோல் செயற்படுவது மட்டுமல்லாது தொண்டை சம்மந்தமான சகல விதமான நோய்களையும் வராமல் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இது விஞ்ஞான ரீதியான உண்மையாகும். இப்பொழுது புரிகிறதா தாடி ஏன் வைக்கப்படுகிறது என்பது. இவ்வாறான நல்ல விடயத்திற்காகவே இஸ்லாம் தாடியை அவசியமாக்கியிருக்கிறது.

இன்று தாடியை எல்லா சமூகங்களும் வைக்கின்றனர். ஆனால் எங்களுக்கு வழிகாட்டியான முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரமே நாங்கள் இதனை அமுல் படுத்துகிறோம். எல்வோரும் தாடி வைக்கின்றனர் ஏன் இஸ்லாமியர்களின் தாடிக்கு மட்டும் பயப்படுகின்றனர் என்பதுதான் புரியாத புதிராக இருக்கின்றது. அண்மையில் இலங்கையிளுள்ள ஒரு மலை நாட்டு தமிழ் பாடசாலையில் (பதுளை) ஒரு முஸ்லிம் ஆசிரியருக்கு புதுமையான ஒரு அனுபவம் ஏற்பட்டுள்ளது. அதாவது தாடியை எடுக்க வேண்டும் , வெள்ளிக்கிழமை ஜூம்மாவுக்குப் போகக் கூடாது என்றும் அந்தப்படசாலையின் அதிபரினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாவம் அந்த அதிபர் இலங்கையின் கல்விச்சட்டத்தில் வெள்ளிக்கிழமை முஸ்லிம் ஆசிரியர்கள் ஜூம்ஆவுக்குச் செல்வதற்காக அனுமதிக்கப்பட்டுள்ள விடயத்தையும் தாடி வைக்க முடியும் என்ற விடயத்தையும் அறியாதவர் என்று நினைக்கின்றேன்.

இதே போன்றுதான் தாளங்குடாவில் உள்ள கல்வியல் கல்லூரியில் பெண்களுக்கான ராக்கிங் வதை தமிழ் இனத்து சகோதர சகோதரிகளால் முஸ்லிம் இனத்து சகோதர சகோதரிகளுக்கு சில வாரங்களுக்கு முன்னர் இடம் பெற்றுளளது. அதாவது முஸ்லிம் சகோதரிகள் ஹிஜாப் (ஸ்காப்) பைக் களற்ற வேண்டும் என்று ஒரே பிடியாய்ப் பிடித்துள்ளார்கள். இதற்கு மறுப்புரை தெரிவித்தவர்களுக்கு சார மாறியாகவும் கண் மூடித்தனமாகவும் தாக்கியுள்ளார்கள். கேவலம் கல்வியைக் கற்று இளம் சமூதாயத்தினருக்கு அதனை மீளவும் வழங்க முற்படுகின்ற இந்த இளம் கமுதாயம் அடாவடித்தனத்திற்கும், அநாகரீகத்திற்கும் போரம் போய் விட்டதனை எண்ணி வெட்கப்பட வேண்டிய அவல நிலையில் இந்த மாணவ சமுதாயம் காணப்படுகிறது.

ராக்கிங் எனும் கேவலமான ஒரு நடைமுறையினை உயர்கல்வி நிறுவணங்களில் நடைமுறைப்படுத்தி வருகின்ற இந்த அறிவிலி மாணவர்கள் ஏனைய மதங்களிலும் தனது அத்துமீறல்களையும், அடாவடித்தனங்களையும் மேற் கொண்டு வருகின்றமை மன்னிக்க முடியாத ஒரு அபாண்டமான குற்றமாகும். இது வரையிலும் இஸ்லயமிய மாணவர்கள் ஏனைய இன மாணவர்களின் மதத்தில் ஊடுருவிய வரலாறு மிகவும் அரிது. இருந்தாலும் ஏனைய மதத்வர்கள் இஸ்லயமிய மதத்தில் அத்து மீறிய வரலாறே மிகவும் அதிகமானதாகும். இவ்வாறான சந்தர்ப்பங்கள் மீளவும் எழாமல் பாதுகாப்பது எல்லா மதத்தவர்களதும் கடமையாகும்.

மனித குலம் ஒரு கௌரவமானது, அதற்கு மானமுள்ளது என்பது எல்லோரும் அறிந்த விடயம். ஆனால் அதனை நடை முறைப்படுத்தலில்தான் சிக்கல்கள் காணப்படுகிறன. அண்மையில இடம பெற்ற அகோர யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் சகோதர சகோதிரிகளுக்கு முதன் முதலாக சமைத்த உணவு வழங்கி பசியாற்றிய மாபெரும் பெருமை இந்த காத்தான்குடி முஸ்லிம் மக்களையே சாரும் என்பதனை யாரும் மறந்து விட முடியாது.

இஸ்லாம் கூறுகிறது: பக்கத்து வீட்டார் பசித்திருக்க தாம் புசிக்கக்கூடாது என்று மறுதலை அளித்திருக்கிறது. இதனால்தான் எமது சகோதர இனம் பசியில். பட்டினியில் இருக்கக் கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காகவே அவர்கள் அதனை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் வழங்கினர். ஆனால் 1990 களில்யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு போன்ற இடங்களிலிருந்து நிபந்தனையுடம் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் சமூகத்திற்கு இந்தச் சகோதர இனத்தினர் எந்த உதவியையும் செய்ய முற்படவில்லை. ஒரு எதிர்ப்பு அறிக்கை கூட விட முற்படவில்லை. இவையெல்லாம் அழியாத வடுவும், வரலாறுமாக பதியப்பட்டுப்போனது.

இனங்கள் ஐக்கியமாகவும் , ஒற்றுமையாகவும் வாழ புரிந்துணர்வும் நம்பிக்ககையும் அவசியமாகும். ஒரு மனிதன் ஆபத்திலிருக்கும் போது அவனுக்கு உதவி புரிய வேண்டும். அவன் எந்த இனமாகவோ, மதமாகவோ இருக்கலாம். இதுதான் மனித தர்மமும் நேயமுமாகும். மாறாக அவன் எமது இனமும் அல்ல அல்லது எமது மதமுமல்ல என்ற நோக்கத்திற்காக அவனைக்காப்பாற்றாமல் விடுவது மனித குலத்திற்கே அவன் சாபக்கேடு. இதுதான் இஸ்லாம் கூறுகிறது. மனிதனை மதத்தால் வேறுபடுத்துவது சிறந்ததல்ல. மதம் ஒருவனுக்கு வழிகாட்டியே தவிர அது கொலை காட்டியல்ல என்பதை மறந்து விடக்கூடாது.

இனங்களை ஐக்கியப்படுத்துவதற்கு மதங்கள் பங்களிக்க வேண்டும். மாறாக ஐயப்படுவதற்கு நாம் ஒர நாளும் சோரம் போகக் கூடாது. மொழயால ஒற்றிப்போன தமிழ் முஸ்லிம் மக்கள் மதத்தினால் மட்டுமே வேறுபடுகின்றனர். எனவே, மதங்களுக்கு ஊறு விளைவிக்க முனைய இரு தரப்பார்களும் முற்படாமல் தற்பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோமயின் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கக வேண்டிய தேவையும் அவசியமும் ஏற்படாது என்பது திண்ணம். அவரவர் மதத்திற்கு மதிப்பும், மரியாதையும் கொடுப்பது மட்டுமல்லாமல் அடுத்தவர் மத்திற்கும் உரிய மதிப்பும் மரியாதையும் கொடுப்பது இன்றியமையாததாகும். இவ்வாறான பண்புகள் சிறப்பாகப்பேணப்படும் போது பாரிய பிரச்சினைகளிலிருந்து எம்மை இலகுவில் விடுவித்துக் கொள்ள வழிகோலலாம்.

மனித குலத்தின் மதம் ஒரு சிறந்த முற்போக்குச் சிந்தையுடைய நல்வழிப் பதைகளுக்கு மட்டுமே பாவனைப் படுத்த வேண்டும். மாறாக மனித குலத்தையே குழைப்பதற்கு ஒரு காலமும் இதனைப் பயன்படுத்தலாகாது. மதத்தால் நாம் தமிழர், முஸ்லிம்கள் எனறு வேறுபட்டாலும் மொழயால் நாம் ஒன்று பட்டுள்ளோம். எனவே, இனிமேலாவது நாம் எமது மதத்தின் மேல் அன்பும், நம்பிக்கையும் வைத்திருப்பது போல் தமிழர், முஸ்லிம் என்ற உறவிலும் பிரியம் வைப்போமாக.


Read more...

நாமல் ராஜபக்ச இடைத்தங்கல் முகாம்களில் தாக்கப்படவில்லை. ஊடக அமைச்சர்.

ஜனாதிபதியின் புதல்வன் நாமல் ராஜபக்ச வவுனியா இடைத்தங்கல் முகாமிற்கு சென்றிருந்தபோது மக்களால் தாக்கப்பட்டிருந்தார் என ஊடகங்களில் வெளியான செய்தியை இலங்கை அரசு மறுத்திருக்கின்றது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா அங்கு பிரசுரிக்கப்பட்டிருந்த புகைப்படம் இணையத்தளம் ஒன்றில் முன்னர் பிரசுரிக்கப்பட்டிருந்த பாடமாகும் என தெரிவித்துள்ளதுடன், அப்புகைப்படத்தில் சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன என்றார்.

Read more...

காலி பிரதேச சபையின் எதிர்கட்சி தலைவர் தனது குழந்தைகள் முன் சுட்டுக்கொலை.

காலி பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவரும், எதிர்வரும் தென்மாகாண சபைக்கான தேர்தலில் ஐ.தே.கட்சியின் பிரதான வேட்பாளராக நிற்க இருந்தவருமான திரு. துஸ்யந்த செனவிரட்ண இந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்டவர் தனது இரண்டு குழந்தைகளை பாடசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் பெலிஹாக எனுமிடத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் தனது பிள்ளைகளுக்கு காலை உணவு வாங்குவதற்காக வாகனத்தில் இருந்து இறங்கிச் சென்றபோது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆயுததாரிகள் அவர் மீது சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர்.

ஏழு குண்டுகள் பாய்ந்த நிலையில் அவ்விடத்திலேயே இறந்த திரு. சேனவிரத்தின கடந்த 1997 ம் ஆண்டு முதல் காலி உள்ளுராட்சி மன்றத்திற்கு மக்களால் தொடர்ச்சியாக தெரிவு செய்யப்பட்டு வந்துள்ளார். இவர் அவ்பிரதேசத்தில் உள்ள ஓர் வர்த்தகர் ஆகும்.

Read more...

கருணாவிற்கு கெடு! ஒரு மாதகாலத்திற்குள் திருந்த மறுத்தால், சகல ஊழல்களும் அம்பலப்படுத்தப்படும் என்கிறார் கருணாவின் மனைவி.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து, தனது சொந்தக் சுயலாபங்களுக்காக அவ்வியக்கத்தில் இருந்து வெளியேறி, இன்று தமிழ் மக்களின் பெயரால் அரசாங்கத்திடம் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்டுள்ள, கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் திருந்துவதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்குவதாகவும், அவ்வாறு திருந்த மறுத்தால், அவரது சகல ஊழல்களையும் மக்களுக்கு அம்பலப்படுத்த பின்நிற்கப் போவதில்லை எனவும் கருணாவின் மனைவி தெரிவித்துள்ளார்.

தனது சுயலாப நோக்கங்களுக்காக அரசாங்கத்தின் வளங்களை தவறாக பயன்படுத்தும் கருணாவின் செயற்பாடுகள் மேலுமோர் பிரிவினைவாதத்திற்கு தூபமிடலாம் என தெரிவித்துள்ள கருணாவின் மனைவி, கருணா தற்போது தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

கருணாவின் மனைவியும் மூன்று குழந்தைகளும் சில வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் வசித்து வந்தனர்.

தற்போது ஸ்கொட்லாந்தில் வசித்து வருகின்றனர்.

ஊடக தர்மத்தின் அடிப்படையில் அவரது மனைவி வழங்கிய நான்கு மணி நேர செவ்வியையும் பிரசூரிக்க முடியாது என பிரபல ஆங்கில இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் மக்களின் தலைவராக கருணா எவ்வாறு மாறினார் என்ற அடிப்படையை அடியோடு மறந்து விட்டார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

குடும்ப விவகாரங்களைக் கூட கதைக்க முடியாத அளவிற்கு அவர் குழப்பமான சூழ்நிலையில் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

கருணாவின் மனைவி தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவின் சிரேஸ்ட உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

Wednesday, July 22, 2009

கல்லூரி அதிபர்கள் திருந்துவார்களா? ஐ. பத்தாக்

கிழக்கு மாகாணத்தில், மட்டக்கிளப்பு, தாளங்குடாவில் கல்விக்கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இது தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பிரதேசம். இதில் முஸ்லிம் மாணவர்களும் உள்ளனர். அண்மையில் இங்கே பகிடிவதை (றாக்கிங்) என்ற பெயரில் கல்லூரிக்கு புதிதாக வந்த முஸ்லிம் மாணவிகளின் ஸ்காபை (முஸிலிம் பெண்கள் தலையில் அணியும் சீலை) கழற்றி பகிடி பண்ணி உள்ளார்கள். (அது முஸ்லிம்களின் மானம்) இதனால் முஸ்லிம்இ தமிழ் மாணவர்களுக்கிடையில் சண்டை ஏற்பட்டு இறுதியில் மருதமுனைக் கிராமத்தைச் சேர்ந்த மாணவரொருவர் தமிழ் மாணவர்களால் மிகக்கடுமையாகத் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது சம்மந்தமாகக் கலந்தாலோசித்து இப்பிரச்சினைக்கு ஒரு முடிவைக்காண மட்டக்கிளப்பு 'அனைத்துப் பள்ளிவாசல்கள் சபை' கல்லூரியின் அதிபர் பாக்கியராஜாவை சந்தித்துப் பேச விரும்பி இருந்தது. அவரின் பதில் ஆச்சரியமாக இருந்தது 'அங்கே ஒன்றும் நடக்கவில்லை, என்று கூறி முழுப் பூசணிக்காயை சோற்றில் புதைத்து உங்களை சந்திக்க எனக்கு நேரமில்லை என்று கூறி மறுத்து விட்டார். பிரச்சினைக்கு முகம் கொடுக்க முடியாத, தெரியாத, ஆளுமையற்ற இந்த அதிபர் வளமையாக இப்படித்தான் பேசி சமாளித்து வருகிறார் என்று அங்குள்ள மாணவர்கள் கூறுகின்றனர்.

இங்கே படிக்கும் முஸ்லிம் மாணவிகள்இ தங்களுக்கு ஸ்காப் அணிய அனுமதி வேண்டி கல்லூவியின் பி(ரி)ன்சிப்பல்லுக்கு எழுத்து மூலம் அனுமதி கோரி இருக்கின்றார்கள். இதில் இருபதுக்கும் மேற்பட்ட பிரதிகளை முஸ்லிம் அமைச்சர்களுக்கும், இஸ்லாமிய அமைப்புக்களுக்கும் அனுப்பியிருக்கின்றார்கள், அதில் அவர்கள் இந்த விடயம் எங்களின் அடிப்படை உரிமை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்கள். ஆனால் எந்த மேதைகளும், நிர்வாகத்தில் இருப்பவரும் இதைக் கவனத்தில் கொள்ள வில்லை. இம்மாணவிகள் நிலத்தையோ, வளத்தையோ, நாட்டையோ, தேசத்தையோ கேட்கவில்லை. பாவம் தனக்குச் சொந்தமான தலையில் ஒரு துண்டு துணியைத்தானே போடக் கேட்கிறார்கள்.

ஒரு நல்ல எழுத்தாளர், பொது நோக்கம் கொண்டவர், பிரச்சினையைத்தீர்க்க வேண்டும். இன முரண்பாட்டை முளையிலேயே கிள்ளி வீச வேண்டும் என்ற நல் நோக்குடனும் இது விடயமாக அமைச்சர் முரளிதரனின் பேச்சாளர் எம்.பி. ஜிவியன் அவர்களிடம் பேசிய போது அவர்: முஸ்லிம் மாணவிகள் ஸ்காப் அணிய அனுமதிக்கப்படமாட்டார்கள், அவர்கள், இக்கல்லூரி அவர்களுடையது என்று காட்டவே இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்று சொன்னாராம். பாருங்கள் இவருடைய மன நிலையை.

அதே நேரம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பிரதேசத்தில் அமைந்துள்ள கலாபீடங்களில் (கல்முனை ஸாக்ஹிறாக்கல்லூரி, தென் கிழக்குப் பல்கலைக்கழகம், அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி, அட்டாளச்சேனை கல்விக்கல்லூரி) தமிழ் மாணவ மாணவிகள் அவர்களின் மத உரிமைகளோடு நடமாடுகிறார்கள் யாரும் தடுப்பதில்லை தடுக்கவும் அவ்வதிபர்கள் அனுமதிப்பதில்லை. அப்படி நடந்திருந்தால் அதற்கொரு உதாரணமேனும் கூற முடியுமா? ஒவ்வொருவரும் தங்களின் விருப்பு வெறுப்புக்களை மற்றவர்களுக்குள் திணிப்பதை விட்டு விட்டு மற்றவருடைய உரிமைகளை மதிக்கவும், சகிக்கவும் பழகிக் கொண்டால் நாம் சந்தோஷமாக வாழ முடியாதா?

கனடாவில், அமெரிக்காவில், கட்டாரில், சவூதியில், முஸ்லிமும், தமிழரும், சிங்களவரும், சீக்கியரும் ஒரே அறையில் அவர்களுக்கான சொந்த உரிமைகளோடு வாழலாமென்றால் ஏன் தாளங்குடா கல்விக்கல்லூரியில் இது முடியாது? கல்லூரி அதிபர்கள் திருந்துவார்களா?

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com