Saturday, July 18, 2009

நோர்வே பொலிஸாரை சாடும் முன்னைநாள் பொலிஸ் அதிகாரி.

பயங்கரவாதிகளை கையாளும் திறமை நோர்வே பொலிஸாரிடம் இல்லை என Olav Sønderland எனும் அந்நாட்டு ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி Aftenposten எனும் நோர்வே அரச பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

நோர்வேயில் உள்ள பயங்கரவாத அமைப்புக்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்ற ஆய்வொன்றை நாடாத்தி அறிக்கை வெளியிடுகையில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர், இவ்விடயம் தொடர்பாக பொலிஸ் துறையில் பாரிய ஓட்டைகள் காணப்படுவதாகவும், ஒரே தவறை அவர்கள் மீண்டும் மீண்டும் இளைப்பதாகவும், பயங்கரவாத தடுப்பு பொலிஸாருக்கும் சிவில் பொலிஸாருக்கும் இடையில் ஒத்துழைப்ப மந்தம் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பயங்கரவாதிகளை பின்தொடரும் டெல்ரா பிரிவினருக்கான பயற்சிகள் போதாது உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Read more...

புலிகளின் பிளவும் புதிதாக உருவாகும் இணையத்தளங்களும்.

புலிகளின் பிளவை தொடர்ந்து புலிகளின் பிரச்சார ஊடகங்கள் பிளவு பட்டு நிற்பதுடன் இத்தனை காலமும் புலி எதிர்ப்பாளர்களையும் புலிகளுடன் ஒத்துப்போகாத அரசியல்வாதிகளையும் தகாத வார்த்தைப் பிரயோகங்களால் திட்டித்தீர்த்துவந்த இணையங்கள் தற்போது தமது சேவையை நிறுத்தி கொண்டுள்ளதுடன் பதிலாக புதியபெயரில் இணையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நெருப்பு.ஓர்க் எனும் இணையம் தமது சேவையை நிறுத்திக் கொண்டுள்ளதுடன் அதன் ஆசிரியர் தமிழ்நீயூஸ்வெப்.கொம் எனும் இணையத்தை ஆரம்பித்து புலிகளின் வண்டவாளங்கள் வெளிக் கொண்டுவரப்படுகின்றன.

இவ்விணையத்தின் ஆசிரியர் பன்னெடுங்காலமாக புலிகளின் தீவிர ஆதரவாளராகவும் புலிகளின் பிரச்சாரங்களுக்கான முன்னணிச் செயற்பாட்டாளராவும் இனம்காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Neruppu.org offline


Tamilnewsweb.com online

Read more...

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் பலாத்காரமாக திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள்.

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அவர்களது விருப்பிற்கு மாறாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படமாட்டார்கள் என நீதி அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பகிரங்க நிகழ்வொன்றில் இவ்வாறு தெரிவித்த அவர், மாநில அரசிற்கோ அன்றில் மத்திய அரசிற்கோ அம்மக்களை பாலாத்தகாரமாக அனுப்பும் எண்ணம் கிடையாது எனவும் அவர்கள் விரும்பி தாமாகவே செல்ல முற்பட்டால் அதை நாம் தடுத்து நிறுத்த மாட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

'கடைசி சாட்சியின் கதறல்'வாக்குமூலம் - நேர்காணல் : மு.திருநாவுகரன்

தமிழர்களின் மரண ஓலம் இவற்றுக்கிடையே ஈழப் போரின் இறுதி நாள் வரை அங்கேயே இருந்து, நடந்ததை அறிந்து அவதானித்து வைத்திருக்கும் தமிழ் எழுத்தாளர் திருநாவுக்கரசு... சில நாட்களுக்கு முன் வன்னி செட்டிக்குளம் முகாமிலிருந்து படகு மூலம் தப்பித்து, நடுக்கடலில் தத்தளித்து, தமிழகக் கரையேறியிருக்கிறார்..!

ஈழ நிலைமை என்ன? பிரபாகரனைப் பற்றிய மர்மங்களுக்கு விடை என்ன? இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லும் இப்போதைய ஒரே சாட்சி திருநாவுக்கரசுதான். மண்டபம் அகதிகள் முகாமுக்குக் கொண்டு வரப்பட்ட திருநாவுக்கரசை நிறைய சிரமங்களுக்குப் பிறகு சந்தித்தோம். நம் பலத்த வற்புறுத்தலுக்குப் பிறகே பேசத் தொடங்கினார்.

ஈழத்தின் கடைசிக்கட்ட நிலைமை எப்படி இருந்தது?

இராணுவம் அனைத்துப் புறமும் சூழ்ந்துவிட்டது. இனி தப்பிக்க முடியாது என்கிற எண்ணம் மக்களிடத்திலும் போராளிகளிடத்திலும் உருவாகி விட்டது. பங்கருக்குள் பதுங்கி இருந்த மக்கள், ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கிப் போகத் தொடங்கி விட்டார்கள். சரியான தகவல் பரிமாற்றங்கள் இல்லாததால், போராளிகளும் திக்கற்று நின்றார்கள். திரும்பிய பக்கமெல்லாம் கதறல்... பிணங்கள் சிதறிக் கிடந்த பாதைகளில் மக்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள். எல்லோருடைய மனதிலுமே இதுதான் இறுதி நிமிடம் என்கிற பதைபதைப்பு... இறப்பைக் காட்டிலும் இறக்கப் போகிறோமே என்கிற பதற்றம் ரொம்பக் கொடுமையானது... வார்த்தைகளால் சொன்னால் புரியாது, அனுபவித்தால்தான் தெரியும்..

இறுதி நெருக்கடிகளை புலிகள் எப்படி சமாளிக்கத் திட்டமிட்டிருந்தார்கள்?
புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு, நிகழப்போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே அனுமானிக்கக்கூடிய சக்தி அதிகம். அதனால் போரின் இறுதி நிலை கொடூர மானதாகவும், தாங்க இயலாததாகவும் இருக்கும் என்று அவருக்குத் தெரிந்திருக்கும். புலிப்படைத் தளபதிகளுக்கும் போராளிகளுக்கும் இருந்த அசாத்திய நம்பிக்கையும் ஒரு கட்டத்தில் தகர்ந்து போனது. ஆரம்பத்தில்... கிளிநொச்சியைத் தாண்டி ராணுவத்தால் முன்னேற முடியாது என்று புலிகள் உறுதியாக நம்பி இருந்தனர். ஆனால், ராணுவம் அசுர பலத்தால் அடுத்தடுத்த நிலப் பகுதிகளை வீழ்த்தத் தொடங்கி விட்டது. அதன்பிறகு மக்களுக்கும் இனி ஜெயிக்க முடியுமா என்கிற தயக்கமும் பயமும் ஏற்பட்டது. ஆனாலும், பிரபாகரன் கொஞ்சமும் தளராமல் உறுதியோடு போரை முன்னெடுத்து நடத்துவதில் தீவிரமாக இருந்தார். எத்தகைய சூழலிலும் தோல்வி குறித்த அச்சம் அவரிடத்தில் இல்லை. ஆனால், இறுதி நேரம் முழு நம்பிக்கையும் தகர்ந்து போகிற அளவுக்குக் கொடூரமானதாக மாறி விட்டது.

பிரபாகரனை குறிவைத்துத் தாக்குதல் நடப்பது தெரிந்து, 600 புலிகள் அவரை அனந்தபுரம் பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது நான்கு புறமும் ராணுவம் சூழ்ந்துகொண்டு தாக்குதலை நடத்தியது. அப்போது பிரபாகரனுடன் அசாத்திய திறமை படைத்த கடாபி, தீபன், விதுஷா, துர்கா உள்ளிட்ட போராளிகளும் அடுத்தநிலை தளபதிகளும் பாதுகாத்து நின்றனர். அந்த இலக்கை குறிவைத்து ராணுவம் தாக்குதல் நடத்த, அதில் புலிகளுக்கு நினைத்துப்பார்க்க முடியாத பேரிழப்பு ஏற்பட்டது. பிரபாகரனின் அதிமுக்கிய தளபதிகள் அதில் கொல்லப் பட்டார்கள். ஆனாலும், பானு உள்ளிட்ட முக்கிய தளபதிகளால் அந்தத் தாக்குதலில் இருந்து நூலிழையில் காப்பாற்றப்பட்டார் பிரபாகரன்!

கடைசி நேரத்தில் புலிகள் சமாதானத்துக்குத் தயாரானதாகவும், அதனை ராணுவம் சட்டை செய்யவில்லை என்றும் சொல்லப்படுகிறதே?
இராணுவத்தின் அடுத்தடுத்த கொடும் தாக்குதல்களை சமாளிக்க முடியாது என்பதை, புலிகளின் முக்கியத் தளபதிகளே தெரிந்து வைத்திருந்தார்கள். இதையடுத்து, அரசியல் பிரிவின் பொறுப்பாளரான பா.நடேசன், சமாதானப் பிரிவு பொறுப்பாளரான புலித்தேவன் உள்ளிட்டவர்கள் பிரபாகரனிடம் பேசினார்கள். ஆனால், பிரபாகரன் அமெரிக்க அரசை உறுதியாக நம்பினார்.

ஹிலாரி கிளின்ட்டனிடம் நம்ம ஆட்கள் பேசி விட்டார்கள். அதனால் சீக்கிரமே அமெரிக்கா நம் விவகாரத்தில் தலையிடும். நாம் இன்னும் மூன்று நாட்கள் வரை தாக்குப்பிடிப்போம் என பிரபாகரன் நம்பிக்கையோடு சொன்னார். ஆனால், அமெரிக்காவின் உதவி கைகூடுவதில் சில சிக்கல்கள் உருவாகி விட்டன. இந்தி யாவைக் கடந்து அமெரிக்காவால் உதவ முடியாது என்பதை புலித் தலைவர்கள் தாமதமாக... அதாவது காலம் கடந்தபிறகே புரிந்துகொண்டனர். இதற்கிடையில், ராணுவம் முற்றாக வளைத்து விட்டது. கடைசி நேரத்தில் சரணடைவது குறித்து நடேசன், பிரபாகரனிடம் பேசினார். நீங்கள் சரணடையச் செல்லுங்கள்... நான் களத்திலேயே நிற்கிறேன்! என உறுதியாகச் சொல்லி விட்டார் பிரபாகரன்.

இந்தக் கணத்தில்தான் நாங்கள் மக்களோடு மக்களாகக் கலந்து ராணுவப் பகுதிக்கு போனோம். கடந்த மே 16-ம் தேதி வரை புலித் தலைவர்கள் பற்றிய நிலவரம் இதுதான். ஆனால், அடுத்தடுத்த நாளிலேயே புலித் தலைவர்கள் வீழ்த்தப்பட்டு விட்டதாக செய்திகள் வந்தன.

வெள்ளைக் கொடியுடன் வந்த நடேசன் உள்ளிட்ட வர்களை ராணுவம் சுட்டுக் கொன்றதாக வந்த செய்திகள் குறித்து..?

நடேசன் சமாதானத்துக்கு முயன்றது எனக்கு உறுதியாகத் தெரியும். ஆனால், சமாதான விஷயத்தை சிங்களத் தரப்புக்கு சொன்னவர்கள், அதனை எப்படி முன்னெடுத்தார்கள்என்பது யாருக்கும் தெரியாத விஷயமாக இருக்கிறது. ராணுவத்தின் கட்டமைப்புப்படி சமாதானத் தகவல் பல கட்டங் களைத் தாண்டித்தான் சம்பந் தப்பட்ட பட்டாலியன் வீரர்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும். அந்த இடைவெளிக்குள் துயரங்கள் நடந்தேறி இருக்க வாய்ப்பிருக் கிறது. அந்தக் கணத்தில் நாங்கள் முகாம் பக்கம் வந்து விட்டோம்... அதனால், என்ன நடந்தது என்பது குறித்து உறுதி யான தகவல் இல்லை!

பிரபாகரனின் நிலை என்ன ஆனது?

சரணடைவதில் கடைசி வரை பிரபாகரனுக்கு விருப்பம் இல்லை. சரணடைவதைவிட சாவதே மேல் என்பதுதான் அவருடைய உறுதியான எண்ணம். ஆனால், கடைசி நேரத்திலும் வல்லமை மிக்க போராளிப்படை, பிரபாகரனைச் சுற்றி நின்றது. அவர் கடைசிக் கணத்தில் என்ன முடிவெடுத்தார் என்பதெல்லாம் அவரைச் சுற்றி நின்றவர்களுக்குக்கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மற்றபடி, இந்தக் கேள்விக்கு யூகமான பதிலை சொல்வது சரியானதாக இருக்காது!

பிரபாகரனின் பிரேதம் என ராணுவம் காட்டிய படம்..?


அதற்கு முன்னர் நான் பிரபாகரனை பார்த்திருக்கிறேன். முக அமைப்புகள் எல்லாம் அவரைப் போலவேதான் இருந்தது. ஆனாலும், அதில் வேறேதும் ஜோடிப்பு செய்யப் பட்டிருக்கலாம் என மக்கள் மத்தியில் பேச்சிருந்தது. அடுத் தடுத்த தினங்களில் பிரபாகரன் கொல்லப்பட்ட தகவலை முக்கால்வாசி மக்கள் நம்பத் தொடங்கி விட்டார்கள். பிரபாகரனைப் பிடிக்காதவர்கள்கூட, அவர் மரணித்ததாக வந்த செய்தியை நினைத்துக் கலங்கினார்கள். ஏனென்றால், தமிழீழப் போராட்டத்துக்கு அவரை விட்டால் வேறு ஆள் இல்லை என்பது தமிழ் மக்கள் மனதில் ஆணியாக அறையப் பட்டிருக்கும் உண்மை.

பிரபாகரனின் குடும்பத்தினர் தப்பி விட்டதாக சிலரும், அவர்களும் போரில் கொல்லப்பட்டு விட்டதாக சிலரும் முரணான கருத்துகளைச் சொல்கிறார்களே?

பிரபாகரன் தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையுமே ஈழத்து மண்ணில்தான் வைத்திருந்தார். போர் நெருக்கடியான நிலைக்கு வருவதற்கு முன்னரே, அவர்களைப் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்திருக்க முடியும். ஆனாலும், அதில் பிரபாகரனுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை. இரண்டு மகன்களையும், மகள் துவாரகாவையும் மக்கள் பார்க்கும் படியான நிலையில்தான் அவர் வைத்திருந்தார். தன்னுடைய குடும்பத்தினரை மட்டும் வெளியே அனுப்பினால், அது புலிகள் இயக்கத்தின் பிடிப்பை உடைத்து விடும் என்பதை அவர் உறுதியாகத் தெரிந்து வைத்திருந்தார். சார்லஸ் ஆண்டனியை போர்க்களத்தில் நிறுத்தி இருந்தார். போர் மிகத் தீவிரமாக உருவெடுத்தபோது, பிரபாகரனின் மனைவி மதிவதனியை வெளியே அனுப்ப சிலர் முயற்சி எடுத்தார்கள். ஆனால் மதிவதனி வெளியேறக் கூடாது... என உறுதியாக அறிவித்து விட்டார் பிரபாகரன். மக்கள் வேறு... குடும்பத்தினர் வேறு... என்று அவர் ஒருநாளும் பிரித்துப் பார்த்ததில்லை.

உண்மையைச் சொல்வதானால், போரின் முடிவு தன் குடும்பத்தினர் கூண்டோடு அழிவதாகக்கூட இருக்கும் என்பதையும் அவர் அனுமானித்து வைத்திருந்தார். அதற்காகவே பிரத்யேகமாக ஒரு மருத்துவரைச் சந்தித்து தன்னுடைய மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் ஸ்பெஷலாக சயனைடுகளை தயாரிக்கச் சொல்லி வாங்கி வைத்திருந்தார். அதனைக் கொடுத்தனுப்பிய மருத்துவரே என்னிடம் சொன்ன விவரம் இது. சாவை பற்றிய அச்சமோ தயக்கமோ பிரபாகரனுக்கு ஒரு போதும் இருந்ததில்லை என்பதற்கு, இந்த ஒரு சம்பவமே போதும்!

பிரபாகரனின் குடும்பத்தினர் யாரும் தப்பித்திருக்க வாய்ப்பில்லையா?

போரின் இறுதி நேரம் நான் தங்கி இருந்த பங்கருக்கு அருகே ஒரு பெரிய பங்கர் இருந்தது. அங்கே நான் போன போது, அதில் பிரபாகரனின் பெற்றோர் தங்கி இருந்தார்கள். அவர்கள் ராணுவக் கட்டுப்பாட்டுக்கு வந்தபிறகு, கதிர்காமர் முகாமில் வைக்கப்பட்டிருந்ததை நான் பார்த்தேன். அவர்களை ராணுவம் சித்ரவதைகள் ஏதும் செய்யவில்லை. அதன்பிறகு, பாதுகாப்பு கருதி ஒரு ஸ்பெஷல் அறையில் வைத்து, அவர்களை ராணுவத் தரப்பு மரியாதையுடன் நடத்துவதாக எனக்குத் தகவல் வந்தது. பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆண்டனி போரில் மடிந்ததை நேரில் பார்த்தவர்களே உறுதி செய்திருக்கிறார்கள். அதே நேரம் துவாரகா, பாலச்சந்திரன், மதிவதனி ஆகியோர் என்ன ஆனார்கள் என்பது முகாமில் இருந்த எனக்கு சரிவரத் தெரியவில்லை!

பாலச்சந்திரன் கொல்லப்பட்டது போன்ற படம் இணைய தளங்களில் வெளியாகி இருக்கிறதே?

பாலச்சந்திரன் போரின் கடைசி வரை ஈழத்தில் இருந்தது உண்மை. மற்றபடி, அவர் எப்போது பிடிபட்டார் என்பது பற்றியெல்லாம் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், அவர் கொல்லப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்பதுதான் என் சிந்தைக்கு எட்டிய விஷயம்.

புலிகள் தரப்பில் பலரும் காடுகளுக்குள் பதுங்கி இருப்பதாக சொல்லப்படுவது உண்மையா?

போரின் இறுதி நேரத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் ராணுவத்திடம் சரணடைந்தார்கள்.மொத்தமாக புலிப்படையில் 24ஆயிரம் புலிகள் இருந்தார்கள். போரின்போது ஏழாயிரத் துக்கும் மேற்பட்ட புலிகள் வீரச்சாவு அடைந்தார்கள். இதுதவிர, இரண்டாயிரத்துக்கும் மேற் பட்ட புலிகள் இப்போது காடுகளுக்குள் பதுங்கி இருக்கிறார்கள். அவர்கள் மேற்கொண்டு தாக்குதல்கள் நடத்துவதற்கு இப்போதைக்கு சாத்தியங்கள் ஏதுமில்லை. அவர்களை ஒருங்கிணைக்க இப்போதைக்கு வழியுமில்லை!

பொட்டு அம்மான் பற்றி எந்தத் தகவலும் இல்லையே..?

பொட்டு அம்மான், சூசை உள்ளிட்ட போராளித் தலைவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்... பிரபாகரன் கொல்லப்பட்டது உண்மையெனில், அது பொட்டு அம்மானைக் கொன்ற பிறகுதான் நடந்திருக்க முடியும். பொட்டு அம்மான் குறித்து ராணுவத்துக்கே சரியான தகவல்கள் கிடைக்கவில்லை என்பதுதான் சர்ச்சைகளுக்கு விதை போட்டிருக்கிறது. அதே நேரம், பொட்டுஅம்மான் ராணுவத்தின் கஸ்டடியில் இருப்பதாக சொல்வதில் நிஜமில்லை!

இந்தியத் தேர்தல், ஈழத்து நிலைமையை மாற்றும் என புலிகள் எதிர்பார்த்தார்களா?

இந்தியாவில் காங்கிரஸ் அரசுதான் மறுபடியும் அமையும் என்பதை ஈழத்தில் இருந்த அடித்தட்டு மக்கள்கூட நன்றாக அறிந்து வைத்திருந்தார்கள். மாற்று அணி வலிமையானதாக இல்லை என்பது எல்லோருக்குமே புரிந்தது. அதனால் இந்திய ஆட்சியில் மாற்றம் வரும் என்று புலிகள் எண்ணவே இல்லை. இருந்தாலும், தமிழகத்தில் ஈழத்துக்கு ஆதரவாக எழும்பிய ஒற்றுமை, ஈழ மக்களை நெகிழ வைத்தது!

- நன்றி ஜுனியர் விகடன்.




Read more...

Friday, July 17, 2009

"கே.பி துரோகி" என அறிவித்திருக்கும் புலிகளின் சர்வதேச தலமைச் செயலகம்.

உண்மைகள் வெளிவரும் தன்மை கொண்டவை என்பது யாவரும் அறிந்த விடயம். புலிகளின் தலைவர் பிரபாகரன் அவ்வியக்கத்தினராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டார் என்பதை மக்கள் அறியும் காலம் கனிந்து கொண்டிருகின்றது.

பிரபாகரனின் நேரடிக் கண்காணிப்பில் இருந்த கெஸ்ரோவினால் இயக்கப்பட்ட புலிகளின் சர்வதேச வலையமைப்பைச் சேர்ந்தோர் இன்று கே.பி யை துரோகி என அறிவித்துள்ளனர். புலிகளின் பிரச்சார இணையங்கள் இரு பிரிவாக பிரிந்து நிற்கின்ற போது அவ்விணையங்களில் பொது உடன்படிக்கையுடன் அவதூறான செய்திகளை வெளியிடாத இரு தரப்பும் புதிதுபுதிதாக இணையங்களை ஆரம்பித்து அதன் ஊடாக தமது காழ்ப்புணர்ச்சிகளைத் தீர்த்து வருகின்றனர்.

அவ்வாறு நெடியவன் , ரிஆர்ஓ ரெஜி ஆகியோரினால் இயக்கப்படும் இணையம் ஒன்றில் கொழும்பில் 40 சவப்பெட்டிகளை ஓடர் செய்துவிட்டு நோர்வேயில் பதுங்கியுள்ள குதிரைக் கஜேந்திரன் பிரதம ஆசிரியராக செயற்படுகின்றார்.

அவ் இணையத்தில் பரப்புரை பத்திரிகை துரோகிகளால் இயக்கப்படுவதாகவும், அதன் எழுத்தாளர் ரிஷி புலிகளின் பணத்திற்காக கூலிக்கு மாரடித்தாகவும் குறிப்பிட்டுள்ளதுடன் புலிகளின் அழிவின் பின்னர் ரிஷி தனது உண்மையான எஜமான்களான இந்திய நாட்டின் மூன்றெழுத்த உளவுப் பிரிவுடன் இணைந்து கொண்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் தமிழ் மக்கள் அப்பத்திரிகையை வாசிக்க வேண்டாம் எனவும வேண்டப்பட்டுள்ளது.

அத்துடன் கேபி யை துரோகி என அறிவித்துள்ள அறிக்கையின் முழு வடிவம் கீழே.

துரோகிகளுக்கு எச்சரிக்கை

வெளிநாடுகளில் "நான்கு சுவருக்குள்" இருந்து அறிக்கை விடும் குமரன் பத்மநாதனின் துரோகச் செயற்பாட்டுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் தரும் தேசவிரோதிகளுக்கு ஒர் எச்சரிக்கை!

தொடர்ந்தும் இப்படியான தேசவிரோத செயற்பாட்டில் நீங்கள் ஈடுபடுவீர்களேயானால் உங்கள் செயற்பாடுகள் தனிப்பட்ட தங்களின் தீய நடத்தைகளை வெளியிடுவதுடன் தங்கள் புகைப்படங்களும் வெளியிடப்படும்.

மேலும் "நான்கு சுவருக்குள்" இருந்து அறிக்கை விடும் குமரன் பத்மநாதனின் பழைய கூட்டாளிகள் மிகவும் கவனமாக இருங்கள். உங்கள் சாதகமே எங்கள் கைகளில்.

Read more...

இலங்கையின் ஊடகச் சூழல் எதிர்நோக்கும் இடர்பாடுகள் களையப்பட வேண்டும்

இலங்கையின் ஊடக சுதந்திரத்திற்கான சர்வதேச குழு. -அறிக்கை-
ஊடகங்களுக்கெதிராக பாரியளவில் அதிகரித்து வரும் வன்முறைகள் தொடர்பாக சர்வதேச ஊடக சமூகத்தின் பிரதிநிதிகளைக் கொண்ட இலங்கையின் ஊடக சுதந்திரத்திற்கான சர்வதேச குழு தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் மற்றும் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணை, கைதுசெய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் அந்தக் குழு முன்வைத்துள்ளது.

இலங்கையின் ஊடகச் சூழல் எதிர்நோக்கும் இடர்ப்பாட்டை களையுமுகமாக ஊடக சுதந்திரத்திற்கான சர்வதேசக் குழு 11 அம்சங்களடங்கிய திட்டத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது.

Read more...

மக்களுக்கு வழங்கிய இரு அதிநவீன குளிரூட்டி வண்டிகளை காட்டில் ஒழித்து வைத்த அமைச்சர் கருணா

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சேவா லங்கா எனப்படும் அரச சார்பற்ற நிறுவனம் கிழக்கு மீன்பிடித் தொழிலாளர்களின் தொழில் அபிவிருத்திக்காக இரு அதிநவீன குளிரூட்டி வண்டிகளை அமைச்சர் முரலிதரன் அவர்கள் ஊடாக வழங்க முற்பட்டுள்ளது.

இவ்வண்டிகளை பெற்றுக்கொண்ட அமைச்சர் அவற்றை மட்டக்களப்பை அண்டிய காட்டுப்பிரதேசம் ஒன்றில் தனது நெருங்கிய சகாக்களின் உதவியுடன் மறைத்து வைத்திருந்தமை வெளிவந்துள்ளது. இவ் இரு வண்டிகளையும் கைப்பற்றிய பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், இவ் வண்டிகள் கருணாவின் பிரத்தியேக செயலாளராக செயற்பட்டுவரும் சாந்தினி எனும் பெரும்பாண்மையின பெண்ணது சகோதரனுக்கு அன்பளிப்புச் செய்யும் பொருட்டு அவை அவ்வாறு மறைத்து வைக்கப்பட்டிருந்தமை புலனாகியுள்ளது.

அவ் வண்டிகள் இரண்டும் கிழக்கு மாகாணசபையிடம் ஒப்படைக்கப்பட்டு அவை உரிய முறையில் மக்களை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Read more...

புலிகள் என சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்கள் எகிப்து செல்ல முற்பட்ட வேளை பண்டாரநாயக விமானநிலையத்தில் கைது.

வெள்ளவத்தை மற்றும் கொட்டகேன பிரதேசங்களை தற்காலிக வசிப்பிடமாக கொண்ட விடுதலை புலிகள் என சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்கள் எகிப்து செல்ல முற்பட்ட வேளை பண்டாரநாயக விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். எகிப்தில் இடம்பெறும் அணிசேரா மகாநாட்டில் கலந்துகொள்ள சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் இவர்கள் ஏகிப்து செல்ல முற்பட்டனரா என்று பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

சாவகச்சேரி மற்றும் பலாலி பிரதேசங்களை பிறப்பிடமாக கொண்ட விஸ்வசாமி கிருஸ்ன பிரசாத் மற்றும் கலீபன் என இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் இவர்களுக்கு விசாபெற உதவிசெய்த சசிதரன் என்பவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்


Read more...

உண்மைகள் சுயமாக வெளிவரும் தன்னை கொண்டவை.

புலிகளியக்கத்தின் தலைமை அழித்தொழிக்கப்பட்ட பின்பு அவ்வியக்கத்தினுள் இருந்த மக்களை நேசித்த ஒரு சிலர் உண்மைகளை வெளிக்கொண்டு வர துடிப்பதும், அவர்ளின் குரல்வளைகளை நசுக்க புலித்தலைமையை கைப்பற்ற துடிப்போர் துடிப்பதும் இன்றைய களநிலவரங்களில் முக்கியமானவை. அந்த வகையில் தொடர்ந்தும் தமிழ் மக்களை எமாற்றத் துடிக்கும் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பாக முன்னைநாள் புலி ஆதரவாளர் என நம்பப்படும் ஒருவர் வெளியிட்டுள்ள சில கருத்துகள் கீழே தரப்பட்டுள்ளன. அவர் இக்கட்டுரையை பதிவு இணையத்தளத்தில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றை மையப்பட்டுத்தி எழுதியுள்ளதை உணர முடிகின்றது.

அவ்வாக்கத்தின் முழுவடிவம்


நண்பர்,இதயச்சந்திரன் முன்னர் சாள்ஸ் அன்ரனி என்ற மாவீரனின் பெயரை பயன்படுத்தி கல் எறிந்தீர்கள்.இப்போது உங்கள் குட்டுக்கள் வெளிப்பட்டதால் பிரம்மஞானியாக பாலசிங்கத்தை போல் உங்களை உருவகப்படுத்தி பிரம்மசீடனாக்கி எழுதியது உங்கள் எழுத்துக்களில் காட்டிக்கொடுத்துவிட்டது. உங்கள் வழமையான துருப்பிடித்த கத்தியால் யாரையும் ஒன்றும் செய்துவிடமுடியாது. முதலில் உங்களின் ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி என்றபடி நீங்கள் எழுதிய பந்திகளை பார்க்க.

எமக்குத் தோள்கொடுத்து உறுதுணை நிற்பதற்கான தமது தார்மீக ஆதரவை எமது தொப்புள்கொடி உறவுகளாகிய தமிழக மக்களும் வெளிப்படுத்தி வருகின்றனர்... கடந்த மேமாதம் 18ம் திகதிக்கு பின்னர் தமிழகத்தில் என்ன எழுச்சி ஏற்பட்டுள்ளது? உங்கள் தா.பாண்டியனும், மகேந்திரனும் என்ன ஆனார்கள்? இப்போது தமிழீழத்தில் பிரபாகரனிசம் முடிவுக்கு வந்ததும் தமிழகத்தில் நெடுமாறனிசம் கொலுவேறி தமிழ் நாட்டில் ஈழத்தமிழர்களின் பெருந்தலைவனாக தன்னை கொலுவேற்றிக்கொண்டிருக்கிறார் ஒரு சாதிவெறியனான நெடுமாறன் என்று சொன்னால் யாரும் நம்புவீர்களா? தலீத்தான திருமாவளவனை தனது வீட்டுக்கே எடுக்காத திமிர் பிடித்த வெறியன்.இதனால் திருமா ஈழத்தமிழர் விடயத்தில் சுத்தமானவரென்று ஒருபோதும் சொல்லமாட்டேன். அது தனியான கதை உள்ளது.

பிரபாகரன் கொல்லப்பட்டால் பல்லாயிரம் பிரபாகரன்கள் உருவாகுவார்கள் எனச்சொன்ன வை.கோல் எங்கே? அல்லது பிரபாகரனின் சாவை கூட சொல்லவிடாமல் தமது தலைமைக்கு ஆபத்துவந்துவிடுமென நன்குணர்ந்து முத்துகுமாரன்களை எழுச்சிபெறவிடாது தடுத்ததில் இதயமில்லாசந்திரன் உங்களின் பணி மேலானது. வெகுவிரைவாகவே உங்களின் பொய்மை வெளிச்சத்துக்கு வரும்.அப்போது நீங்கள் மூக்காடு போட்டுக்கொண்டு நடமாடவேண்டிவரும். ஆனால் உங்களுக்கு பிரச்சனயில்லை தானே நீங்கள் தானே வெளிச்சத்துக்குவராமல் முகமூடிபோட்டுக்கொண்டு முகம்காட்டாமல் புனைபெயரில் அவதூறு எழுதும் நவநீத லீலை மன்னன்.என கட்டியம்கூறி நிற்கின்றன எனக்கூறின் அது மிகையில்லை.

முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளை சிங்களம் தோற்கடிக்கவில்லை. மாறாக, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே, ஜப்பான் ஆகிய தாராண்மைத்துவக் கூட்டு வகுத்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைய, இந்தியாவும், சீனாவும், பாகிஸ்தானும் வழங்கிய படைவழி உதவிகளுடன், தமிழீழ மண்ணை சிங்களம் ஆக்கிரமித்துக் கொண்டது என்பதே உண்மை. ..பிரம்மசீடன், எல்லோரும் எமது எதிரிகள். அப்படியானால் உங்களால் எமது எதிர்கால நண்பர்கள் யார்? யாரை தமிழினம் நட்பு சக்தியாக்க வேண்டும் என்பது தொடர்பாக ஒருவரி கூட சொல்லவில்லையே மதிஉரைஞரே? கியூபாவா? கொலம்பியாவா? நிக்கரகுவாவா? செஸ்னியாவா? கொசோவாவா? இந்த அமைப்புகளுடன் உங்களுக்கு தொடர்பு இருக்ககூடும். ஏனெனில் முன்னர் உங்களுக்கு சர்வதேசபுரட்சிகளில் பங்குபற்றிய அனுபவம் உண்டல்லவா? அல்லது சர்வதேசிய புரட்சிகர சக்திகளுடன் நட்பு சக்தியாக இருந்த புரட்சிகர அமைப்பின் வழித்தோன்றல் அல்லவா? தேவைப்பட்டால் சோமாலிய கடற்கொள்ளையர்களை உங்க‌ள் ந‌ட்பு ச‌க்தியாக‌ கூட‌ வைத்துக்கொண்டால் தான் அக்கினி ப‌ற‌வைக‌ளாக உயிர்த்துஎழு , போராடு, வீர‌ச்சாவ‌டை, என‌ தேம்ஸ் ந‌தியோர‌த்திலிருன்து உங்க‌ள் கட்டுரைக‌ளை எழுதி பாம‌ர‌ன்க‌ளையும் உசுப்பேற்றி கொல்ல‌க்கொடுத்து முக‌மூடி போட்டுக்கொண்டு எழுதி வ‌யிறு வ‌ள‌ர்க்க‌லாம். த‌மிழின‌த்துக்கு கிடைத்த‌ தீர்க்க‌த‌ரிச‌ன‌மாக‌ பின்பு ந‌ட‌ப்ப‌வ‌ற்றை முன்கூட்டியே கூறும் பிர‌ம்ம‌ஞானிய‌ல்ல‌வா நீங்க‌ள்.

தமிழீழத்தில் இன்று தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஒரேயொரு சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டும் திகழ்வதாக சிலர் கூறுவது அபத்தமானது...த.தே.கூட்டமைப்பையோ அல்லது பிரித்தானிய தமிழ் பேரவையையோ அல்லது கனடிய தமிழ்காங்கிரசையோ சுயாதீனமாக இயங்க அனுமதித்ததுண்டா? எல்லாவற்றையும் புலிகள் தங்கள் தும்புத்தடியாக பாவித்தார்களே தவிர வேறு என்ன செய்தார்கள். சுயாதீனமாக செயற்பட விட்டால் தானே அவர்கள் மக்களுக்குள் வேலை செய்திருக்கமுடியும்.அவர்கள் மீதான சந்தேகங்களால் அவர்கள் தங்களை மீறிவிடுவார்கள்.அல்லது தங்கள் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்படும் என்பதால் புலிகளால் நியமிக்கப்பட்ட குதிரை கஜேந்திரனும், பத்மினியும்,கனகரத்தினம் ஆகியோர் மட்டும் மக்கள் மத்தியில் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டனர். புலிகளின் முகாம்களுக்குள் கூட உள்வாங்கப்பட்டனர். வெளிநாடுகளில் பணியங்களும் அதையே கைக்கொண்டன. த.தே.கூ அதிகார வரம்பு எதுவரை என்பது தெரியாமல் கையாளப்பட்டதால் இன்று த.தே.கூ மக்களால் ஓரங்கட்டப்பட அல்லது சிறிலங்காவில் செயல்படமுடியாத நிலையை புலிகளே கொண்டுவந்தனர். குதிரை கஜேந்திரன் 40ஆயிரம் சவப்பெட்டிகளை ஒடர் பண்ணியதால் நோர்வேக்குள் முக்காடு போட்டுக்கொண்டு யாழ் பல்கலை கழகத்தின் பெயரில் ஒன்றியம் மறுமலர்ச்சி கழகம் என்று அறிக்கைவிடுவதுடன் பா.ம.உறுப்பினருக்குரிய பணி முடிந்துவிட்டது அல்லது தானும் வேலை செய்வதாக இடையிடை காட்டிக்கொண்டார். பத்மினியும் சிதம்பரநாதனும் ரூட் ரவியின் முந்தானைகுள் தேம்ஸ் நதியோரமாக ஒதுங்கிகொண்டனர். கனகரத்தினம் வன்னியில் எம்.ஆர்.எஸ் சேவையில் (போக்குவரத்து கழகம்) மெக்கானிக்காக செயற்பட்டார். இதுதான் புலிகள் தங்கள் அபிமானிகளை வைத்தே செய்த மக்கள் பணி. இந்த தவறுகளை சுட்டிக்காட்ட வக்கில்லை ஒரேயடியாக த.தே.கூட்டமைப்பை கூத்தமைப்பாக மாற்ற முற்படும் பிரம்மசீடா முதலில் பிரம்மஞானி த.தே.கூ தாங்கள் சொல்வதை செய்பவர்களாக மட்டும் இருக்க வேண்டுமென சொன்னதால் எழுந்த மனவடுவால் ஆனந்தசங்கரி போன்றோர் கடுபாகியதையும் மறந்துவிடவேண்டாம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை கொச்சைப்படுத்தும் புழுதிகளும் சில பொய்வழுதிகளால் கிளப்பிவிடப்படுகின்றன. இவற்றை அடியோடு நிராகரித்து, தமிழீழ தேசியத் தலைவரின் வழிநடத்தலில் தமிழீழ மண்ணில் மீண்டும் தனியரசை நிறுவுவதற்கு உலகத் தமிழர்கள் உறுதிபூண வேண்டும்.. ..புலிகளின் தலைமை தொடர்பான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளமுடியாத உங்களின் புரட்சிகர அமைப்பின் முன்னாள் தலைவர் வேலுப்பிள்ளை பாலகுமாரனிடம் அவர் திரும்பி விடுதலையாகி வரும்போது கேட்டுப்பாருங்கள் பிரபாகரன் தொடர்பாக இறுதிக்கால செயற்பாடுகள் தொடர்பான விமர்சனங்கள் எப்படி என்பதை. ஒரு கட்டத்தில் பாலகுமாரன் தாங்கமுடியாது புலிகளின் மக்கள் விரோத வெறியாட்டங்களை விமர்சித்தபோது அவரையும் போட்டுத்தள்ள முடிவெடுக்கப்பட்டதாக தெரியவருகிறது. அவர் வெளியே வரும்போது உங்கள் இந்த நாள் தேசியதலைவரின் உண்மைமுகம் தெரியவரத்தான் போகிறது. சரி பிரம்மசீடன் வழுது எழுதிய புழுதி உண்மையானால் நீங்கள் உங்கள் எல்லா எழுத்துக்கும் மன்னிப்புக்க்கேட்டு இந்த போராட்டத்தில் வெளிப்படையாக ஆயுதம் தூக்கி உங்களால் தலைமை தாங்கவோ அல்லது ஒரு சாமானியனாக நீங்கள் சொல்லும் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபடத்தான் முடியுமா? சும்மா பதறுதல்ல..கேட்டானே ஒரு கேள்வி போட்டானே ஒரு போடு.


தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று முன்னெடுத்துச் செல்லும் முழுப்பொறுப்பும் புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களிடன் கையளிக்கப்படவில்லை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. மாறாக, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மாபெரும் உந்துசக்தியாக நின்று, தமிழீழ மண்ணில் எமது தேசிய விடுதலைப் போராட்டம் வீச்சுப்பெறுவதற்கு துணைநிற்கும் கடப்பாடே இன்றும்கூட எம்மீது சுமத்தப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான தலைமைத்துவம் என்றென்றும் தமிழீழ மண்ணில் இருந்தே வழங்கப்படும்..

பிரம்மசீடன் இறுதியில் உங்களை காப்பாற்றிக்கொண்டுவிட்டீர்கள். நீங்கள் லண்டனில் முகமூடிபோட்டுக்கொண்டு தாயகத்தில் இருக்கும் என நம்பப்படும் தளபதிகளையும் சாமானிய போராளிகளையும் சாகச்சொல்லும் நுட்பமோ சூப்பர் மதியுரை. உங்கள் குடும்பங்களுக்கு ஆபத்துவரக்கூடாது. வேறு யாருக்கும் வருவது பிரச்சனையில்லை. கால்மாக்ஸ்சின் தத்துவமோ? ஆரம்பத்தில் சன்சூவின் தத்துவத்துக்கு உயிர்கொடுத்தீர்கள், பின்னர் அகழிவெட்டி மண் அணைகட்டி ஸ்ராளின் கிராட்டுக்கு மறுபிரவேசம் கொடுத்தீர்கள், பின்னர் மாரிகாலம் தொடங்கட்டும் பிரபாகரனிசத்தின் உள்ளேவிட்டு அடிக்கும் நம்பிக்கைக்கு உரமூட்டினீர்கள். இப்போது ஜாக்கி சானின் பாய்ச்சலுக்கு ஆருட்ம் கூறி முடித்து பிரபாகரனின் உயிர்த்த ஞாயிறுக்காக தமிழ் மக்களை படியளக்க வைத்துள்ளீர்கள். இன்னும் 4மாதங்களில் பிரம்மசீடனின் பொய்மைகள் காலாவதியாகிவிடும். உங்கள் எல்லோரதும் பதிலளிக்கமுடியாத வறுமையை முன்னரே பார்த்துவிட்டேன். தேவைப்படும் போது தொடர்வேன். கிரியா பக்கிரிசாமியின் நீயா? படம் மாதிரி வருவேன்.

Read more...

Thursday, July 16, 2009

ஜனாதிபதி எழுத்துமூலம் ஒப்புக் கொண்டவிடயத்தை நிறைவேற்றாவிடின் சட்ட உதவியை நாடுவாராம் ரில்வின் சில்வா.

டெய்லி மிரர் பத்திரிகையின் Hot Seat எனும் நேர்காணல் நிகழ்சியில் கலந்து கொண்ட ஜேவிபி யின் ரில்வின் சில்வா, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனதிபதி ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டுவருவதாக ஜனாதிபதி மஹிந்த எழுத்துமூலம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், அந்த விடயத்தை அவர் நிறைவேற்றாவிட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது, கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது எமது கட்சி வேட்பாளர் ஒருவரை நிறுத்தாமல் நிபந்தனை அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவு வழங்கினோம். அங்கு பதின்மூன்று நிபந்தனைகள் இருந்தது. அதில் ஒரு நிபந்தனை அவரது ஆட்சி முடிவதற்குள் ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரங்களை இல்லாது செய்தல். இவ்விடயத்திற்கு அவர் இணங்கியதாலேயே நாம் அவருக்கு ஆதரவு வழங்கினோம். அவர் இது தொடர்பாக எமக்கு வாக்குறுதி தந்தார். அதன்போது எம்முடன் இருந்த சாட்சிகள் இன்னும் இருக்கின்றனர். எனவே அவர் எமக்கு தந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாது. அவ்வாறுதான் எம்முடன் செய்து கொண்ட உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் அவ்வாறு ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரங்களை ரத்து செய்யாமல் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முற்படின் நாம் சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக எமது சட்ட ஆலோசர்களை நாட நேரிடும் எனவும் தெரிவித்தார்.

Read more...

அரசியல் என்ற பிழையான பாதையில் செல்ல வேண்டியதேவை எனக்கில்லை - சரத் பொன்சேகா

தொழில் ரீதியில் நாட்டுக்கு சேவையாற்றவே தான் விரும்புவதாகவும், அரசியல் என்ற பிழையான பாதையில் செல்லவேண்டிய தேவை தனக்கில்லை எனவும் பாதுகாப்பு பணியாட் தொகுதி தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு பணியாட் தொகுதி தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று (15) முற்பகல் உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக்கொண்டார். இந்நிகழ்வு இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதனையடுத்து அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும் உரையாற்றிய சரத் பொன்சேகா, தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு உதவியாக ஒரு தொகுதி இந்திய இராணுவத்தினர் விரைவில் இலங்கை வரவுள்ளதாக கூறியுள்ளார்.
பலரும் கூறுவதைப் போன்று இயந்திரங்கள் மூலம் அவற்றை அகற்றமுடியாது. அது இலகுவான காரியமுமல்ல. இதேவேளை, கண்ணிவெடிகளை அகற்றவென இந்திய இராணுவ வீரர்கள் 500பேர் இலங்கை வரவுள்ளனர் என்று பாதுகாப்பு பணியாட் தொகுதி தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேக தெரிவித்தார். வடக்கு யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட நிலக்கண்ணிவெடிகளுக்குள் சிக்குண்டு படையினர் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுக்குள் உள்ளாகியுள்ளனர் இவ்வாறான கண்ணிவெடிகளை இரண்டு தொடக்கம் மூன்று மாதங்களில் அகற்றிவிட முடியாது. அவை முழுமையாக அகற்றப்பட்டதன் பின்னரே பொதுமக்கள் மீளக்குடியமர்த்தப்படுவர் என்றும் அவர் சொன்னார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கூறியதாவது,
'பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ள இந்த வேளையில் படையினரின் வெற்றி தொடர்ந்தும் பேணப்பட வேண்டுமாயின் நாட்டின் பாதுகாப்பு துரிதப்படுத்தப்பட வேண்டும். அதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையிலேயே எனக்கு இந்த பாதுகாப்பு பணியாட் தொகுதி தலைமை அதிகாரி என்ற பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாதுகாப்பு பணியாட் தொகுதி தலைமை அதிகாரி என்ற பதவியின் கீழ் 20 பிரதான பொறுப்புக்கள் கையளிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தின் ஜெனரல் பதவிகளை வகிக்கும் 7 அதிகாரிகள் உட்பட முப்படையினர் மற்றும் பொலிஸார் இந்த பொறுப்புக்களைக் முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பொறுப்புக்களின் பிரகாரம் முப்படையினரை உருவாக்குதல், அவர்களுக்கான பயிற்சிகளை வழங்குதல், புலனாய்வுத் தகவல்களைத் திரட்டுதல், முப்படைக்கும் ஆயுதங்களை வழங்குதல், பாதுகாப்பு படையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புதல், மற்றும் நாட்டின் பாதுகாப்பை துரிதப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இவ்வாறான பொறுப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்திக் கையாள்வதுடன் அவை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு பதில்கூற வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு பணியாட் தொகுதி தலைமை அதிகாரிக்கு உண்டு.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்ட பிரதேசங்களில் நிலையானதொரு பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டுமாயின் அப்பிரதேசங்களுக்கேற்ற வகையில் பாதுகாப்பு நடைமுறைகளைக் கையாண்டு படையினரை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்த வேண்டும். உதாரணமாக யாழ்ப்பாணம் முழுவதையும் படையினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு சுமார் 15ஆயிரம் படையினர் இராணுவ நடவடிக்கைக்காக ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் அவ்வாறு கைப்பற்றப்பட்ட பிரதேசத்தின் பாதுகாப்பை துரிதப்படுத்துவதற்கு சுமார் 30ஆயிரம் படையினர் தேவைப்பட்டனர்.

அந்தவகையில் படையினரால் விடுவிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு போன்ற பிரதேசங்களின் பாதுகாப்பை பலப்படுத்த பெருந்தொகையான படையினர் தேவைப்படுவர். வடக்கு கிழக்கின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமாயின் தற்போது இராணுவத்தில் உள்ள 2இலட்சம் ஆளணியினை இரட்டிப்பாக்க வேண்டிய தேவை உள்ளது. அதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தற்போது நாடு முழுவதிலுமுள்ள முப்படை முகாம்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

அத்துடன் இராணுவத்தில் கடமையாற்றிவரும் படையினருக்கு தேவையான வசதி வாய்ப்புக்கள் போன்றன ஏற்படுத்திக்கொடுப்பது மிக முக்கியமாகிறது. அப்போதுதான் இராணுவத்திலிருந்து தப்பிச் செல்பவர்களை எம்மால் கட்டுப்படுத்த முடியும். இவ்வாறான எமது படை பலத்தை அதிகரிப்போமாயின் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபைக்கு அனுப்பி வைக்கப்படும் எமது படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.

உலகில் எந்தவொரு நாட்டு இராணுவத்துக்கும் இல்லாத அனுபவம், திறமை எமக்கு உண்டு. நாட்டில் சமாதானம் உருவாக்கப்பட்ட போதிலும் பாதுகாப்பை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு இராணுவம் அவசியமாகும். இது புத்திசாதுரியமாகும். ஆயுதம் மற்றும் ஆளணி என்ற வகையில் முப்படையினருக்கு எல்லாவித திறமையும் உண்டு. அதனால், அந்த திறனை மேன்மேலும் அதிகரிப்பதற்கு தேவையான பயிற்சிகள், ஆயுதங்கள் போன்றன முப்படை, பொலிஸார், பொலிஸ் அதிரடிப்படையினருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு முப்படையினர் தமது ஒத்துழைப்பை நல்கி வருகின்றனர். நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்கள், அபிவிருத்திப் பணிகள் போன்றவற்றில் நாம் வழங்கிய ஒத்துழைப்பு தொடர்ந்தும் மென்மேலும் அதிகரிக்கப்படும். வடக்கின் வசந்தத்தின் போது பாதைகள், பாலம், நீர்நிலைகள், புகையிரத பாதைகள் போன்றவற்றை சீரமைக்கும் பணிகள் உட்பட விவசாயம், மின்சாரம், தகவல் தொடர்புகளை ஏற்படுத்துதல், இடம்பெயர்ந்துள்ள மக்களின் பாதுகாப்பு, அம்மக்களின் அடிப்படைத் தேவைகள் போன்றவற்றின் மீதும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளால் வடக்கில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணிவெடிகளுக்கு சிக்குண்டு படையினர் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் தற்போது படையினரால் துரிதமாக்கப்பட்டுள்ளன. சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களை விடவும் படையினரே அந்த நடவடிக்கையில் பெரும் பங்காற்றி வருகின்றனர். இந்த நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு கால அவகாசம், அதிக கவனம் போன்றன தேவை.

பலர் தரப்பினர் கூறுவதைப் போன்று இரண்டு, மூன்று மாதங்களில் இந்த கண்ணிவெடிகளை அகற்றிவிட முடியாது. இயந்திரங்கள் மூலம் அவற்றை அகற்றுவதாயினும் அது இலகுவான காரியமல்ல. காரணம் வயல்வெளிகள், வாவிகள், சதுப்பு நிலங்கள் போன்றவற்றில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை இந்த இயந்திரங்களால் அகற்றிவிட முடியாது. அதற்கு படையினரின் பங்களிப்பே முக்கியமானது. இந்த கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக இந்திய படை வீரர்கள் சுமார் 500 பேர் இலங்கை வரவுள்ளனர். இவற்றை முழுமையாக அகற்றிய பின்னரே வன்னியிலிருந்து வெளியேறிய பொதுமக்கள் மீள் குடியேற்றப்படுவர்.

தமிழ் படையணி

இராணுவத்தில் தமிழ் பிரிகேட் பிரிவொன்றை உருவாக்குவது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அவ்வாறானதொரு படையணி ஒருபோதும் உருவாக்கப்படமாட்டாது. கருணா தலைமையில் செயற்பட்ட கிழக்கு ஆயுதக் குழுக்களில் சுமார் 800 பேர் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் கிழக்கை மையப்படுத்தி கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் இராணுவ ரெஜிமன்ட்டுடன் இணைந்து செயற்படுகின்றனர்.

பாதாள உலக கோஷ்டி

நாட்டில் செயற்பட்டு வரும் பாதாள உலக கோஷ்டியினரை இல்லாதொழிக்க இராணுவத்தினரின் உதவியை நாடவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தார். அந்த வகையில் அவர்களை கண்டுபிடித்து கைது செய்வதற்கு புலனாய்வுப் பிரிவினரின் உதவி கோரப்பட்டுள்ளது. பொலிஸ் நடவடிக்கைகளின் பிரகாரம் அவர்கள் அனைவரும் வெகுவிரைவில் கைது செய்யப்படுவர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அழிப்பதற்கு இரண்டரை வருடங்களே ஆனபோது இந்த பாதாள உலக கோஷ்டியினரை இல்லாதொழிக்க அவ்வளவு காலம் தேவைப்படாது.

200 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்கள்

புலிகளுடனான இறுதிக்கட்டப் போர் நடவடிக்கைகளுக்கு தேவைப்படும் என அரசாங்கத்தால் 200 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது. ஆனால், அவை தேவைப்படாது என்ற பட்சத்தில் பின்னர் நிராகரிக்கப்பட்டன. இவ்வாறு அனுமதி கோரப்பட்டுள்ள ஆயுதங்களில் கனரக ஆயுதங்களும் அடங்கின. இறுதிக் கட்டப் போரில் கனரக ஆயுத பாவனைக்கு தடை செய்யப்பட்டதால் அவை நிராகரிப்பதற்கு காரணமாக அமைந்தன.

துரோகிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை

விடுதலைப் புலி இயக்கத்தின் புதிய தலைவராக பல்வேறு வதந்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் கே.பி. என்றழைக்கப்படும் கே. பத்மநாதனுக்கு எதிராக வெகுவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அவர் தொடர்பில் நாம் பாதுகாப்பு புலனாய்வுத்துறையினர் ஊடாக தகவல்களை திரட்டியுள்ளோம். அதற்கேற்ற வகையில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். அவர் மட்டுமன்றி நாட்டின் இறைமைக்கு துரோகம் விளைவிக்கக் கூடிய அனைவருக்கும் எதிராகவும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

வெளிநாடுகளின் ஒத்துழைப்பு

புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பல்வேறு நாடுகள் பாரிய ஒத்துழைப்புகளை வழங்கின. இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய நாடுகள், சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் அரசியல் ரீதியாகவும் இராணுவ மற்றும் புலனாய்வு ரீதியிலும் எமது அரசாங்கத்துக்கும் படையினருக்கும் பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கின.

இரட்சணிய படையணி

இலங்கை இராணுவம் இரட்சணிய படையணியாக செயற்படுவதற்கே தகுதியானவர்கள் என்று சில அரசியல்வாதிகள் முட்டாள்தனமான பிரசாரங்களை மேற்கொண்டனர். விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து உலகிற்கே எடுத்துக்காட்டாக விளங்கும் எமது படையினரின் திறமைகள் அவர்களது கண்களுக்கு இப்பொழுது தெளிவாக புலப்பட்டிருக்கும். இவர்கள் உண்மையில் எதையும் விளங்கிக் கொண்டுதான் பேசுகிறார்களா என்று விளங்கவில்லை.

மனித உரிமை மீறல்

வன்னி மோதலின் போது படையினரின் தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் என்று சர்வதேச சமூகம் கருத்துக்களை வெளியிட்டது. ஆனால், நாம் வன்னியில் சிக்குண்டிருந்த சுமார் 3 இலட்சம் பொதுமக்களை அங்கிருந்து பாதுகாப்பாக மீட்டுள்ளோம். இது ஒருபோதும் மனித உரிமை மீறலாக கருதப்படாது. பொதுமக்களின் சொத்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்தி பயங்கரவாதிகளை அப்பகுதியிலேயே மறைத்து வைக்க வேண்டிய அவசியம் எமக்கில்லை.

சர்வதேசம் கூறும் வகையில் நாம் மக்களை கொன்றிருந்தால் வன்னி முழுதும் மனித எலும்புக்கூடுகள் காணப்படுவதோடு, அப்பகுதி முழுவதும் துர்நாற்றமும் வீசப்படும். ஆனால், அது உண்மையில்லை என்பதை அங்கு அடிக்கடி போய்வரும் ஊடகவியலாளர்களுக்கு தெரியும். பொது மக்களில் பலர் கொல்லப்பட்டனர் என்று சர்வதேசத்திற்கு தகவல் வழங்கிய வன்னியில் கடமையாற்றிய வைத்தியர்களே தாம் சொன்னது தவறு என்று ஒத்துக்கொண்டுள்ளனர். இதைவிட சாட்சியம் வேறெது வேண்டும்.

யுத்த நடைமுறை

1950ஆம் ஆண்டு மலேசியாவில் யுத்தத்தின் மூலம் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது. அவர்கள் கல்கட்டாஸ் ரக துப்பாக்கிகளை பயன்படுத்தியே பயங்கரவாதத்தை அழித்தனர். இது அன்றைய தொழில்நுட்பத்தில் அமைந்த போர் முறையாகும். ஆனால், இந்த 2009ஆம் ஆண்டில் நாம் நவீன ரக தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட ஆயுத உபகரணங்களை கொண்டு பயங்கரவாதத்தை முற்றாக அழித்துள்ளோம். உலக நாடுகளுக்கு எமது வெற்றி பாரிய படிப்பினையை வழங்கியுள்ளது.

அரசியல் பிரவேசம்

தொழில் ரீதியில் நாட்டுக்கு சேவையாற்றவே நான் விரும்புகின்றேன். அரசியல் பிரவேசம் என்னைப் பொறுத்தவரையில் அசாத்தியமானது. மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா, ஜெனரல் அலுகம போன்றோரை போன்று பிழையான பாதையில் செல்ல வேண்டிய தேவை எனக்கில்லை.



Read more...

இடைத்தங்கல் முகாம் மக்களின் நிவாரணத்திற்காக லண்டன் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குகின்றது.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களின் அபிவிருத்தி மற்றும் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கென பிரித்தானியா 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தவுள்ளதாக பிரித்தானியாவின் சர்வதேச அபிவிருத்திக்கான திணைக்களம் அறிவித்துள்ளது.

அத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், இடைத்தங்கல் முகாம்களின் தரம் முன்னேறிவருகின்றது. ஆனால் அடிப்படையானவை. அங்கு சனநெருக்கடியும் போசாக்கின்னையும் காணப்படுகின்றது. இப்பணம் இப்பிரச்சினைகளுக்கு உதவும். ஆத்துடன், இப்பணம் அங்குள்ள மக்கள் தமக்கு தேவையானவற்றை வாங்குவதற்கும் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜ. நா பணியாளர்கள் தொடர்பாக பான் கீ மூன் ஜனாதிபதி யுடன் பேசினார்.

எகிப்தில் இடம்பெற்ற அணிசேரா மகாநாட்டில் கலந்துகொண்டதன் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கும் ஜக்கிய நாடுகள் பொதுசெயலாளர் பான் கீ மூனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில் இடம்பெயாந்த மக்களை விரைவாக மீளகுடியமர்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், தடுத்து வைக்கப்பட்டுள்ள உள்ளுர் ஜக்கிய நாடுகள் பணியாளர்கள் தொடர்பாக ஜக்கிய நாடுகள் பொதுசெயலாளர் பான் கீ மூன் ஜனாதிபதியிடம் கேள்விகளை எழுப்பியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Read more...

புலிப் பாடல்களை கையடக்க தொலைபேசியூடாக அனுப்பிய மூவர் கைது.

புலிகளின் பாடல்களை கையடக்க தொலைபேசியூடாக பலருக்கும் அனுப்பி அவ்வியக்கத்திற்கான பிரச்சார வேலைகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் மூவர் சேருநுவர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சந்தேக நபர்கள் இத்தேவைக்கு பயன்படுத்திய கையடக்க தொலைபேசிகள், கணனிகள் உட்பட மேலும் சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Read more...

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சந்திரிகா வேட்பாளரா?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக தயாராகும் எதிர் கட்சிகள் ஒன்றிணைந்து பொதுவான கூட்டு முன்னணியின் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது. இக்கூட்டணி சார்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக மேற்படி முன்னணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்விடயம் தொடர்பாக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் முன்னணி வட்டாரங்கள், கடந்த பாராளுமன்ற தேர்தலில் சந்திரிகா குமாரணதுங்க போட்டியிடாமைக்கு காரணம் அரசியல் யாப்பு விதிகள் என கூறினர்.

யாப்பின் பிரகாரம் வேட்பாளர் ஒருவர் தொடர்ச்சியா 3 முறை ஜனாதிபதி தேர்தலில் பங்கு கொள்ளமுடியாது எனவும் சந்திரிகா இருமுறை தேர்தலில் தொடர்ச்சியாக பங்குபற்றி வெற்றியடைந்துள்ளதாகவும், அதன் நிமிர்த்தம் அவர் எதிர்வரும் தேர்தலில் பங்கு கொள்வார் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கூட்டுமுன்னணி விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கான யானைச் சின்னத்தை தவிர்த்து வேறு ஓர் சின்னத்தில் போட்டியிடுவது என சந்திரிகா குமாரணதுங்க சிபார்சு செய்ததாக தெரியவந்துள்ளது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com