Monday, July 13, 2009

திருத்தல வழிபாடுகளுக்கு தடைபோடச் சென்று மூக்குடைபட்ட புலிகள்.

பிரபாகரன் கும்பல் பூண்டோடு அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புலம் பெயர் புலித்தொழிலாளிகள் பிரபாகரனின் பெயரால் தமிழ் மக்களின் திருத்தல வழிபாடுகள் மீதும், தமிழ் மக்களின் காலாச்சார நிகழ்வுகள் மீதும் நிபந்தனைகளை விதித்து இயல்பு வாழ்வில் மந்தநிலையை உருவாக்க முற்பட்டுள்ளனர்.

ஐரோப்பா மற்றும் கனடா போன்ற நாடுகளில் பல திருத்தலங்களை புலிகள் தொழிலுக்காகவும், தமது பிரச்சாரங்களுக்காகவும் திறந்து வைத்துள்ள அதேநேரத்தில், பிற இயக்கங்களைச் சேர்ந்தோரும் தனி நபர்களும் சில ஆலயங்களை தமிழ் காலச்சார விழுமியங்களைப் பேணுவதற்காக நாடாத்தி வருகின்றனர்.

கடந்த 17ம் திகதி பிரபாகரன் கும்பல் அழிக்கப்பட்டதை தொடர்ந்து, புலம் பெயர்ந்து புலித்தொழில் செய்வோர் பிரபாகரனது இழப்பு துக்கத்தை அனுஸ்டிக்கும் பொருட்டு ஆடம்பர நிகழ்வுகள் எதையும் நாடாத்தவேண்டாம் என மக்களை கேட்டுக்கொண்டுள்ளதுடன், ஆலய திருவிழாக்களின் போது ஆலயங்களை ஆடம்பரமாக சோடனை செய்வது மற்றும் மேளம் அடிப்பது போன்ற செயற்பாடுகளைத் தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஜேர்மனியில் கம்கோவில் எனப்படும் மிகப்பெரிய காமாட்சி அம்பாள் ஆலயம் ஒன்று தமிழ் மக்களால் நிறுவப்பட்டுள்ளது. அவ்வாலயத்தின் திருவிழா கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது. அத்திருவிழா ஆரம்பமாவதற்கு முன்னர் ஆலய நிர்வாகத்தினரை அணுகிய புலிகள், பிரபாகரனின் இழப்பபை ஒட்டி ஆலய திருவிழாவை நாடாத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர். அவ்விடயத்தை ஆலய நிர்வாகத்தினர் ஏற்றுக்கொள்ளாதபோது திருவிழாவை ஆடம்பரம் இல்லாமல் மேற்கொள்ளுமாறு கேட்டுள்கொண்டதற்கு ஆலயத்தினர் இணக்கம் தெரிவித்தனர்.

இந்நிலையில் புலிகள் கம்கோயில் திருவிழா இடம்பெறாது எனவும் தேர் இழுக்கப்படாது எனவும் பிரச்சாரம் செய்யலாயினர். இவ்விடயத்தை அறிந்த ஆலய நிர்வாகத்தினர் திருவிழா நடைபெறும் என்ற விடயத்தை மக்களுக்கு தெரியப்படுத்தியதுடன் இவ்விடயம் தொடர்பாக பொலிஸாருக்கும் தெரிவித்தனர்.

அந்நிலைமைகளை ஆராய்ந்த பொலிஸார் என்றுமில்லாதவாறு திருவிழா நேரத்தின்போது தமது பாதுகாப்பு நடவடிக்கைகளை முடக்கி விட்டிருந்ததுடன், விசேட ஏல்லை காவல் படை ஹெலிக் கொப்ரர்களில் சுற்றி, புலிகள் மேற்படி திருவிழாவை குழப்புவதற்கு ஏதாவது நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனரா என்பதை அவதானித்ததாக திருவிழாவில் கலந்து கொண்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு சுவிற்சர்லாந்து நாட்டிலும் மேற்படி துக்க தின அனுஸ்டிப்பு விடயம் மக்களுக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இருவாரங்களுக்கு முன்னர் அங்குள்ள முருகன் ஆலயம் ஒன்றின் திருவிழா ஏற்பாட்டுக் கூட்டம் இடம்பெற்றிருக்கின்றது. அதில் திருவிழா உபயகாரார்கள் கலந்து கொண்டுள்ளனர். திருவிழா உபயகாரர்களில் ஒருவர் புலிகளால் பரப்பவிடப்பட்டிருக்கின்ற துக்கதின அனுஸ்டானம் தொடர்பாக கூறியுள்ளார். அதற்கு ஆலய நிர்வாகத்தினர் தமது பூரண எதிர்ப்பைத் தெரிவித்ததுடன், ஆலய சோடனை மற்றும் மேள, தாள, சப்ர விடயங்கள் யாவும் எவ்வித மாற்றங்களும் இல்லாமல் ஆலய நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்படும் எனவும் உபயகாரர் விரும்பினால் வெளிச்சோடனையை தமக்கு விரும்பியவாறு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால் திருவிழாவின் ஏனைய உபயகாரர்கள் அனைவரும் வழமைபோல் திருவிழாவை நாடாத்துவது என தீர்மானித்துள்ளனர்.

அதே நேரம் சுவிற்சர்லாந்தில் கடந்த வாரம் இடம்பெற்ற சிவன்கோவில் திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. இவ்வாலயம் புலிகளினால் நிர்வகிக்கப்படுகின்றது. புலிகளின் ஆதரவாளர்களான உபயகாரார்கள் பிரபாகரனுக்காக தாம் தெய்வப் பழியை சுமக்க முடியாது என புலிகளுக்கு திட்டவட்டமாக தெரிவித்ததை அடுத்து புலிகள் சிவன்கோவில் திருவிழாவை வழமைபோல் நாடாத்தி முடித்துள்ளனர்.

புலிகள் இன்று மக்கள் மீது இவ்வாறான சுமைகளைச் சுமத்துவதற்கான காரணம் தாம் இதுவரைகாலமும் மக்கள் மீது செலுத்திவந்த ஆதிக்கத்தை தொடர்ந்தும் செலுத்த முடியுமா என்பதையும், எதிர்காலத்தில் மக்களை தம்மால் அணிதிரட்ட முடியுமா என்பதையும் பரிசோதிக்கவே எனக் கொள்ளலாம்.

ஆனால் நிலைமைகள் தற்போது மிகவும் மாற்றமடைந்து வருகின்றது. புலிகள் புலம்பெயர் தேசத்திலே தமது ஆக்கிரமிப்பு இல்லாத அல்லது தமது கட்டளைக்கு கட்டுப்படாக சகல நிகழ்வுகளையும் நிராகரிக்கும் படி மக்களை கேட்டிருந்தனர். அந்நிகழ்வுகளில் கலந்து கொள்வது தேசத்துரோகமாக புலிகளால் அர்த்தப்படுத்தப்பட்டிருந்தது. அவ்வாறு புலிகளால் தடைசெய்யப்பட்டிருந்த நிகழ்வுகளில் மக்கள் தாமாகவே முன்வந்து கலந்து கொள்கின்றனர். இதன் மூலம் புலிகளின் கட்டளைகளை ஏற்றுக்கொள்ள மக்கள் தாயாராக இல்லை என்பதை உணத்துவதே அவர்களின் நோக்கமாகவுள்ளது.

மக்கள் இவ்வாறு புலிகளால் தடைவிதிக்கப்பட்டிருந்த நிகழ்வுகளை நிறைவேற்றுவது அல்லது அந்நிகழ்வுகளில் தாமும் பங்கு கொள்வதானது புலிகளுடன் நேரடியாக மோதாவிட்டாலும் உளவியல் ரீதியாக புலிகளின் எந்தவிதமான கட்டளைகளுக்கும் மக்களாகிய நாம் எதிர்வரும் காலங்களில் கட்டுப்படப்போவதில்லை என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

பிரபாகரன் கும்பல் மக்களுக்கு செய்த துரோகங்களுக்கு இறைவனால் தகுந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கருதும் மக்கள் மத்தியில், புலம்பெயர் புலித் தொழிலாளர்கள் இறைசெயற்பாடுகளில் இன்றும் தலையிடுவதானது தமக்கும் மக்களுக்கும் மேலும் இறைபழியை ஏற்படுத்திக் கொள்ளவே எனலாம்.

Read more...

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவை அரசாங்கம் இடைநிறுத்தவேண்டும்: ஜே.வி.பி

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவை உடனடியாக இலங்கை அரசாங்கம் இடைநிறுத்தவேண்டுமென கோரிக்கை விடுத்திருக்கும் ஜே.வி.பியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, பொதுமக்களின் பணத்தை செலவிட்டு அதிக எண்ணிக்கையான கூட்டங்களை நடத்தி தீர்மானங்கள் எதனையும் எட்டாத இந்த சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு தேவையற்றதெனவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தீர்வு யோசனையை விரைவாக தயாரித்துமுடிப்பதற்கு தீர்மானித்திருப்பதாக அந்தக் குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண குறிப்பிட்டார்.

இதுவரையில், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவானது 121 தடவைகள் கூடி ஆலோசனை நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

ஊடக சுதந்திரத்தை நசுத்கும் எந்த செயலையும் ஐ.தே.க எதிர்க்கும்.

ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்துமுகமாக பாராளுமன்றிற்கு கொண்டுவரப்படும் எந்த விடயத்தையும் உணர்வுடன் கடுமையாக எதிர்ப்பதென ஐ.தே.க முடிவெடுத்துள்ளதாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் பா.உ கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சித் தலைவரின் காரியாலயத்தில் இருந்து ஊடகவியலாளர்களுடன் பேசிய அவர், ஊடக சுதந்திரத்தை காப்பதாக கூறிய அரசு அச் சுதந்திரத்தை மறுக்க முனைகின்றது. இவ்விடயத்தில் தாம் சகல கட்சிகளையும் இணைத்து ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்த போவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

புலிகளின் பல இரகசியங்கள் அம்பலம். புகைப்பட அல்பம் மீட்பு.

முல்லைத்தீவு பிரதேசத்தில் தேடுதலில் ஈடுபட்டுவரும் படையினர் புலிகள் இறுதியாக தங்கியிருந்த இடம் ஒன்றில் இருந்து ஆயிரக் கணக்கான புகைப் படங்கள் அடங்கிய அல்பங்களை மீட்டுள்ளனர். அப் புகைப்படங்களில் புலிகளின் ஆரம்ப காலம் தொட்டு இறுதி வரையான நிகழ்வுகள் யாவும் ஆவனப் படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இப் புகைப்படங்களில் புலிகளின் இரசசியத் சந்திப்புக்கள் பலவும் தெரியவந்துள்ளது. இப் புகைப்படங்களின் உதவியுடன் புலிகளுடன் இரகசிய தொடர்புகளை கொண்டிருந்த சகல தரப்பினரும் இனம்காணப்படுவர் என நம்பப்படுகின்றது. அத்துடன் புலிகளினால் இயக்கப்பட்டு வந்த சிறைகளில் புலிகளினால் தண்டனை வழங்கப்பட்டு அடைத்து வைக்கப் பட்டிருந்தவர்களின் புகைப்படங்கள் அடங்கிய அல்பம் ஒன்றும் அங்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இப் புகைப்பட அல்பத்தின் உதவியுடன் அவர்களில் எத்தனை பேர் புலிகளால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் எஞ்சியவர்களுக்கு என்ன நடந்தது எனவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட இருப்பதாக தெரியவருகின்றது.

Read more...

பாலியல் உணர்வூட்டும் 20 இணையங்கள் இயங்குகின்றன. தடை செய்ய நடவடிக்கை

இலங்கையில் இருந்து இயங்கும் பாலியல் உணர்வூட்டும் இணையத்தள இயக்குனர்களை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது. இவ்வாறன 20 இணையங்கள் இலங்கையில் இருந்து இயக்கப்படுவதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் அவற்றை இயக்குபவர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விணையங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவை சட்ட நடவடிக்கைக்காக சமர்ப்பிக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read more...

வவுனியாவில் வீர மக்கள் தின நிகழ்வுகள் ஆரம்பம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரால் வருடம்தோறும் நாடாத்தப்படும் வீரமக்கள் தின நிகழ்வுகள் இன்று வவுனியாவில் ஆரம்பமாகியுள்ளது. தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட பாரபட்சத்திற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் விடுதலைப் புலிகளின் ஏகப் பிரதிநிதித்துவ மோகத்தால் பயங்கரவாதமாக வடிவம் பெற்று இறுதியில் அவை முற்றாக அழித்தொழிக்கப்பட்டுள்ளதுடன், புலிகள் தமது பெயரை நிலை நிறுத்த நிறுவிய தடயங்களை யாவும் இல்லாது அழிக்கப்பட்டு வருகின்றது.

தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளுக்காக போராடப் புறப்பட்ட நியாயமான சிந்தனை கொண்ட பலர் புலிகளின் உண்மையான முகம் தெரியாமல் புலிகளுடன் இணைந்து மடிந்துள்ளனர். புலிகளின் பாஸிசக் கொள்கை அவ்வாறான தூய சிந்தனையாளர்களின் தடயங்களைக் கூட இல்லாது ஒழித்துள்ளது எனலாம்.

அத்துடன் மறுக்கப்பட்ட நியாயமான உரிமைகளுக்காக போராடப் புறப்பட்ட பல போராளிகள் பல இயக்கங்களிலும் இருந்து தமது உயிர்களை தியாகம் செய்து கொண்டுள்ள போதிலும், அவர்களின் நினைவுகளை, தடயங்களை எம்தேசத்தில் நிலைநிறுத்த புலிகள் இடம் கொடுத்திருக்கவில்லை. அதன் எதிர் விளைவுகளே இன்று புலிகளால் நிறுவப்பட்ட பல மாவீரர் துயிலும் இல்லங்கள், நினைவு மண்டபங்கள், தூபிகள் இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளது.

புலிகளின் பலத்த அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வவுனியா பிரதேசத்தில் வீரமக்கள் நினைவாலயம் ஒன்று அமைக்கப்பட்டு அங்கு எமது போராட்டமும் அப்போராட்டத்தின் பெயரால் தமது உயிர்களை தியாகம் செய்தவர்களும் நினைவு கூரப்படுகின்றனர். இதனூடாக எமது தேசத்தில் ஓர் உரிமைப் போராட்டம் இருந்தது என்ற விடயம் புளொட் அமைப்பினரால் நிலைநிறுத்தப்பட்டுள்ளது எனலாம்.

வருடம் தோறும் வீரமக்கள் தினம் என நினைவு கூரப்படும் நிகழ்வுகள் இன்று வுவுனியா வீரமக்கள் நினைவாலயத்திலும் புளொட் அமைப்பின் அனைத்து காரியாலயங்களிலும் ஆரம்பமாகியுள்ளது.

ஆரம்ப நிகழ்வாக மறைந்த தலைவர்கள், போரளிகள் மற்றும் மக்களது திருவுருவப் படங்கள் மக்களின் மலரஞ்சலிக்காக வைக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது. 13, 14, 15, 16 ஆகிய நான்கு நாட்களும் இடம்பெறும் இந்நிகழ்வுகளில் கழக உறுப்பினர்கள் இரத்ததானம் செய்வர் என கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இறுதி தினமான 16ம் திகதி போராளிகளின் பெற்றோர் உறவினர்கள் கௌரவிக்கப்படுவதுடன் அஞ்சலி நிகழ்வுகள் நிறைவு பெறும். நிகழ்வுகளின் தலைவர் சித்தார்த்தன் கலந்து கொள்வார் என அமைப்பின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

Read more...

Sunday, July 12, 2009

பாதாள உலக குழுக்களை துடைத்தெறியவும்.- ஜனாதிபதி

இலங்கையின் சகல பாகங்களிலும் செயற்படுகின்ற பாதாள உலக குழுக்களை இல்லாது ஓழிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். கையாள முடியாத அதிபயங்கர பாதாளக்குழுக்களை இராணுவத்தின் உதவியுடன் கையாளுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ள ஜனாதிபதி, பாதாளக்குழுக்களைத் துடைத்தெறியும் பாதுகாப்பு படையினரின் செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகளை தான் சகித்துக்கொள்ள மாட்டேன் என மிகவும் காரசாரமாக கூறியதாக பொலிஸ் உயர் மட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் பிரிவு பாதளாக் குழு மற்றும் போதைப் பொருள் அழிப்பு விடயங்களை மிகவும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்ற நிலையில், பல கிறிமினல் பேர்வழிகள் ஒழிந்துள்ளதாகவும், பலர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இப்பாதாளக்குழுக்கள் செல்வந்தர்ளிடமும், வியாபாரிகளிடமும் தொடர்ச்சியாக கப்பம் பெறுவதுடன், கூலிக்காக கொலைகளையும் புரிந்து வருகின்றனர். அவ்வாறு அமைச்சர் அலவி மௌலானாவின் நெருங்கிய வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் பெற முயன்ற மாளிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த பாதாள உலக தலைவர் ஒருவர் அண்மையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இச் சமுகவிரோதிகளை ஒழிப்பதற்கு மக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைக்க வேண்டும் என ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளதுடன், இக்குழுக்களுடன் தொடர்புகளை வைத்துள்ள அரசியல்வாதிகள் தம்மை இவர்களிடம் இருந்து விடுவித்துக்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read more...

கிளிநொச்சி மாவட்டத்தில் 20,000 குடும்பங்களை மீள்குடியேற்ற ஏற்பாடு.

பூநகரி, ஏ9, பளை பகுதிகளில் மீள்குடியேற்ற படையினர் அனுமதி

வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் இருபதினாயிரம் (20,000) குடும்பங்களைச் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த முடியுமென கிளிநொச்சி அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் நேற்றுத் தெரிவித்தார்.

பூநகரி பிரதேச செயலகப் பிரிவின் தெற்கு பிரதேசங்களிலும், ஏ-9 நெடுஞ்சாலைக்கு மேற்கு பிரதேசங்களிலும் பளை பிரதேச செய லகப் பிரிவிலுள்ள கிராம சேவகர் பிரிவுகளிலும் மக்களை மீளகுடியமர்த்துவதற்குப் பாதுகாப்பு படையினர் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக கிளிநொச்சி, மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் வவுனியா நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ளார். பயங்கரவாத செயற்பாடு காரணமாக வன்னிப் பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களை வடக்கின் வசந்தம் 180 நாள் திட்டத்தின் கீழ் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளது.

இந்தடிப்படையில் வன்னிப் பிரதேசங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை துரிதமாக மேம்படுத்து வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு ள்ளன. இவ்வாறான சூழ்நிலையில், கிளிநொச்சி அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தலைமையில் கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி, சுகாதாரம், வீதி, உள்ளுராட்சி, கட்டடத் துறை ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள் தொழில் நுட்பவியலாளர்கள், பொறியியலாளர்கள் அம்மாவட்டத்தின் வெவ்வேறு பிர தேசங்களுக்கும் நேற்று முன்தினம் சென்று திரும்பி யுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில், நாச் சிகுடா, வீரவில், ஜெயபுரம், வலைப்பாடு, அக்கராயன் குளம், வன்னேரிக்குளம் ஆகிய பிரதேசங்களுக்கே இக் குழுவினர் சென்று திரும்பியுள்ளனர்.

இம்மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் மக் களை வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் மீளக்குடியமர்த்துவது தொடர்பாக விரிவாக கவனம் செலுத்தியதுடன் அப்பிரதேசங்களின் உட்கட்டமைப்பு வச திகளைத் துரிதமாக மேம்படுத்துவது குறித்தும் இக் குழுவினர் விசேட கவனம் செலுத்தியுள்ளனர்.

பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் அரசாங்க கட்டடங்களும் உட்கட்டமைப்பு வசதிகளும் பெரிதும் பாதிக்கப்படவில்லை. அவற்றை குறுகிய காலத்தில் புனரமைக்க முடியும் என்று கிளி நொச்சி மாவட்ட அரசாங்க அதிகாரிகள் நேற்றுத் தெரி வித்தனர்.

இந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்படி பிரதேசங்களின் வீதிகள், பாடசாலைக் கட்டடங்கள், ஆஸ் பத்திரிக் கட்டடங்கள், பொதுச் சந்தைக் கட்டடங்கள் என் பன துரிதகதியில் புனரமைக்கப்படவிருக்கின்றன.

இது தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்ளும் பணியில் தற்போது அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்று கிளிநொச்சி அரசாங்க அதிபர் கூறினார்.
Thanks: Thinakaran.

Read more...

40 க்கு மேற்பட்ட முன்னாள் புலிகள் க.பொ. தராதர உயர்தரப் பரீட்சை எழுதுவர்.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த இடைத்தங்கல் முகாம்களில் உள்ள சுமார் 1000 பரிட்சாத்திகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இடம்பெற இருக்கும் கல்விப் பொதுத்தராதரப் பரிட்சையில் பங்கு கொள்வர் என பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் புலிகளியக்கத்தில் இருந்து சரணடைந்துள்ள சுமார் 40 இளைஞர், யுவதிகள் இப்பரீட்சைகளில் பங்கு கொள்ளவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ள அவர், புலிகளியக்கத்தில் இருந்து சரணடைந்து புனர்வாழ்வு முகாம்களில் தங்கியுள்ளவர்கள் தமது எதிர்காலத்தின் நிமிர்த்தம் பல தொழில் பயிற்சிகளை தெரிவு செய்து பயின்று வருகின்றனர். அவர்களில் சிலர் தமது கல்வியை தொடர விரும்பியுள்ளனர். அவ்வாறனவர்கட்கு அதற்குரிய ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

பரிட்சாத்திகளுக்கான விசேட அடையாள அட்டையை வழங்குவதற்காக பரீட்சைத் திணைக்களத்தில் இருந்து விசேட குழு ஒன்று நாளை வவுனியா விரைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

வட மாகாண ஆளுனராக மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்திரசிறி பதவியேற்றர்.

வட மாகாணத்திற்கான புதிய ஆளுனராக மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்திரசிறி இன்று காலை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமானம் செய்து கொண்டார். அத்துடன் முன்னாள் ஆளுனர் டிக்ஸன் டேலா இந்தியா மற்றும் மாலைதீவுக்கான தூவராக கடமையேற்கவுள்ளார்.

Read more...

புதிய கடற்படைத் தளபதி.

எதிர்வரும் 15ம் திகதி முதல் இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக றியர் அட்மிரல் திசரா சமறசிங்க பதிவியேற்கவுள்ளார். இவர் கிழக்கு மாகாண கடற்படைத்தளபதியாக செயற்பட்டு பின்னர் கடற்படையின் பிரதான அதிகாரியாக செயற்பட்டவர் ஆவர். தனது பதவியை கைவிடும் அட்மிரல் வசந்த கன்னாரகொட தேசிய பாதுகாப்பிற்கான ஜனாதிபதி ஆலோசகராக செயற்படுவார் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

Read more...

மேஜர் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய புதிய இராணுவத் தளபதி ஆகின்றார்.

இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக வன்னி கட்டளைத் தளபதியாக செயற்பட்டுவந்த மேஜர் ஜெனரல் ஜகத் ஜெயசூரியா அவர்கள் எதிர்வரும் 15ம் திகதி நியமனம் பெறவுள்ளார். அதேநேரம் 15ம் திகதி ஓய்வுபெறும் ஜெனரல் சரத்பொன்சேகா பிரதம பாதுகாப்பு அதிகாரியாக பதிவியேற்கின்றார்.

அத்துடன் ஐந்து பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் களாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இராணுவத் திட்டமிடல் இயக்குனர் பிரிகேடியர் மகேஸ் சேனநாயக, ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரி பிரிகேடியர் ஜகத் அல்விஸ், 22ம் படையணித் தளபதி பிரிகேடியர் ஜானக வல்கம, இராணுவ நிதி இயக்குனர் பிரிகேடியர் வீரதுங்கா, பிகேடியர் விஜெதுங்கா ஆகியோரே மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

Read more...

Saturday, July 11, 2009

வவுனியாவில் களைகட்டும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் புளொட் தலைவர் சித்தார்த்தன்.

வவுனியாவில் இடம்பெற இருக்கும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலுக்கான பிரச்சார வேலைகளை தமிழீழ விடுதலைக் கழகத்தினர் ஆரம்பித்துள்ளாதாக தெரியவருகின்றது. கடந்தவாரம் வவுனியா சென்றிருந்த புளொட் அமைப்பின் தலைவர் திரு. த. சித்தார்த்தன் அவர்கள் வவுனியாவில் உள்ள மக்களை சந்தித்து தாம் எதிர்கொள்ளப்போகும் தேர்தல் தொடர்பாக மக்களுக்கு விளக்கியுள்ளதுடன், அவர்களது கருத்துக்களையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

ஓரு வாரகாலமாக வவுனியா ஆனகோவில்குளம், இறம்பைக்குளம், வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தமது அரசியல் அலுவலகங்களில் தங்கியிருந்த தலைவர் சித்தார்த்தனை பெருந்திரளான மக்கள் சென்று சந்தித்துள்ளனர். இச்சந்திப்புக்களில் அவ்வமைப்பின் சர்வதேச அமைப்பாளர் ஆனசிவநேசன் பவன், வவுனியா ஊள்ளுராட்சி மன்றத்தேர்தலின் முதன்மை வேட்பாளர் ஜி.டி லிங்கநாதன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.




Read more...

இராணுவக் கப்டன் உட்பட ஆறு 6 படையினர் கைது.

அரச வங்கி ஒன்றின் பிரதி முகாமையாளர் ஒருவரின் கொலை சம்பந்தமாக இராணுவக் கப்டன் ஓருவர் உட்பட ஆறு படையினரை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 4ம் திகதி கொஸ்கம பிரதேசத்தில் உள்ள லபுகம எனுமிடத்தில் வைத்து அம்பலாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த வங்கி உதவி முகாமையாளர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இவர் கைது செய்யப்பட்டுள்ள இராணுவக் கப்டனின் நெருங்கிய சினேகிதர் எனவும், தனிப்பட்ட குரோதம் காரணமாகவே இக்கொலை இடம்பெற்றுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ளவர்களில் இரு கோப்ரல்களும் இரு சிப்பாய்களும் அடங்குகின்றனர்.

Read more...

மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவின் கொலையின் பிரதான சந்தேக நபர் தடுப்புக்காவலில். சிஐடி

மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கான பிரதான சூத்திரதாரி சில நாட்களுக்கு முன்னர் ஓமந்தைப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக நேற்று (10 யூலை) குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அனுராதபுரம் பிரதான மஜிஸ்திரேட் ருஜிரா வெலிவத்த அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதலைத் தொடர்ந்து சந்தேக நபருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரனால் விசேட கைத்துப்பாக்கி ஒன்றும் சில பரிசில் பொருட்களும் ஒரு லட்சம் ரூபா பணமும் சன்மானமாக வழங்கப்பட்டமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக சீ.ஐ.டி யினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இவ்வழக்கில் கைதாகி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள ஆறு பேரையும் அனுராதபுர சிறையில் விசேட பாதுகாப்பில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com