Thursday, July 2, 2020

வாக்களிப்போர் எண்ணிக்கையை குறைக்க ஐரோப்பிய நாடுகளுடன் கைகோக்கிறதாம் தேர்தல் ஆ ணைக்குழு! - விமல்வீரவன்ச

இம்முறை தேர்தல் ஆணைக்குழுவின் நோக்கமாக இருப்பது, வாக்குகளைப் பயன்படுத்துவதற்கு வருகை தருகின்ற வாக்காளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதே எனவும், அதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் ஐரோப்பிய நாடுகளிலிருந்து தேர்தல் ஆணைக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விமல் வீரவங்ச குறிப்பிடுகிறார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஐரோப்பிய தூதுவராலயங்களினால் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப, தேர்தல் அலுவலகங்களில் வேட்பாளர்களின் படங்கள் மற்றும் அவர்களின் விருப்பு வாக்குகளுக்கான இலக்கங்களை காட்சிப்படுத்துவதைத் தடை செய்வதற்கு, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட குழுவினரால் ஆவன செய்யப்பட்டு வருவதாகவும், அதன் மூலம் எதிர்வரும் தேர்தலுக்காக பொதுமக்களின் தேர்தல் தொடர்பிலான சூடுபிடித்தல் தன்மையை இல்லாமற் செய்து வாக்குகள் அளிக்கும் சதவீதத்தை குறைப்பதே அவர்களது நோக்கமாக இருப்பதாகவும் விமல் வீரவங்ச தெளிவுறுத்தவதோடு, எதிர்காலத்தில் பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கீழ் ஆணைக்குழு நீக்கப்பட்டு, ஜனாதிபதிக்கே அனைத்து அதிகாரங்களையும் வழங்கி நாட்டுக்கு ஏற்றாற்போன்ற புதிய யாப்பை உருவாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் வாக்களிப்போர் எண்ணிக்கையை குறைப்பதனூடாக பெரும்பான்மையினரின் விருப்பிற்கு ஏற்ப உருவாகாத அரசாங்கம் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றம் சுமத்துவதற்கு ஏற்றாற்போன்ற தேவையான ஒழுங்குகளைச் செய்தல் தேர்தல் ஆணைக்குழுவின் எதிர்பார்ப்பாக இருப்பதாகவும், அந்த எதிர்பார்ப்பினை நிறைவேற்றிக் கொள்வதற்கு தலைவர் உள்ளிட்ட பகுதியினருக்கு இடமளிக்க மாட்டேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com