Friday, June 5, 2020

கொரோனா பரிசோதனைக்கு இணங்காததால் சீறிப் பாய்கிறார் நாமல்!

அமெரிக்கத் தூதுவராலயத்தில் பணிபுரிகின்ற இராஜதந்திரி அதிகாரியொருவர் வௌிநாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுவிட்டு மீண்டும் இலங்கைக்கு வரும்போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொரோனா சோதனைக்கு உட்படுத்துவதற்கு அதிகாரிகள் முயன்றபோது அவர் அதனைத் தட்டிக்கழித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் தான் அதிருப்தியடைவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வியன்னா மாநாட்டை விட கொரோனா விடயத்திலேயே கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டில் மும்முரமாகப் பரவிவருகின்ற கொரோனா தொடர்பில் மிகவும் அவதானகமாக இருந்து, சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைகளுக்கு ஏற்ப செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய டுவிட்டர் கணக்கொன்றின் மூலம் அவர் இந்த விடயம் குறித்துக் குறிப்பிட்டுள்ளார்.

Namal Rajapaksa

@RajapaksaNamal

20h
Reports regarding a US diplomat refusing PCR tests at BIA is so disappointing. Vienna Convention or not, the world’s in the midst of a global pandemic & what we need more than ever is cooperation & respect of one another’s national frameworks which are put in place to save lives.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com