Friday, May 1, 2020

பீசீஆர் பரிசோதனைக்கு வெளிமாவட்டங்களுக்கு செல்லவேண்டியதில்லை.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள மேற்கொள்ளும் விசேட பீசீஆர் பரிசோதனை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநட்டில் நுண்ணுயிரியல் தொற்று நோய் விசேட நிபுணர் டாக்டர் வைதேகி தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில், தொற்றுத் தடுப்புப் பிரிவின் கீழ் இப் பீசீஆர் பரிசோதனை நடைபெறுகிறது. சுகாதார சேவைகள் பணிப்பாளர், போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு, கிழக்குப் பல்கலைக் கழக மருத்துவபீட பீடாதிபதி அஞ்சா அருட்பிரகாசம், பேராதனைப் பல்கலைக் கழகம் போன்ற பலரினுடைய ஒத்துளைப்புடன் கிடைக்கப்பெற்ற உபகரணங்கள், வைத்தியசாலையில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி இப் பீசீஆர் பரிசோதனைக்காகன இயந்திரம்

செயற்படுத்தப்படுவதாகவும், நோயாளரின் மூக்கிலும், தொண்டையிலுமிருந்து எடுக்கப்படும் திரவ மாதிரி 3 கட்டகங்களாக விசேட பக்கற்றுகள் மூலம் பொதி செய்யப்பட்டு குரிர்ப்பெட்டியில் வைத்து ஆய்வுகூடத்திற்கு கொண்டு வரப்படும். அங்கு இதற்கான விசேட குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டு பரிசோதனைக்காக இம்மாதிரிகள் எடுக்கப்படும். பல படிமுறைகளாக மேற்கொள்ளப்படும் சுமார் 6 தொடக்கம் 8 மணித்தியாலங்கள் இப்பரிசோதனைக்காக மருத்துவ ஆய்வகூட தொழிநுட்பவியலாளர்களுக்குத் தேவைப்படுகின்றது எனத் தெரிவித்தார்.

இந்த ஊகவியலாளர் மாநாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி. கலாரஞ்சினி கணேசலிங்கம், வைத்தியசாலை கொரோனா தடுப்பு செயலணி பிரதானியும், மயக்க மருந்து விசேட வைத்திய நிபுணருமான டாக்டர் எஸ். மதனழகன், மருத்துவ ஆய்வுகூட தொழி நுட்ப அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஸாகிர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com