Sunday, May 10, 2020

கொவிட் 19 தொற்றினால் இறக்கும் முஸ்லிம்கள் பற்றி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார் ரிஷாத்!

கொவிட் - 19 வைரசுக்குப் பலியாகின்ற முஸ்லிம்களின் சடலங்களை எரிப்பது தொடர்பில் முஸ்லிம்களிடையே பெரும் அதிருப்தி நிலவுகின்றது. தங்கள் மார்க்க முறையில் மரணங்களை அடக்க முடியாமை, மதக்கிரியைகளை நடாத்த முடியாமை தொடர்பில் பெரும் அதிருப்தி நிலவுகின்றதுடன், அரசாங்கம் தொடர்பிலும் பெரும் விமர்சனங்கள் எழுந்த வண்ணமே உள்ளன.

இந்த விடயம் தொடர்பில் முன்னாள் அமைச்சரான ரிஷாத் பதியுத்தீன் அவர்கள், கொவிட் 19 வைரசினால் இறக்கின்ற முஸ்லிம்களின் இறுதிக்கிரியைகள் நடாத்தப்படுகின்ற முறையை ஜனாதிபதிக்கு கடிதமொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 வைரசினால் இறக்கின்ற இலங்கை முஸ்லிம்களின் சடலங்களை எரிப்பது தொடர்பில் முஸ்லிம்களிடையே பெரும் அதிருப்தியும், குழப்பநிலையும் ஏற்பட்டுள்ளது என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் கொவிட் 19 வைரசின் காரணமாக இறக்கின்றவர்களின் உடலங்களை எரிப்பது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிக்கையை திருத்தியமைப்பதற்கு ஆவன செய்து, உடல்களைப் புதைப்பதற்கு அனுமதி வழங்குமாறு ரிஷாத் பதியுத்தீன் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com