Monday, April 27, 2020

Body Bags பெற்றுக்கொள்வது குறித்து விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க விளக்கம்

சடலங்களை அடக்கஞ் செய்வதற்காக பயன்படுத்தப்படும் பொடி பாக்ஸ் ஆயிரம் பைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு செயற்றிட்டத்தில் ஆயிரம் பேர் வரை உயிரிழப்புக்கள் ஏற்படக்கூடும் என்ற எதிர்பார்ப்புடன் அல்ல, சடலங்களை அடக்கஞ் செய்வதற்காக பயன்படுத்தப்படும் பொடி பாக்ஸ் பைகளை செஞ்சிலுவை சங்கத்திடம் பெற்றுக்கொள்வற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

சடலங்களை அடக்கஞ் செய்வதற்காக பயன்படுத்தப்படும் பொடி பாக்ஸ் பைகள் மாத்திரமின்றி சுகாதார அமைச்சின் விநியோக பிரிவினால் மருந்து வகைகள் உபகரணங்கள் முதலானவற்றின் கையிருப்பை உரிய முறையில் முன்னெடுக்கும் நோக்கில் செஞ்சிலுவை சங்கத்திடம் பொடி பாக்ஸ் பெற்றுக்கொள்வற்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விசேடமான சூழ்நிலைகள் மற்றும் அனர்த்தங்களின் போது பூதவுடல்களின் இறுதிக்கிரிகைகளுக்காக இவ்வாறான பொதிகள் பயன்படுத்தப்படுவது வழமை அதற்கேற்பவே இவற்றை பெற்றுக்கொளள இந்த நடவடிக்கை என்றும் அவர் கூறினார்.

இலங்கையில் தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு. அதேபோன்று இறப்பு வீதமும் குறைவு. இதற்குக்காரணம் எமது சுகாதார துறையினர் முன்னெடுத்துவரும் அர்ப்பணிப்புடனான சேவையாகும் என்று விசேட வைத்திய நிபுணர்; தெரிவித்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தாலும் குறித்த பகுதிகளில் வைரஸ் பரவாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எமது சுகாதார பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர் என்றும் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com