மனைவியின் மீது கொண்ட சந்தேகத்தால்; பிள்ளைகளைக் கொன்ற அப்பா!
வெளிநாடு சென்ற தன் மனைவி, அங்கு வேறொரு ஆணுடன் உறவு கொண்டுள்ளார் என்று ஏற்பட்ட சந்தேகத்தில், தனது பிள்ளைகளைக் கொன்று வீட்டிலேயே அந்தச் சடலங்களைத் தூக்கிட்டுவிட்டு தானும் தற்கொலை செய்ய முற்பட்டுள்ளார் ஒருவர். எனினும் குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப் பட்டுக் காப்பாற்றப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கொழும்பு ஹட்டன் வீதியின், எட்டியாந் தோட்டை வல்பொலகொடச என்ற இடத்தில் இன்று அதிகாலை நடைபெற்றுள்ளது.
தந்தையால் கொலை செய்யப்பட்டுத் தூக்கிடப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 7 வயது சிறுமி மற்றும் 3 வயது சிறுவன் ஆகியோரின் சடலங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். இன்று அதிகாலை 2.08 அளவில் 119 என்ற அவசர அழைப்பு இலக்கத்துக்குக் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, அங்கு சென்ற எட்டியாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது தனது கைகளை வெட்டிக் கொண்ட குழந்தைகளின் தந்தை எனக் கூறப்படும் 35 வயதான ஒருவர், மனைவி வேலை நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளார் என்றும் அவர் அங்கு பிறிதொரு நபருடன் தொடர்பை வைத்துள்ளார் என்றும் இதன் காரணமாகவே குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்ய முயன்றார் என்றும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார் என்று கூறப்பட்டது.
0 comments :
Post a Comment