யுவராஜ் சிங்கின் தந்தைக்கும் புற்றுநோய் !!
கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை அடுத்து அவரது தந்தை யோகராஜ் சிங்கிற்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ண போட்டிகள் முடிந்த உடன் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதை யடுத்து அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று குணமடைந்து நாடு திரும்பினார். நாடு திரும்பிய பிறகு அவர் புற்றுநோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந் நிலையில் அவரது தந்தையும், முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான யோக்ராஜ் சிங்கிற்கு குரல் வளையில் புற்றுநோய் ஏற்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து யுவராஜின் அறிவுரைப்படி அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வருகிறார். யோக்ராஜுக்கு அறுவை சிகிச்சை செய்து புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டுள்ளது. 56 வயதாகும் யோக்ராஜ் யுவராஜின் அம்மா சப்னம் சிங்கை விவாகரத்து செய்துவிட்டு சத்வீர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. யுவராஜும், அவரது தாயும் யோகராஜை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவ்வப்போது உடல் நலம் விசாரித்து வருகின்றனர்.
0 comments :
Post a Comment