12 வயதிலிருந்து 10 வருடங்களாக சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த வர்த்தகர்!!
தனது 12 வயதிலிருந்து பணக்கார தொழிலதிபர், தன்னை பாலி யல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்துவந்தாக 22 வயது பெண் ணொருவர் செய்துள்ள முறைப்பாட்டை பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினர் விசாரித்த பின்னர் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்டுக்கொண்டுள்ளனர். பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினரிடம் இந்த பெண் செய்த முறைப்பாட்டில், கடந்த வருடம் கொழும்பிலுள்ள ஒரு வீட்டுத் தொகுதியில் தான் இந்த வர்த்தகரினால் மிருகத்தனமாக பலாத்காரம் செய்ய ப்பட்டதாக முறையிட்டுள்ளார்.
பம்பலப்பிட்டி பொலிஸாரிடம் இந்த சம்பவம் பற்றி முறையிட்ட போதும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லையென அவர் கூறினார்.
தனக்கு 12 வயதாக இருந்த போது ஒரு முன்னணி ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது தான் அவரை சந்தித்ததாகவும் தான் சிறுவயது முதலே தனியார் தொலைக் காட்சியொன்றின் நிகழ்வுகள் பலவற்றில் நடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தான் ரியூசன் வகுப்புகளுக்கு செல்லும்போது அவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தன்னை சந்தித்ததாகவும் தமது உறவு நெருக்கமானதாக இருந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.
திருமண வயதை அடைந்ததும் அவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததால், தங்களது உறவு நெருக்கமானதாக அந்த யுவதி முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். இயற்கைக்கு மாறான முறையில் குறித்த வர்த்தகர் தன்னை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகவும் இதனால், தனியார் வைத்திய சாலையொன்றில் சத்திரசிகிக்சை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த யுவதி தெரிவித்துள்ளார். இந்த முறைப்பாடு தொடர்பான நீதவான் விசாரணை ஒக்டோபர் 10இல் நடைபெறவுள்ளது.
0 comments :
Post a Comment