பயங்கரவாதத்தை உருவாக்க முற்படுவோரை கைது செய்க - இளைஞர் சட்டதரணிகள் சங்கம்!
நாட்டில் பல விடயங்களுக்கு தேசிய கொள்கைகள் கிடையாது எனவே அரசியலமைப்பை மீறி மீண்டும் பயங்கரவாதத்தை உருவாக்க முற்படுவோரை கைது செய்யுமாறு இலங்கை இளைஞர் சட்டதரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இலங்கை இளைஞர் சட்டத்தரணிகள் சங்கம் நேற்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் செயலாளர் மனோஜ் கமகே இதனைத் தெரிவித்துள்ளார்.
இளைஞர் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் மனோஜ் கமகே தெரிவித்த கருத்து :-
நாட்டில் அனைத்து சட்டங்களும் பொதுவானது. யாராவது நாட்டின் அரசியல் அமைப்பை மீறி மீண்டும் பயங்கரவாதத்தை ஏற்படுத்த செயற்படுவார்களாயின் உடனடியாக கைது செய்யுங்கள்.அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள். நாட்டில் பல விடயங்களுக்கு தேசிய கொள்கைகள் கிடையாது. ஆகவே குறைந்த பட்சம் இதற்கேனும் யுத்தம் மற்றும் பயங்கரவாதம் மீண்டும் ஏற்படாதவாறு தேசிய கொள்ளை ஒன்றை ஏற்படுத்தி அனைத்து அரசியல் தலைவர்களும் எவ்விதமான அரசியல் நிலைப்பாடுகளை கொண்டிருந்தாலும் அந்த கொள்கையில் இருந்து கொண்டு செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
0 comments :
Post a Comment