முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கான சமய சடங்குகளை அவரவர் தனிப்பட்ட முறையில் முன்னெடுக்கலாம்!!
நாட்டை கடந்த 30 வருட காலமாக சீரழித்த எல். ரீ. ரீ. ஈ. நினைவுகூருவது ஒரு போதும் இடமளிக்கப்படமாட்டாது!
நமது நாட்டை கடந்த 30 வருட காலமாக சீரழித்த அபிவிருத்தியை பின்னோக்கி இழுத்துச் சென்ற எல். ரீ. ரீ. ஈ. அமைப்பினையோ அதனை முன்னின்று செயற்படுத்தியவர்களையோ நினைவுகூரும் வகையிலான நிகழ்வுகளை நடத்த நினைப்பது அசாதாரணமானது. . அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிக்கட்ட மனிதாபிமான நடவடிக்கைகளின் போது உயிரிழந்தோருக்கான சமய சடங்குகளை அவரவர் தனிப்பட்ட முறையில் முன்னெடுக்கலாமே தவிர எல். ரீ. ரீ. ஈ. அமைப்பையோ அதற்காக உழைத்த உறுப்பினர்களையோ பிரதிபலிக்கும் வகையில் சமய கிரியைகளை நடத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
நினைவு தினத்தினை அனுஷ்டிக்கும் வகையிலான சமய சடங்குகளை அவரவர் முறைப்படி வீடுகளிலோ அல்லது கோயில்களிலே தனிப்பட்ட முறையில் நடத்துவதற்கு தாராளமாக இடமளிக்கப்பட் டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் அழுத்தத்தின் பேரிலேயே யாழ். பல்கலைக் கழகம் குறுகிய காலத்திற்கு மூடப்பட்டிருப் பதாக வெளிவந்துள்ள செய்தியினையும் அவர் முற்றாக நிராகரித்ததுடன். பல்கலைக்கழகம் குறித்த தீர்மானங்களை முன்னெடுக்கும் அதிகாரம் உயர்கல்வி அமைச்சுக்கு மாத்திரமே உண்டு என சுட்டிக்காட்டினார். பாதுகாப்பு அமைச்சு யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி நாட்டிலுள்ள எந்தவொரு பல்கலைக் கழகத்துடனும் தொடர்புபடவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
1 comments :
கடந்த 30 வருட காலமாக எங்கள் பிரச்சனைகளை வைத்து பிழைக்கும் நோக்கில் எங்களை சீரழித்த LTTE அமைப்பினையோ அதனை முன்னின்று ெயற்படுத்தியவர்களையோ நினைவுகூரும் வகையிலான நிகழ்வுகளை நடத்த நினைப்பது, மீண்டும் நாம் எம் மக்களுக்கு தவறு செய்வதாகவே முடியும். .
Post a Comment