Tuesday, May 27, 2014

தமிழ் மக்களிடம் பொலிஸார் முக்கிய வேண்டுகோள்!

பொட்டு அம்மானின் உளவுப்பிரிவில் இணைந்திருந்தரே மலேசியாவில் கைது!

ஏல்.ரி.ரி.ஈ யினருக்கு மீண்டும் பிராண வாயு வழங்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டாமென, பொலிஸார் தமிழ் மக்களை கேட்டுள்ளனர். பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண இவ்வேண்டுகோளை விடுத்தார்.

இந்நாட்டில் மீண்டும் யுத்தம் ஒன்று ஏற்படக்கூடாது. சிங்களம், தமிழ் முஸ்லிம் ஆகிய நாம் அனைவரும் ஒன்றாக வாழ Nவுண்டும். தமிழ் மக்களிடம் நான் ஒன்றைக்கேட்க விரும்புகின்றேன், எல்.ரி.ரி.ஈ செயற்பாடுகள் மீண்டும் தலைதூக்க நீங்கள் ஆதரவு வழங்க வேண்டாமென, கேட்டுக்கொள்கின்றேன் என அஜித் ரோஹண வேண்டுகோளை விடுத்தார்.

எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளின் ஏமாற்றத்திற்கு நீங்கள் ஆளாக வேண்டாம். தமிழ் மக்களுக்கே, எல்.ரி.ரி.ஈ யினரால் கூடுதலான அநீதிகள் ஏற்பட்டன. அப்பாவி தமிழ் இளைஞர்கள், சிறுவர்கள் பலாத்காரமாக அவர்களின் செயற்பாடுகளில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். இந்த நாட்டில் வாழும் 99 சதவீதமான தமிழ் மக்கள், யுத்தமொன்று ஏற்படுவதை விரும்ப மாட்டார்கள். அரசாங்கம், பாதுகாப்பு தரப்பினர், பொலிஸாரின் ஆதரவை போன்று, இம்மக்களின் ஆதரவும் எமக்கு தேவைப்படுகிறது

மலேசியாவில் கைது செய்யப்பட்ட மூன்று புலி உறுப்பினர்களும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத ஒழிப்பு பிரிவு இவர்கள் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில், பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

எமது பொலிஸார் நேற்றிரவு மலேசியாவின் கோலாம்பூர் நகர் சென்று அங்கிருந்து கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களை அழைத்து வந்தனர். சந்திரலிங்க ராஜா முஷாந்தன் எனும் முள்ளிசெல்வன், 1994ம் ஆண்டு இவர் எல்.ரி.ரி.ஈ அரசியல் பிரிவில் இணைந்துள்ளார்.

இவர் எல்.ரி.ரி.ஈ இயக்கத்திற்கு மீண்டும் உயிரூட்டம் செய்வதற்கு முயற்சித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களுடன் இவர் தொடர்புட்டவர். மற்றவர், மகாதேவன் கிருபாகரன் எனும் நபர், இவர் ஆலய வீதி நல்லூர் எனும் முகவரியை சேர்ந்தவர். இவர் எல்ரிரிஈ இசைப்பிரிவில் முதலில் இணைந்துள்ளார். 2006ம் ஆண்டு இவர் மலேசியாவிற்கு தப்பிச்சென்றுள்ளார். அதன் பின்னர் இலங்கையில் இடம்பெற்ற எல்ரிரிஈ செயற்பாடுகளுடன் இவர் நேரடியாக தொடர்புபட்டுள்ளார்.

செல்லதுரை கிருபாகரன் எனப்படும் மற்றையவர், முதலாம் ஒழுங்கை, நல்லூர் எனும் முகவரியை சேர்ந்தவர். இவர் உரிய வயதை எட்ட முன்னர், பொட்டு அம்மானின் உளவுப்பிரிவில் இணைந்துள்ளார். இவர் 2006ம் ஆண்டு மலேசியாவிற்கு தப்பிச்சென்றுள்ளார். எல்.ரி.ரி.ஈ புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் மற்றும் அவர்கள் இலங்கையில் எவ்வாறு செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இவர்கள் மலேசியாவில் நீண்டகாலம் தங்கியிருந்த எல்ரிரிஈ யிற்கு தேவையான பணத்தை அனுப்பியுள்ளதுடன், மற்றும் ஏனைய தொடர்பாடல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளனர். மலேசிய ரோயல் பொலிஸாருக்கு நன்றி தெரிவிக்கின்றோம். இந்த செயற்பாடுகள் தொடர்பில், தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com