Tuesday, April 29, 2014

உலகில் துரிதமாக வளர்ந்து வரும் 10 நாடுகளில் இலங்கையும் ஒன்றாக தெரிவு!

உலகில் துரிதமாக வளர்ந்து வரும் 10 நாடுகளில் ஒன்றாக இலங்கையும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸை தலைமையாக கொண்டு இயங்கும் முன்னணி கடன் காப்புறுதி நிறுவனமான கோபேஸ் நிறுவனத்தினால் இலங்கை இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளது. கோப்பேஸ் கடன் காப்புறுதி நிறுவனமானது உலகெங்கிலுமுள்ள 60 நாடுகளில் தனது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

அதன் கடந்த வருடாந்த விற்பனை புரள்வு 1440 பில்லியன் யூரோக்களாகும். உலகெங்கிலுமுள்ள 4 ஆயிரம் தொழிலாளர்கள் இந்நிறுவனத்தின் சார்பில் பணியாற்றுகின்றனர்.

கொபேஸ் நிறுவனம் துரிதமாக நாடுகளில் 2 பிரிவாக வகுத்துள்ளது. அதன் முதலாவது பிரிவில் துரிதமாக வளர்ந்து வரும் நாடுகளான இலங்கை, கொலம்பியா, இந்தோனேசியா, பேரு, பிலிப்பைன்ஸ் ஆகிய 5 நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் பி பிரிவில் கென்யா, தன்சானியா, சாம்பியா, பங்களாதேஷ், எத்தியோப்பியா ஆகிய நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஆனால் இந்நாடுகள் துரித வளர்ச்சி பெறுவதற்கு பல்வேறு தடைகள் இருப்பதாகவும் கோபேஸ் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக பிரிக்ஸ் நாடுகள் எனப்படும் பிரிக்ஸ் அமைப்பில் அங்கம் வகிக்கும் பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா நாடுகளை விட இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் துரிதமாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com