Monday, February 3, 2014

ஜேவிபியின் தலமைத்துவ மாற்றம்: அதிர்ச்சியில் கிழட்டுச் சம்பந்தனும் பேபி ரணிலும்! ஓவியன்

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கட்சியின் புதிய தலைவராக அதன் ஏழாவது தேசிய மாநாட்டில் அனுர குமார திஸநாயக்கா தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜே.வி.பியின் ஸ்தாபகர் ரோஹண விஜயவீரவுக்குப் பின்னர் நீண்டகாலம் ஜே.வி.பி தலைவராக இருந்த சோமவன்சவிடமிருந்து அனுர குமார தலைமைப் பொறுப்பைப் பெற்றுள்ளார்.

மகிந்த ராஜபக்ஷவின் முதலாவது அரசாங்கத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றி இருந்த இக் கட்சி அதன் பின்னர் மகிந்த அரசாங்கத்திலிருந்து விலகி எதிரணியானது. இவ்வாறான நிலையில் நீண்டகாலத்திற்குப் பின்னர் ஏற்பட்டுள்ள தலைமை மாற்றம் ஜே.வி.பி, பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியைப் புறந்தள்ளி இரண்டாவது பலம் மிக்க கட்சியாக எழிச்சி பெற வழிவகுக்கும் என்ற எண்ணம் அக் கட்சியின் ஆதரவாளர்களிடமும் சிங்கள மக்களிடமும் காணப்பட வேறு இருவருக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது போல் உள்ளதாக அறிய முடிகிறது.

ஒன்று வேறு யாரும் இல்லை அவ்வப் போது மாறாட்டக்காரர் போல் முன்பின் முரணாக கதைக்கும் கிழட்டுத் தலைவர் இரா.சம்மந்தன் தான். வயசு போனா மாறாட்டமாய் தானே கதைப்பார் அதை விடுவம். ஆனால் தமிழ் மக்களின்ர தலைவர் நான் தான் என்று சொல்லிக் கொண்டு இன்றைக்கு 2002 ஆம் ஆண்டில் இருந்து சுமார் 12 வருடங்களுக்கு மேலாக இருக்கிறார். தலைமைய யாருக்காவது கொடுக்கிற எண்ணம் துளி கூட இல்லை. கூட்டமைப்பு தலைவரும் இவரே. தமிழரசுக் கட்சியின் தலைவரும் இவரே. தான் செத்த பின் தான் தலைமை மாறனும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதுக்குப் பிறகு வாறாவர் எத்தனை தலைமுறைக்கு இருக்கப் போறாரோ? அரசியல் கட்சிகள் ஜனநாயக நீரோட்டத்துடன் கூடியவை. தலவர்களும் வருடத்திற்கு ஒரு தடவை ஜனநாயக ரீதியில் மாற்றப்பட வேண்டும். ஆனால் அந்த விடயம் கூட தெரியாத சம்மந்தன் தீர்வு நோக்கி நகர்ராராம். ஹீ...ஹீ...ஹீ..

மற்றைய தலைவர் அடிச்சு விரட்டினாலும் போகமாட்டன் என்று அடம்பிடிக்கும் எதிர்கட்சித் தலைவர் ரணில். இவர் எதை உருப்படியாக செய்தவர்? இவர் தலவராக இருந்து இது வரை எவ்வளவு காலம் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது அவருக்கு மறந்திருக்க முடியாது. ஏனெனில் அந்த எண்ணிக்கை அவரின் வயதைத் தாண்டப் போகிறது. கட்சிகுள்ள நல்ல தலவர்கள் இருக்கிறார்கள். செய்ய முன்வாறார்கள். அப்ப ஒதுங்க வேண்டியது தானே. பிறகேன் ஐயா இந்த வீம்பு.

இனியாவது இந்த இரண்டு பேரும் ஜே.வி.பியை முன்மாதிரியாக கொண்டு நடப்பார்களா?

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com