Sunday, January 5, 2014

பனிப்பொழிவு எதிரொலி அமெரிக்க விமானசேவைகள் ரத்து!

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு மேலை நாடுகளிலும் டிசம் பர் மாதம் தொடங்கி கடுமையான பனிப்பொழிவு காணப்படு வதுடன், தற்போது அமெரிக்காவில் பனிப்பொழிவு மிகவும் அதிகரித்துள்ளதால் சுமார் 1000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக இன்று காலை சீதோஷ்ண நிலையில் மாற்றம் இல்லாமல் பனி காணப்படுவதால் கென்னடி விமான நிலையத்தில் இருந்தும், லிபர்டி விமான நிலையம், லா கார்டியா விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நியூயார்க் நகர விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது மட்டும்லாது விமான நிலையங்களின் ஓடு பாதையை மூடியுள்ள பனிப்பட லங்களை விரைந்து அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் இதே வேளை வீதிகளும் பனிப்படலத்தால் மூடப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com