Saturday, January 18, 2014

சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்யவதன் மூலம் வறுமையை ஒழிக்கலாம்- பசில்

உலகில் அபிவிருத்தியடைந்து வரும் பல நாடுகள் வறுமையை ஒழிக்க சுற்றுலாத்துறையை பயன்படுத்தி வருவதாகவும், எனவே எமது நாட்டில் வாழும் சகல வறிய மக்களின் முன்னேற்றத்தையும் இலக்காக கொண்டு சுற்றுலாத்துறை மற்றும் அபிவிருத்தியை மேற்கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் இந்த திட்டத்தின் பிரகாரம் 2016 ஆம் ஆண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக 50 ஆயிரம் ஹோட்டல் அறைகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட சீகிரியின் யானை என்ற ஹோட்டலை இன்று(18.01.2013) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இதனைவிட 20 ஏக்கர் நிலத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சீகிரியின் யானை ஹோட்டல் மூலமாக பிரதேச மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் 720 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எனவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com