மட்டக்களப்பைச் சேர்ந்த யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கப்பிரிவினரால் கைது!
மட்டக்களப்பைச் சேர்ந்த யுவதியொருவர் சுமார் 53இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை அணிந்துகொண்டு இந்தியாவுக்கு செல்ல முயன்ற வேளை கட்டுநாயக்க பண் டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்கப்பிரிவி னரால் கைது செய்யப்பட்டள்ளார்.
நேற்றிரவு 11.45 மணியளவில் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இந்த பெண் 1003 கிராம் நகைகளை அணிந்திருந்ததாக சுங்கப்பிரிவினர் தெரிவித்தனர். இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 141 என்ற விமானத்தில் குறித்த யுவதி மும்பைக்கு பயணிக்கவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment