Sunday, January 5, 2014

தேன் பருகினால் என்றும் இளைமையாக இருக்கலாம்!

தேன் ஓர் இனிய உணவுப்பொருள் மருத்துவ குணமும் கொண்டது, தேன் பருகினால் என்றும் இளைமையாக இருக்கலாம் என்பது அறிவில் ரீதியான உண்மை என்று பயன்படுத்திய பலர் கருத்து தெரிவித்துள்ளனர். தேன் சாப்பிடுவதால் உள்ள பயன்கள்.

1. உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும், தேனும் வெந்நீரும் கலந்து சாப்பிட்டால் பருத்த உடல் இளைக்கும், ஊளைச் சதை குறையும், உடல் உறுதியாகும்.

2. தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி குணமாகும்.

3. தேனும் வெங்காயச்சாறும் கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசமடையும்.

4. தேன், முட்டை, பால் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா உபாதையில் இருந்து தப்பலாம்.

5. உடம்பில் இரத்த குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும் பாலும் கலந்து சாப்பிட்டால் சோகை நோய் தீரும்.

6. மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து சாப்பிட்டால் ஆறாத புண் ஆறிவிடும்.

7.வயிற்று வலி ஏற்பட்டவர்களுக்கு தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.

8. ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை எலும்பிச்சை பழம் சாற்றையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் போல் சுறுசுறுப்பாக இருக்கும் நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடி விடும்.

9. அதிகாலையிலும், படுக்க செல்வதற்கு முன்பும் தேன் பருகினால் உடலுக்கு நல்லது.

10. அல்சர் நோய் உள்ளவர்கள் தினமும் இரண்டு தேக்கரண்டி தேன் சாப்பாட்டிற்கு முன் சாப்பிட்டு வர அல்சர் நோய் குணமாகும் உள்ளிட்ட ஏராளமான பலன்கள் தேனில் உள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com