மாணவ மாணவிகளின் சல்லாபம்! சொகுசு பஸ்சில் சம்பவம்!
மேலதிக வகுப்புகளிற்கு செல்லதாக கூறிக்கொண்டு சொகுசு பஸ்சில் சல்லாபத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகள் பொலி ஸாரிடம் சிக்கியுள்ளனர். கண்டி-மாத்தளை சொகுசு பஸ்களில் காதல் சல்லாபத்தில் ஈடுபட்டிருந்த ஐந்து இளம் ஜோடிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக மாத்தளை தலைமை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட ஜோடிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இவர்கள் அனைவரும் கண்டி நகரில் மேலதிக வகுப்புகளுக்கு செல்லும் மாணவர் மாணவிகள் என தெரியவந்துள்ளதாக தெரவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது
பஸ்சினுள் குறித்த மாணவர்களிடன் நடத்தையை அவதானித்த பஸ்வண்டியில் பயணித்தோர் குறித்த மாணவர்களின் இவ்வாறான செயல்பாடுகளைக் கண்டு அதிருப்தியுடன் பொலிஸாருக்கு வழங்கிய தகவல்களையடுத்து மாத்தளை பொலிஸார் இப்பஸ்வண்டியில் மேற்கொண்ட திடீர் சோதனைகளை மேற்கொண்ட போதே காதல் ஜோடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைக்குட்படுத்திய போது கண்டி நகரத்திற்கு மேலதிக வகுப்புகளுக்கு வரும் தாங்கள் காதல் காரணமாக இவ்வாறு பஸ்களில் நடந்து கொள்வதாகவும் சில பஸ் நடத்துநர்களுக்கு பஸ்கட்டணத்தை விட மேலதிக கட்டணத்தை பெற்றுக் கொண்டு தங்களுக்கான ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்னர்.
இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் வாக்குமூலங்களை பதிவு செய்து கொண்ட பொலிசார் கடுமையாக எச்சரிக்கையின் பின்னர் விடுதலை செய்துள்ளனர்.
0 comments :
Post a Comment