Monday, January 13, 2014

160 கைதிகளை கொலை செய்ததாக பிரித்தனிய இராணுவ தளபதிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு!

160 கைதிகளை கொலை செய்து 800 கைதிகளை சித்திர வதை செய்த செய்ததாக பிரிட்டிஷ் இராணுவ தளபதி எதி ராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது. ஈராக்கில் தடுப்புக் காவல் கைதிகளை துன்புறு த்தி படுகொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டு பிரிட்டிஷ் இராணுவ தளபதி ஜெனரல் சேர். பீட்டர்வோல் மற்றும் பிரிட்டனின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்களான ஜெப் ஊன் எடம் இங்ரம் ஆகியோருக்கு எதிராகவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

250 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை இம்மூவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது. மனித உரிமைகள் தொடர்பான சட்டத்தரணிகள் 400இற்கும் மேற்பட்ட ஈராக்கியர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து வரும் சந்தர்ப்பத்தில் ஆயிரக்கணக்கான கைதிகளை துன்புறுத்தும் சம்பவங்களுடன் அவர்களை ஈவிரக் கமற்ற முறையில் மனித கௌரவத்திற்கு தீங்கிழைக்கக்கூடிய வகையில், கீழ்த்தரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் இந்த குற்றப்பத்திரி கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறைக்கைதிகளை அடித்து துன்புறுத்துவதுடன் அவர்களை தீப்பந்தங்களினால் சுட்டெறித்தல், அவர்கள் உடலில் மின்சார தாக்கங்களை ஏற்படுத்தல் ஆகியவற் றுடன் கொலை செய்வோம் என்ற அச்சுறுத்தல்களையும் மேற்கொண்டார்கள் என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈராக்கிய மக்களின் கலாசார மற்றும் மத ரீதியிலான நம்பிக்கைகளை கேவலப் படுத்தக்கூடிய வகையிலும் பிரிட்டிஷ் இராணுவத்தினர் இந்த தடுப்புக் காவல் கைதிகளை துன்புறுத்தியதாக அறிவிக்கப்படுகிறது. இந்த துன்புறுத்தல் சம்பவங்கள் ஈராக்கில் 2003ம் ஆண்டுக்கும் 2008ம் ஆண்டுக்கும் இடையில் இடம்பெற்றன. கைதிகளை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்தல், தூக்கில் இடுவோம் என்ற அச்சுறுத்தல்களை மேற்கொள்ளுதல், சித்திரவதை செய்தல் போன்ற குற்றச் செயல்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

இவ்விதம் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் இராணுவ அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் இவை குறித்து தாங்கள் ஏற்கனவே விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவித் துள்ளது.

தாங்கள் விசாரணை செய்யும் போது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இது பற்றி விசாரணை செய்வது அவசியமில்லை என்று பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் ஆயுதப்படையினர் தங்களின் உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்டப்படிதான் ஈராக்கில் செயற்பட்டார்களே ஒழிய அவர்கள் எக்காரணம் கொண்டும் தடுப்புக்காவல் கைதிகளை சித்திரவதை செய்யவில்லை என்று தெரிவித்துள்ள பிரிட்டிஷ் அரசாங்கம், ஒரு சில சிறிய குற்றச் செயல்களில் பிரிட்டிஷ் இராணுவம் ஈராக்கில் ஈடுபட்டமை குறித்து தாங்கள் கவலை கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஈராக்கிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 1,069 கைதிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள், குடும்பத்தினரின் சார்பிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஈராக்கில் 150 முதல் 160 கைதிகளின் மரணம் குறித்தும் 700 முதல் 800 கைதிகள் மனிதாபிமானமற்ற முறையில் துன்புறுத்தப்பட்டமை குறித்தும் இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com