Wednesday, November 13, 2013

CHOGM என்ற பெயரில் இலங்கை வந்த சனல்-4 கிளிநொச்சி பயணம்?? அநுராதபுர ரயில் நிலையம் பொதுமக்களால் முற்றுகை!

இலங்கைக்கு எதிராக போலி பிரசாரங்களை மேற்கொள் ளும் செனல்-4 அலைவரிசையின் தயாரிப்பாளர் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக, இலங்கை மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். நேற்று நண்பகல் ஐ.தே.க. மங்கள சமரவீர, விக்ரமபாகு கருணாரட்ன, புலம்பெயர் தமிழர்க ளின் நிதியில் செயற்படும் அரச சார்ப்பற்ற அமைப்பின் பிரதிநிதி பிரிட்டோ பெர்னாண்டோ, சில காலம் ஊடகவிய லாளராக கடமையாற்றி பின்னர் அமெரிக்காவில் தஞ் சமடைந்து தற்போது நாட்டுக்கு திரும்பியுள்ள தினேஷ் தொடங்கொட ஆகியோர் சனல் 4 தயாரிப்புக்குழுவுடன் இணைந்து ஊடகவியலாளர் மாநாட்டை நடாத்தியது.

இதனால், இவர்கள் மீது நாட்டு மக்களின் அவதானம் திரும்பியுள்ள நிலையில் இக்குழுவினர் இன்று காலை கிளிநொச்சி செல்வதற்காக ரயிலில் பயணம் செய் வதை கேள்விப்பட்டதையடுத்து, அநுராதபுரத்தில் நாட்டுப்பற்றாளர்கள் உடனடியாக செயற்பட்டு, அநுராதபுரம் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது அநுராதபுரம் ரயில் நிலையத்தில் கூடி, இவர் களுக்கு எதிராக எதிர்ப்பு கோசங்களை எழுப்பி வருகின்றனர். நேற்று முன்தினம் சனல்-4 தயாரிப்பு குழு, இலங்கைக்கு வருகை தந்த போது, தேசப்பற்றாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், அவர்கள் இக்குழுவை நோக்கி, கேள்விக் கணைகளை யும் தொடுத்தனர்.

சனல் 4 அலை வரிசையின் தயாரிப்பு குழு, பொதுநலவாய மாநாடு தொடர்பாக தகவல் சேகரிப்பதற்கு வருகை தந்திருந்தால், அதற்கு மட்டும் வாய்ப்பளித்து, இலங்கையின் வேறு எப்பாகத்திற்கும் செல்வதற்கு இடமளிக்க வேண்டாமென, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையின் புகழுக்கு சர்வதேசத்தில் மாசு கற்பித்த இவ்வூடகவியலாளர் குழு வினர், நாடெங்கும் பயணம் செய்வதற்கு, அனுமதிக்க வேண்டாமெனவும், இவர்கள் அரசாங்கத்திற்கும், பாதுகாப்பு தரப்பினருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இவர்களை அநுராதபுரத்தை தாண்டி பயணம் செய்வதற்கு இடமளிக்கப்போவ தில்லையென்றும், அங்கு கூடியிருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இன்று முற்பகல் வவுனியா நோக்கி புறப்பட்ட ரயிலில் சனல் 4 அலைவரிசையின் ஊடகவியலாளர்கள் பயணம் செய்ததுடன், குறித்த ரயில் இன்று முற்பகல் 11 மணிக்கு அநுராதபுரம் ரயில் நிலையததை அடைந்த போதிலும், அங்கிருந்து தனது பயணத்தை தொடர வில்லையென, எமது பிராந்திய செய்தி யாளர்கள் தெரிவிக்கின்றனர். ரயிலை சுற்றி மக்கள் அணிதிரண்டு, எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக, அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

3 comments :

Anonymous ,  November 13, 2013 at 6:03 PM  

Well done heores.

Anonymous ,  November 14, 2013 at 7:59 AM  

You are the real patriots.keep it up
Beware of (Horikkadayos) traitors

Anonymous ,  November 14, 2013 at 10:10 AM  

So what is the meaning of free press...freedom and democracy. Let the journalists do their work..and people be the judge by their voices...not by suppressing free speech and free expression.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com