பெண்ணின் பின்புறத்தை படம்பிடித்தவருக்கு விளக்கமறியல்
பெண்ணொருவரின் பின்புறத்தை படம்பிடித்ததாக கூறப்படும் ஒருவரை நவம்பர் 04 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் உத்தவிட்டுள்ளார்.
விவாகரத்து வழக்கிற்காக நீதிமன்றத்திற்கு வருகைதந்திருந்த பெண்ணின் பின்புறத்தையே முச்சக்கரவண்டி சாரதி தனது கையடக்கதொலைப்பேசியில் படம்பிடித்துள்ளார்.
முச்சக்கரவண்டியின் சாரதியை நீதிமன்ற வளாகத்திலிருந்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை பிரதான நீதவான் ரங்கஜீவ விமலசேன உத்தரவிட்டார்
0 comments :
Post a Comment