இலங்கை இராணுவத்தின் செயற்பாட்டைக்கண்டு அதிர்ச்சியடைகின்றேன் -கூலே
இலங்கை இராணுவம் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஆற்றும் சேவையை கண்டு, தான் அதிர்ச்சியடைவதாக, பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர் நெதலி கூலே தெரிவித்துள்ளார்.
அவரது இலங்கை விஜயம் தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கை தொடர்பாக தான், சிறந்த தெளிவுடன் இருப்பதாக தெரிவித்த நெதலி கூலே, முதல் முறையாக பிரான்ஸ் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விசேட குழுவொன்றை நியமிப்பதற்கும், தான் நடவடிக்கை எடுக்கப்போவதாக, அவர் குறிப்பிட்டார்.
இதனூடாக, இலங்கைக்கும் பிரான்ஸூக்கும் இடையிலான முதலீட்டு மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் விரிவடையச்செய்வதே, அவரது நோக்கமாகும். என தெரிவித்தார்.
அவர் இலங்கையில் தங்கியுள்ள காலப்பகுதியில் நாட்டின் பல பாகங்களுக்கு விஜயம் செய்து, தற்போதைய நிலைமை தொடர்பாக, கண்டறிந்தார்.
இவ்வூடகவியலாளர் சந்திப்பில், அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையின் மீது பற்று வைத்துள்ள மக்களே, இலங்கையில் வாழ்கின்றனர். இதுவே இலங்கையின் துரித அபிவிருத்திக்கு அடிப்படை காரணமாக அமைந்து ள்ளது என, நான் நினைக்கின்றேன். ஒரு சிறந்த அபிவிருத்தி வேலைத்திட்டம், இலங்கைக்கு உண்டு. இந்நாட்டு இராணுவம், நாட்டின் மீதும், நாட்டு மக்கள் மீதும் கொண்டுள்ள கரிசணையையிட்டு, நான் வியப்புக்குள்ளானேன். இந்த நிலைமை, உலகின் ஏனைய நாடுகளுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகும் என தெரிவித்தார்.
பிரான்ஸிற்கான இலங்கை தூதுவர் கலாநிதி கருணாரட்ன ஹங்கவத்தவும், இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.
0 comments :
Post a Comment