Monday, April 29, 2013

சகல சமயங்களினதும் விழாக்களை கொண்டாடி சமயங்களுக்கிடையிலான உறவை வலுப்படுத்தட்டாம். மஹிந்தர்.

சகல சமயங்களினதும் விழாக்களை அதிவிமர்சையாக கொண்டாடி, நாட்டில் சமயங்களுக்கிடையிலான நல்லுறவினை கட்டியெழுப்புவோம் என, ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

புத்த ரஷ்மி தேசிய வெசாக் வலயம் வருடந்தோறும் ஜனாதிபதி செயலகம், ஹூனுபிட்டிய கங்காராம விஹாரையின் ஏற்பாட்டில் இடம்பெறுகிறது. இதன் நிகழ்வுகள் தொடர்பில் அலரி மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலேயே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.

அலரி மாளிகையில், பேரே வாவி மற்றும் காங்காராம விஹாரையை கேந்திரமாகக் கொண்டு, புத்த ரஷ்மி வெசாக் வலயம் இம்முறை அதிவிமர்சையாக கொண்டாட, ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சமய விழாவாக மாத்திரமன்றி, எமது பாரம்பரிய உரிமைகளையும், கலாசாரத்தையும் சித்தரித்துக்காட்டும் வகையில், இவ்விழாவை ஒழுங்கு செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை, ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பெற்ற சுதந்திரத்தை பாதுகாத்து, சுபீட்சமிகுந்த தேசத்தை கட்டியெழுப்புவதற்காக, இன மத பேதங்களை மறந்து, செயற்பட வேண்டியதன் அவசியத்தையும், ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

வெசாக் வலயத்தை பார்வையிட வருகை தரும் வடக்கு கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கும், விசேட வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் வெசாக் வலய வெளிச்சக்கூட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு, சான்றிதழ்களும், பணப் பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.
இந்த பேச்சுவார்த்தையில் ஹூனுபிட்டிய கங்காராம விஹாராதிபதி கலபொட ஞானிஸ்ஸர தேரர், கலாநிதி சங்கைக்குரிய கிரிந்தே அஸ்ஸஜீ தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், அமைச்சர் தினேஷ் குணவர்தன உட்பட பலர், கலந்து கொண்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com