Thursday, March 7, 2013

அமெரிக்கா தீர்மானம் ஏற்றுக்கொள்ள முடியாது -சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவால் கொண்டுவரப்படும் தீர்மானத்தில் தற்போது இடம்பெற்றுள்ள வாசகங்கள் தமக்குத் திருப்தி அளிக்க வில்லை என்று ஜெனிவா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான தீர்மானத்தின் வாசகங்கள் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. இந்த முறை கொண்டுவரப்படும் தீர்மானம் கடந்த முறை கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை விட கடுமையானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

போர்க் குற்றம் குறித்து சுயாதீன சர்வதேச விசாரணை தேவை என்பதை தாம் கேட்ப தாகவும், இறுக்கமான ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்று தாம் விரும்புவதாகவும் அவர் கூறினார்.

அதேநேரம் மனித உரிமைப் பேரவைகளுக்கான அமெரிக்கத் தூதர், இந்த விடயம் தொடர்பாக இலங்கையோடு இணைந்து செயற்பட முடியும் என்று தாம் நம்புவதாகத் தெரிவித்தி ருந்தார். மேலும் போரில் முக்கிய பங்காற்றிய இலங்கை இரா ணுவத் தளபதி அமெரிக்க இராணுவப் பல்கலைக் கழகத்தில் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.

அமெரிக்காவை மட்டுமே நம்பி தாம் இருக்க முடியாது என்று தெரிவித்த சுரேஷ் பிரேமசந்திரன் பல்வேறு நாடுகளின் தூதர்களை சந்தித்து தமது நிலைபற்றி விளக்கிக் கூறுவதாகத் தெரிவித்தார்.

1 comments :

Anonymous ,  March 8, 2013 at 6:59 AM  

Just look at the start upto now,repeats of the same wordings.The experiences are quite sufficient for us to have a picture of your politics.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com