கல்வியங்காடு குடும்பஸ்தரை காணவில்லை
கல்வியங்காட்டைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கடந்த மூன்றாம் திகதியிலிருந்து காணாமற் போயுள்ளதாக இலங்கை மனித உரிமைக் குழுவின் யாழ். காரியாலயத்தில் அவரது மனைவியினால் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருப்பதாக அதன் இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
பன்னிரு முருகையா ராஜேந்திரம் (வயது - 40) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு காணாமற் போயிருப்பதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆம் திகதி வீட்டிலிருந்து சைக்கிளில் வெளியே புறப்பட்ட அவர் வீடு திரும்பவில்லை. அத்துடன் குறித்த குடும்பஸ்தர் ஏற்கனவே 2006 ஆம் ஆண்டும் கடத்தப்பட்டு கடத்தல்காரர்களால் தாக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த முறைப்பாடு கோப்பாய் பொலிஸ் நிலையத்திலும் நேற்று முன்தினம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment