வேலையிடத்தில் பாலியல் தொந்தரவு; சன் டிவி செய்தி ஆசிரியர் கைது!
வேலைசெய்த இடத்தில் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சன் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் ராஜாவை போலீசார் விசாரணை செய்து பின் கைது செய்ததாகவும் இந்திய பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் அந்த பெண் செய்தி வாசிப்பாளர் புகார் அளித்தையடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமிஞ்சக்கரையில் உள்ள இந்த பெண் செய்தி வாசிப்பாளர் (28) தனது புகாரில் சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜா தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் அவரது விருப்பத்திற்கு இணங்காததால் அதிகாலை ஷிப்டிற்கு தன்னை மாற்றியதுடன் தனது விருப்பத்திற்கு இணங்கும் வரை இதே ஷிஃப்ட்தான் வேலைசெய்யவேண்டும் என வலியுறுத்தியதுடன் இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் உள் வேலை போய்விடும் என்று மிரட்டியதுடன் இரவு நேரங்களில் எஸ்.எம்.எஸ்., போன்கால்கள் என்று பெரும் தொந்தரவு கொடுத்ததாகவும் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இதனை விட ராஜாவின் கூட்டாளியான வெற்றிவேந்தன் மற்றொரு பத்திரிக்கையாளரை வைத்து இந்த செய்திவாசிப்பாளரை அணுகியதுடன் ராஜாவின் விருப்பத்திற்கு இணங்கினால் நிறைய சம்பளம் மற்றும் ஏனைய வசதிகள் செய்துதரப்படும் என்ற ஆசை வார்த்தைகள் கூறியதாகவும் வெற்றி வேந்தனும் சில பெண் செய்தியாளர்களிடம் பாலியல் தொடர்பு வைத்திருந்தது புகைப்படங்களுடன் லீக் ஆனதும் ராஜா அவரை வேறு ஊருக்கு இடமாற்றம் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புகாரை அனுப்பிய பெண் தன் புகார் மனுவுடன் வெற்றிவேந்தனின் குரல் பதிவுகள் மற்றும் அவரது பாலியல் உறவு தொடர்பான புகைப்படங்களையும் கமிஷனரிடம் சமர்ப்பித்ததாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன!
1 comments :
Before you stretch your fingers on others,look at your dirtiest social,sexual and criminal behaviour.Dirty behaviourism can become an epidemic in this country
Post a Comment