கட்சியைப் பதிவு செய்வதற்காக நாளை தேர்தல் ஆணையாளரைச் சந்திக்கிறார் பொன்சேக்கா!
தமது கட்சியைப் பதிவு செய்வதைத் துரிதப்படுத்துவதற்காக, அது சம்பந்தமான பல்வேறு விடயங்கள் பற்றிக் கலந்துறவாடுவதற்காக நாளை (12) தேர்தல் ஆணையாளரைச் சந்திப்பதற்காக செல்லவுள்ளதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேக்கா குறிப்பிட்டார்.
கட்சியின் அரசியல் செயற்பாடுகள், பற்றி அங்கு ஆணையாளருக்குத் தெளிவுறுத்தவுள்ளதாகவு் அவர் குறிப்பிட்டார். நடந்துமுடிந்த தேர்தல்களில் தமது கட்சி செயற்பட்ட முறை, தற்போதைய செயற்பாடுகள் மற்றும் தமக்கும் அரசியலில் நிற்பதற்குஉரிமையுள்ளது என்பன பற்றி தேர்தல் ஆணையாளருடன் உரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் அவர் குறிப்பிடுகையில்,
'இந்த விடயங்களைப் பற்றி எடுத்துச் சொன்னால் இந்நாட்டி ஜனநாயக அரசியலின் பேரால் தேர்தல் ஆணையாளரினதும் எங்களினதும் மரியாதை காக்கும்படியாக ஜனநாயகத்தின் உண்மையான பொருள் என்ன என்பதைத் தெளிவுறுத்தும் வகையில் கட்சியைப் பதிவு செய்வார் என்ற நம்பிக்கையுள்ளது' என்றும் குறிப்பிட்டார்.
(கேஎப்).
1 comments :
என்னத்தைப்போய்??????????????????
Post a Comment