தேசிய மாநாட்டிற்கு தயாராகுங்கள்!....
பாசமிகு, தோழர்கள்,....
எம் இனிய உறவுகள்,...
அனைவருக்கும்
வணக்கம்,
அஸ்லாமு அழைக்கும்,
ஆயுபவான்!.....
தமிழ் பேசும் மக்களின் இலட்சிய கனவுகள் யாவும் ஈ.பி.டி.பி யினராகிய
எங்களது தோள்களின் மீதே இன்றும் சுமத்தப்பட்டுள்ளது.
அரசியலுரிமை சுதந்திரத்தை அடைவதில் எமது மக்கள் தோற்றுப்போனவர்கள்
அல்ல என்பதை நாமே மெய்ப்பித்துக்காட்ட வேண்டியவர்கள்.
எமது மக்களுக்காக நாம் எடுத்த தீர்மானமும், வகுத்த பாதையும்
வெல்லப்பட்டே வருகிறது,.... இதுவே உண்மை....
நாம் நடந்து வந்த பாதையில் கடந்து வந்த தடைகள் ஏராளம்.
அர்ப்பணங்களும், தியாகங்களும் அதை விட அதிகம்.
சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளும், சேற்றை வாரி எம் மீது வீசும் தூற்றல்களும்,
தொடர்ந்து வரும் தடைக்கற்கள் ஆகும். ஆனாலும் அவைகளே எமக்கு படிக்கற்களும் ஆகும்.
எடுத்த பயணத்தை நடத்தியே முடிக்க, தொடர்ந்தும் நாம் நடக்க
இன்னமும் உறுதி கொண்டு எழ வேண்டும்.
இதுவரை எமது தோழர்கள் சிந்திய இரத்தமும், எமது கட்சியுடன் இணைந்து
நீங்கள் சிந்திய வியர்வையும், உழைப்பும் எமது மக்களுக்கான
புனித இலட்சிய பயணத்திற்கு உரம் கொடுத்திருக்கின்றன.
இனியும் நாம் ஆற்ற வேண்டிய பணிகள் எம் முன்னால் விரிந்து கிடக்கின்றன.
சுமக்கும் பாரம் அதிகம், ஆயினும் இனி நடக்கும் தூரம் அதிகமில்லை.
எமது கட்சியை மேலும் பலப்படுத்த வேண்டும், நாம் வகுத்த பாதையை
இன்னமும் செப்பனிட்டு, சீரமைத்து செல்ல வேண்டும்.
அதற்காக கட்சியின் தேசிய மாநாட்டை நடத்தி எமது தீர்மானங்களுக்கு
மேலும் நாம் உரம் கொடுக்க வேண்டும்.
ஆகவே, எதிர்வரும் மே மாதம் எமது கட்சியின் தேசிய மாநாட்டை
நடத்த வேண்டும் என நாம்; விரும்புகின்றோம்.
கட்சியின் தேசிய மாநாட்டிற்கு உடன் தயாராகுங்கள்.
இது தமிழ் பேசும் மக்களின் இலட்சிய மாநாடு என்பதை
பிரகடனமாக பிறப்பிக்க நாம் எழுவோம்!
நாம் மக்களுடன் இருக்கின்றோம்,
மக்கள் எம் பக்கம் இருக்கிறார்கள்.
என்றும் நாம் மக்களுக்காகவே.
இறுதி வெற்றி எமது மக்களுக்கே!
தோழமையுடன்
டக்ளஸ் தேவானந்தா
செயலாளர் நாயகம்
ஈழ மக்கள் ஐனநாயக கட்சி ஈ.பி.டி.பி.
0 comments :
Post a Comment