நாட்டுக்குக் காசு! வெளிநாட்டுக்குக் கடன்!
இலங்கை 6,528 கோடி ரூபாய்கள் கடன்படுகிறது....!
மகிந்த ராஜபக்ஷ அரசு இலங்கைக்காக ஜப்பானிலிருந்து 510 மில்லியன் அமெரிக்க டொலர்களை அதாவது 6528 கோடி (65,280,000,00) ரூபாய்களைக் கடனாகப் பெற்றுக் கொள்வதற்காக ஆயத்தமாகியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.
நேற்று (12) ஆரம்பமான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ சுற்றுலாவில் இது சாத்தியமாகவுள்ளது.
சர்வதேச உதவியின் பொருட்டான ஜப்பானிய முகவர் நிலையம் (JICA) இந்தக் கடனை வழங்குவதற்கு முன்வந்துள்ளது.
கடன் எல்லை 04 பிரிவுகளாக 40 ஆண்டுகளுக்குள் மீண்டும் செலுத்துவதற்காக உடன்பாடாகியுள்ளது.
இதேநேரம் இலங்கையின் மொத்தக் கடனானது 6,600 (6,600,000,000,000 ரூபா) பில்லியன்களாக மாற்றமெடுத்துள்ளது. இதில் 52% பிற நாட்டுக்குச் செலுத்த வேண்டிய கடனாகும்.
எது எவ்வாறாயினும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜப்பான் விஜயத்தை மேற்கொண்டுள்ள இக்காலப் பகுதியானதுஜெனீவாவில் மனித உரிமைகள் மாநாடு நடைபெறும் காலப்பகுதியாகும். அந்த மாநாட்டில் இலங்கைக்கு எதிராகக் கொணரப்பட்டுள்ள போர்க் குற்றப் பிரேரணையின் போது இடம்பெறவுள்ள வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவு தேடும் நோக்கிலேயே இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கசிகின்றன.
(கேஎப்)
0 comments :
Post a Comment