Tuesday, February 19, 2013

திரு.த.கனகரத்தினம் காலமானார்.

பன்மொழிப்புலவர் சங்கச்சான்றோன், கலாபூஷணம், தமிழ்மணி த. கனகரத்தினம் அவர்கள் தனது எண்பத்தாறாவது வயதில் இறையடி சேர்ந்தார் தமிழ் சமஸ்கிருதம், ஆங்கிலம். சிங்களம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பண்டித்தியம் பெற்றவர்.

பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியராகவும் இலங்கைக் கல்விச் சேவையில் தமிழ்ப்பாடநூல் வெளியிட்டுப் பகுதித் தலைவராயும் கொழும்புப் பல்கலைக்கழக ஊடகவியல்துறை வருகை விரிவுரையாளராகவும் பண்டாரநாயக்கா சர்வதேச கற்கை மத்தியநிலையம் கொத்தலாவலை பாதுகாப்புக் கல்விக்கழகம் பல்கலைக்கழகம் முதலான பல உயர்கல்வி நிலையங்களின் விரிவுரையாளராயும் திகழ்ந்தவர்.

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சங்கப்புலவராய் விளங்கியவர். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பத்துக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர் நூற்றுக்கு மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

உலகத்தமிழாராய்ச்சி மாநாடுகளுக்கு ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துப் பங்கு பற்றிப்புகழ்பெற்றுள்ளார்.

இவரது இழப்புத்தமிழ் அறிஞர் உலகினர்க்குப் பேரிழப்பாகும்.

இவரது பூதவுடல் 20.02.2013 புதன்கிழமை காலை 8.00 மணிமுதல் கல்கிசை மகிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 11.00 மணிக்கு இறுதிக்கிரியைகள் ஆரம்பமாகி பி.ப 1.00 மணிக்கு கல்கிசை மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுத் தகனம் செய்யப்படும்




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com