முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் எ.ஆர்.மன்சூரின் அனுசரணையில் சாதனையாளர்கள் கௌரவிப்பு
முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் எ.ஆர்.மன்சூரின் அனுசரணையுடன் கல்முனை தரமான கல்விக்கான அமைப்பு கல்முனை வலயத்தில் 2012 புலமைப்பரிசில்பரீட்சையில் சித்திபெற்ற 211 மாணவர்களுக்கும் 2011 க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் 9 ஏ பெற்ற 25 மாணவர்களுக்கும் பரிசு வழங்கி பாராட்டிக் கௌரவிக்கும் விழா நடைபெற்றது. இவ்விழா கல்முனை மஹ்மூத் மகளிர்கல்லூரியில் அமைப்பின் தலைவர் ஜ.எல்.எ.மஜீட் தலைமையில் நடாத்தியது. பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சர் எ.ஆர்.மன்சூர் பிரதான சொற்பொழிவாளராக பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் எம்.எ.நுஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர். சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், பெற்றோர் சார்பில் வேத.சகாதேவராஜா அமைச்சருக்கு பொன்னாடை போர்த்திக் கொளரவித்தார்.
0 comments :
Post a Comment