மவுன மோகன் சிங் என்று பிரதமரை கிண்டல் செய்த நரேந்திர மோடி
வரும் நவம்பர் மாதம் இமாச்சல பிரதேச சட்டசபைக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அங்கு சென்றுள்ள குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி இன்று தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் பிரதமர் பற்றி கூறியதாவது:-
நாட்டில் நிலவும் பணவீக்க பிரச்சினை குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கும் சோனியா காந்தியும் வாய்திறந்து பேசியிருக்கிறார்களா?
அதற்கான காரணங்களை அவர்கள் சொல்லியிருக்கிறார்களா? இந்த மிகப்பெரிய பணவீக்கம் குறித்து அவர்கள் கவலைதான் தெரிவித்து இருக்கிறார்களா?
நாட்டின் முக்கியப் பிரச்சினையான லஞ்சம் மற்றும் விலை உயர்வு குறித்து பிரதமர் வாய்திறப்பதில்லை.
அமைதி காத்தும் வரும் அவரை மன்மோகன் சிங் என்று அழைப்பதைக் காட்டிலும் 'மவுன (அமைதி) மோகன் சிங்' என்று நாம் அழைக்கலாம்.
மன்மோகன் சிங்கால் நாட்டிலுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. ஏனெனில் அவர் நம்பிக்கை இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
நேற்று மத்திய மந்திரிசபையை மாற்றியமைத்த உடனேயே பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி இருவரும் இமாச்சல பிரதேச தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினர்.
அப்போது அவர்கள் இருவரும் மாநிலத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை பாரதீய ஜனதா அரசு முறையாக பயன்படுத்த வில்லை என்று குற்றம் சாட்டினர்.
0 comments :
Post a Comment