Wednesday, October 3, 2012

தென் சூடான் மீது சர்வதேச மன்னிப்புச் சபையினால் மீண்டுமொரு பாரிய குற்றச்சாட்டு

தென் சூடான் பாதுகாப்பு படையினர், பொதுமக்களுக்கு எதிராக வன்முறை களை மேற்கொள்வதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள் ளது. கொலை, சித்திரவதை, பாலியல் துஷ்பிரயோகம் போன்ற குற்றச்செயல்களை பொதுமக்களுக்கு எதிராக படையினர் மேற்கொள்வதாக சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவிலுள்ள மனித உரிமை அமைப்புகளின் தகவல்களை அடிப்படையாக கொண்டு அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது. தென் சூடானின் கிழக்கு பகுதியிலுள்ள ஜோங்லி நகரிலுள்ள பாதுகாப்பு படையினரின் முகாம்களில் மக்கள் இத்தகைய சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதற்கு எதிராக தென் சூடான் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென சபை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஜோங்லி நகரிலுள்ள மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்களின் மூலம் குறித்த உண்மை வெளிவந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் படையினரால் பொதுமக்களின் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டும் அவர்களின் சொத்துக்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை சர்வதேச பொது மன்னிப்புச் சபையின் குற்றச்சாட்டை தென் சூடான் அரசாங்கம் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com