Monday, October 8, 2012

ஒரே நாளில் 11 பேருக்கு தூக்கு தண்டனை - ஈராக்கில் சம்பவம்

ஈராக்கில் அல்ஜீரியாவை சேர்ந்த உட்பட 11 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஈராக்கில் தீவிர வாதம் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஈராக்கில 68 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி ஒரே நாளில் 21 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு சர்வதேச நாடுகளில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், தீவிரவாத நடவடிக்கைளில் ஈடுபட்டதாக, 10 ஈராக்கியர்கள் மற்றும் அல்ஜீரியாவை சேர்ந்த ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவர்கள் மீதான வழக்கு பாக்தாத் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிவில் 11 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்கு ஐ.நா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன், சர்வதேச மனித உரிமை அமைப்புகள், சர்வதேச பொது மன்னிப்பு சபை ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஈராக் நீதிமன்றங்களில் வெளிப்படையான விசாரணை நடப்பதில்லை. பலருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த நடைமுறையை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

எனினும், 11 பேருக்கு நேற்று ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டு மரண தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com