ரணிலை விரட்டும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்! 25000 பேர் பங்குபற்றும் சத்தியாக்கிரகம்!
ஐக்கிய தேசியக் கட்சி தலைவர், மற்றும் அவரின் பொம்மை செயற்குழுவுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, 25000 பேரைக் கொண்ட சத்தியாக்கிரகம் ஒன்றை விரைவில் கொழும்பில் நடாத்தப் போவதாகவும், நாடெங்கும் அது போன்ற சத்தியாக்கிரகங்கள் தொடர்ந்து நடைபெறும் என ஐக்கிய தேசியக் கட்சியையும், அதன் தொழிற் சங்கங்களையும் பாதுகாக்கும் அமைப்பின் செயலாளரான லால் பெரேரா தெரிவிக்கின்றார்.
நேற்று இராஜகிரியாவில் வைத்து கருத்து தெரிவித்த போதே லால் பெரேரா இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1970ல் படு தோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சியை 177ல் 4/5 பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரவைத்தார் ஜே.ஆர். ஜெயவர்தனா. ரணில் விக்கிரமசிங்காவினால் அது முடியாத செயலாக இருகின்றது.
பிரேமதாச, காமினி திசாநாயக்கா, மற்றும் லலித் அத்துலத்முதலி போன்ற தலைவர்கள் உயிரோடு இருந்திருப்பின், ரணில் ஒருபோதுமே ஐக்கிய தேசியக் கட்சி தலைவராக வந்திருக்க முடியாது என்று லால் பெரேரா மேலும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment