Tuesday, August 21, 2012

அமெரிக்காவில் நகரசபைத் தேர்தலில் தமிழ்ப்பெண் வெற்றி

இலங்கையின் புகழ் பூத்த பேராசிரியர் கைலாசபதியின் புதல்வி சுமங்களா கைலாசபதி அமெரிக்காவில் மிக்சிகன் மாநிலத்தில் உள்ள ஆன்ஆபர் நகர சபை உறுப்பினராக தெரிவாகி உள்ளார். ஜனநாயக கட்சியின் வேட் பாளராக போட்டியிட்ட இவர் கடந்த 7 ஆம் திகதி சக வேட்பாளரை வாக்கெடுப்பில் தோற்கடித்தார். சுமிக்கு வயது 45. இவர் கடந்த 19 வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வருகின்றார். ஆன்ஆபரில் கடந்த 19 வருங்களாக வாழ்கின்றார். இவர் பொருளியலிலும், அரசியல் விஞ்ஞானத்திலும் தனித் தனியாக இளமாணி பட்டங்கள் பெற்றவர். அரசியல் விஞ்ஞானத்தில் பட்டப் பின் படிப்புக்கள் படித்தவர். கிழக்கு மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராக 10 வருடங்கள் கடமை ஆற்றி உள்ளார். அங்கீகாரம் பெற்ற கணக்காளராக நிறுவனம் ஒன்றில் கடமை ஆற்றி வருகின்றார். இவர் கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட போதிலும் வெற்றி ஈட்டி இருக்கின்றமை இதுவே முதல் தடவை ஆ கும்.

யாழ் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பினை தொடர்ந்து கொண்டிருந்தபோது ரஜனி திரணகம, செல்வி போன்ற இடதுசாரிகளுடன் இணைந்து செயற்பட்ட இவர் ரஜனி திரணகம, செல்வி ஆகியோரின் குரல் புலிகளால் நெருக்கப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்து வெளியேறினார். இன்றும் சோசலிச கொள்கைகளுடன் அமெரிக்காவில் தனது அரசியலை முன்னெடுக்கும் சுமங்கலா தமிழ் மற்றும் சிங்கள இனவாதத்தை முற்றாக எதிர்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com