கருணா விடயம் எனக்கு தெரியாது! அமெரிக்க தூதுவரிடம் ரணில் - விக்கிலீக்ஸ் தகவல்
எல்.ரி.ரி.யின் கிழக்குத் தளபதியாக இருந்த கருணா அம்மான் அந்த இயக்கத்துடன் முரண்பட்டு விலகி, 2004 தேர்தலுக்கு முன்னர் அரச பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்து வரப்பட்ட விடயம் தனக்குத் தெரியாதென்று, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அப்பேதைய அமெரிக்க தூதுவரிடம் கூறியுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
அப்போது ஐ.தே.க உறுப்பினராக இருந்தவரும், கருணா அம்மனின் சகலனுமாகிய (மனைவியின் சகோதரியின் கணவர்) அலிசாகீர் மௌலானாவின் ஏற்பாட்டில் கருணா அம்மான் கொழுபுக்குக் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த காரணத்தால் எல்.ரி.ரி.ஈ.யினருக்கும், ஐ.தே.கட்சிவுக்கும் விரிசல் அதிகமாகி எல்.ரி.ரி.ஈ.யினர் வன்னிமக்களை ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கச் செய்து ரணில் விக்கிரமசிங்கவைத் தோற்கடிக்க கோரியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment