அரச வளங்களைத் துஷ்பிரயோகம் செய்பவர்களைக் கல்லால் எறியுங்கள் - நீதிபதி
அரச வளங்களைத் தவறாகப் பயன்படுத்துபவர்களைக் கல்லால் எறிய வேண்டும் என்றும், அத்தகைய வேட்பாளர்களை மக்கள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும், வட மத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி சுசந்த குமார தெரிவித்துள்ளார்.
"அப்பி புரவெசியோ" என்ற அமைப்பு முன்னாள் வடமத்திய மாகாண முதலமைச்சர் பல அரச வளங்களைத் தனது தேர்தல் வேலைகளுக்குப் பயன்படுத்துகின்றார் என்று செய்திருந்த முறைப்பாட்டினை விசாரித்து தீர்ப்பளித்த பின்னர் மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசாங்க ஊழியர்கள் தமது சேவையில் இடையீடு செய்யும் எந்தவொரு அரசியல் சக்திக்கும் எதிராக தலை நிமிர்ந்து நின்றால் இத்தகைய நிலை ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டை விசாரிக்க மாகாண மேல் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லையென்ற அடிப்படையில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
1 comments :
A brave move by the said organization. This is one of the causes for the present plight of the country.
Another cause is that the so-called "custodians of the law" are not doing their duties sincerely.
So, will those persons employed to implement and enforce the laws in the "proper way" do their duty as per the law?
Post a Comment