Thursday, July 26, 2012

கொடுமைக்குள்ளாகும் பெண்கள் ஆவேசமாகக் கொதித்தெழ வேண்டும்.

காலத்துக்குக் காலம் என்னென்னவோ புதிய புதிய தொழில் நுட்பங்கள் மூலமாக நம் நாட்டில் பல்வேறு நவநாகரீகம் ((fashion) தோன்றிக் கொண்டிருக்கின்றது. அதன் பயனாக பெண்களுக்கெதிரான பல்வேறு காமக் கேளிக்கைகள் பெரியோர், இளைஞர் என அனைவர் மத்தியிலும் வேகமாகப் பரவி வருகின்றது.

முன்பெல்லாம் பெண்கள் குளிப்பதை அல்லது உடை மாற்றுவதை கதவிடுக்கு, சாவித் துவாரம், போன்றவற்றின் ஊடாக கள்ளத்தனமாகப் பார்த்து ரசித்தார்கள். இன்று தாராளமாக அவ்வாறான நிகழ்வுகளை தமது அறையில் இருந்தவாறே கணினியின் உதவியால் பார்த்து ரசிக்கிறார்கள். அதன் வீடியோவைக் காட்டி பாதிப்புக்குள்ளான சம்பந்தப்பட்ட பெண்ணை அச்சுறுத்தி பாலியல்சேட்டைகளுக்கும், வற்புணர்வுக்கும், இன்னும் பல்வேறு சட்டமுரணான ஒழுக்க முரணான செயல்களுக்கும் பயன்படுத்த முனைகிறார்கள்.

புடைவைக் கடைகளில் பெண்கள் உடையை அணிந்து பார்க்கும் சிற்றறையில் நுணுக்கமான மெல்லிய கெமராக்களை (micro camera) வைத்து அவர்களின் ஆடைகளைவு, அரை மற்றும் முழு நிர்வாண தோற்றத்தைப் வீடியோ பதுவு செய்து, அந்த கடை முதலாளி அல்லது அவரது மகன் மற்றும் நண்பர்கள் தமது அறையிலிருந்தே கணினியூடாக பார்த்து பரவசமடையகிறார்கள். அத்துடன் நின்றுவிடாமல் அவற்றின் சிடி அல்லது டிவிடிக்ளைக் காட்டி சம்பந்தப்பட்ட பெண்ணை அச்சுறுத்துகிறார்கள், வற்புணர்வுக்கும் பிற இழிவன செயல்களுக்கும் அழைக்கிறார்கள். இத்தகைய பாதிப்புக்குள்ளனான ஒரு பெண்ணின் சகோதரன் சம்பந்தப்பட்ட கடைமுதலாளியான கோடீஸ்வரர் ஒருவரை அண்மையில் கம்பகா பகுதியில் கொலை செய்த விடயம் செய்திகளில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது.

இவ்வாறான பாதிப்புக்குள்ளன பெண்கள் சமுதாய நிலை காரணமாக இவற்றை துணிந்து வெளியே சொல்ல விரும்புவதில்லை. பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யவும் விரும்புவதில்லை. இதனால் அவர்களின் வாழ்வு தமக்குள்ளேயே நொந்துநொறுங்கி இறுதியில் அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கும் வந்து விடுகிறார்கள்.

இன்டரர்நெற் கபே என்னும் வலைப்பின்னல் நிலையங்கள் நாட்டில் சகல நகரங்களிலும் எண்ணிக்கையற்று பரந்து பெருகியுள்ளன. இவற்றுக்கு இளம் வயதினர், காதலர்கள், பள்ளி மாணவ மாணவியர் யாவரும் செல்கின்றனர். அங்கு அவர்கள் சுதந்திரமாக பார்ரக்கக்கூடாத எல்லாவற்றையும் ஜோடியாக இருந்தே பார்த்து மகிழ்கிறார்கள். அங்கேயே சில்மிசமும் செய்து கொள்கிறார்கள். இவையாவும் அங்கு அவர்களுக்குத் தெரியமல் பொருத்தப்பட்டிருக்கும் மைக்ரோ கெமராக்களில் பதிவாகின்றன. பின்னர் அவை பல வகைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு எமது இளைஞர் யுவதிகளின் வாழ்வு சீரழிகின்றது.

எனவே அழகையும், ஆடம்பரத்தையும் விரும்பி அத்தகைய இடங்களுக்குச் செல்லும் பெண்கள் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். பெற்றோரும், கணவன்மாரும் தமது பெண்கள் விடயத்தில் மிகவும் அக்கறை கொள்ளவேண்டும். பெண்களைப் பொறுத்தளவில் ஆடை அணிவதிலும் ஆடம்பரமாகத் திரிவதிலும் மட்டும் மேற்கத்திய பெண்களைப் பின்பற்றாமல், தமக்கு அநீதி ஏற்படும் போதும், அந்த மேற்கத்திய பெண்களைப் போல ஆவேசமாகக் கிளர்ந்தெழவும் நீதிகேட்டுப் போராடவும் துணிய வேண்டும். அப்போதுதான் இத்தகைய காமச்செயல்களைக் களைந்தெறிய முடியும்.

1 comments :

Anonymous ,  July 26, 2012 at 10:26 AM  

Not only women, every men also should be do some necessary for protect our Women's rights.
because every men have relationship with women such as Mother, Wife, Sisters, daughters....

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com